Friday, April 13, 2007

267.நடிப்புக்கடவுளும் சில நாத்திகர்களும்

ரஜினியின் சிவாஜி வெளிவர இருப்பதை தொடர்ந்து ஊடகங்களில் அழுகுரல்களும் ஒப்பாரிகளும் ஆரம்பித்து விட்டன.வழக்கமாக ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் நடக்கும் சம்பிரதாயம் இது என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை இல்லைதான். இருந்தாலும் இந்திய திரையுலகின் மிகச்சிறந்த படைப்பு வெளிவரும் நேரத்தில் காந்தாரிகளின் ஒப்பாரிகளும், மூளி அலங்காரிகளின் ஓலங்களும் ஒலிப்பது காதுக்கு இதமாகத்தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.அதாவது குந்திக்கு பிள்ளை பிறந்துவிட்டது என்று கேள்விப்பட்டதும் பிள்ளை பெறாத காந்தாரி அம்மிக்கல்லை எடுத்து வயிற்றில் இடித்துக்கொண்டு அழுதாளாம்.அந்தமாதிரி தான் ரஜினியின் சிவாஜி வெளிவர இருப்பதால் பொறாமையில் நவீன காந்தாரிகள் கறுப்புத்துணியில் கண்ணைக் கட்டிக்கொண்டு குருடாகி "லபோ..திபோ" என வைக்கும் ஒப்பாரியும் சுருதிபேதமாக ஒலிக்கிறது.

இந்த காந்தாரிகள் யார் என்று பார்த்தால் பொதுவாக இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை இவர்கள் பொதுவாக விரக்தி அடைந்த ஜென்மங்கள் என்பதுதான்.இந்த விரக்தி தான் இவர்களை வெற்றி அடைந்த மனிதர்களை இகழத்தூண்டுகிறது.இது புரிந்து கொள்ளக்கூடிய உணர்வுதான் என்பதால் பொதுமக்கள் இவர்களை சற்று அனுதாபத்துடனே பார்ப்பது வழக்கம்.இந்த விரக்தி ஏன் உருவானது என்று பார்த்தால் இவர்கள் மக்களால் கைவிடப்பட்டது தான் காரணம் என தெரியவருகிறது.

இந்த விரக்தி அடைந்த மனிதர்களில் முதல்வகையினர் அறிவுஜீவி ரசிகர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் வகையறாக்கள்.ரிலீசே ஆகாமல் டப்பாவுக்குள் முடங்கி தயாரிப்பாளரை முச்சந்தியில் நிற்கவைத்து பிச்சை எடுக்க வைத்த டப்பா தமிழ்படங்களை இவர்கள் விரும்பி ரசிப்பது வழக்கம்.இவர்கள் போகும் தியேட்டர்களில் பொதுவாக இவர்களும் கூட்டம் இல்லாத இடம் தேடி வந்த காதல்ஜோடிகளும் தான் இருப்பது வழக்கம்."ஈரான் படத்தை பார்", "கஜகஸ்தான் படத்தைப்பார்" என உலகமேப்பில் எங்கேயோ பதுங்கி இருக்கும் ஐநாசபை தலைவருக்கு மட்டுமே தெரியக்கூடிய தேசங்களின் படங்களை மட்டும் ரசிப்பது இவர்களின் வழக்கம்.ரஜினி, எம்ஜிஆர் என்ற பெயர்களைக் கேட்டாலே இவர்கள் பல்லை நற,நற என கடித்துக் கொண்டு "சிட்டிசன் கேன், பைசைக்கிள் தீவ்ஸ்" என்று தமிழ்நாட்டில் எவனுமே பார்க்காத படங்களை உதாரணம் காட்டி தமிழில் இந்தமாதிரி படங்கள் வராமல் இருக்க காரணம் ரஜினியும், எம்ஜிஆரும் தான் என்று உரைப்பது இவர்கள் வழக்கம்.(அகிரா குரொசோவா, செவன் சமுராய் என இவர்கள் புலம்ப,புலம்ப ஜப்பானில் ரஜினிபடங்கள் வசூலைக்குவிப்பது வேறுவிஷயம்.இவர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் மலையாள சூப்பர் ஸ்டார்கள் ஷகீலாவையும், ஷர்மிலியையும் போட்டிபோட்டு ஜெயிக்க முடியாமல் தோற்றவர்கள். இப்போது கேரளாவில் தமிழ் மசாலாப்படங்கள் தான் பட்டையை கிளப்புகின்றன)

