Wednesday, June 21, 2006

113.ஆண்டவன் கட்டளை ஆறு

6 விளையாட்டுக்கு அழைத்த அன்னியன் வெங்கட்ரமணி அருணாச்சலத்துக்கு என் அன்பான நன்றி. பிடித்த 6 புலவர்கள் கம்பர் வள்ளுவர் அவ்வையார் பாரதியார் கண்ணதாசன் இளங்கோ பிடித்த 6 நாவல்கள் பிரதாப முதலியார் சரித்திரம் பொன்னியின் செல்வன் பட்டாம்பூச்சி(பாப்பில்லோன்) சத்ய வெள்ளம்-(நா.பார்த்தசாரதி) வேங்கையின் மைந்தன் (அகிலன்) கன்னிமாடம் (சாண்டில்யன்) பிடித்த ஆங்கில கதாபாத்திரங்கள் ஃபைவ் பைன்ட் அவுட்டர்ஸ் அண்ட் த டாக்(எனிட் ப்ளைட்டன்) ஃபேமஸ் பைவ்(எனிட் ப்ளைட்டன்) த்ரீ இன்வெஸ்டிகேட்டர்ஸ்(ஆலப்பேட்டை எச்சிகாக்கை புரியலையா?Alfred Hitchcock கின் தமிழாக்கம்) ஹார்டி பாய்ஸ் வனராஜ டார்ஜான் ஷெர்லக் ஹோம்ஸ் பிடித்த தமிழ் சாகச கதாபாத்திரங்கள் கணேஷ் வசந்த் சங்கர்லால் சாம்பு அப்புசாமி சீதாபாட்டி செல்வா- முருகேசன்(சுபா) நரேன் - வைஜயந்தி இதுவரை செய்த 6 சாதனைகள் அப்பாவுக்கு சொந்த காசில் கோட்டு சூட்டு வாங்கிக்கொடுத்தது ஒரே நாளில் லண்டன் போய் திரும்பி வந்தது தனியாக 2 வருடம் அமெரிக்காவில் காலம் தள்ளியது நேற்று சமைத்து அது நன்றாக இருப்பதாக எனக்கு தோன்றியது போனவாரம் காலை 6 மணிக்கு எழுந்தது படிப்பு ஓரளவு நன்றாக வருவது அழைக்க விரும்பும் 6 வலைபதிவர்கள் என் பதிவுக்கு இணைப்பு தந்திருக்கும் அனைவரையும் அழைக்கிறேன்.(இது மட்டும் 6க்கு பதில் 10 ஆயிடுச்சு) 1.ரஷ்யா ராமநாதன் 2.தமிழ்பூ கார்த்திகேயன் 3.விழியன் 4.டோண்டு 5.சமுத்ரா 6.நாரியா 7.விபாகை அண்ணன் 8.தமிழ் அம்மா 9.முத்தமிழ் 10.கால்கரி சிவா

34 comments:

ரவி said...

///பட்டாம்பூச்சி(பாப்பில்லோன்)//

இது என்ன நாவல் ? சின்ன வயதில் படித்தது போல் உள்ளது...

Unknown said...

என்ன ஒரே நாள்ல லண்டன் போயிட்டு வந்ததைப்போய் பெருமையா சொல்றீங்க.. நாம எல்லாரும் தினம்தினம் லண்டன் போயிட்டு தானே வரோம். புரியலைன்னா டுபுக்குவோட இந்த ஆறு பதிவுல லண்டன்னு தேடிப்பாருங்க. ;)

http://dubukku.blogspot.com/2006/06/blog-post_21.html

Unknown said...

ஆனாலும் இந்த குறும்பு ரொம்பவே ஓவர் வெங்கட்ரமணி.இனி மேல் லண்டன் போனது பற்றி சொல்ல முடியாது போல:-))

செந்தழல் ரவி,
பாபில்லோன் குமுதத்தில் கூட தொடர்கதையாக வந்தது.உலக புகழ் பெற்ற உண்மைகதை அது.எழுதியவர்
henry sharrier

Unknown said...

ஆறு பாயட்டும்... எங்கும் நல்ல விளைச்சலைக் கொடுக்கட்டும்:)

Unknown said...

நன்றி தேவ்.

நாலு மாதிரி ஆறும் சுவாரசியமா போயிட்டிருக்கு.பாப்போம் ஒரு முழு ரவுண்ட் வருதான்னு

நாகை சிவா said...

