Thursday, July 28, 2011

அகில உலக குண்டு அழகிகள் போட்டி

இத்தாலியில் அகில உலக குண்டு அழகிகள் போட்டி நடைபெற்றது.போட்டியில் ஓர்னெல்லா சிபார்லினி என்ற இத்தாலி பெண் வெற்றி பெற்றார்

கவர்ச்சி குண்டு, செக்ஸ் பாம் என தினதந்தி சும்மானச்சுக்கும் தான் டைட்டில் போடும்.ஆனால் அதை எல்லாம் தூக்கி விழுங்கும் நிஜமான அக்மார்க் கவர்ச்சிகுண்டுகளின் புகைப்படம் தோ

slide_36116_315567_large.jpg?1311880407326

நீச்சல் உடை ரவுண்டு

slide_36116_315560_large.jpg?1311880305263

நடன ரவுண்டு

slide_36116_315564_large.jpg?1311880329804

slide_36116_315565_large.jpg?1311880385572

இவர் தான் போட்டியில் ஜெயிச்ச ஓர்னெல்லா சிபார்லினி.என்ன அழகா தோத்தாங்குள்ளிகளுக்கு பழிப்பு காட்டறார் பாருங்க


slide_36116_315566_large.jpg?1311880441597

Sunday, July 24, 2011

திமிங்கில வேட்டை

ஜப்பானியர்களுக்கு திமிங்கில மாமிசத்தின் மேல் அப்படி ஒரு மோகம்.உலகின் பலநாடுகளில் பசுமை இயக்கங்கள் திமிங்கல வேட்டையை எதிர்த்து போராட்டம் நடத்தி ஐநா சபை வரை சென்று திமிங்கில வேடையை தடுத்து நிறுத்தின.ஜப்பான் மட்டும் எதற்கும் கட்டுபடாமல் திமிங்கில வேட்டையை தொடர்ந்தது.

சட்டரீதியாக கட்டுபடுத்த முடியாதததை போராட்டம் மூலம் சாதித்தனர் பசுமை இயக்கத்தினர்.ஆம்..திமிங்கில வேட்டைக்கு செல்லும் ஜப்பானிய கப்பல்களை இவர்களும் பின் தொடர்வார்கள்.ஜப்பானிய கப்பல்கள் மேல் கைக்கு கிடைத்ததை வீசி எறிவார்கள்.பல மாலுமிகளுக்கு இதனால் அடிபடும்.கப்பலை சுற்றி படகுகளில் நின்றுகொண்டு ஓட்ட முடியாமல் கெரோ செய்வார்கள்.

ஜப்பானிய மாலுமிகள் திருப்பி தாக்கினால் அது சர்வதேச விஷயமாகிவிடும், யுடியூபில் ஏறி விஷயம் பெரிதாகிவிடும் என்பதால்  ஜப்பான் அரசு ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருந்தது.சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் திமிங்கில வேட்டை கப்பல் ஒன்று இப்படி நடுகடலில் சத்தியாகிரகம் செய்த பசுமை இயக்கத்தை சேர்ந்த நியூசிலாந்து நாட்டவர் ஒருவரை கைது செய்து ஜப்பான் கொண்டு வந்தது.அவர் மேல் வழக்கும் தொடரப்பட்டது.பெரிய அளவில் உலகெங்கும் இந்த வழக்குக்குக்கு முக்கியத்துவம் கிடைத்ததால் எந்த தண்டனையுமின்றி அவர் திருப்பி அனுப்பபட்டார்.

