Showing posts with label I Am that I Am. Show all posts
Showing posts with label I Am that I Am. Show all posts

Sunday, October 31, 2010

கடவுளின் நண்பன்

அந்த கடவுள் ஒரு மிக பெரிய வழிபாட்டு தளத்தை நடத்தி வருபவர். யதேச்சையாக ஒரு உறவினர் வீட்டில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரை நடுவே உட்கார வைத்து எல்லோரும் பயபக்தியுடன் அமர்ந்திருந்தனர்.

உறவினர் என்னை கடவுளிடம் அறிமுகபடுத்தினார். "எனக்கு சாமி நம்பிக்கை இல்லை" என்றேன்.

கடவுள் என்னிடம் விவாதத்தை தொடங்கினார். "உன்னை பெற்றது உன் அம்மா என உனக்கு எப்படி தெரியும்?நம்பிக்கை தானே?" வகையறா லாஜிக் இல்லாத கேள்விகள். அசுவாரசியமாக பதில் சொல்லிகொண்டிருந்தேன்.

விவாதத்தை கேட்டுகொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு கோபம் வந்தது. "இந்த மாதிரி திக காரன் கிட்ட பேசாதீங்க சாமி" என்றார். சாமியும் "ஆமாம்.." என்றார்."திகன்னா என்னன்னே தெரியாது கடவுளே" என்றேன்.

"அப்புறம் இந்த மாதிரி எல்லாம் எப்படி பேசுகிறாய்?அவர்கள் தான் இந்த மாதிரி பேசுவார்கள்"

"அவர்கள் யார்ன்னே எனக்கு தெரியாது"

கடவுளுக்கு சிரிப்பு வந்தது."நல்லது" என்றார்.பிரசாதம் கொடுத்தார்.

ஆறுமாதம் கழித்து கடவுளை மீண்டும் ஒரு கல்யாண மண்டடபத்தில் சந்தித்தேன்.என்னை அடையாளம் கண்டுகொண்டார்.அன்று அவரை பார்க்க மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வந்திருப்பார்கள்.என்னை இரு என உட்கார வைத்து விட்டு வந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அந்த கூட்டத்தை கண்டு எனக்கே பயம் வந்தது.இவருடனா சண்டை போட்டோம் என நினைத்து கொண்டேன்.அப்புறம் என்னை அருகே அழைத்தார்.

"அன்னைக்கு பேசினதை மனசுல வெச்சுக்காதீங்க" என்றேன்.

அவருக்கு ஒரே சிரிப்பு.

"என்னை எதாச்சும் துணிகடைக்கு கூட்டி போ.கோயமுத்தூர்ல எனக்கு கடையே தெரியாது" என்றார்.

"என்கிட்ட கார் இல்லை.பைக் தான் இருக்கு"

"பைக்குல நான் வரமாட்டேன்னு சொன்னேனா?"

பைக்கில் போகும்போது "என்னை எல்லோரும் கடவுள் என்கிறார்கள். வயசு வித்தியாசம் இல்லாமல் காலில் விழுகிறார்கள். நீ தான் பயம் இல்லாம பேசினாய்" என்றார்.

"நீங்க கடவுளா?" என கேட்டேன்

பதில் சொல்லாமல் "பரம்பரையா இந்த வழிபாட்டு தளத்தை நிர்வகிச்சுகிட்டு வர்ரோம்.பரம்பரையா பக்தர்கள் இருக்கிறார்கள்.மாசம் ரெண்டு லட்சத்துக்கு பக்கம் செலவு ஆகுது" என்றார்.

மாதம் ரெண்டு லட்சம் வருமானம் வருகிறது என சுற்றி வளைத்து சொல்லுகிறார் என புரிந்தது.

"ஆன்மிகம் உண்மையா?" என மறுபடி கேட்டேன்.

"வீட்டுக்கு போயி உன் கால் முட்டிக்கு பின்புறம் பக்கம் பக்கமா ரெண்டு மச்சம் இருக்கான்னு பாரு" என சொன்னார்.

"இருந்தால்.."

"ஆன்மிகம் உண்மை."

துணிகடையில் பைக் நின்றது.

துணி வாங்கினார்.வாங்கிவிட்டு பில் போடும்போது கையில் இருந்த பையை திறந்து அதில் இருந்த சிலை ஒன்றை எடுத்தார். "இந்த சிலை ஐநூறு வருஷமா வெச்சு பூஜை பண்ணுறோம்.இது உன் கடைக்கு வந்துவிட்டது.உனக்கு இனி ராஜயோகம் தான்"

கடைகாரர் மெய்சிலிர்த்தார்.பில்லுக்கு பணம் வேண்டாம் என சொல்லி கைகூப்பி அனுப்பி வைத்தார்.

அடுத்து என்.ஆர்.ஐ பக்தர் ஒருவர் வீட்டுக்கு போக சொன்னார்.அங்கே போனதும் பக்தருக்கு அந்த துணியை கொடுத்தார்.பக்தர் வழக்கத்தை விட அதிகமாகவே காணிக்கை கொடுத்தார்.

