Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Sunday, December 15, 2013

ADHD

ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்) பற்றிய சிந்திக்க வைக்கும் கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்ஸில் வந்துள்ளது.

1990ல் வெறும் 6 லட்சம் குழந்தைகளுக்கு இருந்த ஏ.டி.எச்.டி இன்று 35 லட்சம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 20 ஆண்டுகளில் எப்படி இத்தனை லட்சம் குழந்தைகளுக்கு இது வந்தது? மருந்து விற்பனையை அதிகரிக்க ஏ.டி.எச்.டி ஸ்டான்டர்டுகள் தளர்த்தபட்டன என்கிறது இக்கட்டுரை.

"ஏடிசிடி டிஸார்டர் என்பது மருந்துகம்பனிகள் திட்டமிட்டு ஆபத்தான, விலை உயர்ந்த மருந்துகளை விற்பனை செய்ய உருவாக்கிய சிண்ட்ரோம்"

நேரடியாக மக்களிடமே விளம்பரம் செய்து "உங்கள் குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி இருக்கலாம்" என மருத்துவர் மூலம் மக்களை அணுகாமல் நேரடியாக அணுகியதால் பீதியடைந்த பலரும் பள்ளியில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எல்லாம் ஏ.டி.எச்.டி இருப்பதாக் சந்தேக்ப்பட்டு மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். ஏ.டி.ச்.டி விளம்பரங்கள் "நல்ல புத்திசாலிதனமாக இருக்கும் உங்கள் பிள்ளை குறைந்த மதிப்பெண்களை பரிட்சையில் பெறுகிறானா? அப்ப அவனுக்கு ஏ.டி.எச்.டி தான்" என விளம்பரம் செய்தன.

ஐன்ஸ்டீன் கூட பள்ளியில் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான். கணிதமேதை ராமானுஜம் ஆங்கிலத்தில் பெயில் ஆனவர்.

கேர்லஸ் ஆக இருப்பது, பொறுமையற்று இருப்பது எல்லாம் இன்று ஏ.டி.எ.ச்.டி ஆக கருதப்பட்டு அக்குழந்தைகளுக்கு மிக தீவிரமான ஏ.டி.எச்.டி இருப்பவர்களுக்கு கொடுக்கபடும் மருந்துகள் கொடுக்கபடுகின்றன. அதுபோக மருந்து கம்பனிகள் இப்போது நேரடியாக குழந்தைகளிடமே விளம்பரம் செய்கின்றன. பல காமிக் புத்தகங்களில் ஏச்.டி.எச்.டி மருந்துகள் விளம்பரங்கள் வெளிவருகின்றன.

இந்த மருந்துகளின் விளைவாக தூக்கமின்மை, பசி எடுக்காமை, ஹலூசினேஷன், மிக எக்ஸ்ட்ரீம் கேஸ்களில் தற்கொலை, மனநிலை பாதிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு நேர்கின்றன.

ஏ.டி.எச்.டி உண்மையான வியாதிதான். ஆனால் ஏ.டி.எச்.டி இல்லாத பலரும் இதற்கான சிகிச்சை எடுக்கும் வகையில் மருந்துகள் விற்பனை செய்யபட்டன என்கிறது இக்கட்டுரை.

ஆறு நிமிடம் ஒருவரிடம் பேசி, கேள்வி கேட்டு அவருக்கு ஏ.டி.எ.ச்.டி என "கண்டுபுடித்து" மருந்துகலை எழுதிகொடுக்கும் உதாரணம் ஒன்று கட்டுரையில் காட்டகடுகிறது. இவை எல்லாம் நிகழ ஆன நேரம் வெறும் 6 நிமிடங்கள்!!!!

ஒருவருக்கு ஏ.டி.எச்.டி இருக்கு என்பதை கண்டுபிடிக்க எந்த உறுதியான மெடிக்கல் சோதனையும் கிடையாது. மருந்து கம்பனிகளின் விளம்பர, ஸ்பான்சர் பணத்தில் இயங்கும் அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் ஏ.டி.எச்.டி வியாதி இருப்பதற்கான தரகட்டுபாட்டை தளர்த்திகொண்டே வருகிறது. இதன்படி

"கேர்லஸ் மிஸ்டேக் செய்வது"

"தன் முறை வரும்வரை காத்திருப்பதில் எரிச்சல் அடைவது"

இவை எல்லாம் ஏ.டி.எச்.டியின் அறிகுறியாக இன்று கருதப்பாடுகிறது.

ஏ.டி.எச்.டி மருந்து விற்பனை இன்று வெறும் 10 வருடங்களில் 2 பில்லியன் டாலரில் இருந்து 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்லது!!!!!!


Wednesday, November 20, 2013

துளசி இலையின் மருத்துவ நன்மைகள்

துளசி இலையின் மருத்துவ நன்மைகள் பற்றி பதிப்பிக்கபட்ட மெடிக்கல் ஜர்னல்களின் ஆய்வுகள் கூறுவது என்ன?

