Monday, July 03, 2006

119.அஞ்சேல் எனாத ஆண்மை-5

ஒரு நிமிடம் தான் சந்துரு திகைத்தான்.அடுத்த நிமிடம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.இளங்கோ இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தார்.சந்துரு அவரை தேற்ற வேண்டியதாக போனது. "இவன் புளுகுகிறான்" என்றான் சந்துரு."சூரியன் மேற்கே உதிக்கும் என்றால் கூட நம்புவேன்.என் மனைவியை பற்றி யார் சொன்னாலும் நம்பமாட்டேன்" என்றான் சந்துரு. "கோவலனை பற்றி கண்ணகி இப்படித்தான் நம்பிக்கை வைத்திருந்திருப்பாள்" என்றார் பிட்சு."சொல்லி திருந்தாத ஜென்மம் நீ.எனக்கென்ன எக்கேடோ கெட்டு ஒழி" என்றார் பிட்சு. "இவன் சொல்லுவது பொய்யாக இருக்கும் என எப்படி சொல்லுகிறீர்கள்?உங்கள் மனைவி உங்கள் மீது அத்தனை அன்பு வைத்திருந்தால் ஏன் இத்தனை நாளாக உங்களை தொடர்பு கொள்ளவில்லை?ஏன் அந்த சங்கத்தில் சேர்ந்தார்?ஏன் கொரியா போனார்?" என கேட்டார் இளங்கோ. "அவளாக போயிருக்க மாட்டாள்.இந்த சண்டாளர்கள் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள்" என்றான் சந்துரு. "அட பாவமே" என சிரித்தார் பிட்சு."உன் மனைவி என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா,கார் வைத்து கடத்திக்கொண்டு போக?அசோகவனத்து சீதை மாதிரி நீ வருவாய் என கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறாள் என நினைக்கிறாயாக்கும்?நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்" என்றார் பிட்சு. "உன்னை இதுவரை நான் அடிக்கவில்லை என்பதால் எப்போதும் அடிக்கமாட்டேன் என நினைத்துக் கொள்ளாதே" என எச்சரித்தான் சந்துரு. "நீ மீசை வைத்த ஆண்பிள்ளை என்றால் கட்டை கழற்றி விட்டு அடி பார்க்கலாம்." என்றார் பிட்சு. "மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?" என்றான் சந்துரு. ----- மும்பை நகர எல்லையை தாண்டி அகமதாபாத் சாலையில் கார் விரைந்தது.மனோரி அருகே ஒதுக்குபுறமாக வண்டியை நிறுத்தினார்கள்.சாப்பிட்டுக்கொண்டே என்ன செய்வது என ஆலோசித்தார்கள். "என் மனைவியும்,உங்கள் மகளும் கொரியாவில் இருக்கின்றனரா,இல்லை இந்த மொட்டையன் வழக்கம் போல் பொய் சொல்லியிருக்கிறானா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்" என்றான் சந்துரு."அடேய் பிட்சு அவர்கள் இருவரும் கொரியாவில் தான் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் என்ன? என்றான். "என் வார்த்தை தான் ஆதாரம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்" என்றார் பிட்சு. "சரி...சங்க உறுப்பினர்களை எப்படி கொரியாவுக்கு அனுப்புவீர்கள்?" என கேட்டார் இளங்கோ. "ஒரிசாவில் உள்ள எங்கள் கிளைக்கு அனுப்புவோம்.அங்கிருந்து மாதம் ஒரு முறை ஸ்பெஷலாக தனி விமானம் வந்து அவர்களை கொரியாவுக்கு கூட்டிப்போகும்" என்றார் பிட்சு."நீங்கள் கேட்காமலேயே ஒரு தகவலையும் சொல்கிறேன்.சேட்டு மகள் மீரா தற்போது ஒரிசாவில் தான் இருக்கிறாள்.அடுத்த வாரம் கொரியா அனுப்புகிறோம்" என்றார் பிட்சு. "இத்தனை தகவல்கள் சொன்ன நீ அவரை மீட்பது எப்படி என்றும் சொல்லலாமே?உனக்கு புண்ணியமா போகும்" என்றார் இளங்கோ. "இயந்திர துப்பாக்கிகளுடன் 20 பிட்சுக்கள் அங்கு இருக்கிறார்கள்.என்னை விட கராத்தே தெரிந்தவர்கள்.உள்ளூர் போலிஸுக்கு கணிசமான மாமூல் போயிவிடும்.ஒரிசா மந்திரி ஒருவரே எங்கள் சங்க உறுப்பினர்.இதற்கு மேல் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார் பிட்சு. "சரி கிளம்புவோம்" என்றான் சந்துரு. "எங்கே?" என புரியாமல் கேட்டார் பிட்சு. ----- மாருதி காரிலேயே சுந்தர்கர் போய் சேர்ந்தார்கள்.சுந்தர்கர் ஒரிசா,ஜார்கண்ட் எல்லையில் உள்ள பகுதி.பெரிய நகரமும் கிடையாது.சுந்தர்கரிலிருந்து கோயில் இருக்கும் தல்சாராவுக்கு செல்லும் ரோடு படுமோசமாக இருந்தது.கோயில் ஒதுக்குப்புறமாக காட்டில் இருந்தது.