Sunday, June 25, 2006

115.அஞ்சாதே என்று சொல்லாத ஆண்மை

இத்தனை நாள் வராத ஆசை ஒன்று என்னை திடீரென பிடித்து கொண்டது.அதாவது கதை எழுதவேண்டும் என்பதுதான்.குட்டிகதைகள் சில எழுதியிருக்கிறேன்.இருப்பினும் பெரிய தொடர்கதை ஒன்று எழுதவேண்டும் என ஆசை.இது கொஞ்சம் நீண்ட தொடர்.வலைபதிவில் தொடர்கதை எந்த அளவு வெற்றி அடையும் என தெரியவில்லை.ஆனாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டும் உங்களை நம்பியும் எழுத துவங்கிவிட்டேன்.வார வாரம் மூன்று எபிசோட்கள் தர எண்ணியுள்ளேன் முன்னுரை சந்திரசேகரன் நீண்டநாள் வெளியூர் சுற்றுப்பயணம் போய்விட்டு திரும்பி வந்தான்.வந்தபோது அவன் மனைவி காணாமல் போயிருந்தாள்.எஙெங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.போலிஸ் புகார் கொடுத்தான்.பிறகு எதேச்சையாய் அவள் டயரி சிக்க அதில் "ஷென்ரிக்கியோ" என அடிக்கோடிட்டு எழுதப்பட்டிருந்தது. டயரியை எடுத்துக்கொண்டு போலிஸிடம் போனான்.விசாரித்து பார்த்ததில் அது கொரியாவில் உள்ள ஒரு கல்ட்டின்(Cult) பெயர் என தெரியவந்தது.அந்த மதம் புதிதாக துவங்கப்பட்டது என்றும் லீ என்ற மததலைவர் துவக்கியது என்றும் என்றும் தெரியவந்தது.சந்திரசேகரனின் மனைவி அம்மதத்தில் சேர்ந்து துறவியாகிவிட்டாள்.ஏன் அதில் திடீரென்று சேர்ந்தாள்,அவளை மீண்டும் பார்க்க முடியுமா என சந்திரசேகரனுக்கு புரியவில்லை.அந்த கல்டின் மும்பை கிளையில் விசாரிக்க முடிவு செய்து மும்பை கிளம்பினான். அந்த கல்ட்டின் அலுவலகம் சென்றபோது வெளியே அழுதுகொண்டு ஒருவர் நின்றிருந்தார்.என்ன விஷயம் என விசாரித்தபோது அவர் மகள் திடீரென இந்த மதத்தில் சேர்ந்து விட்டதாகவும்,அதன் பின் அவரை பார்க்கவே முடியவில்லை என்றும் சொன்னார்.போலீசில் புகார் கொடுத்தபோது எந்த ஆதாரமும் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.எப்படி இவர்கள் ஆட்களை சேர்க்கிறார்கள்,அதன்பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என எதுவுமே தெரியவில்லை என சொல்லி புலம்பினார்.சந்துருவுக்கு பகீரென்றது.இப்படி இந்த கல்ட்டால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து ஒரு ரகசிய சங்கம் அமைத்திருப்பதாகவும் அவரவர் குடும்ப உறுப்பினர்களை மீட்பதே லட்சியம் என்றும் சொன்னார். சந்துரு தான் அந்த ஆபீசில் சென்று பேசிப்பார்ப்பதாக சொல்லி உள்ளே போனான்.உள்ளே ஒரு பிட்சு இருந்தார்.அவன் மனைவியை பார்க்க விரும்புவதாய் சொன்னான் சந்துரு."உன் மனைவி பிக்குணி ஆகிவிட்டாள்.பார்க்க முடியாது.எங்கள் மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே அவளை பார்க்க முடியும்" என்றார் பிட்சு."அப்படியானால் நான் உங்கள் மதத்தில் உடனடியாக சேர்கிறேன்.அதன்பின் பார்க்க முடியுமா?" என கேட்டான் சந்துரு. (இனி....)Part 1 "எங்கள் மதத்தில் சேர்வது அவ்வளவு சுலபமா?" என்று சிரித்தார் பிட்சு."உன் முன்னாள் மனைவியை பார்க்க வேண்டும் என்பதற்காக சும்மாவாச்சும் சொல்கிறாய்.