Sunday, November 20, 2011

பால், மின்சாரம், பஸ்கட்டண உயர்வு எதை காட்டுகிறது?


பால், மின்சாரம், பஸ்கட்டண உயர்வு எதை காட்டுகிறது?

இந்தியா இன்னும் ஒரு கண்ட்ரோல் அன்ட் கமாண்ட் எகானமி தான் என காட்டுகிறது. பால் விலையேற்றத்தை ஒரு முதல்வர் அறிக்க வேண்டி இருப்பது அரசு தன் கடமைகளை மறந்து தான் இருக்க கூடாத துறைகளில் இருப்பதை காட்டுகிறது. இதுதான் வருத்ததுகுரிய விஷயமே ஒழிய விலையேற்றம் அல்ல.

அமெரிக்காவில் பால் விலை தினம்,தினம் மாறும். அதை மாநில கவர்னர்கள் டிவியில் அறிவிப்பதில்லை.பால் விலை ஏறுவதுக்கும், குறைவதுக்கும் அரசியல்வாதிகளால் செய்ய முடிய கூடியது எதுவும் இல்லை. பெட்ரோல் விலையும் தினமும் மாறும். எனக்கு தெரிந்து மூன்று மாதத்தில் பெட்ரோல் விலை இரு மடங்கு எல்லாம் கூடியிருக்கிறது. இரு மடங்கு விழுந்தும் இருக்கிறது.நிலையான விலை இல்லை. சந்தை பொருளாதாரத்தில் நிலையான விலை என எதுவும் இருக்க முடியாது.ஆனால் விலை இப்படி ஏறினாலும், இறங்கினாலும் அது மக்களின் வாங்கும் சக்தியை பாதிப்பதில்லை. காரணம் பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதில்லை.

நம் அரசு பால் வியாபாரம் கரண்டு வியாபாரம் பஸ் வியாபாரம் என அனைத்து துறைகளிலும் புகுந்து குழப்படி செய்து வருவதால் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதும், தேர்தல் சமயத்தில் விலையை ஏற்ராமல் தேர்தல் முடிந்தபின்னர் சாமர்த்தியமாக விலையை ஏற்றுவதும் வாடிக்கை.இந்த மாதிரி கூத்துக்கள் தடுக்கபட ஆவின், அரசு போக்குவரத்து கழாங்கள் முதலியவை தனியார் மயமாக்கப்பட்டு, பஸ் போக்குவரத்தில் உள்ள பெர்மிட் முறை ரத்து செய்யபடுவதே தீர்வு.பெர்மிட் ஒழிந்தால் தமிழ்நாடெங்கும் பஸ் வசதி இல்லாத அனைத்து ஊர்களுக்கும் ஒரே மாதத்தில் பஸ் வசதி கிட்டும்.ஆயிரகனக்கில் வேலைவாய்ப்புகள் பெருகும்.மக்களின் வாழ்க்கைதரம் உயரும்.ஆனால் அதன்பின்னர் போக்குவரத்து துறை வலம் கொழிக்கும் துறையாக இருக்காது.அதனால் அது எந்த ஜென்மத்திலும் நடக்கபோவதில்லை என்பதை அறியலாம்.

Tuesday, November 15, 2011

ஆவ்சம் அமெரிக்கா


நேஷனல் ஜியாக்ராபிக் டாக்குமெண்டரி ஒன்றில் பேனாமா கால்வாய் கட்டபட்ட வரலாற்றை பார்த்துகொண்டிருந்தேன். மெய் சிலிர்க்க வைக்கும் அந்த வரலாற்றின் சிறுதுளிகள்

19ம் நூற்றாண்டின் இறுதியில் சூயஸ் கால்வாய் கட்டபடுகிறது. சூயஸ் கால்வாயை கட்டி முடித்த பிரெஞ்சு எஞ்சினியர் லெஸ்ஸாப்ஸ் அதில் நான்கில் ஒரு பங்கு தூரமே உள்ள பேனாமா கால்வாயை கட்ட களம் இறங்குகிறார்.

