Thursday, July 06, 2006

121.அஞ்சேல் எனாத ஆண்மை-7 "நான் யார்?"

7."நான் யார்?" "யார் இவர்கள்?" என கேட்டார் ஒரு பிட்சு. "தெரியவில்லை.இங்கே நடந்த கொலைகளை உடனே ஆலயத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இவர்களை என்ன செய்வது என்று கேட்கவேண்டும்" என்றார் இன்னொரு பிட்சு. "அவசியமே இல்லை" என்று இன்னொரு குரல் கேட்டது. நான்கு பிட்சுகளும் திரும்பி பார்த்தனர்.வாயிலருகே நம் பழைய நண்பரான மும்பை பிட்சு நின்றிருந்தார்.அவரை நால்வருக்கும் அடையாளம் தெரிந்தது. "நீங்களா?உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?" என கேட்டார் ஒரு பிட்சு. "இனி தான் ஏதாவது ஆகணும்" என்றார் மும்பை பிட்சு.கலாஷ்னிகோவை எடுத்தார்.சுட்டார்.நால்வரும் அடுத்த வினாடி கீழே விழுந்து உயிர் இழந்தனர். பிட்சு அதன்பின் விரைந்து செயல்பட்டார்.தண்னீர் ஜக்கை எடுத்து இளங்கோ,சந்துரு மீது தெளித்து எழுப்பினார். -- "எதற்கு எங்களை காப்பாற்றினாய்?" என கேட்டான் மயக்கம் தெளிந்து எழுந்த சந்துரு. "அதுவா முக்கியம்?போய் சேட்டு மகளை கூட்டி வாருங்கள்.அவரை தவிர மற்றவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்" என்றார் பிட்சு. அறை அறையாக தேடினர் இளங்கோவும் சந்துருவும்.ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கொரியா போகவேண்டிய கும்பலை கண்டுபிடித்தனர்.சேட்டு மகளை மட்டும் நைசாக பேசி வெளியே கூட்டி வந்தனர்.அப்பாவும்,அண்ணனும் செத்த செய்தியை தெரிவித்தனர்.மீராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. "அம்மாவும்,அப்பாவும் குருதேவர்தான்.அவும் ஷென்ரிக்கியோ." என்றாள் மீரா. "பேச நேரமுமில்லை.பொறுமையும் இல்லை.வேலை ஏராளமாக இருக்கிறது" என்றான் சந்துரு.இருவரும் சேர்ந்து மீராவை கட்டி இன்னொரு அறையில் அடைத்தனர். ----- "அப்படி என்னப்பா தலை போகும் வேலை?" என்று கேட்டார் பிட்சு. "நீ முதலில் எங்களை எதற்கு காப்பாற்றினாய் என்பதை சொல்" என்றார் இளங்கோ. "நீங்கள் இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை சொன்னால் நான் அதை பொறுத்து சொல்லலாமா வேண்டாமா என யோசிப்பேன்" என்றார் பிட்சு. "சேட்டு மகளை காப்பாற்றிவிட்டோம்.எங்கள் மனைவி,மகள் என்ன ஆனர்கள் என தெரியவில்லை.அவர்களை பார்க்கும் நம்பிக்கையும் இல்லை.இனி போலிஸில் சரணடைவதுதான் திட்டம்" என்றார் இளங்கோ. "அட முட்டாள்களா" என்றார் பிட்சு."உன் மனைவி இருக்குமிடம் போக அருமையான் சந்தர்ப்பம் வந்திருக்கு.நாளை காலை விமானம் வரும்.அதில் ஏறினால் வடகொரியா போய்விடலாம்.