இந்த அறிவுசீவிகளை அடையாளம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல. வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை துவைக்காத ஜிப்பா, தோளில் தொங்கும் ஜோல்னாபை (உள்ளே என்னதான் வைத்திருக்கிறார்களோ?), பிரதாப் போத்தன் போட்டிருப்பது போன்ற உருண்டை கண்ணாடி ஆகியவற்றை வைத்து இவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.இவர்கள் ஊர் முழுவதுக்கும் அட்வைஸ் செய்யும் தகுதி உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நமது அட்வைஸ் தேவைல்ல்லை. இருந்தாலும் "ஈரான் படஙளைப்பார், நைஜீரியப்படங்களைப்பார், டோக்கியோவைப்பார்" என உளறும் இவர்களைக்கண்டு இரக்கப்பட்ட வள்ளுவப்பெருந்தகை அன்றே ஒரு குறளை பாடிவைத்தார்.

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்"

அடுத்த வகை காந்தாரிகள் திரைத்துறையில் இருக்கின்றனர்.இந்த காந்தாரிகள் நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்ற வகையறாவை சேர்ந்தவர்கள். ரஜினிபடம் ஓடுவதால் தான் இவர்கள் படம் ஓடுவதில்லை என்று ஒரு நினைப்பு இவர்களுக்கு. மக்களால் முற்றிலும் கைவிடப்பட்ட இவர்களின் திரைப்படங்களை சன்டிவியில் ஓசியில் பார்க்கக்கூட ஆளில்லை என்பதால் விரக்தி அடைந்த இவர்கள் ரஜினிபட வசூலைக்கண்டு ஏஞ்சலினா ஜோலிக்கு பிள்ளை பிறந்த செய்தியை அறிந்த ஜெனிஃபர் ஆனிஸ்டனின் மனநிலையில் இருப்பது வழக்கம். வீராச்சாமி தந்த டி.ஆர், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், புரட்சிவீரர் வேலுபிரபாகரன் ஆகியோர் இந்த வகையறாவை சேர்ந்தவர்கள். (வேலு கடைசியில் திருந்தினார் என வைத்துக்கொள்ளுங்கள்). இவர்களும் ஒவ்வொரு ரஜினிபட ரிலீசின்போதும் தங்கள் படங்களை போட்டிக்கு திரையிடுவேன் என காமடி செய்வது வழக்கம்.

அடுத்தவகை மூளி அலங்காரிகள் மக்களால் முற்றிலும் கைவிடப்பட்ட சில தனித்தமிழ் இயக்கங்கள். ரஜினி ஒரு கன்னடர் என்று சொல்லி இவர்கள் ரஜினிமீது கடும் கோபமாக இருப்பார்கள் (இவர்கள் பொதுவாக எல்லோர் மீதும் கடுங்கோபத்தில் தான் இருப்பார்கள்). அதுபோக ரஜினி தன் படத்தில் ஆன்மிக கருத்துக்களை சொல்வதால் ரஜினிபட ரிலீசின்போது இவர்கள் பைல்ஸ் வந்தவன் மிளகாய்ப்பொடி மூட்டைமேல் உட்கார்ந்தது போன்ற எரிச்சலை அடைவது வழக்கம்.."பெரியார் ஆனதென்ன ராஜாஜி" என்ற பாடல்வரியை 'தெய்வகுத்தம்' என்று சொல்லி அதை எடுக்கவைத்து அந்தவரியை தமிழ்நாடெங்கும் புகழடைய வைத்த இந்த பிரகஸ்பதிகள் இப்போது "காவிரி" என்ற வார்த்தை ரஜினிபடப் பாடலில் வருவதை வைத்து "காவிரியைப் பற்றி பாட ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்ற புல்லரிக்க வைக்கும் கேள்வியை எழுப்பிக்கொண்டு மக்கள் மன்றத்தில் வலம் வருகின்றனர். (சிவாஜியின் தஞ்சை, திருச்சி ஏரியா வசூல் தான் இவர்களுக்கு மக்கள் கொடுக்கும் பதிலாக இருக்கும்).

இதுபோக இன்னும் சில புல்லரிக்க வைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு விரக்தி அடைந்த பல இம்சை அரசர்கள் சிவாஜி ஓடவிருக்கும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஊடகங்களில் புலம்பித்தீர்க்க இருக்கின்றனர்."குமரிகள் கொஞ்சி விளையாடும் மண்டபத்தில் என்ன கிளவி இழுத்துக் கொண்டிருக்கிறாய்" என மக்களும் எரிச்சல் அடையத்தான் போகின்றனர்.

(Key words: Movies, Tamil)

30 comments:

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

"தெனாலி படம்பார்த்த பிறகுதான்ஈழத் தமிழரின் இன்னல் எனக்குப்புரிந்தது"

என்று கூறிய அதிபுத்திசாலி,"நடிப்பு அசிங்கம்" ரசினியின் பொற்பாதம் பணியும் அயலக அடிமைகளுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்.

"நடமாடும் போதைவஸ்து" ரசினியின்
சேவை அனைத்து கிரகங்களுக்கும் தேவை.

VSK said...

இதில் எழுதியிருக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் நான் ,உழுதும் வழிமொழிகிறேன்.

தமிழ்ப்புத்தாண்டு, தைப்பொங்கல், தீபாவளி சமயங்களில் தங்களது பழைய பதிவுகளை மீள்பதிவு செய்வதோடு இப்போது ரஜினி பட ரிலீஸும் சேர்ந்திருக்கிறது இவர்களுக்கு!

விரகத்தின், விரக்தியின் உச்சகட்டத்தில் இரூக்கும் இவர்கள் உடனே ஒரு மனநலமருத்துவரைப் பார்ப்பது மிக மிக அவசியம்!

Amar said...

தல,

பரிட்சையின் காரனத்தால் சூப்பர் ஸ்டாரின் படம் வெளியாகும் முதல் நாளில் பார்க்க முடியாமல்போனதே என்ற வருத்தத்தில் இருந்த என்னை உன் பதிவு ஊக்கப்படுத்துகிறது...உற்சாகப்படுத்துகிறது.

நடத்து.


இன்னும் ரெண்டு ரவுண்டு போதைவஸ்துவை ஊத்துங்கப்பா!!

Unknown said...

விஞ்ஞானி முருகன்

நிஜமாகவே விஞ்ஞானி தான் நீங்கள்.

எஸ்.கே

//தமிழ்ப்புத்தாண்டு, தைப்பொங்கல், தீபாவளி சமயங்களில் தங்களது பழைய பதிவுகளை மீள்பதிவு செய்வதோடு இப்போது ரஜினி பட ரிலீஸும் சேர்ந்திருக்கிறது இவர்களுக்கு!//

அடுத்தவன் சந்தோஷமாக இருக்கும் பண்டிகை சமயத்தில் தான் இவர்களுக்கு அதை எல்லாம் கண்டு மனம் பொறாது திட்டிக் கொண்டிருப்பார்கள்.ஹ்ம்ம்...

Unknown said...

சமுத்ரா

பரிட்சையில் கலக்கிவிட்டு மேமாத விடுமுறையில் ஜாலியாக தலைவர் படம் பாருங்கள்.All the best.

Gurusamy Thangavel said...

செல்வன், இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன், ஆமா. :-)

Unknown said...

வாருங்கள் தங்கவேல்

ஓவராகத்தான் திட்டிவிட்டேன்.காரணம் இவர்கள் ரஜினி ரசிகர்களை 'மடையர்கள் முட்டாள்கள்' என்று சொல்லி கன்னா பின்னாவென்று திட்டுவதுதான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை இருக்கும், ஒவ்வொருவிதமான படம் பிடிக்கும்.அதை வைத்து அவனை இகழ்வது சுத்தமாக சரியில்லை. ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஒவ்வொருவிதமான கலைவடிவம் இருக்கும். வீரத்தை மதிக்கும் தமிழ்கலாச்சாரத்தில் மசாலா படங்கள் புகழ்பெறுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

நாகை சிவா said...

//ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் நடக்கும் சம்பிரதாயம் இது என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை இல்லைதான்.//

அதே அண்ணாத்த..... விடுங்க நம்மளை விட ரஜினியை பற்றி அவர்கள் தான் ரொம்ப சிந்திக்குறாங்க....

Unknown said...

ஆமாம் நாகையாரே. கன்னாபின்னவென்று திட்டுவார்களே ஒழிய கண்டிப்பாக ரஜினி படத்தை பார்க்க தவற மாட்டார்கள்:)

ஜோ/Joe said...