பனாமா கால்வாய் உலகின் மிகபெரும் எஞ்சினியரிங் புராஜக்ட். சூயஸ் எல்லாம் அதன் அருலிகேயே வர முடியாது.காரணம் பேனாமா கால்வாய் அமைந்த சிக்கலான நிலபரப்பு.மலை,ஆறு,காடுகள் அனைத்தும் இருந்தன.சூயஸ் கால்வாய் பாலைவனத்தின் குறுக்கே சென்றது.அதனால் அதை கட்டுவது சாத்தியமானது.ஆனால் பேனமா அப்படி அல்ல.அடர்ந்த காடுகளில் பணிபுரிந்த தொழிலாளிகள் மலேரியா,டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள்.தோண்டப்பட்ட கால்வாய் முழுக்க மீண்டும் மண்சரிந்து மூடியது. 22,000 உயிர்களை இழந்த பிறகு சூயஸ் கால்வாயால் உலகபுகழ் பெற்ற லெஸ்ஸாப்ஸ் பேனமா கால்வாயால் திவால் ஆகி ஏழையாக இறந்தார்

Ferdinand_de_Lesseps_1.jpg

(சூயஸ் கால்வாயை கட்டிய பிரெஞ்சு பொறியாளர் லெஸ்ஸெப்ஸ்)

1903ல் அமெரிக்கா வல்லரசு அல்ல.ஆனால் வளர்ந்து வரும் அரசு.அன்று ப்ரிட்டன் மற்றும் ஜெர்மனி தான் சூப்பர் பவர்கள்.டெட்டி ரூஸவெல்ட் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் சுமார் 10,000 மைல் பயணதூரத்தை மிச்சபடுத்தும் பேனமா கால்வாயை வெட்டினால் தான் அமெரிக்கா மேலும் வளரமுடியும் என்பதை உணர்கிறார்.கால்வாயை வெட்ட முடிவெடுக்கிரார்.(டெட்டி ரூஸவெல்ட் நினைவாக தான் குழந்தைகள் மனம் கவர்ந்த கரடிக்கு டெட்டி பேர் எனும் பெயர் சூட்டபட்டது.அது தனி கதை)

teddy-roosevelt-pince-nez.jpg

(டெட்டி ரூஸவெல்ட்)

அன்று பேனமா தனிநாடாக இல்லை.கொலம்பியாவின் ஆதிக்கத்தில் இருந்தது.பேனமாவுக்கு குறுக்கே கால்வாய் வெட்ட கொலம்பியாவிடம் அனுமதி கேட்கிறார் ரூஸவெல்ட்.கொலம்பிய அரசு அனுமதி மறுக்கிறது.அதன்பின் டெட்டி ரூஸவெல்ட் செய்த காரியம் தான் அமெரிக்காவின் பிற்கால சண்டியர்தனத்துக்கு முதல்படி என பலரும் சொல்கிரார்கள்.அப்படி என்ன செய்தார் டெட்டி? சிம்பிள்..பேனமா நாட்டின் "சுதந்திர போராட்ட அமைப்புக்கு" நிதி உதவி செய்தார்.ஆயுதம் கொடுத்தார்.புரட்சியை அடக்க வந்த கொலம்பிய படை துறைமுகத்தில் அமெரிக்க போர்கப்பல்கள் நிற்பதை கண்டு பின்வாங்கின. துளி ரத்தம் சிந்தாமல் பேனமா என்ர நாடு புதிதாக பிறந்தது.பேனமா கால்வாய் கட்டுமானமும் உடனே துவங்கியது

1904 முதல் 1914 வரை கட்டுமானம் நிகழ்ந்தது. பிரெஞ்சுகாரர்களை வாட்டி வதைத்த அதே மலேரியாவுன், மஞ்சள் காய்ச்சல் என்ர நோயும் மீண்டும் தொழிலாளரை துன்புறுத்தின.பல நூறு தொழிலாளர்கள் மஞ்சள் காய்ச்சல் எனும் நோய்க்கு பலியானார்கள்.இந்த நோய் ஏன் வருகிறது என்பதே தெரியவில்லை.சாரி,சாரியாக தொழிலாளர் மரணிக்க துவங்கியதும் பலர் கட்டுமான பணிகளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.கால்வாய் கட்டும் பணி ஸ்தம்பித்தது.

கோர்காஸ் என்ற ராணுவ டாக்டர் அப்போது புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பை கூறினார். மஞ்சல் காய்ச்சல் வர காரணம் கொசுகடிதான் என்றார்.கொசுவை ஒழியுங்கள்..மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சலும் ஒழியும் என்றார்.அன்று எல்லாம் யாருக்கும் இந்த வியாதி பரவ காரணம் கொசு என தெரியாது.அதனால் யாரும் அதை சீரியசாக எடுக்கவில்லை.கொசுவை ஒழிக்க மில்லியன் டாலர்(அன்று அது மிகபெரும் தொகை) திட்டம் ஒன்றை தீட்டி கொடுத்தார் கார்கோஸ்.அதை கிடப்பில் போட்டுவிட்டு ஐம்பதாயிரம் டாலரை கொடுத்து "இதை வைத்து கொசுவை ஒழி" என சொல்லி நிதி ஒதுக்கினார்கள்.

கோபமடைந்த கார்கோஸ் ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.கார்கோஸின் நண்பர் ரூஸவெல்டை சந்தித்து "கார்கோஸ் திட்டத்தை நீங்கள் ஒத்துகொண்டால் உங்களுக்கு கால்வாய் கிடைக்கும்.இல்லையேல் பேனமா கால்வாயை நீங்கள் மறக்கவேண்டியதுதான்" என்றார்

யோசித்த ரூஸவெல்ட் வரலாற்றி மாற்றும் அந்த முடிவை எடுத்தார்.காரகோஸின் திட்டத்தை ஒத்துகொண்டார்

கொசுவை ஒழிக்க காரகோஸ் களம் இறங்கினார்.கோசு உற்பத்தி அவாது நீர்நிலைகளில்.அதனால் குளம்,குட்டை என நீர்நிலைகள் தேங்கி நிற்கும் பகுதிகள் அனைத்திலும் நீரின் மேல் க்ரூட் ஆயிலை ஊற்றுங்கள் என ஆலோசனை கூறினார்.க்ரூட் ஆயில் நீரில் கலந்ததும் கொசுமுட்டைகளில் இருந்து கொசு உற்பத்தி ஆகி வருவது நின்றது.பிரமிக்கதக்க வைக்கும் விதத்தில் மலேரியா,மஞ்சள் காய்ச்சல் வியாதிகளும் உடனே நின்ரன.(மருத்துவ உலகமும் அன்றுமுதல் கொசுவால் வியாதிகள் பரவும் என்பதை அறிந்து கொசுக்களை டார்கெட் செய்ய துவங்கியது தனிகதை)

e_today_02.jpg
(கொசு மூலம் மலேரியா பரவும் என்பதை கண்டுபிடித்த டாக்டர் காரகோஸ்)


அதன்பின் உற்சாகத்துடன் களம் இறங்கிய குழுவினர் பேனமா கால்வாயை கட்டிமுடித்து 1914ல் திறப்பு விழா நடத்தினர்.அதே மாதத்தில் முதல் உலகயுத்தம் துவங்கியது

பேனமா கால்வாய் அமெரிக்கா எனும் வல்லரசின் வருகையை உலகுக்கு அறிவித்தது....22,000 உயிர்பலிகளுக்கு பிறகு பிரெஞ்சு அரசால் சாதிக்க முடியாததை ஐந்தாயிரம் உயிர்களை மட்டுமே இழந்து சாதித்து காட்டிய பேனமா கால்வாய் கட்டுமானம் இன்றும் உலகின் தலைசிறந்த எஞ்சினியரிங் புராஜக்டாக பார்க்கபடுகிறது.அன்றுதான் முதல் முதலாக அமெரிக்கா ஆவ்சம் நாடு என்பதை உலகம் அறிந்தது:-)


Sunday, November 13, 2011

ஜமீந்தாரின் காதலி

RW_patna_maharaja-maharani-DesiNuts.jpg"டேய் தாமு..எனக்கு கல்யாணம் பண்ணி பார்த்தால் என்னனு தோணுது. நம்ம நல்லசாமி மகளை குடுப்பானான்னு கேளு"

தாமுவுக்கு தூக்கி வாரிபோட்டது.

