Wednesday, July 05, 2006

120.அஞ்சேல் எனாத ஆண்மை - 6

இளங்கோவும் சந்துருவும் காட்டில் புகுந்து கோயிலை நோக்கி நடந்தனர்.நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.டார்ச் வெளிச்சத்தை தரையில் அடித்து யாரும் கண்டுபிடிக்காதபடி நடந்தனர். கொஞ்ச தூரம் நடந்ததும் இளங்கோ நின்றார்.காட்டில் மல்பெர்ரி மரங்கள் நிறைய இருந்தன."காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு" என சொன்னார். "எதற்கு?" என புரியாமல் கேட்டான் சந்துரு. "மல்பெர்ரி மரம் ஒரிசாவில் நிறைய வளர்ப்பார்கள்.அதில் மல்பெர்ரி பூச்சிகள் வலரும்.அதிலிருந்து ட்சார் எனும் பட்டு நூலை எடுப்பார்கள்" என சொன்னார் இளங்கோ."முதல் முதலாக ஒரு பவுத்த பிட்சு தான் மல்பெர்ரி மரத்தை சீனாவிலிருந்து பிகாருக்கும்,அங்கிருந்து ஒரிசாவுக்கும் கொண்டுவந்தார்" என்றார். "தகவலுக்கு நன்றி.ஆனால் இப்போது இந்த நடுக்காட்டில் இதை தெரிந்து என்ன பயன்?" என கேட்டான் சந்துரு. "பாதி காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு.மற்றதை அதன்பின் சொல்கிறேன்.சீக்கிரம்" என்றார் இளங்கோ.தேட ஆரம்பித்தார். முணுமுணுத்துக்கொண்டே சந்துருவும் தேடினான்.விரைவில் கண்டுபிடித்து விட்டான். காய்ந்த மல்பெர்ரி மரத்திலிருந்து கிளைகளை உடைத்தார் இளங்கோ.சின்ன சின்ன குச்சிகளாக சேர்த்தார்.கொஞ்சம் பெரிய குச்சிகளாக எடுத்து வளைத்தார். "என்ன செய்கிறீர்கள்?" என புரியாமல் கேட்டான் சந்துரு. "அரிவாள் வாங்கப்போன இடத்தில் தான் இதை தெரிந்துகொண்டேன்" என்றார் இளங்கோ."மல்பெர்ரி மரம் பட்டுபூச்சி வளர்ப்பிற்கும், soil erosion control க்கும் மட்டும் உதவுவதில்லை.சீனர்கள் அதில் அருமையாக வில் அம்பு செய்வார்கள்.மூங்கில் கிடைக்காத போது மல்பெர்ரி தான் பயன்படும்.பச்சை மரம் உதவாது.பாதி காய்ந்த மரம் தான் உதவும்.இப்ப புரியுதா?" என்றார். மரக்கிளைகளை செதுக்கிக்கொண்டே சொன்னார்."3 முதல் 4 அடி வில்கள் மிகவும் ஆபத்தானவை.கிட்டத்தட்ட 900 அடி தூரம் வரை சக்தியோடு அம்பு பாயும்.சீனர்கள் இதில் மிக திறமையானவர்கள்.முழுக்க முழுக்க மூங்கிலையும் மரத்தையும் வைத்து மட்டுமே அம்பு செய்தார்கள்.ஆனால் ஒரிசாவில் அம்பு முனையில் கூரிய இரும்பை பொறுத்துவார்கள்.அடிபட்ட மிருகம் அம்பை உதறி விட்டு ஓடினால் கூட முனை உடலிலேயே தங்கி உயிரை குடித்து விடும்.அம்பு நாணுக்கு குதிரை முடியிலிருந்து சீன புல் நார் வரை பயன்படுத்துவார்கள்.ஆனால் அதில் சக்தி வாய்ந்தது இதோ இம்மாதிரியான சீன புல்நார் தான்" என்றார். இரண்டு விற்களும் அம்புகளும் தயாராயின.சிறிய அம்பு முனைகளை எடுத்தார்.மரக்குச்சிகளின் முனையில் வைத்து பொருத்தியதும் அம்புகள் தயாராகிவிட்டன. "நீங்க என்ன தொழில் இதுக்கு முந்தி பாத்தீங்க?கசாப்பு கடை வெச்சிருந்தீங்களா?" என்றான் சந்துரு. "கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்.நான் டாக்டர்" என்றார் இளங்கோ. -- கோயில் அருகே சென்றார்கள்.கோயில் காம்பவுண்ட் 12 அடி உயரம் இருந்தது.ஏற முடியாது என்பது தெரிந்தது.காம்பவுண்டுக்கு வெளியே காவலாளி ஆபீஸ் ஒன்று இருந்தது.எத்தனை பேர் அதில் இருந்தனர் என தெரியவில்லை. என்ன செய்வது என யோசித்தபோது ஆபிஸிலிருந்து இயந்திர துப்பாக்கி ஏந்திய பிட்சு ஒருவர் இயற்கை அழைப்புக்கு வெளியே வந்தார். நைசாக அவரை பின் தொடர்ந்தனர்.துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு பிட்சு முதுகை காட்டியபடி உட்கார்ந்தார். "அம்பு விட தெரியுமா?" என கேட்டார் இளங்கோ.அம்பை நாணில் ஏற்றினார்."அரிவாளை அந்த பையன் சாணை தீட்டும்போது அம்பு விட்டு பழகிக்கொண்டிருந்தேன்" என்றார். விஷ் என்ற சத்தம் கேட்டது.200 அடி தூரத்திலிருந்து விடப்பட்ட இளங்கோவின் அம்பு ஆவேசமாக பிட்சுவின் கழுத்தை துளைத்தது.