உள்ளூர் மக்கள் யாரும் அங்கு வருவதில்லை.அப்படி ஒரு கோயில் இருக்கு என்பதே அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருந்தது. போலிசுக்கு பயந்து பதுங்கி பதுங்கி வந்ததில் பிரயாணத்துக்கே ஐந்து நாள் ஆகிவிட்டது.நாளை மறுநாள் விமானம் வரும் என பிட்சு சொன்னார்.ஏதேனும் செய்வதென்றால் இன்னும் 30 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும். என்ன செய்வது என யோசித்து,யோசித்தே இரவும் பாதிநாளும் போய்விட்டது.பிட்சு வேறு அடிக்கடி எரிச்சலை கிளப்பும் வகையில் பேசிவந்தார்.சாயந்திரம் 3 மணிக்கு தான் சந்துருவுக்கு அந்த ஐடியா வந்தது. "தற்கொலை படை போல் உள்ளே போய் சண்டை பிடிக்க வேண்டும்.குறைந்தது 10 பேரையாவது வெட்டி போட்டு சாகவேண்டும்" "உனக்கு மறை கழண்டிருக்கிறது" என சொன்னார் பிட்சு."யார் பக்கத்திலும் நீ போகவே முடியாது.இயந்திர துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்.நீ என்ன ஆயுதம் வைத்திருக்கிறாய்?" என கேட்டார் பிட்சு. பேனாகத்தி தான் அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம். தல்சாரா போய் ஏதாவது ஆயுதம் கிடைத்தால் வாங்கிவருகிறேன் என கிளம்பிபோனார் இளங்கோ.5 மணி சுமாருக்கு நாலைந்து கோடாரிகளுடனும்,நீள கத்திகளுடனும்,அரிவாள்களுடனும் வந்தார். "இதை வைத்து சவரம் செய்யத்தான் முடியும்" என்றார் பிட்சு."அடேய் மாக்கான்களா.ஏண்டா இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்?கோயில் காம்பவுண்டையே உங்களால் தாண்ட முடியாது.நீங்கள் செத்து ஒழியுங்கள் என விட்டுவிடுவேன்.என் கதி என்ன?என்னை அவிழ்த்து விடுங்கள்.நான் மும்பை நடந்தே போய்விடுகிறேன்.நீங்கள் அதன் பின் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்" என்றார். அவர் பேச்சை இருவரும் கேட்கவில்லை.நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தனர்.வயிறு நிறைய சாப்பிட்டனர். நள்ளிரவானதும் காரை ஓட்டி சென்று சாலை அருகே நிறுத்தினர்.பகலிலேயே அந்த சாலையில் ஆள் நடமாட்டம் இருக்காது.இரவில் கேட்கவே வேண்டாம். "போய் வருகிறோம் பிட்சு" என்றான் இளங்கோ."காலையில் இந்த வழியில் யாராவது வருவார்கள்.உன் கட்டை அவிழ்த்து விட சொல்லி காரை ஓட்டிக்கொண்டு போய்விடு.காரில் 8 லட்சம் பணம் இருக்கிறது.அதை வைத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்.இப்படி கொரியாகாரனுக்கு மாமா வேலை செய்து பிழைக்காதே" என்றான். "நீங்கள் சத்தியமாக திரும்பி வரமாட்டீர்கள்.என்னை அடித்தீர்கள்,கட்டி வைத்தீர்கள் என்றெல்லாம் கோபித்து கொள்ளவில்லை.நிஜ அன்பில் சொல்லுகிறேன்.இது வேண்டாம்.உன் மனைவியும் இவர் மகளும் யானை வாயில் போன கரும்புகள்.இனி திரும்பி வர மாட்டார்கள்.இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.எங்கேயாவது போய் பிழைத்து கொள்ளுங்கள்.நான் சத்தியமாக போலிஸில் உங்களை காட்டி கொடுக்கவில்லை" என்றார் பிட்சு. "என் மனைவியை பற்றி இப்போது கவலை இல்லை.அப்பனையும்,அண்ணனையும் இழந்த ஒரு அனாதை பெண்னை காக்க வேண்டும்" என்றான் சந்துரு."வருகிறோம்" என்றான்.கிளம்பினான். "அனாதைகளுக்கு எல்லாம் நீ தான் ரட்சகனா?உனக்கு சண்டையே பிடிக்க தெரியாது.சொன்னா கேளு" என்றார் பிட்சு. அவர்கள் கேட்கவில்லை.கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். காட்டிலிருந்து ஆந்தை ஒன்று கூவியது."ஆந்தை கூவினா சாவுன்னு அர்த்தம்" என முணுமுணுத்தார் பிட்சு."லேடி மாக்பெத், டங்கனை கொல்ல போனப்ப ஆந்தை கூவி வேண்டாம்னு சொல்லிச்சு.அவ கேக்கலை.இப்பவும் போகவேண்டாம்னு ஆந்தை சொல்லுது.நானும் சொல்றேன்.கேக்கறானுங்களா?" என திட்டினார். அதன்பின் கார் பின்சீட்டில் நிம்மதியாய் படுத்து தூங்க துவங்கினார். ஆந்தை மீண்டும் மீண்டும் கூவியது. (தொடரும்) அத்யாயம் 1 அத்யாயம் 2 அத்யாயம் 3 அத்யாயம் 4