நடிப்புக் கடவுளா ? ஹா..ஹா..நடிப்பு கடவுள் என்று ஒன்று இருந்தால் அது சிவாஜிராவ் கெய்க்வாட் இல்லை .அது சிவாஜி கணேசன்.

அருண்மொழி said...

அண்ணே,

எல்லாம் சரி. நடிப்புக்கடவுள் என்று title கொடுத்துள்ளீர்களே, அது யாருங்க?

Unknown said...

ஜோ

சிவாஜி கணேசன் ரஜினியின் நல்ல நண்பர்.எனக்கும் மிக பிடித்த நடிகர்,மனிதர்,பண்பாளர்.

Unknown said...

14

Unknown said...

அருண்மொழி

இது என்ன கேள்வி?நடிப்புக்கடவுள் என்றது ரஜினியைத்தான்.ஜோ சிவாஜியும் நடிப்புக்கடவுள் என்கிறார்.எனக்கு அதில் ஒன்றும் ஆட்சேபமில்லை.

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

நடிப்புக்கடவுள்னு ரஜினிய சொன்னா
அப்ப சிவாஜிய என்னன்னு சொல்றது.

நல்லவேளை சிவாஜி உயிரோட இல்ல.

"கூத்துகாட்டி" என்பதே சாலச்சிறந்தது.

Unknown said...

பூச்சாண்டி

கூத்துகாட்டுவது ஒரு நடிகனின் தொழில்.தில்லையில் ஆடும் தில்லைகூத்தனே கூத்தாடிகளின் தலைவன் என்று பொருள்வரும் விதத்தில் தான் 'நடராஜன்' என்று பெயர் வைத்திருக்கிறான். நேர்மையாக உழைத்து பிழைக்கும் எந்த தொழிலாளியும் தொழில் காரணமாக கேவலப்பட வேண்டியதில்லை.

நன்றி

G.Ragavan said...

நடிப்புக் கடவுளா? செல்வன் இது ரொம்ப ரொம்ப ரொம்பவே ரொம்ப!!!!!!!!!!!!

வெகுஜனப் படங்கள் தவறு என்பதல்ல வாதம். ஆனால் ரஜினி படங்கள் வரவர எப்படியிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடிப்பிற்கான கடவுள் கொஞ்சம் புதுமையான பாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். நிறைய பேர் பார்க்கின்றார்கள் என்பதால் ஒன்று நன்று என்று ஆகிவிடாது. anyway i am not here to argue...எல்லாரும் வியாபாரிகள்தான். ஒரு சிலர் சிறந்த வியாபாரிகள். அவ்வளவுதான்.

Unknown said...

ராகவன்,

கலையை கடவுளாக மதிக்கும் நாட்டில் நடிப்புக்கடவுள் என்றதில் என்ன தவறு இருக்கிறது?

ரஜினி படங்கள் ஒவ்வொன்றும் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துத்தான் வருகின்றன.ரஜினிக்கு கிடைக்கும் பணமும்,புகழும் அவருக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகத்தான் கருதவேண்டும்.

சிறந்தது தான் வெல்லும்.சிறப்பாக இல்லாதது தோற்கும்.

Santhosh said...

செல்வன் ஜி.ரா சொன்ன கருத்துக்கள் தான் என்னுடையதும். நடிப்புக்கடவுள் எல்லாம் ரொம்ப ஓவர். நல்லா ஓடுது அப்படிங்கறதுக்காக அது எல்லாம் சிறந்தது ஆகாது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஷகிலா படம் தாம் மலையாளத்துல ரொம்ப நல்லா ஒடிகிட்டு இருந்தது :)). சரி அது என்ன பாட்டுக்கு நடுவுல "அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா ஆகும்" அப்படின்னு சொறிஞ்சி விட்டுகிட்டு. வரேன்னா வர வேண்டியது தானே? படம் வரும் பொழுது மட்டும் தமிழ்நாட்டின் மீது அக்கரை பொத்துகிட்டு வரும். செல்வன் வாயை புடுங்காதிங்க.

Unknown said...

சந்தோஷ்

கமர்ஷியல் படங்களை அளவிட நன்றாக ஓடுவதை விட வேறு எந்த மதிப்பீட்டை பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. ஷகீலா படங்கள் ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தில் எப்போதும் செல்வாக்குடன் இருக்கும்.வெகுஜன வட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றிகாணும் சக்தி (mass appeal) அவற்றுக்கு கிடையாது

தற்போது நடைபெறும் சாக்கடை அரசியலுக்கு ரஜினி பொருத்தமானவர் அல்ல.அவர் அரசியலுக்கு வருவதை விட நடிப்பதே சிறந்தது.