சந்துருவின் அம்பு பிட்சுவை விட்டு 10 அடி தள்ளி விழுந்தது. பிட்சுவின் கலாஷ்னிகோவை எடுத்து இயக்கி பார்த்தனர்.எப்படி சுடுவது என தெரியவில்லை.அதை அங்கேயே கடாசிவிட்டு மீண்டும் கேட்டருகே போய் காத்திருந்தனர். 15 நிமிடம் கழித்து போன பிட்சு திரும்பி வராததால் அவரை தேட இருவர் துப்பாக்கிகளுடன் வெளீயே வந்தனர்.காட்டினுள் நுழைந்தனர். இரண்டாவது நிமிடத்தில் சரியாக இரண்டு அம்புகள் ஏவப்பட்டன.வழக்கம்போல் ஒன்று மிகச்சரியாக ஆளை அடித்து வீழ்த்தியது.இன்னொன்று தன் குறியை தவற விட்டது.ஆனால் அந்த பிட்சு அதிர்ச்சியில் திரும்புமுன் பெரிய கல் ஒன்று அவர் மீது வீசப்பட்டது.அடி வயிற்றில் அடி வாங்கி அவர் கீழே விழுந்தார். "வாழ்க்கையில் முதல் கொலை" என்றான் அதிர்ச்சியுடன் சந்துரு. "உனக்குதான் அப்படி.நான் படிக்கும்போதே ஒரு நோயாளியை மருந்து மாற்றிக்கொடுத்து பரலோகம் அனுப்பி வைத்தேன்" என்றார் இளங்கோ. மயங்கிகிடந்த பிட்சுவின் அருகே சென்றார்."சின்ன பையன்.பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் இவனை விட்டால் நமக்குத்தான் ஆபத்து" என்றார். கத்தியை ஒரு தரம் எடுத்து விட்டால் கொலைகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் முதலாக அறியும் யாரும் அதிரவே செய்வார்கள். ---------------------------------------- காவல் ஆபிசுக்குள் வேறு யாரும் இல்லை.சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள்.நல்ல வேளையாக நாய் எதுவும் இல்லை.பதுங்கி பதுங்கி போனபோது வாசல் கதவு அருகே துப்பாக்கியுடன் இருவர் நிற்பது தெரிந்தது. "இப்போது உன் குறி தவ்றினால் நம் உயிர் போய் விடும்" என்றார் இளங்கோ.இருவரும் அம்பை விடுத்தனர்.குறி தப்பவில்லை.அலறலோடு இருவரும் அம்பு பட்டு கீழே விழுந்தனர். உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.சற்று நேரம் பதுங்கி இருந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றனர்.எதிரே இரண்டு பிட்சுக்கள் நடந்து வந்துகொண்டு இருந்தனர்.தூண் பின்னே ஒளிந்திருந்து கத்தியோடு பாய்ந்தனர்.சத்தம்போடாமல் இரண்டு பேர் காலியாயினர். மெதுவாக ஒவ்வொரு அறையாக தேடி பார்த்தபடி சென்றனர்.ஒரு அறைக்குள் எட்டி பார்த்தபோது நிறைய பிட்சுக்கள் தூங்குவது தெரிந்தது.மெதுவாக உள்ளே நுழைந்தனர். சந்துரு இரு கைகளிலும் இரு கத்திகளை எடுத்தான்.தூங்கிய இருவர் நடுவே நின்றான்.அசந்து தூங்கினர் இருவரும்.கை நடுங்க கத்திகளை ஆவேசமாக இறக்கினான். கத்தி இறங்குமுன் அலறல் கேட்டது.அது இளங்கோ குத்திய இருவரின் அலறல். அனைவரும் பதறி அடித்துக்கொண்டு எழுந்தனர்.கோடாரியை எடுத்து சுற்றினான் சந்துரு.இரண்டு மூன்று பேர் கீழே விழும் சத்தம் கேட்டது.அதன் பின் விளக்கு எரிந்தது. 8 பேர் இறந்து கிடந்தனர். அறையின் நடுவே ரத்தக்கறை படிந்த கோடாரியுடன் இருவரும் நின்றிருந்தனர்.அவர்களை ஐந்து பிட்சுக்கள் சுற்றி வளைத்தனர். கராத்தே தெரியாத இருவர் என்ன தான் கோடாரியுடன் இருந்தாலும் கராத்தே தெரிந்த ஐவருக்கு சமமாவார்களா என்ன? கழுத்தில் கராத்தெ வெட்டு வாங்கி சந்துரு விழுந்தான்.அவனை மூவர் பிடித்து அமுக்கினர்.இளங்கோ ஒருவன் தலையை வெட்டினார்.ஆனால் அடுத்தவன் வெகு திறமையானவனாக இருந்தான்.அடிவயிற்றில் எத்து வாங்கி மயங்கி விழுந்தார்.பிட்சுகள் அவர்கள் இருவரையும் சங்கிலியால் தரையில் கட்டி போட்டனர். மீதமிருந்த நான்கு பிட்சுக்களும் பேயை பார்ப்பது போல் தரையில் கிடந்த அவர்கள் இருவரையும் பார்த்தனர்.தாங்கள் உயிரோடு இருப்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. (தொடரும்) அத்யாயம் 1 அத்யாயம் 2 அத்யாயம் 3 அத்யாயம் 4 அத்யாயம் 5
Post a Comment