உடலில் ப்ரிராடிகல்கள் எனும் ஆபத்தான மாலிக்யூல்கள் புகுந்து நமக்கு முதுமையை வரவழைக்கும். ப்ரிராடிகல்கள் நியூரான்கள், டி.என்.ஏ மற்றும் இதயநாளங்களையும் பாதிக்கும். இதை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது துளசி. துளசியில் 30 வகைகள் உள்ளன. இவை 30மிலும் இந்த பைட்டொநியுட்ரியண்டுகள் உள்ளன குறிப்பாக மிகுந்த ஆற்றல் உடைய ஆண்டிஆக்சிடெண்டுகளான ஒரியன்டின், விசனின் மற்றும் துளசியின் வாசத்தை அளிக்கும் யுகனால், அபிஜிமென் ஆகியவை ப்ரிராடிகல்களை எதிர்த்து போரிடும் ஆற்றல் உடையவை

மனாழுத்தம் ஏற்படுகையில் உடல் கார்ட்டிசோல் மற்றும் அட்ரினலினை சுரக்கும். ஆனால் ஒரு ஆய்வில் 60 நாட்கள் தொடர்ந்து தினம் 1000 மிகி (1 கிராம்) அளவு துளசி சாறு அருந்தியவர்களுக்கு கார்ட்டிசோல், அட்ரினலின் அளவுகள் 32% குறைந்தது கண்டுபிடிக்கபட்டது. மன அழுத்தத்தால் அதிகரித்த பிளட் சுகர் அளவுகளும் துளசியால் குறைந்தது.

மாலிக்யுலர் அன்ட் பயோகெமிஸ்ட்ரி இதழில் பதிப்பிக்கபட்ட ஆய்வில் எலிகளுக்கு மாரடைப்பு வரவழைத்து சோதனை செய்ததில் துளசி சாறு ஆண்டிஆக்சிடண்டுகளை அதிகரித்து ப்ரி ராடிகல்களை தடுத்து மாரடைப்பு விகிதங்களை குறைந்தது தெரியவந்தது. "துளசி மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் உள்ல மருந்து" என இந்த ஆய்வு கூறுகிறது

தோலில் சிகப்பு, சிகப்பாக ஏற்படும் தழும்புகளை acne என்போம். அதை உருவாக்கும் பாக்ட்ரியாக்களை தடுக்கவல்லது துளசி.

பதிப்பிக்கபட்ட இன்னொரு ஆய்வு துளசி "நுரையீர்ல் கான்சர், வயிற்று கான்சர், லிவர் கான்சர்" ஆகியவற்றை தடுக்கவல்லது என கூறுகிறது

ஜர்னல் ஆஃப் எத்னோபார்மாலஜியில் பதிப்பிக்கபட்ட இன்னொரு ஆய்வு "துளசி கொடுக்கப்ட்ட டயாப்டிஸ் உள்ள இல்லாத எலிகள்/முயல்களின் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்ததாக" கூறுகிறது

துளசிசாறு கலந்த மூலிகை மருந்தான ஆப்த்கேர் என்பது கண்வலிக்கு ஓவர் தெ கவுன்டர் மருந்தை பயன்படுத்துபவர்களில் 90% பேருக்கான வலியை போக்கும் என்பது கண்டறியபட்டது

"இண்டியன் ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமெண்டல் பயாலஜியில்" பதிப்பிக்கபட்ட இன்னொரு ஆய்வில் "காயம் பட்டவர்களுக்கு துளசி கொடுத்துவந்தால் காயம் விரைவில் ஆறுவதாக தெரிகிறது"

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களின் யுரிக் அமில சுரப்பை துளசி மட்டுபடுத்தி தையார்டு பிரச்சனையை சரி செய்கிறது

இனிப்பு துளசி என்ற வகை துளசி ஒன்று உண்டு. இது ஆஸ்பிரின், ஐபுப்ரோபினுக்கு ஒப்பான வலிநிவாரணி என ஆய்வுகள் கூறுகின்றன

(நன்றி: "healing spices" BY பேராசிரியர் அகர்வால் மற்றும் டெப்ரா யோஸ்ட்)



Tuesday, May 21, 2013

ரொசெட்டோ விளைவு

பென்சில்வேனியா மாநிலம் ரொசெட்டோ நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இன்னொரு ஊர் மருத்துவரை ஒரு உனவகத்தில் சந்தித்தார். பேச்சுவாக்கில் ரொசெட்டோ மருத்துவர் தன் ஊரில் இதய அடைப்பு வந்தவர்களை பார்ப்பதே அரிது என்றார். அந்த ஊருக்கு சென்று பார்த்த இன்னொரு மருத்துவர் அது உண்மை என்பதை அறிந்து வியந்தார். அதன்பின் 30 ஆண்டுகள் ரொசெட்டோ, பென்சில்வேனியா இதய அடைப்பை ஆராயும் மருத்துவர்கள் பலரின் சோதனைகூடமானது. இத்தனை ஆரோக்கியமாக ரொசெட்டோ மக்கள் இருக்க காரணம் அவர்கள் தினம் மூன்று வேளையும் ஆரோக்கியமாக உண்டு, உடல்பயிர்சி செய்து வருவதுதான் காரணம் என நினைக்கவேண்டாம். 


ரொசெட்டோ நகரம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கலால் நிரம்பியது. குடி, தம், துரித உணவு என அமெரிக்கர்களுக்கு இருக்கும் எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. ஆனால் அமெரிக்கர்கள் மறந்த ஒரு நல்லபழக்கமும் உண்டு. அதாவது ரொசெட்டோ கூடி வாழும் சமூகம். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தலைமுறையாக மக்கள் கூடி வாழும் சமூகம். வயதானவர்கள் அனாதை விடுதியில் சேர்க்கபடுவது இல்லை. குடும்பத்தில் வைத்து போற்றபடுகிறார்கள். அதனால் மன அழுத்தம் குறைந்து அங்கே மாரடைப்பும் குறைந்துவிட்டது.ரொசெட்டோவில் நடந்த ஆய்வுகளுக்கு பின்னர்தான் உணவுப்ழாக்கம் மட்டும் அன்றி மன அழுத்தம், குடும்ப வாழ்க்கை ஆகியவை இதய அடைப்பில் வகிக்கும் பெரும்பங்கை மருத்துவர்கள் உணர்ந்தார்கள்.மருத்துவ உலகில் இதன் பெயர் “ரொசெட்டோ விளைவு”