என்னங்க விவேக், கோகுல்நாத்தை விட்டுடீங்க...
பல நாட்களாக உங்கள் வலைப்பக்கத்தை திறக்க முடியவில்லை. ஏதும் பிரச்சனையா?

Ashlyn said...

"நேற்று சமைத்து அது நன்றாக இருப்பதாக எனக்கு தோன்றியது" கட கட கட கட.......................(அட சிரிப்பு தாங்க அது) தமிங்லிஷ் டைப் பண்ண தெரியலை.

ஆமா நம்ம தலைவர் ராஜேஷ்குமாரை (விவேக் கோகுல்நாத்) விட்டுட்டீங்களே.

Unknown said...

நாகை சிவா,

என் வலைதளத்தை திறக்க முடியவில்லையா?எனக்கு அப்படி எதுவும் பிரச்சனை வரவில்லையே?சில நாட்களாக தொடர்ந்து பதிப்பிடவில்லை,அவ்வளவுதான்.

கோகுல்நாத்-விவேக் பிடிக்கும்.ஆனா அவங்க கதை படிச்சு படிச்சு பழகிடுச்சு.லேசா போரடிக்கற மாதிரி இருந்துச்சு

Unknown said...

அஷ்லின்
ஒருத்தன் ஒரு சாதனை செஞ்சா பொறுக்காதே?:-))

சிரிப்புக்கு ஸ்மைலி போடலாம்.அல்லது ஹா,ஹாஹா ந்னு அடிக்கலாம்.அதுக்கு ஆங்கில ஃபான்ட்ஸ் -haa,-haa-haa

பொன்ஸ்~~Poorna said...

நீங்க சொல்லி இருக்கும் எல்லா புத்தகமும் படிச்சிட்டேங்க செல்வன்.. நல்ல தேர்வு.. மிச்சபடி ஆங்கில காரக்டர் எல்லாம் தெரியாது.. தமிழ் காரக்டர்ஸ் கொஞ்ச நாள் முந்தி வரை பிடிக்கும்.. இப்ப இப்ப இந்த மாதிரி கதைகள் படிப்பதே இல்லை.. கணேஷ் வசந்த் ஒண்ணு தான் இன்னிக்கும் எனக்கு எவர் கிரீனா இருக்கு.. பார்க்கலாம் உங்க விவேக் கோகுல் நாத் மாதிரி எனக்கு எப்போ சலிக்குதுன்னு :)

நல்லவேளை உங்க பக்கத்தைத் தினமும் வந்து பார்த்தாலும் இணைப்பு கொடுக்காம இருந்தேன்.. நான் தான் ஏற்கனவே (கடமையை) ஆற்றிட்டேனே :)

Unknown said...

பொன்ஸ்
நம்ம நண்பர்கள் எஸ்.கே,நீங்க,வவ்வால்,சிவபாலன்,தமிழினி முத்து இவங்க எல்லாரையும் ஏற்கனவே இந்த ஆட்டத்துக்கு இழுத்துட்டாங்க.அதனால் தான் இணைப்பு criteria.

வலைப்பூவில் எத்தனை நண்பர்கள்?யாரை அழைக்க,யாரை விடன்னு ஒரே குழப்பம் தான்:-))

இந்த புத்தகங்கள் இப்பவும் எனக்கு பிடிக்கும்.ஆனா கிடைப்பதில்லை:-(

Amar said...

அட, என்னையும் சேர்த்துட்டீங்களா? சரி எதயாச்சும் எழுதுவோம்.

ஆனா, என்னோட வெறும் ஆறு சாதனைகளை மட்டும் எழுதினா சமுத்ராவின் மெய்கீர்த்திக்கு அவமானம்.அதுனால் சாதனை பகுதியை மட்டும் விட்டுவிடுகிறேன்.(எழுத ஒரு மன்னும் இல்லை தானேன்னு நீங்க சிரிக்கிறது இங்கே கெட்கிறது!)

Unknown said...

என்ன சமுத்ரா
வலைபதிவில் 2 வருஷமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.இதை விட பெரிய சாதனை/சோதனை ஏதும் இருக்கா என்ன?:-))

Unknown said...

here comes 14

கால்கரி சிவா said...

$ல்வன், நாகை சிவாவும் கூப்பிட்டாரு நீங்களும் அழைச்சிட்டிங்க. ஜூலை 3 லாங்க் வீக் எண்ட் அன்னைக்கு கடையை ஆரம்பிக்கிறேன்

Amar said...