Santhosh said...

ஷகிலா படத்துடனான ஒப்பீடு I didnt mean it ஒரு வாதத்துக்கு தான் சொன்னேன். ஆனாலும் ரஜினி நடிப்புக்கடவுள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது.
//தற்போது நடைபெறும் சாக்கடை அரசியலுக்கு ரஜினி பொருத்தமானவர் அல்ல.அவர் அரசியலுக்கு வருவதை விட நடிப்பதே சிறந்தது//
அப்பொழுது ஒதுங்கி இருக்கலாம் இல்லையா செல்வன் படத்துல ஏன் இது மாதிரியான உசுப்பி விடும் வசனங்கள் பாடல்கள். படத்துக்கு பர பரப்பு ஊட்ட எது வேண்டுமானாலும் செய்யலாமா? படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிந்தும் ஏன் இது மாதிரியான செய்கைகள். எத்தனை ரசிகர்கள் பா.ம.க உடனான சர்சைகளின் பொழுது அடிபட்டு இருக்காங்க கொஞ்சமாவது அக்கரை வேண்டாம்? எத்தனை பேர் தெய்வமா நினைக்கிறாங்க அவங்களை மனுசனா நினைக்காட்டியும் கிள்ளுக்கீரையா நினைத்து பயன்படுத்தி தூக்கி எரிய வேண்டாம் இல்லையா? கொஞ்சமாவது Social responsibility வேணும் செல்வன்.

Unknown said...

எல்லா நடிகர்களும் படத்தில் முதல்வராவேன், பிரதமராவேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ். எல்லா நடிகர்களுக்கும் உள்ளூர இப்படி ஒரு எண்ணம் இருக்கும். இது எம்ஜிஆர் உருவாக்கிய டிரெண்ட்.

பாமகவிடம் ரகளை செய்யசொல்லி ரஜினி சொல்லவில்லை.சும்மா இருந்த அவரை சீண்டியது ராமதாஸ்.அதனால் கோபம்கொண்ட ரசிகர்கள் தேர்தல் சமயத்தில் வம்பிழுத்து அடிவாங்கினர்.அதன்பின் தான் அவர் ரசிகர்களுக்காக களமிறங்க நேரிட்டது.

Amar said...

ஆபீசர்களா...லூஸ் உடுங்கப்பா..

தந்தை, அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், இந்தியாவின் மருமகள் மாதிரி பட்டம் கொடுக்கிறது இல்லையா...ஆந்த மாதிரி செல்வன் ஒன்னை கொடுத்திட்டாரு.

verbatimஆ எடுத்துக்கிட்டு லடாய் பன்னறீங்களே ஆபீசர்களா..:-)
--

செல்வன்,

போன வாரம் இலங்கை தமிழர் ஒருவரின் வீட்டில் தங்க நேர்ந்தது. அவரிடம் இருந்த ரஜினி collectionsஐ பார்த்து அசந்தே போய்விட்டோம்.

இரவு எட்டு மனிக்கு ஆரம்பித்த அந்த தொகுப்பை ஆராய் ஆரம்பித்து காலை முன்றுக்கு தான் முடித்தோம்.

மனிதர் எத்தனை விதமாக நடித்திருக்கிறார்!!!

நீர் கொடுத்த பட்டம் கரெகட்டு.

கோயம்புத்தூர்காரன் சொன்னா சரியா தான் இருக்கும்.....அல்லாருஞ்சும்மாயிருங்கப்பா.. :-)

Santhosh said...

//எல்லா நடிகர்களும் படத்தில் முதல்வராவேன், பிரதமராவேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ்//
செல்வன் எல்லா நடிகர்களும் பத்திரிக்கை யாளர் சந்திப்பு வெச்சி இவங்களுக்கு ஓட்டு போடாட்டி ஆண்டவன் கூட உங்களை காப்பாத்த முடியாது அப்படின்னு சொல்றது இல்ல. அதே மாதிரி நான் எங்க வருவேன் எப்படி வருவேன் அப்படின்னு பத்திரிக்கைகளுக்கு scoop நியூஸ் குடுத்து பரபரப்பு பண்ணிகிட்டு இருப்பது இல்ல. இப்ப களத்துல இருக்குற விஜயகாந்த் வரை. இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல.