பசுமை இயக்கத்தினருக்கு இப்படி போராட்டம் நடத்த உலகெங்கும் இருந்து நிதி குவிந்தது.இந்த கடல்போரை சமாளிக்க இயலாமல் ஜப்பான் அரசு சமீபத்தில் தோல்வியை ஒப்புகொண்டு "திமிங்கில வேட்டை தற்காலிகமாக நிறுத்தபடும்" என அறிவித்திருக்கிறது.அத்துடன் "திமிங்கிலமும் ஒரு உயிரினம் தான்.ஆடு,மாடு,கோழி என எதையும் விட்டு வைக்காத மேற்கத்தியநாடுகளை சேர்ந்த பசுமை இயக்கங்கள் சொந்த ஊரில் இருக்கும் ஸ்லாட்டர் ஹவுஸ்கள் முன் போராடாமல் ஜப்பான் கடல்களில் உள்ள திமிங்கிலத்தை காப்பாற்ற போராடுவது ஹிப்பாக்ரசி.கலாசார வரட்டுவாதம்.மேற்கத்திய ஏகாதிபத்திய மனோபாவம்" என கடுமையாக சாடியும் உள்ளது

ஆனால் பசுமை இயக்கங்கள் சட்டம் சாதிக்காததை,ஐநா சபை சாதிக்காததை தங்கள் போராட்டம் சாதித்தது என மகிழ்ச்சி பெருமிதத்தில் உள்ளனர்

ஜப்பான் அரசு என்ன சொன்னாலும் இது பசுமை இயக்கத்தினருக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.


(இது நான் ஒரிஜினலா எழுதின பதிவு,..சுட்டு போடுங்க.வேணாங்கலை.எழுதினவர் செல்வன்னு ஒரு வார்த்தை போட்டுட்டு சுட்டு போடுங்க)

Wednesday, July 20, 2011

ஒரு 9/11 கைதியின் டயரி

ஒரு கைதியின் டயரி

r-MARK-STROMAN-EXECUTED-large570.jpg

9/11 சம்பவங்களை நேரடி ஒளீபரப்பில் பார்த்த ஆவேசத்தில் டெக்சாஸை சேர்ந்த மார்க் ஸ்ட்ரோமென் என்பவர் தன் துப்பாக்கியை எடுத்து கொண்டு "முஸ்லிம்களை எல்லாரையும் ஒழிப்பேன்" என சபதம் எடுத்து கொண்டு ஒரு பெட்ரோல் பங்கில் நுழைந்தார். அங்கே இருந்த சர்தார்ஜி தாடி, தலைப்பாவுடன் காட்சி அளித்ததால் முஸ்லிம் என நினைத்து அவரை சுட்டு விட்டு அங்கே இருந்த இன்னும் ஒரு இந்தியரையும், பங்க்ளாதேசியான ராயிஸ் பூயான் என்பவரையும் சுட்டார்.

இதில் சர்தார்ஜியும், இந்தியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ராயிஸ் பூயான் மட்டும் உயிர்பிழைத்தார்.டெக்சாஸ் போலிச் மார்க் ச்ட்ரோமேனை கைது செய்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது.

யாரும் எதிர்பாராத விதத்தில் ராயிஸ் பூயான் "எங்கள் முஸ்லிம் மதத்தில் சொன்னபடி நான் மார்க் ச்ட்ரோமேனை மன்னித்து விட்டேன்.அதனால் அவரை விடுவிக்க வேண்டும்" என டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.வழக்கு தள்ளுபடி ஆனதும் அப்பீல் செய்தார்.அதுவும் தள்ளூபடி ஆனது.

இன்று அப்பீல், விசாரணை எல்லாம் முடிவடைந்து மார்க் ஸ்ட்ரோமேனுக்கு விஷ ஊசி மூலம் டெக்சாஸ் சிறையில் மரணதன்டனை நிறைவேற்ரபட்டது.

இறக்குமுன்னர் ஸ்ட்ரோமேன் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு உலகில் வெறுப்பு ஒழியவேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.தான் இன்னமும் அமெரிக்காவை நேசிப்பதாக கூறி சாவை அமைதியுடன் ஏற்றுகொண்டார்.


Monday, July 18, 2011

ஏர் இந்தியா எனும் வெள்ளை யானை

செய்தி

டெல்லி: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடியாக எகிறிவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ.20,415 கோடி கடன் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே, மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளது இந்த நிறுவனம். அரசு இந்த நிறுவனத்தை மீட்டெடுக்குமா அல்லது மூழ்கவிட்டு தனியாருக்கு தாரைவார்க்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. ஊழியர் ஒத்துழைப்பின்மை, வீண் செலவுகள், தேவைக்கும் அதிகமான பணியாளர் சுமை, எரிபொருள் வாங்கிய வகையில் கடன் என பல வகையிலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எரிபொருள் கட்டணம் என்ற பெயரில் எக்கச்சக்க பாக்கி வைத்திருப்பதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தின. இதனால், பல்வேறு வழித் தடங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடி கடன் இருப்பது தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.20 ஆயிரத்து 415 கோடி அளவிலான கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏர் இந்தியா உள்ளது. அந்தத் தொகையை கட்டத் தவறினால், வங்கிகளின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.

சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2007-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2011-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.20 ஆயிரத்து 320 கோடி அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளது. இது தவிர, ரூ.46 ஆயிரத்து 950 கோடி கடன் சுமை உள்ளது. விமானங்கள் வாங்க பெற்ற கடன், முதலீட்டு கடன், கடன் பாக்கிக்கான தவணை கடந்த வட்டி ஆகிய இனங்களின் கீழ் இந்த கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது.

நஷ்டமும், கடன் சுமையும் கழுத்தை இறுக்குவதால் மத்திய அரசின் உதவியை ஏர் இந்தியா நிறுவனம் நாடி உள்ளது. பங்குகள் மூலமாக ரூ.6 ஆயிரத்து 600 கோடி, ரொக்கப் பற்றாக்குறை நிதியாக ரூ.5 ஆயிரத்து 736 கோடி ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
-------------------------------

விமர்சனம்

அரசு நிறுவனம் நஷ்டத்தில் ஓடாமல், கடன் சுமையில் தத்தளிக்காமல் இருந்தால் தான் அதிசயம்.

67 ஆயிரம் கோடியில் எத்தனை பயனுள்ளதாக செலவு செய்திருக்கலாம் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்

விமான கம்பனி நடத்துவதுதான் அரசின் வேலையா?இந்த வெள்ளை யானையை கட்டி மேய்க்கும் அளவுக்கு இன்னும் நம்மிடம் வசதி இருக்கா?

பிரச்சனைக்கு ஒரே வார்த்தையில் தீர்வு....தனியார்மயமாக்கு.

இன்று தனியார்மயமாக்கினால் 67 ஆயிரம் கோடி நஷ்டத்துடன் நிற்கும்.இன்னும் 10 வருடம் கழித்து ஆக்கினால் பத்துலட்சம் கோடியில் வந்து நிற்கும்.ஆக்காமலே விட்டால் நாடு திவாலாகும்


Monday, July 11, 2011

மேனன் என்பது படிச்சு வாங்கின பட்டமா?

செய்தி: ஜாதி பெயர் வைத்துள்ள ஸ்வேதா மேனன், கவுதம் மேனன் போன்ற வெளிமாநில திரைதுறையினரை புறக்கணிக்க தங்கர் பச்சான் அறிக்கை விடுத்தார்.

gautham-menon.jpg
விமர்சனம்:

வெளிமாநிலங்களில் ஜாதிபெயரை வைத்து கொள்வது பாரம்பரியம்.ஸ்வேதா மேனன் என வைத்து கொள்வதால் அவர் ஜாதி வெறியர் என்றோ அல்லது ஜாதி பற்றி அவருக்கு அதிகமான அளவுக்கு புரிதல் இருக்கும் என சொல்ல முடியாது.புத்ததேவ் பட்டசார்யா, ஜோதி பாசு, லாலு பிரசாத் யாதவ், விபிசிங் என சமூகநீதி, ஜாதி ஒழிப்பு போராளிகள் பலரும் ஜாதி பெயர்களுடன் உலா வருபவர்கள் தான்.காரணம் அவர்கள் ஊரில் அதுதான் வழக்கம்.