அங்கு தான் உன் மனைவியும் அவர் மகளும் இருக்கிறார்கள்" என்றார். "எனக்கு புரியலை" என்றான் சந்துரு."எப்படி என்னை விமானத்தில் ஏற்றூவார்கள்?" "எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்க முடியாது.நீங்கள் இருவரும் இங்கே உட்காருங்கள்.மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார் பிட்சு. --- அதன்பின் புயல் வேகத்தில் காரியங்கள் நடந்தன.திடு திடுவென நிறைய புது பிட்சுகள் வந்தனர்.அனைத்து பிணங்களும் சேர்க்கப்பட்டு ஒரு அறையில் குவிக்கப்பட்டன.கொரியா போக தயாராக இருந்தவர்கள் கட்டி வைக்கப்பட்டு ஒரு வேனில் ஏற்றி செல்லப்பட்டனர்.அவர்களுக்கு பதில் புதிதாக சில நபர்கள் அந்த அறைக்குள் சென்றனர்.சந்ருவுக்கும்,இளங்கோவுக்கும் தலை மொட்டை அடிக்கப்பட்டது.பிட்சு உடை அணிவித்து அந்த அறையில் உட்கார வைக்கப்பட்டனர்.நம் பிட்சுவும் அந்த அறையில் வந்து அமர்ந்து கொண்டார். காலையில் கொரிய விமானம் வந்தது.பைலட்கள் கோயிலில் ரெஸ்ட் எடுத்தனர்.புதிதாக 20 பிட்சுகள் கோயிலில் பொறுப்பேற்றிருந்தனர்.பைலட்களால் ஒரு வித்யாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.மாலையில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு டார்ஜிலிங் நோக்கி விமானம் கிளம்பியது. --- அன்றிரவு காட்டிலிருந்து ஒரு பெரும் கும்பல் ஆய்தங்களுடன் வந்து கோயிலை சூழ்ந்தது.கோயிலுக்கு தீ வைத்தது.சாவகாசமாக அதன்பின் மீண்டும் காட்டுக்குள் சென்றது.கோயில் உள்ளே இருந்த 20 பிணங்கள் சாம்பலாயின. -- "நீங்கள் எல்லாரும் யார்?" என ஆயிரமாவது முறை கேட்டான் சந்துரு. "மர்மப்புன்னகை பூத்தார் பிட்சு.முகத்தில் குத்தலாம் போல் வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சந்துரு. டார்ஜிலிங் சென்ற விமானம் அங்கே அவர்களை தரை இறக்கியது.அங்கிருந்து பஸ்ஸில் ஏறி நேபாள எல்லை தாண்டினர்.அங்கே மீண்டும் ஒரு விமானம் அவர்களை ஏற்றிக்கொண்டது. விமானத்தில் நன்றாக தூங்கினான் சந்துரு.எழுந்தபோது பிட்சு அவனை பார்த்து சிரித்தார்."வடகொரியாவுக்கு வருக" என்றார்."இன்னும் சற்று நேரத்தில் கோயிலுக்கு போய் விடுவோம்.அதிர்ஷ்டம் இருந்தால் உன் மனைவியை பார்க்கலாம்" என்றார் பிட்சு. "யார் நீ?" என மீண்டும் கேட்டான் சந்துரு. ""அதை கண்டுபிடிக்கத்தானே பிட்சு ஆயிருக்கிறேன்.அவும் ஷென்ரிக்கியோ" என்றார் பிட்சு. "உன்னை கட்டிப்போட்டிருந்தபோதே கொன்றிருக்க வேண்டும்" என்றான் சந்துரு. "இன்னும் சற்றுநேரத்தில் விமானம் கீழே இறங்கிவிடும்.அதன்பின் சாவகாசமாக கொலை செய்து கொள்" என்றார் பிட்சு (தொடரும்) அத்யாயம் 1 அத்யாயம் 2 அத்யாயம் 3 அத்யாயம் 4 அத்யாயம் 5 அத்யாயம் 6

