Tuesday, May 21, 2013

ரொசெட்டோ விளைவு

பென்சில்வேனியா மாநிலம் ரொசெட்டோ நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இன்னொரு ஊர் மருத்துவரை ஒரு உனவகத்தில் சந்தித்தார். பேச்சுவாக்கில் ரொசெட்டோ மருத்துவர் தன் ஊரில் இதய அடைப்பு வந்தவர்களை பார்ப்பதே அரிது என்றார். அந்த ஊருக்கு சென்று பார்த்த இன்னொரு மருத்துவர் அது உண்மை என்பதை அறிந்து வியந்தார். அதன்பின் 30 ஆண்டுகள் ரொசெட்டோ, பென்சில்வேனியா இதய அடைப்பை ஆராயும் மருத்துவர்கள் பலரின் சோதனைகூடமானது. இத்தனை ஆரோக்கியமாக ரொசெட்டோ மக்கள் இருக்க காரணம் அவர்கள் தினம் மூன்று வேளையும் ஆரோக்கியமாக உண்டு, உடல்பயிர்சி செய்து வருவதுதான் காரணம் என நினைக்கவேண்டாம். 


ரொசெட்டோ நகரம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கலால் நிரம்பியது. குடி, தம், துரித உணவு என அமெரிக்கர்களுக்கு இருக்கும் எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. ஆனால் அமெரிக்கர்கள் மறந்த ஒரு நல்லபழக்கமும் உண்டு. அதாவது ரொசெட்டோ கூடி வாழும் சமூகம். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தலைமுறையாக மக்கள் கூடி வாழும் சமூகம். வயதானவர்கள் அனாதை விடுதியில் சேர்க்கபடுவது இல்லை. குடும்பத்தில் வைத்து போற்றபடுகிறார்கள். அதனால் மன அழுத்தம் குறைந்து அங்கே மாரடைப்பும் குறைந்துவிட்டது.ரொசெட்டோவில் நடந்த ஆய்வுகளுக்கு பின்னர்தான் உணவுப்ழாக்கம் மட்டும் அன்றி மன அழுத்தம், குடும்ப வாழ்க்கை ஆகியவை இதய அடைப்பில் வகிக்கும் பெரும்பங்கை மருத்துவர்கள் உணர்ந்தார்கள்.மருத்துவ உலகில் இதன் பெயர் “ரொசெட்டோ விளைவு”

No comments: