ஒரு கைதியின் டயரி
9/11 சம்பவங்களை நேரடி ஒளீபரப்பில் பார்த்த ஆவேசத்தில் டெக்சாஸை சேர்ந்த மார்க் ஸ்ட்ரோமென் என்பவர் தன் துப்பாக்கியை எடுத்து கொண்டு "முஸ்லிம்களை எல்லாரையும் ஒழிப்பேன்" என சபதம் எடுத்து கொண்டு ஒரு பெட்ரோல் பங்கில் நுழைந்தார். அங்கே இருந்த சர்தார்ஜி தாடி, தலைப்பாவுடன் காட்சி அளித்ததால் முஸ்லிம் என நினைத்து அவரை சுட்டு விட்டு அங்கே இருந்த இன்னும் ஒரு இந்தியரையும், பங்க்ளாதேசியான ராயிஸ் பூயான் என்பவரையும் சுட்டார்.
இதில் சர்தார்ஜியும், இந்தியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ராயிஸ் பூயான் மட்டும் உயிர்பிழைத்தார்.டெக்சாஸ் போலிச் மார்க் ச்ட்ரோமேனை கைது செய்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது.
யாரும் எதிர்பாராத விதத்தில் ராயிஸ் பூயான் "எங்கள் முஸ்லிம் மதத்தில் சொன்னபடி நான் மார்க் ச்ட்ரோமேனை மன்னித்து விட்டேன்.அதனால் அவரை விடுவிக்க வேண்டும்" என டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.வழக்கு தள்ளுபடி ஆனதும் அப்பீல் செய்தார்.அதுவும் தள்ளூபடி ஆனது.
இன்று அப்பீல், விசாரணை எல்லாம் முடிவடைந்து மார்க் ஸ்ட்ரோமேனுக்கு விஷ ஊசி மூலம் டெக்சாஸ் சிறையில் மரணதன்டனை நிறைவேற்ரபட்டது.
இறக்குமுன்னர் ஸ்ட்ரோமேன் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு உலகில் வெறுப்பு ஒழியவேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.தான் இன்னமும் அமெரிக்காவை நேசிப்பதாக கூறி சாவை அமைதியுடன் ஏற்றுகொண்டார்.
1 comment:
இப்படியுமா மனிதர்கள் ?
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
Post a Comment