Tuesday, June 27, 2006

116.அஞ்சேல் எனாத ஆண்மை - 2

இளங்கோவும் சந்துருவும் அந்த மீட்டிங்குக்கு போனபோது இரவாயிருந்தது."மீட்டிங்க்ல உங்க நிஜ பேரையும் ஊரையும் சொல்ல வேண்டாம்" என இளங்கோ எச்சரித்தார்.ஏன் என்று கேட்டதற்கு அப்புறம் சொல்றேன் என சொன்னார்.அது என்ன காரணமாக இருக்கும் என யோசித்துக்கொண்டே சந்துரு போனான். மீட்டிங் என்று சொன்னாரே தவிர 10 பேர் மட்டும் தான் இருந்தனர்.சந்துருவும் இளங்கோவும் மட்டுமே தமிழர்கள்.மற்ற அனைவரும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள்.அனைவரும் தங்கள் சோக கதைகளை சொன்னார்கள்.இனி என்ன செய்வது என ஆலோசித்தனர்.சந்துரு கவனித்தவரை சங்கத்து உறுப்பினர்கள் யாரும் பணக்காரர்களோ,செல்வாக்கு படைத்தவர்களாகவோ இருக்கவில்லை.சராசரியான மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருந்தனர்.பாதி பேர் நடுத்தர வயதை தாண்டியவர்கள். என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.உருப்படியான எந்த ஐடியாவும் வரவில்லை.சந்துரு எழுந்து ஒரு ஐடியா சொன்னான்.அதாவது அந்த மடத்தின் முக்கிய புள்ளி ஒருவர் வீட்டில் புகுந்து அதிரடியாய் மிரட்டி அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை அறியவேண்டும்.முடிந்தால் தம் குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். மும்பையில் அந்த மடத்தின் பெரும்புள்ளி சந்துருவை அடித்த பிட்சுதான்.அவரை கடத்துவது என முடிவு செய்தார்கள்.கடத்த தன் மாருதி வேனை தருவதாக சேட்டு சொன்னார்.தன் மகனையும் உதவிக்கு அனுப்புவதாக சொன்னார். அந்த கூட்டத்தில் யாருக்கும் முன்பின் அப்படி ஒரு காரியம் செய்து பழக்கமில்லை.ஆனால் உற்சாகமாக களத்தில் இறங்கினர்.வேனுக்கு பெயின்ட் மாற்றி,போலி எண்களை எழுதினார் சேட்டு.கள்ள கைதுப்பாக்கிகள் சிலவற்ரை தந்தார் இன்னொருவர்.பிட்சுவின் நடவடிக்கைகளை கண்காணித்து உளவு சொல்லும் பொறுப்பை ஒருவர் ஏற்ருக்கொண்டார். பிட்சு அப்படி ஒன்றும் பாதுகாப்பாக உலா வரவில்லை.பெரும்பாலான இடங்களுக்கு மொப்பெட்டில் தான் போனார்.அவர் வீட்டருகே தீயணைப்பு நிலையம் இருந்ததால் வீடு புகுந்து அடிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.வழியில் கடத்த முடிவு செய்தனர். மடத்து ஆபிஸ் வாசலில் வேன் நின்றது.பிட்சு வெளியே வந்தார்.மோப்பட்டில் ஏறினார்.சேட்டு மகன் மோத்தி வேனை எடுத்தான்.மொப்பட் பின்னால் வேனை மோத பிட்சு கீழே விழுந்தார்.மொப்பட்டுக்கு அடியில் மாட்டிக்கொண்டார்.சந்துருவும் இருவரும் கீழே குதித்து பிட்சுவை உருட்டு கட்டையால் அடித்தனர்.அவரை தூக்கி வேனில் போட்டனர்.வேன் சீறிக்கொண்டு கிளம்பியது. மடத்து வாட்ச்மேன் அதிர்ச்சி அடைந்து உள்ளே ஓடி போலிஸுக்கு போன் செய்தான்.சிக்னல் அருகே வேன் நிற்கும்போது வயர்லெஸ்சில் மும்பை முழுக்க தகவல் பறந்தது.போலிஸ் ஜீப் ஒன்று வேனை துரத்த துவங்கியது.உள்ளே இருந்த அனைவரும் பீதி அடைந்தனர்.மோதி மட்டும் பயப்படவில்லை.போலிஸ் ஜீப்புக்கு தண்ணி காட்டினான்.குடித்து விட்டு இரவில் வண்டியை வேகமாக ஓட்டி அவனுக்கு பழக்கம்.ஆனால் ரொம்ப நேரம் தண்ணி காட்ட முடியவில்லை.இரண்டு மூன்று ஜீப்கள் துரத்த ஆரம்பித்தன. ஐரோலி பாலத்தில் வேனை இரண்டு பக்கமும் சுற்றி வளைத்தனர். "என்ன செய்வது" என பீதியுடன் கேட்டார் இளங்கோ. மோத்தி அக்சிலரேட்டரில் காலை வைத்தான்.ஒரே அழுத்து.நேராக போலிஸ் ஜீப்பை நோக்கி கொலைவெறியுடன் பாய்ந்தது வேன்.போலிஸ் முதலில் டயர்களில் சுட்டார்கள்.அதன்பின் அடுத்த குண்டு மோதியின் தலையில் பாய்ந்தது.ஆனால் அதற்குள் வேன் ஜீப்பை அடித்து நொறுக்கி முன்சென்றது.பாலத்து சுவற்றில் மோதி நின்றது. (தொடரும்) அத்யாயம் 1
Post a Comment