Santhosh said...

நான் அவரை நடிகராக இருந்து பாராட்டுகிறேன் ஆனால் என்னுடைய எதிர்ப்பு எல்லாம் அவர் ரசிகர்களிடம் செய்கின்றன் exploitationஜ தான். தயவு செய்து உடனே கேக்காதிங்க அவர் சொல்லிட்டாரு இல்ல குடும்பத்தை பாருங்கண்ணு இதுக்கு மேல அவரால் என்ன செய்ய முடியும் அப்படின்னு. இதையே கமலிடம் எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய ரசிகர் மன்றங்களுக்கும் ரஜினி ரசிகர் மன்றத்துக்கும் இடையே உள்ள வேறு பாட்டை பாருங்க. கமல் சொன்னபடி அவருடைய ரசிகர்களை exploit செய்வது இல்ல. படத்தை ரசிக்கறீங்களா அத்தோட நிறுத்துங்க அப்படின்னு விட்டுடறாரு.

Unknown said...

//எல்லா நடிகர்களும் பத்திரிக்கை யாளர் சந்திப்பு வெச்சி இவங்களுக்கு ஓட்டு போடாட்டி ஆண்டவன் கூட உங்களை காப்பாத்த முடியாது அப்படின்னு சொல்றது இல்ல. அதே மாதிரி நான் எங்க வருவேன் எப்படி வருவேன் அப்படின்னு பத்திரிக்கைகளுக்கு scoop நியூஸ் குடுத்து பரபரப்பு பண்ணிகிட்டு இருப்பது இல்ல//

சந்தோஷ்

இவர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்தது மிக நியாயமான ஒன்றாக கருதுகிறேன்.அரசியல் பற்றி பேட்டி கொடுப்பதிலும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் எந்த பேட்டியிலும் நான் அரசியலுக்கு வருவேன் என்று இவர் சொன்னதே இல்லை.1996ல் டிவியில் தெளிவாக நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

சினிமாவில் பாட்டு வைத்தது வேணா தப்புன்னு சொல்லலாம்.ஆனா எல்லா நடிகர்களும் அப்படி பாட்டும் சீனும் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்

Unknown said...

//இதையே கமலிடம் எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய ரசிகர் மன்றங்களுக்கும் ரஜினி ரசிகர் மன்றத்துக்கும் இடையே உள்ள வேறு பாட்டை பாருங்க. கமல் சொன்னபடி அவருடைய ரசிகர்களை எxப்லொஇட் செய்வது இல்ல. படத்தை ரசிக்கறீங்களா அத்தோட நிறுத்துங்க அப்படின்னு விட்டுடறாரு//

ரஜினியும் ஒன்றும் எக்ஸ்ப்ளாயிட் செய்வது இல்லை.ரசிகர்மன்ற காட்சியின் மூலம் ரசிகர்கள் நன்றாக துட்டு சம்பாதிக்கத்தான் வழிசெய்கிறார்.

கமல் ரத்ததானம் அது இது என்று செய்கிறார்.ரஜினிக்கு அதில் பெரிதாக அனுபவம் இருப்பதாக தெரியவில்லை.

Unknown said...

தலை சமுத்ரா

விடுங்க.நம்ம மக்கள் திட்ட திட்ட சிவாஜி எல்லா ரிகார்டையும் பிரேக் செய்யப்போவதுதான் நடக்கும்:))

கனிந்தமரத்தில் தானே கல்லடி விழும்

Santhosh said...

//ரசிகர்மன்ற காட்சியின் மூலம் ரசிகர்கள் நன்றாக துட்டு சம்பாதிக்கத்தான் வழிசெய்கிறார்.//
இது மிகவும் தவறான தகவல் செல்வன். ரசிகர் மன்றத்தில் இருந்தால் செலவு தானே தவிர ஒரு காலணா பெயராது. இதை நான் இங்கே வரும் வரை என் நண்பர்கள் மூலமாக பார்த்துக்கொண்டு இருந்த உண்மை. பேனர் வெக்கிறேன் கட் அவுட் தோரணம் பிறந்த நாள் செலவு தலைவருக்கு பேரன் பொறந்த செலவு அப்படின்னு செலவு தானே தவிர சம்பாதிப்பது என்பது எல்லாம் வழியே இல்லை.

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

என் உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில்
வடித்த சந்தோசிற்கு வாழ்த்துக்கள்.