உண்மையிலேயே எங்கள் மதத்தில் சேரணும் என்றால் எங்கள் கோயில் இந்த முகவரியில் இருக்கிறது.அங்கே போய் பிட்சுகளை அணுகு" என சொல்லி ஒரு பேம்ப்லெட்டை கொடுத்தார். "உங்களை எல்லாம் ஒழிச்சு கட்டாம விடமாட்டேண்டா" என சந்துரு சத்தம் போட்டான்.பிட்சு மேல் பாய்ந்தான்.டேபிளை மேல் ஏறி அவர் முகத்தில் ஒரு குத்து விட முயன்றான்.அவர் அவனை எளிதில் தடுத்தார்.அவன் காலில் ஒரு கராத்தே தட்டு தட்ட அவன் கீழே விழுந்தான். சந்துருவுக்கு சண்டை பிடிக்க எல்லாம் தெரியாது.பள்ளியில் கிரிக்கட் ஆடியதோடு சரி,அதன் பின் உடற்பயிற்ச்சியே கிடையாது.பிட்சு பார்க்க பசு மாதிரி இருந்தார்.ஆனால் ஏதோ தற்காப்பு கலை பயின்றவர் போல் இருந்தது.அவரிடம் நாலைந்து அடி வாங்கியதும் சந்துரு நிலைகுலைந்து போனான். விண்,விண் என வலி எடுத்தது.நொண்டி,நொண்டி வெளியே நடந்து வந்தான்.வெளியே அவனை உள்ளே போக வேண்டாம் என்று சொன்ன நபர்(இளங்கோ) நின்றிருந்தார்."எனக்கும் இதுதான் நடந்தது" என அவனை பார்த்ததும் சொன்னார். "இவனுகளை ஒழிக்கணும்.வெடிகுண்டு கட்டிட்டு போக தயார்" என ஆவேசத்துடன் சொன்னான் சந்துரு."இவனை கொன்னா ஆச்சா?என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரியலை.உங்க சம்சாரம் எங்க இருக்காங்கன்னு தெரியலை.ஆவேசம் பிரயோஜனபடாது" என்றார் இளங்கோ. "இவங்க யாரு?ஏன் இப்படி பண்றாங்க?" என புரியாமல் கேட்டான் சந்துரு. "யாருக்கும் தெரியலை.எங்க வீட்டுக்கு நன்கொடைன்னு கேட்டு ரெண்டு பிட்சுணிகள் வந்தாங்க.என் மகள்,மனைவி கிட்ட சகஜமா பேசினாங்க.நான் ஆபிஸ் மும்முரத்துல இதை கண்டுக்கவே இல்லை.கொஞ்ச நாள் கழிச்சு அவங்க கோயிலுக்கு என் மகள் அடிக்கடி போக ஆரம்பிச்சா.திடீர்னு ஒரு நாள் பிட்சுணி ஆகப்பொறேன்னு சொன்னா.எவ்வளவு சொல்லியும் கேக்கலை.கோயிலுக்கு இனி மேல் போக கூடாதுன்னு தடுத்தோம்.நைட்டோடு நைட்டா வீட்டை விட்டு போயிட்டா.அதுக்கப்புறம் ஒரு தகவலும் இல்லை" என சொன்னார் இளங்கோ. "இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள்ன்னு சொன்னீங்களே,அங்க எதாவது உருப்படியான தகவல் கிடைச்சதா?" என கேட்டான் சந்துரு. "எல்லார் வீட்டிலும் இதே கதைதான் நடந்திருக்கு.சகஜமா பேசி கோயிலுக்கு கூப்பிடுவாங்க.அங்கபோன கொஞ்ச நாள் கழிச்சு பிட்சு ஆறேன்,பிட்சுணி ஆறேன்னு ஓடினவங்க தான் அதிகம்.எல்லா வயசு ஆண்களும்,பெண்களும் இப்படி ஓடிருக்காங்க.." என்றார் இலங்கோ "ஒருத்தரை பத்தியும் தகவல் கிடைக்கலையா?" என கேட்டான் சந்துரு. "எல்லாத்தையும் ரோடில் நின்னுகிட்டே பேச முடியுமா?இன்னைக்கு சாயந்திரம் ஒரு சேட்டு வீட்டுல சங்க மீட்டிங் நடக்குது.அங்க வாங்க தெளிவா பேசலாம்,இப்ப முதல்ல டாக்டர் கிட்ட போலாம்.உங்க கால் வீங்கிருக்கு" என சொன்னார் இளங்கோ. (தொடரும்)

31 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல ஆரம்பம் செல்வன். நீண்ட தொடராக இருப்பதால் தனி வலைப்பூ தொடங்கி போடலாமே?

