திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.வேம்பயர் (vampire) நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும். வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார் வேர்வுல்ப் (werewolf)வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க லெப்ரெகான் (leprechaun)
லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும். செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி ஸாம்பி (zombie)ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்

No comments:
Post a Comment