9 comments:

Amar said...

கதத ஸ்பீடா போகுது செல்வன்...இப்படியே எழுதுங்க.

//"மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?" என்றான் சந்துரு.//

இப்படி யாரும் சொல்லுன் நான் கெட்டதில்லை...ஹிஹி

நாகை சிவா said...

//நீ மீசை வைத்த ஆண்பிள்ளை என்றால் கட்டை கழற்றி விட்டு அடி பார்க்கலாம்." என்றார் பிட்சு.

"மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?" என்றான் சந்துரு.//
ப்ளிச் அடி. நல்ல டைமிங்.

செவ்வன் ஒரு சின்ன கேள்வி, அந்த பிட்சுவை கூட்டிக் கொண்டு ஒரிசா செல்வதாக கூறுகின்றீர்கள். எப்படி அவரை கைகளை அவிழ்த்தாலோ, கால்களை விடுவித்தாலோ அவருக்கு இவர்கள் இருவரையும் விழ்த்துவது கடினமா இருக்காது. நாற்காலியுடன் மாருதி காரில் கொண்டு செல்வது கடினம். சிறிது விளக்கம் கொடுக்க முடியுமா.....

நாகை சிவா said...

//நீ மீசை வைத்த ஆண்பிள்ளை என்றால் கட்டை கழற்றி விட்டு அடி பார்க்கலாம்." என்றார் பிட்சு.

"மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?" என்றான் சந்துரு.//
ப்ளிச் அடி. நல்ல டைமிங்.

செவ்வன் ஒரு சின்ன கேள்வி, அந்த பிட்சுவை கூட்டிக் கொண்டு ஒரிசா செல்வதாக கூறுகின்றீர்கள். எப்படி அவரை கைகளை அவிழ்த்தாலோ, கால்களை விடுவித்தாலோ அவருக்கு இவர்கள் இருவரையும் விழ்த்துவது கடினமா இருக்காது. நாற்காலியுடன் மாருதி காரில் கொண்டு செல்வது கடினம். சிறிது விளக்கம் கொடுக்க முடியுமா.....

VSK said...

//"மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?" என்றான் சந்துரு.//


:))))))))))))))
Story is picking up fast!!

Unknown said...

சமுத்ரா

நன்றி.என்ன அவதாரை அதற்குள் மாற்றிவிட்டீர்கள் போலிருக்கிறது?இவர் யார்?
அவதார் உங்கள் வயதுக்கு தகுந்த மேஜர் சரவனன் போன்ற இளைஞர்கள் அவதாராக வைக்கக்கூடாதா?

Unknown said...

சிவா
நாற்காலியோடு கட்டவில்லை.கையை விலங்கு போட்டும் காலை மணிக்கயிற்ராலும் கட்டினர் என மனதில் நினைத்திருந்தேன்.அதை தெளிவாக சொல்லீருக்க வேண்டும் என்பது தெரிகிறது

எஸ்.கே

நன்றி.திருப்புகழ் மீண்டது உண்மையிலேயே மிக அதிசயம் தான்.இதில் இன்னொரு அதிசயமும் இருக்கிறது.அதை உங்கள் பதிவில் சொல்லுகிறேன்

Unknown said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

செல்வன். அஞ்சேல் எனாத ஆண்மை தொடர்கதையைத் தொடர்ந்து படிக்கிறேன். இதனை மட்டும் இப்போது சொல்லுகிறேன். மற்றவற்றைப் பின்னர் சொல்கிறேன். :-)

Unknown said...

குமரன்

தொடரை படிக்கிறீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்