டாலர் சைனை போடாமலே விட்டாச்சு. இப்போ சந்தோஷமா இல்லை இதுக்கு வேற கோபிக்கப் போகிறீர்களா? :)

Unknown said...

கொத்தனார்
டாலர் போடாதாதற்கு மிக்க நன்றி:-)))

உண்மையை சொல்லப்போனால் இந்த தொடர்கதையை முடிக்கும் வரை வேறு எதையும் எழுதுவதாக இல்லை.புது வலைப்பூ திறந்து தமிழ்மணத்தில் பதிவு செய்வதும் நல்ல யோசனைதான்.இந்த கதைக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தால் அதை செய்ய எண்ணம்.

சிறில் அலெக்ஸ் said...

நல்லா துவங்கியிருக்கு..
பொதுவா தொடர்கதைகள் மெதுவாப் போகும்..இது கொஞ்சம் வேகம் அதிகம்..

தொடருங்கள்...

Unknown said...

வாருங்கள் அலெக்ஸ்

நீங்கள் சொன்னமாதிரி தொடர்கதையின் ஆரம்பம் வேகமாக வைப்பது கஷ்டம்.பாத்திரங்களை அறிமுகப்படுத்தவே சில அத்யாயங்கள் ஆகிவிடும்.கதை ஓட,ஓட பாத்திரங்களை அறிமுகம் செய்வதாக நினைத்துள்ளேன்.

நன்றி அலெக்ஸ்

நாகை சிவா said...

விறு விறுப்பாக ஆரம்பித்து உள்ளீர்க்கள்
வாழ்த்துக்கள்.
தலைப்பு தான் ஒரு மார்க்கமா இருக்கு. கொஞ்சம் சின்னதா வைத்து இருக்கலாம். இந்த தலைப்புக்கு ஏற்ற மாதிரி கதையில் ஏதும் மேட்டர் இருக்கும். இருந்தாலும்....... தோணிச்சு சொன்னேன்.

Unknown said...

நாகை சிவா

உண்மைதான்.தலைப்பை வைத்த பின் தான் தோன்றியது.அடுத்த அத்யாயத்தில் பெயரை மார்றி விடுகிறேன்.தலைப்பு

"அஞ்சேல் எனாத ஆண்மை"

அன்புடன்
செல்வன்

நாகை சிவா said...

நன்றி செல்வன்! இந்த தலைப்பு நன்றாக உள்ளது. ஒரு சின்ன வினா, தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று......
அஞ்சேல் என்பது அஞ்சாதே என்பதை குறிக்கின்றதா? அஞ்சேன் என்பது சரியாக வருமா.

Amar said...

கத நல்லயிருக்கு டால்ர் செல்வன்.

//இந்த தொடர்கதையை முடிக்கும் வரை வேறு எதையும் எழுதுவதாக இல்லை//

அப்படியா, ரைட்டு அப்போ இத கதைக்கு பெரிய திட்டம் இருக்கு போல...

VSK said...

புது மாதிரியான ஆரம்பம்.

சாதாரணமாக ஒரு அரை தொடர்கதைக்கு வரக்கூடிய நிகழ்வுகளை 10 வரியில் முன்னுரையில் சொல்லி விட்டீர்கள்!

துப்பறியும் நாவலுக்குத் தேவையான வேகம் இருக்கிறது.

வாழ்த்துகள்!

Unknown said...

நாகை சிவா

அஞ்சேல் என்பது "அஞ்சாதே" என்பதை தான் குறிக்கிறது."அஞ்சேன்" என்பதை அல்ல

நன்றி

Unknown said...

அஷ்லின்

எனக்கு குடும்ப கதை எழுத வராது.என் குடும்ப கதையே ஒரு ராமாயணம் மாதிரி இருக்கும்.:-))

நான் உஜாலாவுக்கு மாறிட்டதால தான் பிளாக் வெள்ளை கலர் ஆயிடுச்சு:-))

Unknown said...

சமுத்ரா,

இந்த கதையில் பெருசா எந்த திட்டமும் இல்லை.ஆர்டினரி கதைதான்.ஓரளவு நல்லா வந்துச்சுன்ன்னா புதுபிளாக்கில் எழுதுவேன்.இல்லைனா இதுலையே ஓடும்

Unknown said...