"தொழிலையே மாத்திருவீங்க போலிருக்கு முதலாளி...பொம்பள புரோக்கர கல்யாண புரோக்கர் வேலை பார்க்க சொல்றீங்க?"

"பேசி மடக்கறதுல நீதாண்டா கிங்கு.நல்லசாமியை பேசி மடக்கு..அந்த பொண்ணை கோயில்ல பார்த்தேன். நல்ல பொண்ணு மாதிரி தெரிஞ்சது..எத்தனைநாள் தான் மைனராவே சுத்திகிட்டு இருக்கறது? நானும் பிள்ளை,குட்டின்னு செட்டிலாக வேண்டாமா?"

சொல்லிவிட்டு ஜமீன் வேகமாக நடந்து மறைந்தார்

தாமு தலையில் கையை வைத்துகொண்டு உட்கார்ந்தார்.

----

"நெசமாதான் சொல்றீங்களா? ஜமீந்தார் மாப்பிள்ளையா?" நல்லசாமி மறுபடி கேட்டார்.

"இதையே எத்தனை தரம் கேப்பீங்க" தாமு சலித்துகொண்டார்.

"நம்ப முடியாம தான் கேக்கறேன்.கொட்டாம்பட்டி ஜமீன் நம்ம ஊட்ல பொண்ணெடுக்க என்ன காரணம்னு ஒண்ணும் புரியலை.நான் சாதா சமையல்காரன்.."

"அதான் முன்னாடியே சொன்னேனெ?ஜமீந்தார் நல்ல வசதியானவர். ஜமீனை எல்லாம் கவருமெண்டு புடுங்கிட்டாலும் நிலம்,நீச்சு எல்லாம் அப்படியே இருக்கு.ஒரே பையன்னதால் கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டாங்க.கொஞ்சம் அப்படி இப்படி இருந்துட்டார்.வயசும் முப்பத்தி ஏழு ஆயிடுச்சு. இனி மேல் கல்யாணம் ஆகி செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணி "ஏதோ ஏழை பொண்னா பாருடா தாமுன்னார்".."

"அதனால எம்பொண்ன கேக்கறீங்களா?" நல்லசாமி முகத்தில் சற்று கோபம் எட்டி பார்த்தது...

"இதோ பாருங்க நல்லசாமி. உங்களுக்கு நாலு பொண்ணு.ஊர் பூரா கடன். பொண்டாட்டிக்கு பக்கவாதம். இந்த மாதிரி சம்பந்தம் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது. உன் கடனை எல்லாம் ஜமீந்தார் கட்டிடுவார்.மத்த பொண்ணுகளுக்கும் கல்யாணம் பண்ணி குடுத்துடுவார். நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு. பத்து லச்சத்தை சுளையா வாங்கி குடுத்தடறேன்"

"பத்து லச்சத்துக்கு எம் பொண்ணை விக்க சொல்றீங்களா?" நல்லசாமி கோபமானார்

"அப்புறம் எவ்ளோதான் வேணும்?"

"ஒரு பதினஞ்சா குடுக்க சொல்லுங்க.."

"சரி..அப்ப கல்யாணம்?"

"அடுத்த முகூர்த்தத்துலயே வெச்சுடலாம்.."

