ஜப்பானியர்களுக்கு திமிங்கில மாமிசத்தின் மேல் அப்படி ஒரு மோகம்.உலகின் பலநாடுகளில் பசுமை இயக்கங்கள் திமிங்கல வேட்டையை எதிர்த்து போராட்டம் நடத்தி ஐநா சபை வரை சென்று திமிங்கில வேடையை தடுத்து நிறுத்தின.ஜப்பான் மட்டும் எதற்கும் கட்டுபடாமல் திமிங்கில வேட்டையை தொடர்ந்தது.
சட்டரீதியாக கட்டுபடுத்த முடியாதததை போராட்டம் மூலம் சாதித்தனர் பசுமை இயக்கத்தினர்.ஆம்..திமிங்கில வேட்டைக்கு செல்லும் ஜப்பானிய கப்பல்களை இவர்களும் பின் தொடர்வார்கள்.ஜப்பானிய கப்பல்கள் மேல் கைக்கு கிடைத்ததை வீசி எறிவார்கள்.பல மாலுமிகளுக்கு இதனால் அடிபடும்.கப்பலை சுற்றி படகுகளில் நின்றுகொண்டு ஓட்ட முடியாமல் கெரோ செய்வார்கள்.
ஜப்பானிய மாலுமிகள் திருப்பி தாக்கினால் அது சர்வதேச விஷயமாகிவிடும், யுடியூபில் ஏறி விஷயம் பெரிதாகிவிடும் என்பதால் ஜப்பான் அரசு ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருந்தது.சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் திமிங்கில வேட்டை கப்பல் ஒன்று இப்படி நடுகடலில் சத்தியாகிரகம் செய்த பசுமை இயக்கத்தை சேர்ந்த நியூசிலாந்து நாட்டவர் ஒருவரை கைது செய்து ஜப்பான் கொண்டு வந்தது.அவர் மேல் வழக்கும் தொடரப்பட்டது.பெரிய அளவில் உலகெங்கும் இந்த வழக்குக்குக்கு முக்கியத்துவம் கிடைத்ததால் எந்த தண்டனையுமின்றி அவர் திருப்பி அனுப்பபட்டார்.
பசுமை இயக்கத்தினருக்கு இப்படி போராட்டம் நடத்த உலகெங்கும் இருந்து நிதி குவிந்தது.இந்த கடல்போரை சமாளிக்க இயலாமல் ஜப்பான் அரசு சமீபத்தில் தோல்வியை ஒப்புகொண்டு "திமிங்கில வேட்டை தற்காலிகமாக நிறுத்தபடும்" என அறிவித்திருக்கிறது.அத்துடன் "திமிங்கிலமும் ஒரு உயிரினம் தான்.ஆடு,மாடு,கோழி என எதையும் விட்டு வைக்காத மேற்கத்தியநாடுகளை சேர்ந்த பசுமை இயக்கங்கள் சொந்த ஊரில் இருக்கும் ஸ்லாட்டர் ஹவுஸ்கள் முன் போராடாமல் ஜப்பான் கடல்களில் உள்ள திமிங்கிலத்தை காப்பாற்ற போராடுவது ஹிப்பாக்ரசி.கலாசார வரட்டுவாதம்.மேற்கத்திய ஏகாதிபத்திய மனோபாவம்" என கடுமையாக சாடியும் உள்ளது
ஆனால் பசுமை இயக்கங்கள் சட்டம் சாதிக்காததை,ஐநா சபை சாதிக்காததை தங்கள் போராட்டம் சாதித்தது என மகிழ்ச்சி பெருமிதத்தில் உள்ளனர்
ஜப்பான் அரசு என்ன சொன்னாலும் இது பசுமை இயக்கத்தினருக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
(இது நான் ஒரிஜினலா எழுதின பதிவு,..சுட்டு போடுங்க.வேணாங்கலை.எழுதினவர் செல்வன்னு ஒரு வார்த்தை போட்டுட்டு சுட்டு போடுங்க)
No comments:
Post a Comment