Monday, March 28, 2011

காளி

காளி

"அம்மா...எனக்கு நீ கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு.." காளி அம்மாவை பிடித்து கொண்டாள்.அவளுக்கு வயது 12 ஆகிவிட்டது.இருந்தாலும் இன்னும் அம்மாவிடம் கதை கேட்பதில் பிரியம் அதிகம்

"சரி...சொல்றேன்.கதை ஹீரோ பேரும் காளி தான்" என சொல்லி அம்மா கதை சொல்ல துவங்கினார்

------------
காளி மெதுவாக எழுந்து தட்டு தடுமாறிகொண்டே ப்ரிட்ஜை நோக்கி நடந்தான்.தூக்க கலக்கம் கண்ணை அசத்தியது.சமையலறையில் ஏதோ சத்தம் கேட்க தூக்க கலக்கம் உடனே பறந்தது..ஊரில் திருட்டுபயலுவ தொல்லை அதிகமாயிடுச்சு..வீட்டுகுள்ள புகுந்துட்டானுகளா?

சுவற்றில் மாட்டியிருந்த வேட்டை துப்பாகியை எடுத்துகொண்டு சமையலறைக்கு சென்று விளக்கை போட்டான்.

"காளிச்சாமி..." அவன் அப்பா துள்ளிகுதித்து எழுந்தார்.அவிழ்ந்து கிடந்த வேட்டியை எடுத்து கொண்டு அறையை விட்டு ஓடினார்.

கூட இருந்த பெண் யார் என காளிக்கு சரியாக தெரியவில்லை...வேலைகாரியின் மகளாக இருக்கலாம், அல்லது புது வேலைகாரியாக கூட இருக்கலாம்..

"மன்னிசிடுங்க..." என்றாள் அவள்.."அப்பாவுக்கு பக்கவாதம்...மருந்து வாங்க கூட காசில்லை..ரொம்பநாள் பட்டினி"

காளிச்சாமி ஒன்றும் பேசாமல் போய் படுத்துகொண்டான்.

அடுத்தநாள் அப்பா எதுவும் நடவாதது போல சாவதானமாக வீட்டுக்குள் வளைய வந்தார்.காளி எதுவும் பேசாமல் பெட்டியில் துணியை அடுக்கி எடுத்து கொண்டான்.

"போயிட்டு வர்ரேன்" என அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.ஜீப்பை எடுத்தான்.

தெருமுக்கில் அவள் வீடு இருந்தது...வீட்டுக்கு வெளியே ஏகபட்ட கூட்டம்.வண்டியை நிறுத்தினான்

"பொன்னுசாமியண்ணன் செத்துட்டாரு" என காளியிடம் சொன்னார்கள்.

உள்ளே அவள் அழ எல்லாம் இல்லை.அமைதியாக தான் உட்கார்ந்திருந்தாள்.

காளி சாயந்திரம் மறுபடி அந்த பக்கம் வந்தான்.வீட்டில் அவள் மட்டும் தான் இருந்தாள்.கூட்டம் கலைந்து விட்டிருந்தது.

"இனி என்ன பண்ணபோறே?" என கேட்டான் காளி

"எதாவது வேலைக்கு போகணும்" என்றாள் அவள்.

"கோயமுத்தூர்ல நான் மேனேஜரா இருக்கர பாங்கில் நிறைய பனியன் கம்பனி முதலாளிக அக்கவுண்ட் வெச்சிருக்காங்க..அவங்க கிட்ட சொல்லி வேலை வாங்கி தர்ரேன்"

"சரி.."

"அப்ப கிளம்பு.."

"இப்பவேவா?"

"ஆமாம்..நான் இன்னிக்கு நைட்டு கோயமுத்தூர் டிரெய்னை பிடிக்கணும்"

--------

இருவரும் கோவையில் காளியின் அபார்ட்மெண்டுக்கு வந்தார்கள்.

"எதுவரைக்கும் படிச்சே?" என்றான் காளி

"+2"

"மேல படிக்கலையா?"

"காசு இல்லை"

"+2ல என்ன மார்க்?"

"960"

காளி சிந்தனையில் ஆழ்ந்தான்..அவன் +2வில் 850 மதிப்பெண் தான் வாங்கினான் என்பது நினைவுக்கு வந்தது.

"நீ வேலைக்கு எல்லாம் போகவேணாம்,மேல படி......நான் காசு கட்டறேன்.."

"ஐயா.."

"நாளைக்கு உன்னை எதாவது லேடிஸ் ஆஸ்டல்ல சேத்துடறேன்..காலேஜ் ஆரம்பிச்சதும் அதுல சேத்துடறேன்.நீ படிச்சு நல்லபடிக்கு முன்னுக்கு வரணும்.."

கதவு தடட வென தட்டபட்டது...

கதவை திறந்தான்

விஜிலன்ஸ்..

"மேம்பால ஊழல் வழக்கில் சம்ன்பந்தப்பட்ட மினிஸ்டரின் செவன்ஸ்டார் லிமிட்டடுக்கு எந்த ரூல்சையும் பாலோ பண்ணாம 75 கோடி லோன் சாங்ஷன் செஞ்சிருக்கீங்க...உங்க வீட்டை சோதனை போட வாரண்டோட வந்திருக்கோம்" என்றார்கள்.

"சார்..மினிஸ்டர் சொல்லிதான் லோன் சான்க்ஷன் செஞ்சேன்..என் மேல எந்த தப்பும் இல்லை.நான் பைசா லஞ்சம் வாங்கலை"

"அதை வாக்குமூலமா எழுதி தற்றீங்களா?"

"சார்..அது எப்படி முடியும்? எனக்கும் பாலிடிக்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"

"அதை ஸ்டேசனில் வந்து சொல்லுடா.." என்றார் கூட பாதுகபபுக்கு வந்த இன்ஸ்பெக்டர்

"சார் மரியாதையா பேசுங்க"

"உனக்கென்னடா மரியாதை" அவர் காளி முகத்தில் குத்தினார்

காளிக்கு கோபம் வந்துவிட்டது.அவன் கிராமத்தான்.அவனை யாரும் இதுவரை அடித்ததில்லை...திருப்பி இன்ஸ்பெக்டரை ஒரு அறை அறைந்தான்.உடனே போலிஸ் படை அவனை சூழந்து கண் மண் தெரியாமல் அடித்தது.அடித்த அடியில் அவன் திமிறினான்..மாடி படிகளில் உருண்டு விழுந்தான்.30 படிகளில் உருண்டு தரையை தொட்டபோது கழுத்து எலும்பு மளுக் என முறியும் சத்தம் கேட்டது

------------------

காளி மெதுவாக கண்விழித்தான்.மருத்துவமனையில் இருந்தான்.அவள் மட்டும் எதிரே அமர்ந்து அபபிளை நறுக்கி கொண்டிருந்தாள்.

"எனக்கு என்ன ஆச்சு?எழுந்திருக்க முடியலை" என்றான் காளி..சிரமபட்டு கையை மட்டும் சற்று தூக்க முடிந்தது

"முதுகெலும்புக்கு கீழே அடிபட்டிடுச்சுன்னாங்க...எத்தனையோ ஆபரேஷன் செஞ்சாங்க..இனி நீங்க என்னைக்கும் படுத்த படுக்கையா தான் இருக்கணுமாம்" என்றாள் அவள்..அழுதாள்..

"விஜிலன்ஸ் வந்தாங்க..என்ன ஆச்சு?"

"மந்திரி கட்சி மாறி மத்திய ஆளும்கட்சில சேந்துட்டாரு.கேஸ் அப்படியே அமுங்கிடுச்சு. யாரையும் அரஸ்ட் செய்யலை.ஆனால் உங்களை உங்க பேங்க்ல சஸ்பெண்டு செஞ்சிருக்காங்க"

"அப்பா..?"

"அவருக்கு போன் செஞ்சேன்..உங்களை ஏனோ அவரு வந்து பார்க்கலை..என்னையும் உங்களையும் பத்தி தப்பா பேசினாரு.."

"அப்ப ஆஸ்பத்திரில என்னை சேர்த்தது யாரு?"

"நான் தான்...உங்களை கவர்மெண்டு ஆஸ்பத்திரில போட்டிருந்தாங்க...அங்க ஒண்ணும் சரியில்லைன்னு சொல்லி நான் தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்"

"உனக்கேது காசு?"

அவள் பதிலே சொல்லவில்லை.

காளியின் உடல் நடுங்கியது....

"எனக்காக நீ மறுபடி தொழிலில் இறங்க கூடாது..நீ படிக்கணும்..போதும்...இனி சாகறவரைக்கும் நான் நடைபிணமா வாழ்ந்து என்னை காப்பத்த நீ தொழில் செய்யறது போதும்."

காளி ஆவேசமாக தலையை உதறினான்.பெட்டிலிருந்து துள்ளி விழுந்தான்.

தலை மீண்டும் தரையில் மோதியது...

"ஐயோ" என அலறினாள் அவள்.காளிசாமியின் உயிர் மெதுவே துடித்து அடங்கியது.

----------

"போதும்மா..ஒரே சோக கதையா இருக்கு" சிணுங்கினாள் காளி

"சரி..போதும்" என்றார் அம்மா.

"அந்த பொண்ணூ அப்புறம் என்ன ஆச்சும்மா?"

"அது வேலைக்கு போயி படிச்சு நல்லா முன்னுக்கு வந்துடுச்சு..கூட ஆபிஸ்ல வேலைபாக்கறவருஒருத்தரை கல்யாணம் பண்ணிகிடுச்சு.அவங்களுக்கு உன்னை மாதிரி அழகா ஒரு பொண்ணு..They lived happily ever after"

"போம்மா..கதை ரொம்ப சோகமா இருக்கு.நாளைக்கு எதாவது டிடக்டிவ் கதை சொல்லும்மா" என சொல்லிவிட்டு காளி தூங்கிவிட்டாள்.

Monday, March 21, 2011

பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்

திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.

வேம்பயர் (vampire)

Vampire-Woman-vampires-7395333-700-604.jpg

நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.

வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்

வேர்வுல்ப் (werewolf)

werewolf3.jpg

வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க

லெப்ரெகான் (leprechaun)
celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596

லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.

செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி

ஸாம்பி (zombie)

zombie.jpg

ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்

Tuesday, March 08, 2011

வணக்கத்துக்குரிய காதலியே....

தாய், தங்கை, அக்கா, மகள், மனைவி,பாட்டி,ஆசிரியை என பல பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கிய பங்கை ஆற்றுவார்கள்.ஆனால் இந்த உறவுகள் அனைத்திலும் ஸ்பெசலான உறவு என பார்த்தால் தாய், மனைவி என இருவரே தேறுவார்கள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள்..அது தவறு.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு கீழும் இரு பெண்கள் இருப்பார்கள்.அந்த இருவரும் யார் என பார்த்தால் தாயும், மனைவியும்.ஒரு ஆணின் குழந்தைபருவம் நல்லபடி அமைய தாய் தனது கெரியரை தியாகம் செய்கிறார்.திருமணமானபின்னர் கணவனின் கெரியர் நல்லபடி அமைய மனைவி தன் கெரியரை தியாகம் செய்கிறார்....

பார்மேடிவ் வருடம் என சொல்லபடும் முதல் ஐந்து ஆண்டுகள் ஒரு குழந்தையுடன் ஒரு பெற்றோர் வீட்டில் இருப்பது அவசியம்.பெரும்பாலும் அது தாயாகவே இருக்கிறது.அதனால் தாயின் தோள்களில் ஏறி ஒரு மனிதன் வெற்றிபடியை தொட முயல்கிறான்.அவன் மனைவியும் சேரும்போது அவள் தோளிலும் ஏறி நின்று அவன் வெல்கிறான்...

ஆக இரு பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு ஆண் வெற்றிபடியை தொட இயல்கிறது..அதனால் தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு கீழும் இரு பெண்கள் இருப்பார்கள் என்றேன்.

ஆணாக சமூகத்தில் பிறப்பதே பல வேலைகளுக்கு தகுதி என்ற நிலை நிலவுகிறது. ஒவ்விரு ஆணும் பெண்ணாக பிறந்திருந்தால் நாம் இன்று வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளை அடைந்திருப்போமா என எண்ணி பார்க்கவேண்டும்...ரேப் செய்யபடுவோம் என்ற அச்சமின்றி வீடு திரும்புவதே ஆணாக பிறந்ததன் மிகபெரும் அட்வான்டேஜ் என்பதை பலரும் உணர்வதில்லை.பஸ்ஸில் ஏறி போகும்போது தன் இடுப்பு கிள்ளபடும் அபாயம் ஆண்களுக்கு இல்லை..அலுவலகத்தில் மேனேஜரின் பாலியல் சீண்டலுக்கு ஆளாக நேரிடும் அபாயம் இல்லை.அச்சம், மடம்,நாணம்,பருப்பு கிருப்பு போன்ற சுமைகளை சுமக்க வேண்டியதில்லை..கலாசாரம், குடும்ப கவுரவம் முதலியவற்றை காக்கும் மிகபெரும் பொறுப்பு இல்லை...

திருமணம் ஆண்களின் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்ரத்தையே அளிக்கிறது..ஆனால் பல பெண்களின் கெரியருக்கு அதுவே முற்றுபுள்ளீயாக அமைகிறது.சூர்யாவும்,ஜோதிகாவும் இருவரும் நடிகர்கள்...இருவருக்கும் கல்யாணம் என அறிவிக்கும்போது நிருபர்கள் "கல்யாணத்துக்கு பிறகு நடிப்பீர்களா/" என ஜோதிகாவை மட்டும் தான் கேட்கிறார்கள்...சூர்யாவை இம்மாதிரி யாரும் கேட்கும் அவசியமே இல்லை...

அதனால் ஆணின் வெற்றிக்கு கீழிருக்கும் இந்த இரு பெண்களையும் ஒவ்வொரு ஆணும் போற்றி கொண்டாடவேண்டும்.