-------

"ஐயா உங்களை பார்க்க நம்ம நல்லசாமி பொண்ணு வந்திருக்குங்க"

ஜமின் புருவங்களை உயர்த்தினார்.."வரசொல்லு" என்றார்

அவள் அவர் எதிரே வந்து நின்றாள். ஏழ்மை அவள் அழகை குலைக்க முயன்று தோற்று விட்டிருந்தது.அவர் தன்னை அறியாமல் அவள் முகத்தையே உற்றுபார்த்து கொண்டிருந்தார்

"என்னை உங்களுக்கு கட்டி வெக்கறதா முடிவு பண்ணிருக்கறதா அப்பா சொன்னார்"

"ஆமாம்..."

"இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை"

"ஏன்?"

"எனக்கு உங்களை பிடிக்கலை"

"ஏன் பிடிக்கலை?"

அவள் பதில் சொல்லவில்லை. தரையை பார்த்துகொண்டு நின்றாள்.

"இப்பதான் உங்கப்பாக்கு கொடுக்க 15 லட்சத்தை பாங்கிலிருந்து எடுத்துட்டு வந்தேன்" என்றார் ஜமீன்.

"அந்த காசை நீங்களே வெச்சுகுங்க..எனக்கு ஒரு ரெண்டு லச்சத்தை மட்டும் கடனா கொடுங்க.எனக்கு காலேஜ்ல சீட்டு கெடச்சிருக்கு.படிக்கணும்னு ஆசை.காசு இல்லை.படிச்சு முடிச்சு வட்டியும், முதலுமா  காசை திருப்பி தந்துடறேன்..."

ஜமீந்தார் அவளையே பார்த்தார்.

"ஊர்ல எத்தனையோ பேருக்கு கடன் கொடுத்திருக்கீங்க.எனக்கும் கொடுங்க...சும்மா குடுக்க வேண்டாம்.இன்னும் அஞ்சு வருசத்தில் காசை வட்டியுடன் திருப்பி தரலைன்னா நானே திரும்ப இந்த ஊர்க்கு வந்து உங்களை கல்யாணம் செய்துகொள்கிறேன்" என்றாள் அவள்.

"என்ன டீல் இது" ஜமீந்தாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"நீ ஒண்ணும் காசை திருப்பி தர வேண்டாம். இந்த கல்யாணமும் வேண்டாம். இந்தா இந்த பதினஞ்சு லச்சத்துல உனக்கு எவ்ளோ வேணுமோ அதை எடுத்துகிட்டு மிச்சத்தை கொண்டு போய் உங்கப்பன் கிட்ட குடுத்துடு." ஜமீந்தார் பெட்டியை நீட்டினார்.

அவள் கண்ணில் தாரை,தாரையாஇ நீர் பெருகியது

"உங்களை பத்தி தப்பா பேசினதுக்கு.."

"செண்டிமெண்ட் எல்லாம் ஆகாது" என்றார் ஜமீந்தார்."உனக்கு தான் என்னை பிடிக்காதே?அப்புறம் என்ன பேச்சு.பெட்டிய எடுத்துகிட்டு கிளம்பு."

---

"சூப்பர் பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு ஜமீந்தாரே" தாமு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்

"வேணாண்டா தாமு" ஜமீந்தார் பெருமூச்செறிந்தார்.

"இன்னுமா நல்லசாமி மகளையே நெனச்சுகிட்டிருக்கீங்க?இத மட்டும் ஒருதரம் பாருங்க..அப்புறம் வேற எந்த பொண்ணையும் தேடவே மாட்டீங்க.."

"வேணாண்டா.."

"சும்மாருங்க...இந்தாம்மா..உள்ளே வா" தாமு குரல் கொடுத்தார்

அவள் உள்ளே நுழைந்தாள்.

நல்லசாமி மகள்...

ஜமீன் இமைக்க மறந்து அவள் முகத்தையே பார்த்தார்.

அவளும் அவர் முகத்தையே உற்றுபார்த்தாள்.

"நான் வரட்டுங்களா?" தாமு மெதுவாக வினவினார்

ஜமீன் பதிலே சொல்லவில்லை.தாமு சொன்னது அவர் காதில் விழவே இல்லை.

"இனி இங்கே நமக்கென்ன வேலை?" தாமு ஜமீந்தாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடையை கட்டினார்