வெளிமாநிலத்தவரை பெயர் மாற்ற சொல்லி கோரிக்கை விடுவது வேறு..அவர்களை தமிழ்படத்தில் நடிக்க விடாமல் தடுப்போம் என்ற ரேஞ்சுக்கு போவது வேறு.

இன்று நடிகைகளை பெயரை மாற்ற சொல்பவர்கள் நாளை தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள், சேட்டுகள், மார்வாடிகள் பக்கம் பார்வையை திருப்புவார்கள். அகர்வால் ஸ்வீட்ஸ் பெயரை மாற்று, நேமிசந் ஜெயின் கல்லூரி பெயரை மாற்று என ஆரம்பித்தாலும் அதிசயம் இல்லை.

இதை எல்லாம் செய்யுமுன் நம் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகட்சிகளை ஒழித்துவிட்டு, தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை எனும் நிலையை உருவாக்கிவிட்டு பிறமாநிலங்கள் மேல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லாவிட்டால் நீ என்ன ஒழுங்கா என பிற மாநிலத்தவர் நம்மை கேட்கதான் செய்வார்கள்.


Sunday, July 10, 2011

"இந்தி"ய ராணுவத்தை கண்டித்தவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?

சிறுவன் தில்சனை சுட்டவர் தமிழ் ராணுவ அதிகாரி.பெயர் கந்தசாமி ராமராஜ்.லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தவர், மதுரைக்காரர்

தமிழனை சுடுவதே "இந்தி"ய ராணுவத்தின் வேலை என எழுதியவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இனிமேலாவது முந்திரிகொட்டையாக இல்லாமல் முழு தகவல்களும் கிடைத்தபிறகு கருத்து தெரிவித்தால் பின்னால் அசடு வழியவேண்டீயிருப்பது சற்று குறையும்.அவ்ளோதான்:-)



Thursday, July 07, 2011

ஆவ்சம் டெக்சாஸ்


ஆவ்சம் டெக்சாஸ்

article-0-0CE164D100000578-9_233x423.jpg
வருடம் 1994

ஏட்ரியா எனும் 16 வயது சான் அன்டோனிடோ நகர பெண் ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்தாள். அவளை சுற்றி இளைஞர்கள் சீண்டிகொண்டிருந்தனர். ஹும்பர்டோ ஹீல் எனும் மெக்சிக சட்டவிரோத குடியேறி அவளை காப்பாற்றுகிறேன் என சொல்லி காரில் ஏற்றிபோய் கர்னகடூரமாக பலாத்காரம் செய்து இறுதியில் ஒரு மரக்கிளையால் அவள் பெண்ணுறுப்பில் குத்தி கொன்று தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அடையாளம் தெரியாமல் சிதைத்துவிட்டான்.அதன்பின் அவன் டெக்சாஸ் போலிசால் கைது செய்யபட்டான்.

வருடம் 2011

அனைத்து கோர்ட்டுகளிலும் அப்பீல் முடிந்து தூக்கிலிடப்படும் வேளையில் அவனை காப்பாற்ற மெக்சிகர்கள் அமைப்பு ஒன்று முன்வந்தது. கைது செய்யபடும் வெளிநாட்டு குடிமகன்களுக்கு அநாட்டு தூதரகம் மூலமாக உதவி கிடைக்கவேண்டும் என வியன்னா பிரகடனம் இருப்பதை சுட்டிகாட்டி ஹும்பர்டோவுக்கு மரணதண்டனை அளிக்க கூடாது என வலியுறுத்தியது.