எஸ்.கே
நீளத்தை குறைக்க தான் அப்படி சுருக்கினேன்.அப்படி சுருக்கியும் ஏகப்பட்ட எபிசோட் வந்துடும் போல் இருக்கு.But I hope it will be entertaining.It's just a pure experiment.

Thanks

நரியா said...

வணக்கம் $சல்வன்.
கதை சுறுசுறுப்பா ஆரம்பிக்குது. பொதுவா..திகில் கதைகளை சினிமாவில் பார்க்கும் போது (அ) படிக்கும் போது, என்ன மர்மம்? மர்மத்துக்கு யார் காரணம் எல்லாம் கண்டுபிடிச்சிடுவேன் :). உங்க
கதையில்..."Hyptonism" அதனால் உடல் பாகங்கள் விற்பனை....என்றெல்லாம் தோன்றுகிறது :).
இன்னும் கொஞ்சம் எபிசோடுலே கண்டுபிடிச்சுடுவேன் :)

நன்றி,
நரியா

Unknown said...

வணக்கம் நாரியா,

நீங்கள் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.சரியா தப்பான்னு சொல்லப்போவதில்லை.ஆனால் கண்டேபிடிக்காமல் எழுத முடியுமான்னு தெரியலை.முயற்சிக்கிறேன்.

அன்புடன்
செல்வன்

VSK said...

அப்புறம் இன்னொண்ணு!
எபிசோடை முடிக்கும் போது கொஞ்சம் திகிலா முடிக்கணும்!
சும்மா, " வாங்க, டாக்டகிட்ட போகலாம். உங்க கால் வீங்கிருக்கு" ந்னு மொட்டையா முடிக்கக் கூடாது!

"பேசிக்கொண்டே இளங்கோ, சந்துருவின் கால்களைப் பார்த்தார்: அவர் கண்கள் திகைப்பால் வெளிறின!.... அங்கே....!?"
அப்படின்னு சொல்லி, ஒரு 'தொடரும்' போட்டுறணும்.
நாளைக்கு வந்து, 'என்னங்க! உங்க கால் வீங்கிருக்கு, வாங்க ஒரு டாக்டர்கிட்ட போகலம்"னு சாதாரணமா ஆரம்பிச்சுடணும்!!!

:))))))))

Unknown said...

Theyvame S.K:-)))

ha..ha....

I actually dint want to do that.I guess the theme should pull the story and not the ending of a chapter.I dint want to write like rajesh kumar:-)))

கால்கரி சிவா said...

டாலர்வாள், கதே ஆரம்பம் பேஷ்..பேஷ்... நன்னாயிருக்கு

இலவசக்கொத்தனார் said...

அப்புறமா நிறையா சீரியல் எல்லாம் பாருங்க. உபயோகப்படும்! :)

வவ்வால் said...

என்னங்க செல்வன் கடவுள் அவதாரம் எடுக்க யாரும் மாட்டலைனு இப்படி திடீர்னு தொடர்கதை மன்னன் அவதாரம் எடுத்திட்டிங்க.
குட்டிக்கதைகள் என்ற லீக் மேட்ச் ஆடாம நேரடியாக தொடர்கதை என்ற டெஸ்ட் மேட்ச் ஆட வந்துடிங்களா ,நின்று ஆட வாழ்த்துகள்.

Unknown said...

சிவா

$ல்வன் என என் பெயரை ஒரு வழி செய்ததே நீங்கள் தான்.செல்வன் என அதை மாற்றாவிட்டால் வழக்கு தொடரவும் தயாராக உள்ளேன்:-))

வவ்வால்

இதுக்கு முந்தி நாலைந்து குட்டி கதை எழுதியிருக்கேன்.கடவுளின் மரணம்,ஆதாம் ஏவாள் கதை,கடவுள் புனிதாவை காதலிக்கிறாரா, அப்படின்னு ரெண்டு மூணு கதை எழுதினேன்.திடீர்ன்னு ஒரு ஐடியா தோணி கதை எழுத ஆரம்பிச்சுட்டேன்

கொத்தனார்,

முதல் எபிசோட்லேயே சீரியல்ன்னு வதந்தியை கிளப்பி விட்டா மக்கள் பயந்துடப் போறாங்க.பாதில நின்ன சீரியல் கதி ஆயிடப்போகுது கதை:-)

வவ்வால் said...