14 comments:

குமரன் (Kumaran) said...

ஐயோ ஐயோ ஐயோ.....

இம்மாம் விருவிருப்பாப் போகுதே கத

நாகை சிவா said...

அடுத்த கதை எப்படி போகும் என்று யோசிக்க முடியாதப்படி திருப்பங்களை தந்து கொண்டே இருக்கின்றீர்கள்.

//நால்வரும் அடுத்த வினாடி கீழே விழுந்து உயிர் இழந்தனர்.//
ஏன்ன செல்வன், இதற்கு மேல் கொலைகள் கிடையாது என்று சொல்லிட்டு அடுத்து ஒரு நாலு நபர்களை தீர்த்து வீட்டீர்களே?

நாமக்கல் சிபி said...

கதை நல்லா விறுவிறுப்பாப் போகுது...
இனிமே காதல் கதையா...
கொரியா Missile Testing எல்லாம் கதைல வருமா???

நரியா said...

செல்வன்
ஆஹா எம்புட்டு வேகம். இஸ்கூல் படிக்கும் போது ஓட்ட பந்தய வீரரா இருந்தீங்களா?? :))

மும்பை பிட்சு, ஒரு சி,பி.ஐ ஆஃபீசர். புது பிட்சுக்களெல்லாம் காவல் துறையினர். சந்ருவின் மனைவி, பிட்சு மனைவியாக நடிக்கலாம் :)). இதுக்கு மேல யூகிக்க முடியல :)).

நல்ல கதை எழுதுறீங்க.

வாழ்துக்கள்!

நன்றி!!

நரியா said...

கொஞ்சம் கொஞ்சம் "விக்ரம்" படம் மாதிரியும் இருக்கு. இராஜச்தான் எலி கோவில் மாதிரி, வட கொரியா ஷென்ரிக்கியோ கோவிலா?? :))

Suban said...

கதை நன்றாக செல்கிறது

Unknown said...

குமரன் நன்றி.த்டர்ந்து படிப்பதற்கும்,பின்னூட்டதிற்கும்.

நாகை சிவா..ஆமாங்க..:-))) நான் சரியா கவனிக்காமல் விட்டுவிட்டேன்.இனி கொலை விழாது,கிளைமேக்ஸ் வரைக்கும்.

வெட்டிபயல்
கொரியா போய் இரண்டு அத்யாயங்களில் காதல் கதையாக மாறிவிடும்.இதை காதல் கதையாக தான் எழுத இருக்கிறேன்.வெட்டு,குத்து இல்லாத காதலா என்ன?:-))

Unknown said...

சொல்ல மறந்துட்டேன்

வெட்டிபயல்,ஏவுகணை கிளைமேக்ஸில் வரும்

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

நாரியா

கொஞ்சம் கொஞ்சம் சரியாக யூகிக்கிறீர்கள்.முழுதாக சரியும் இல்லை,தப்பும் இல்லை.இரண்டு,மூன்று அத்யாயங்களில் பிட்சுவை பற்றிய முழு விவரமும் தெரிந்துவிடும்.

Unknown said...

சுபான்,

நன்றி.உங்களுக்கு வயது நிஜமாகவே 15ஆ?அருமையாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்

Unknown said...

நாரியா,

நான் எங்கே ஓட்டப்பந்தய வீரன்?வீட்டை விட்டு ஒருதரம் ஓடி,பிடிபட்ட அனுபவம் தான் இருக்கிறது:-)))

ஏனுங்க ஷென்ரிக்கியோ கோயிலை எலிகோயில்ல்னு சொல்றீங்க?தெய்வ குத்தம்.அவும் ஷென்ரிக்கியோ,15,000 ரூபாய் அபராதம் எடுத்து வைக்கவும்:-)))

Unknown said...

ashlyn

will do so from next chapter onwards.

anbudan
selvan

Unknown said...

குழந்தை நன்றி

கிளைமேக்சை பற்றி எதுவும் இப்போது சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும்.ஆனால் இது ஒரு காதல் கதை என்பதை மட்டும் இப்போது சொல்கிறேன்.பிட்சு யார்,என்ன என்பது இன்னும் இரண்டு மூன்று அத்யாயங்களில் தெரிந்துவிடும்.

அன்புடன்
செல்வன்