ஹும்பர்டோ கைது செய்யபட்டபோது அவன் தனக்கு மெக்சிக தூதரக உதவி வேண்டியதில்லை என எழுதி கொடுத்திருந்தான்.ஆனால் அது செல்லாது என இந்த அமைப்பு வாதிட்டது.பிரச்சனை ஒபாமா வரை போய் ஒபாமாவே "ஹும்பர்டோவுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி "டெக்சாஸில் இம்மாதிரி குற்ரத்தை இழைத்தால் தண்டனை மரணம் தான்" என சொல்லி ஒபாமாவின் வேண்டுகோளை நிராகரித்தார்.அமெரிக்காவில் மாநில அளவில் நடக்கும் குற்ரங்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கவர்னருக்கே உண்டு.ஜனாதிபதிக்கு கூட இல்லை.

இன்று மாலை 7 மணிஅளவில் ஹும்பர்டோ விஷௌஉசி செலுத்தி கொல்லபடுவான் என்ர நிலையில் அமெரிக்க பெடெரல் அரசு சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஹும்பர்டோவின் மரணதண்ட்னையை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கபட்டது.சுப்ரீம் கோர்ட்டு அதை நிராகரித்தது.

மாலை 7 மணிஅளவில் ஏட்ரியாவின் குடும்பத்தினர் மவுனமாக அமர்ந்து பார்க்க ஹும்பர்டோவுக்கு விஷ ஊசி செலுத்தி மரணதண்டனை நிறைவேற்றபட்டது.சாவதற்கு முன் ஹும்பர்டோ "அந்த கொலையை நான் தான் செய்தேன்.ஏட்ரியாவின் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என சொல்லி உயிர்நீத்தான்.

ஐநா சபை, அமெரிக்க பெடெரல் அரசு, வழக்கமான மனித உரிமை அமைப்பு கோமாளிகள், மரணதண்டனை எதிர்ப்பு மென்டல்கள் என அனைவரையும் துணிந்து நின்று எதிர்த்து தன் குடிமகளுக்கு நீதி வழங்கிய டெக்சாஸ் கவர்னர் ரிக்பெர்ரி இமயமென டெக்சாஸ் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

rickperry.jpg



Wednesday, July 06, 2011

பஞ்சமி நிலமும் ஜெயலலிதாவும்

ப்ரிட்டிஷ்காரன் காலத்தில் பஞ்சமி நிலம் என தலித்துகளுக்கு நிலங்கள் தரப்பட்டன.அதை வைத்து அவர்கள் விவசாயம் செய்யவேண்டும் என்பதால் அவர்கள் நிலத்தை விற்ககூடாது எனவும் நிபந்தனை போடபட்டது.ஆனால் அவர்களில் பலர் நிலத்தை விற்றுவிட்டனர்.காரணம் குடும்ப நெருக்கடி, நிலத்தில் நீர் இல்லாமை என பல காரணங்கள்.நூறு ஆண்டுகளாக நிலத்தை விற்காமல் யாரால் வைத்திருக்க முடியும்?

இப்படிப்பட்ட நிலங்கள் நாள்போக்கில் பலகை மாறி சந்தையில் வாங்கவும், விற்கவும் பட்டன.அப்படி ஒரு நிலத்தை தான் ஜெயலலிதா காசு கொடுத்து சிறுதாவூரில் வாங்கினார். அதில் எதாவது குற்றம் கண்டுபிடிக்கணும்னு திமுக அரசு ரெகார்டுகளை ஆராய்ந்து அது பஞ்சமி நிலம் என கண்டுபிடித்தது.அப்புறம் அதை வைத்து மும்முரமா அரசியல் நடக்கிறது.

ரெகார்டுகளை தோண்டிபார்த்தால் நம்மில் யார் வீடு வேண்டுமனாலும் பஞ்சமி நிலமாக இருக்க வாய்ப்பு உண்டு.நாம் என்ன தலித்துகளை மிரட்டியா இடத்தை வாங்கினோம்?நூறுவருசத்தில் அந்த நிலம் எத்தனைகைமாறீயதோ யாருக்கு தெரியும்?