//பிரதாப முதலியார் சரித்திரம்
பொன்னியின் செல்வன்
பட்டாம்பூச்சி(பாப்பில்லோன்)
சத்ய வெள்ளம்-(நா.பார்த்தசாரதி)
வேங்கையின் மைந்தன் (அகிலன்)
கன்னிமாடம் (சாண்டில்யன்)/

இதுல ஒரு புஸ்தகத்தை தான் தொட்டு பார்த்திருக்கிறேன்.எல்லாம் வயசானவங்க படிக்கிற புஸ்தகமோ? ;)

//(ஆலப்பேட்டை எச்சிகாக்கை புரியலையா?Alfred Hitchcock கின் தமிழாக்கம்)//

அம்மாடி தாங்கல சாமி.என்னால முடியாது.

இருங்க.Charles Dickens பெயரை தமிழ்ல எப்படி சொல்லுவீங்க?

பெருசு said...

என்னங்க $ல்வன்

நீங்க இரும்புக்கை மாயாவி எல்லாம் படிச்சதில்லயா.

ஆங்கிலத்தில தகரம் தகரம் (அதாங்க TIN TIN) படித்ததுண்டா.

Unknown said...

சமுத்ரா

சார்லஸ் டிக்கன்ஸ் = மன்னர் கார்பின்னி

அதெல்லாம் பழையநாவலுங்க.ஆனா படிச்சா ரொம்ப சுவாரசியமா இருக்கும்.

சிவா,

நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வாருங்கள்:-))

பெருசு,

இரும்புக்கை மாயாவி படிச்சிருக்கேன்.மாண்ட்ரேக்,.ஃப்ளாஷ் கார்டன் எல்லாம் பிடிக்கும்.ஆனா 6 தானே எழுத முடியும்?(தகரம்,தகரம் படிச்சதில்லை)

VSK said...

ஓ! தினமும் காலை 6 மணிக்குத்கான் படுக்கவே போவதால், 6 மணிக்கு எழுந்ததைப் பெருமையாகச் சொன்னீர்களோ!

'அன்னியன் கட்டளை ஆறு'ன்னு தலைப்பு வெச்சுருக்கலாமோ!

:)))

Unknown said...

எஸ்.கே:-)))

தினமும் தூங்க 1 அல்லது 2 மணியாயிடும்.எழுந்திருக்கும்போது 10,11 மணியாயிடும்.

சொன்னமாதிரி அன்னியன் கட்டளை 6னு பேர் வெச்சிருக்கலாம் தான்.இதெல்லாம் தோண உங்களை மாதிரி கவிஞரா இருக்கணும்

Sivabalan said...

செல்வன்,

உங்கள் ஆற்றில் (6-ல்) சிறுவானி தண்ணீர்...

நன்றி.

Unknown said...

சிவபாலன்
நன்றி.சிறுவாணியை நினைவு படுத்தி விட்டீர்கள்.எங்கே கிடைக்கும் அதுபோல் சுவை?

dondu(#11168674346665545885) said...

ஓசைப்படாமல் என்னையும் சேர்த்ததை இப்போதுதான் பார்த்தது என் தவறுதான். விஷயம் என்னவென்றால் இப்போதுதான் நாலு விளையாட்டுகள் ஓய்ந்த நிலையில் இது என்னப் புதுக்கதை என்ற நினைப்பில் இதைப் பார்க்காது விட்டேன்.

நீங்கள் அழைத்து விட்டீர்கள். அழைப்புக்கு நன்றி. உடனே பதிவு போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

டோண்டு ஐயா,
அழைத்ததை அனைவருக்கும் சொல்லி இருக்க வேண்டும்.சொல்லாமல் விட்டது என் தப்புத்தான்.6 பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி

அன்புடன்
செல்வன்

நரியா said...

வணக்கம் செல்வன்.
ஆறின் அழைப்பிற்கு மிகவும் நன்றி. ப்ளாக் ல என்ன தான் எழுதலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். எழுத மாட்டெர் கொடுதிட்டீங்க :). உங்க ஆற பார்த்தா பெறிய புத்தகப் புழுப் போல இருக்கீங்க. உங்கள் சாதனைகளுக்கு என் வாழ்துக்கள்.

நன்றி

நரியா said...

வாழ்த்துக்கள் செல்வன்.
"ட்ரிஸ்கைடிகா ஃபோபியா" (Triskaidekaphobia)
உங்களை விட்டு போய்டிச்சு போல :))

Unknown said...

வணக்கம் நாரியா,

13 பத்திய பயம் இன்னும் போகலை.(எப்பவும் போகாது:-))

புத்தகப்புழு எல்லாம் கிடையாது.அவை அனைத்தும் சின்ன குழந்தைகள் படிக்கும் நாவல்கள்.