கடவுளை மண்டபத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.முட்டிக்கு பின்னால் பார்த்தேன்.

அருகருகே இரண்டு மச்சம் இருந்தது.

அதன்பின்னர் இரண்டு வருடம் கழித்து அவர் மீண்டும் கோயமுத்தூர் வந்தார்.தொலைபேசியில் அழைத்தார்.

"இருக்கா?" என கேட்டார்

"இருக்கு" என்றேன்.

"ஆன்மிகம் நிஜமா?" என கேட்டார்.

"தெரியலை" என்றேன்.

"தெரியாத வரைக்கும் தான் நீ எனக்கு நண்பனா இருப்பாய்.தெரிந்தால் நீயும் என்னை பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்துவிடுவாய்.."

சிரித்துகொண்டே போனை வைத்தார்.

Friday, June 04, 2010

435. ஆடாதிக்கம்

இன்று பிளானட் எர்த் என்ற பிரமிக்க வைக்கும் டிஸ்கவரி சானல் - பிபிசி டிவிடி பார்த்தேன்.பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், மிருகங்களை பற்றிய புதிய செய்திகளை அறிய முடிந்தது.

இஸ்ரேல் மலை ஆடுகள் மோதுவதை காட்டினார்கள்.அது சாதா மோதல் இல்லை.ஜெயிக்கும் ஆட்டுக்கு நிறைய பெண் ஆடுகள் கொண்ட மந்தை பரிசாக கிடைக்கும்.தோற்ற ஆடு காலம் முழுக்க கட்டை பிரமாசாரியாக காலம் தள்ளவேண்டியதுதான். சண்டையை சுவாரசியமாக பார்த்தேன்.இரண்டு ஆடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் நான் சப்போர்ட் செய்த ஆடு ஜெயித்ததா இல்லையா என கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தாலும் இந்த பலதார மண விவகாரம் ஆடுகளுக்கிடையே கூட குழப்பத்தை ஏற்படுத்துவதை நினைத்து ஆடாதிக்கத்துக்கு எதிராக பதிவு போடவேண்டும் என நினைத்துகொண்டேன். போட்டும் விட்டேன்.

*****

எறும்புகளை பற்றி ஒரு பயாலஜி மாணவனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.பெண் எறும்புகள் தான் சுறுசுறுப்பனவையாம்.நாம பார்ப்பதெல்லாம் பெண் எறும்புகள் தானாம்.ஆண் எறும்புகள் புற்றை விட்டு வெளியே வராதாம்.புற்றுக்குள் இருந்துகொண்டு கலவி செய்தி பெண் எறும்பை கர்ப்பமாக்குவது மட்டும் தான் ஆண் எறும்பின் வேலையாம்.தின்பது, தூங்குவது, கலவி செய்வது...கொடுத்து வைத்த சுகவாசி வாழ்க்கைதான் இந்த ஆண் எறும்புகளுக்கு...மிருக இனந்திலும் கூட ஆணாதிக்கம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது பார்த்தீர்களா?(அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் ஆண் எறும்பா பிறக்கணும்)

*****

நேடலி ஹாலோவே என்ற 14 வயது அமெரிக்க பெண் டட்சு தீவு ஒன்றில் க்னாமல் போனார்.அவரை கொலை செய்ததாக வான்டெர்வட் என்ற டச்சு இளைஞன் விடியோவில் வாக்குமூலம் கொடுத்தான்.அதன்பின் அது குடித்துவிட்டு உளறியது என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டான்.அமெரிக்க ஊடகங்கள் அவனை வறுத்தெடுத்து வந்தன.அவனை கைது செய்ய ஒத்துழைக்காத டச்சு அரசை திட்டி தீர்த்தன."இது அமெரிக்காவின் அத்துமீறிய செயல்.எங்கள் நாட்டு குடிமகன் நல்லவன்,வல்லவன்..அவனை கைது செய்ய சொல்ல நீங்கள் யார்/" என அலட்சியமாக இருந்தது டச்சு அரசு.இன்று அதே வன்டர்வாட் ஒரு பெரு நாட்டு பெண்ணை கொலை செய்தது கைது செய்யபட்டிருக்கிறான்.டச்சு அரசு இனியாவது திருந்துமா என்பது தான் கேள்வி?

*********

மார்க் பெரென்சன்..ரோடா பெரென்சன், இருவரும் புரபசர்கள்.கம்யூனிச சித்தாந்தம் பேசிய மார்க்கின் ஒரே மகள் லோரி திடீரென விடுமுறையில் பெருவுக்கு போய் அங்கே ஒரு கம்யூனிச தீவிரவாதியை கல்யாணம் செய்துகொண்டாளாம்.புரட்சிகர கல்யாணம் முடிந்த சில நாட்களில் போலிஸ் கணவனையும், மனைவியையும் கைது செய்ய அந்த பெண்ணுக்கு தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.15 ஆண்டுகள் கழித்து ஜாமினில் விடுதலை ஆகி இருக்கிறார்.2015 வரை பெருவில் தங்கி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன்.