இன்றையதேதியில் பஞ்சமி நிலத்தால் எந்த பலனும் இல்லை.இந்த ப்ரிட்டிஷ்காரன் காலத்து சட்டத்தை தூக்குவதே நல்லது.இல்லாவிட்டால் வீணாக இம்மாதிரி அரசியல் தன அதை வைத்து நடக்கும்.அதிகாரிகள் தான் பொதுமக்களை பிளாக்மெயில் செய்து கொழுப்பார்கள்.


Sunday, July 03, 2011

வள்ளுவர் இந்துவா சமணரா?- Part 1

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

மன்னவன் செங்கோல் வளையாது நின்றால் தான் வேள்விகள் அந்த நாட்டில் நடைபெறும்,
தருமம் செழித்தோங்கும். வேள்விகள் நடைபெற்றால் தான் தேவர்கள் மனம் மகிழ்ந்து
மழையை வரவழைப்பர்.ஆக அனைத்துக்கும் அடிப்படை வேள்விகளும், வேள்விகளை காக்கும்
மன்னனின் கோலுமே ஆகும்.

இதே கருத்தை அடியொட்டி வரும் மேலும் சில குறள்கள்

ஆபயன் குன்றும் அறுதொழொலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.

(இங்கே வள்ளுவர் மழை வர காரணமே மன்னனின் செங்கோன்மை தவறா ஆட்சிதான்
என்கிறார்.அது மேலே சொன்ன லாஜிக் படிதான்)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
>   ஒல்லாது வானம் பெயல்

மன்னன் ஆட்சிக்கும் மழை வருவதற்கும் என்ன சம்பந்தம்? மோசமான அரசன் ஆண்டால் மழை
ஏன் வராது? முறைதவறுதலுக்கும் மழை வராது இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

முறைதவறிய அரசாட்சியில் யாகம், வேள்வி எதுவும் நடக்காது. தருமம் பாழ்படும்.
அதனால் அங்கே மழை பெய்யாது.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

ராஜா எதை காக்காவிட்டால் மழை பெய்யாது?

யாகத்தை காக்காவிடில் இந்திரன் முதலான தேவர்கள் ப்ரீதி அடைய மாட்டார்கள்.
அதனால் மழை வராது.

இதைதவிர ராஜா காப்பதுக்கும் மழை வருவதுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வள்ளுவர் இந்துவா சமணரா?- Part 1

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

மன்னவன் செங்கோல் வளையாது நின்றால் தான் வேள்விகள் அந்த நாட்டில் நடைபெறும்,
தருமம் செழித்தோங்கும். வேள்விகள் நடைபெற்றால் தான் தேவர்கள் மனம் மகிழ்ந்து
மழையை வரவழைப்பர்.ஆக அனைத்துக்கும் அடிப்படை வேள்விகளும், வேள்விகளை காக்கும்
மன்னனின் கோலுமே ஆகும்.

இதே கருத்தை அடியொட்டி வரும் மேலும் சில குறள்கள்

ஆபயன் குன்றும் அறுதொழொலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.

(இங்கே வள்ளுவர் மழை வர காரணமே மன்னனின் செங்கோன்மை தவறா ஆட்சிதான்
என்கிறார்.அது மேலே சொன்ன லாஜிக் படிதான்)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
>   ஒல்லாது வானம் பெயல்

மன்னன் ஆட்சிக்கும் மழை வருவதற்கும் என்ன சம்பந்தம்? மோசமான அரசன் ஆண்டால் மழை
ஏன் வராது? முறைதவறுதலுக்கும் மழை வராது இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

முறைதவறிய அரசாட்சியில் யாகம், வேள்வி எதுவும் நடக்காது. தருமம் பாழ்படும்.
அதனால் அங்கே மழை பெய்யாது.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

ராஜா எதை காக்காவிட்டால் மழை பெய்யாது?

யாகத்தை காக்காவிடில் இந்திரன் முதலான தேவர்கள் ப்ரீதி அடைய மாட்டார்கள்.
அதனால் மழை வராது.

இதைதவிர ராஜா காப்பதுக்கும் மழை வருவதுக்கும் எந்த தொடர்பும் இல்லை.