நன்றி

அன்புடன்
செல்வன்

குமரன் (Kumaran) said...

நல்ல வேளை. நான் உங்க பதிவுக்கு தொடுப்பு கொடுக்கலை. :-) உங்களை ஏற்கனவே அழைச்சுட்டாங்கன்னு என்னோட ஆறு பதிவுல உங்களை அழைக்கலை.

VSK said...

//உங்களை ஏற்கனவே அழைச்சுட்டாங்கன்னு என்னோட ஆறு பதிவுல உங்களை அழைக்கலை.//நானும் அதே!!
:))

நரியா said...

இல்ல 13 ஆம் பின்னூட்டம் சில சமயம் போடமாட்டீங்களே ?

இப்ப 13 ஆவது உங்களின் பினூட்டமா இருக்கே அதுக்கு தான் கேட்டேன் :)

Unknown said...

ஆமாம் நாரியா

தப்பாக எண்ணி 12 என்பதை 13 என நினைத்து பின்னூட்டம் போட்டுவிட்டேன்:-)

Unknown said...

குமரன்,எஸ்கே

உங்க இருவரையும் கண்டிப்பா அழைச்சிருப்பேன்.நீங்க,பொன்ஸ்,வவ்வால்,முத்து(தமிழினி) அனைவரையும் அழைத்திருப்பேன்.அவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு போனதாலும் சிலர் பதிவே போட்டுவிட்டதாலும் தான் உங்களை அழைக்கவில்லை.இல்லை என்றால் 10க்கு பதில் 15 பேரை அழைத்திருப்பேன்

வவ்வால் said...

வணக்கம் செல்வன் ,

என்ன ஆச்சரியம் உங்கள் வலைப்பதிவு உடனே திறந்து விட்டது அதை விட அடுத்த ஆச்சரியம் கருப்பில் இருந்து வெளுப்பாக மின்னலடிக்கும் வெண்மையில் இருக்கிறது உங்கள் பதிவு எனது நீண்ட நாள் கோரிக்கையும் இதுவே, உஜாலாவுக்கு மாறிடிங்களா? இப்பொழுது படிப்பதற்கு எளிதாக இருக்கிறது செல்வன் நன்றி!

பின்னூட்டத்தில் பார்த்தால் என்னையும் ஆறுக்கு அழைத்திருப்பேன் என சொல்லியுள்ளீர்கள் நன்றி. பொன்ஸ் ஆறுக்கு அழைத்தவர்களில் கடைசியாக ஆறப்போட்டு ஆறு போட்டவன் நான் தான் :-))

உங்களை எல்லாம் அழைக்கலாம் என நினைத்தேன் ஆனால் அதற்கு முன் நீங்கள் எல்லாம் ஆறே போட்டு முடிச்சுடிங்க என்ன செய்வது என் வேகம் அப்படி ஆமை வேகமா இருக்கு.இதில் பிளாக்கர் வேறு முறுக்கி கொண்டு மக்கர் செய்கிறார். நான் ஒவ்வொரு தடவையும் பின்னூட்டம் போடவும் இரண்டு முறை தட்டச்சு செய்ய வேண்டி இருக்கு :-(
அந்த அளவுக்கு இருக்கு நம்ம பிளாக்காண்டவர் வேலை!

உங்கள் பட்டியலில் உள்ளவை எல்லாம் படித்துள்ளேன் , ஆனால் அந்த பட்டாம் பூச்சி கதை குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்தது என நினைக்கிறேன் ஒவியர் ஜெ வின் படங்கள் எல்லாம் சேர்ந்து கிளு கிளுப்பாக இருக்கும் அந்த கதை :-))

Unknown said...

வணக்கம் வவ்வால்,

முந்தைய பதிவில் நீங்கள் சொன்ன மாதிரி படிக்க மிகவும் சிரமமாக இருந்தது.தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து இன்று மாற்றி விட்டேன்.உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.

நிச்சயம் உங்களை அழைப்பதாக தான் இருந்தேன்.அதற்குள் பொன்ஸ் அழைத்துவிட்டார்.நண்பர்கள் பலரையும் ஏற்கனவே பலர் அழைத்துவிட்டனர்.

பட்டாம்பூச்சி நான் தமிழிலும் படித்தேன்(தொடராக இல்லை.புத்தகமாக வந்தபோது)ஆங்கிலத்திலும் படித்தேன்.மிகவும் அருமையான கதை.

நன்றி வவ்வால்