செல்வன்,

//இதுக்கு முந்தி நாலைந்து குட்டி கதை எழுதியிருக்கேன்.கடவுளின் மரணம்,ஆதாம் ஏவாள் கதை,கடவுள் புனிதாவை காதலிக்கிறாரா, அப்படின்னு ரெண்டு மூணு கதை எழுதினேன்//

மன்னிக்கனும் செல்வன் நான் அதை எல்லாம் நவீன இலக்கிய வகை சார்ந்த கட்டுரை என்று நம்பி ஏமாந்துட்டேன்:-((
(உண்மையா தாங்க! இந்த தடவை கதைனு ஆரம்பத்திலேயே தெளிவா சொல்லிட்டிங்க இல்லைனா இந்த மரமண்டைக்கு அதும் புரிந்து இருக்காது)

Unknown said...

வவ்வால்:-)))

அது கதை என நினைத்தால் கதை.கட்டுரை என நினைத்தால் கட்டுரை.

தெய்வம் என்றால் அது தெய்வம்.வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்கிறோமல்லவா அதுபோல் தான்.

யாரோ அடிக்க வரும் சத்தம் கேட்கிறது.

இப்போதைக்கு ஒளிந்து கொள்கிறேன்:-))))

arunagiri said...

சிட்னி ஷெல்டன் போல சட்டென்று முடியும் சிக்கன வாக்கியங்களுடன் பாய்ந்து செல்லும் நடையில் எழுதுகிறீர்கள். தொடர்கதைப்பதிவுகளில் திருப்பங்களும், சம்பவக் கொக்கிகளும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். (ஜோசப் சார் இதனைத் திறம்படச் செய்கிறார்).

Unknown said...

அருணகிரி

வணக்கம்.முதல் முதலாக என் பதிவுக்கு பின்னூட்டம் இடுகிறீர்கள் என நினைக்கிறேன்.வருகைக்கு மிக்க நன்றி.

சிடினி ஷெல்டன் எங்கே இந்த கத்து குட்டி எங்கே?மற்றபடி நீங்கள் சொன்ன மாதிரி தான் எழுதுவேன்.கதை எப்படி போகும் என நேயர்கள் யூகித்து விட்டால் அதன் பின் சுவாரசியம் குறைந்து விடும்.ஒவ்வொரு கதையிலும் புத்திசாலி வாசகருக்கும்,ஆசிரியருக்கும் உள்ள சுவாரசியமான போட்டி இதுதான்.

முடிவை ஏற்கனவே முடிவு செய்துவிட்டு தான் கதை எழுதுகிறேன்.அனைவரும் ரசிக்கும்படி எழுத முடியும் என நம்புகிறேன்.ஆனால் முன்னுரையில் சொன்னது போல் "ஆண்டவன் மேல் பாரத்தை போட்டும் உங்களை நம்பியும் எழுத துவங்கிவிட்டேன்."

நன்றி அருணகிரி

அன்புடன்
செல்வன்

பொன்ஸ்~~Poorna said...

செல்வன்,
ஆரம்பம் நல்லா இருக்கு.. கல்ட் அது இதுன்னு புதுமையா இருக்கு.. எப்படி எடுத்துட்டு போறீங்கன்னு பார்த்துட்டு கருத்து சொல்றேன்..

எதுக்கும் சந்தேகம் வந்தா ஜோசப் சார், துளசி அக்கா பதிவெல்லாம் இருக்கவே இருக்கு ரெபரன்ஸுக்கு :)

Unknown said...

பொன்ஸ் வாங்க....

பெருந்தலைகள் எல்லாம் காட்டிய வழியில் செல்வது தானே நம் வேலை?ஜோசப் சார் அருமையா வாழ்க்கை வரலாற்ரை எழுதிட்டு வர்ரார்.நூத்துக்கு மேல எபிசோட் வெற்றிகரமா போயிட்டிருக்கு.கதை உலகம் வேற எழுதி கலக்கறார்.பெரியவங்க காட்டிய வழியில் போவது தானே நமது கடமை?:-))

சிவமுருகன் said...

ஆறு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் செல்வன் சார் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Unknown said...

here comes 32

Unknown said...

சிவமுருகன்

அழைப்புக்கு மிக்க நன்றி.ஆனா நான் ஏற்கனவே ஆறு பதிவு போட்டாச்சு

Unknown said...

இப்போ தான் கதையை படிச்சேன்... நல்லா வந்துட்டிருக்கு... (2)ன்டாவது பகுதியும் நல்லா இருக்குதே!

நான் சாதாரண பிக்குணி-ங்க. நம்ம பொழப்ப கெடுக்காதிங்க:-) Disclaimer கொடுத்துட்டேன்.