Thursday, May 16, 2013

பூஜ்யத்தை கண்டுபிடித்தது எந்த இந்தியர்கள்?



பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள் என்பது தெரியும்.

ஆனால் எந்த இந்தியர்கள்?

உலகின் மிக தொன்மையான பூஜ்ஜியம் கிபி 876ம் ஆண்டு க்வாலியர் நகரில் உள்ள விஷ்ணு கோயிலில் உள்ள பூஜ்ஜியம் தான் என இதுவரை நம்பபட்டு வந்தது.

இந்திய கணிதவியல் சங்க வலைதளத்தில் இருந்து

http://www.ams.org/samplings/feature-column/fcarc-india-zero


270 என எழுதியிருப்பது இன்றைய எண்கணித முறையை ஒத்து இருப்பதை கவனிக்கவும்.

ஆனால் இப்போது அதை விட தொன்மையான பூஜ்ஜியம் கம்போடியாவில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.  அன்றைய காம்போஜம் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக தான் கருதபட்டதால் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது இந்தியா என்பதில் மாற்றம் இல்லை.

இந்த கம்போடீய பூஜியம் "சக ஆண்டு 605.." என குறிப்பிடுகிறது

சக ஆண்டு 605 என்பது கிபி 683ம் ஆன்டை குறிக்கும்.

இந்த கம்போடிய பூஜ்ஜியம் K - 127 என அழைக்காப்டுகிறது. அங்கோர்வாட் கோயிலில் இந்த பூஜ்ஜியம் பாதுகாககப்டுகிறது. (ஆனால் அங்கோர்வாட்டில் இது பொறிக்கபடவில்லை.அங்கோர்வாட் பின்னாளில் கட்டபட்டது)


சூன்யம் என்ற கருத்து அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதை கணிதத்தில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவின. பூஜ்யம்/சூனியம் என ஒன்று இருக்கிறதா என்பதே முடிவாகவில்லை. இன்று ஒன்றுக்கு பின்னால் பூஜ்யத்தை போட்டு 10 ஆக்குகிறோம். அம்மாதிரி எண் முறை அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்து, நூறு என்பதற்கு தனியாக எண்களை கொடுத்துகொன்டே போனார்கள்.

இந்த சர்ச்சையை கிபி 650ம் ஆண்டு பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மஸ்புத சித்தாந்தா எனும் நூல் தான் தீர்த்து வைத்தது. பூஜ்யத்துடன் நெகடிவ் எண்ணை கூட்டினால் நெகடிவ் வரும், பூஜ்யத்துடன் பாஸிடிவ் எண்னை கூட்டினால் பாஸிடிவ் வரும், பூஜ்யத்தை எதில் பெருக்கினாலும் பூஜ்யம் வரும் என்பது மாதிரி கணித சித்தாந்தங்களை இந்த நூல் தான் அறிமுகபடுத்தியது.

 விக்கியில் பண்டைய தமிழ் எண்முறை கீழ்கண்டவாறு கொடுக்கபட்டு உள்ளது.


No comments: