Tuesday, March 08, 2011

வணக்கத்துக்குரிய காதலியே....

தாய், தங்கை, அக்கா, மகள், மனைவி,பாட்டி,ஆசிரியை என பல பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கிய பங்கை ஆற்றுவார்கள்.ஆனால் இந்த உறவுகள் அனைத்திலும் ஸ்பெசலான உறவு என பார்த்தால் தாய், மனைவி என இருவரே தேறுவார்கள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள்..அது தவறு.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு கீழும் இரு பெண்கள் இருப்பார்கள்.அந்த இருவரும் யார் என பார்த்தால் தாயும், மனைவியும்.ஒரு ஆணின் குழந்தைபருவம் நல்லபடி அமைய தாய் தனது கெரியரை தியாகம் செய்கிறார்.திருமணமானபின்னர் கணவனின் கெரியர் நல்லபடி அமைய மனைவி தன் கெரியரை தியாகம் செய்கிறார்....

பார்மேடிவ் வருடம் என சொல்லபடும் முதல் ஐந்து ஆண்டுகள் ஒரு குழந்தையுடன் ஒரு பெற்றோர் வீட்டில் இருப்பது அவசியம்.பெரும்பாலும் அது தாயாகவே இருக்கிறது.அதனால் தாயின் தோள்களில் ஏறி ஒரு மனிதன் வெற்றிபடியை தொட முயல்கிறான்.அவன் மனைவியும் சேரும்போது அவள் தோளிலும் ஏறி நின்று அவன் வெல்கிறான்...

ஆக இரு பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு ஆண் வெற்றிபடியை தொட இயல்கிறது..அதனால் தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு கீழும் இரு பெண்கள் இருப்பார்கள் என்றேன்.

ஆணாக சமூகத்தில் பிறப்பதே பல வேலைகளுக்கு தகுதி என்ற நிலை நிலவுகிறது. ஒவ்விரு ஆணும் பெண்ணாக பிறந்திருந்தால் நாம் இன்று வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளை அடைந்திருப்போமா என எண்ணி பார்க்கவேண்டும்...ரேப் செய்யபடுவோம் என்ற அச்சமின்றி வீடு திரும்புவதே ஆணாக பிறந்ததன் மிகபெரும் அட்வான்டேஜ் என்பதை பலரும் உணர்வதில்லை.பஸ்ஸில் ஏறி போகும்போது தன் இடுப்பு கிள்ளபடும் அபாயம் ஆண்களுக்கு இல்லை..அலுவலகத்தில் மேனேஜரின் பாலியல் சீண்டலுக்கு ஆளாக நேரிடும் அபாயம் இல்லை.அச்சம், மடம்,நாணம்,பருப்பு கிருப்பு போன்ற சுமைகளை சுமக்க வேண்டியதில்லை..கலாசாரம், குடும்ப கவுரவம் முதலியவற்றை காக்கும் மிகபெரும் பொறுப்பு இல்லை...

திருமணம் ஆண்களின் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்ரத்தையே அளிக்கிறது..ஆனால் பல பெண்களின் கெரியருக்கு அதுவே முற்றுபுள்ளீயாக அமைகிறது.சூர்யாவும்,ஜோதிகாவும் இருவரும் நடிகர்கள்...இருவருக்கும் கல்யாணம் என அறிவிக்கும்போது நிருபர்கள் "கல்யாணத்துக்கு பிறகு நடிப்பீர்களா/" என ஜோதிகாவை மட்டும் தான் கேட்கிறார்கள்...சூர்யாவை இம்மாதிரி யாரும் கேட்கும் அவசியமே இல்லை...

அதனால் ஆணின் வெற்றிக்கு கீழிருக்கும் இந்த இரு பெண்களையும் ஒவ்வொரு ஆணும் போற்றி கொண்டாடவேண்டும்.

No comments: