Monday, October 09, 2006
188.பாம்புக்கு பால் வார்க்கும் இந்தியர்கள
காஷ்மீரில் நடக்கும் போராட்டம் "தேசிய இன எழுச்சி" என்ற மாயையை இடதுசாரி எழுத்தாளர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இவர்கள் அரசியல் நடக்க இம்மாதிரி பிரச்சாரம் அவசியமாகிறது. ராணுவத்தில் உள்ள கறுப்பு ஆடுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை இவர்கள் பெரிதுபடுத்தி அந்த பழியை இந்தியா மீது திருப்பும் வேலையை வெகு சாமர்த்தியமாக ( அறிந்தோ, அறியாமலோ ) செய்கின்றனர். மும்பை குண்டுவெடிப்புக்கள், பாராளுமன்ற தாக்குதல் ஆகியவை இவற்றின் எதிர்வினையே என்ற பொய்ப்பிரச்சாரமும் வெகு சாமர்த்தியமாக நடத்தப்படுகிறது.
பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் அனைவரும் பாகீஸ்தானியர். அந்த முயற்சியில் இறந்தவர்கள் அனைவரும் ஜெய்ஷ், லஷ்கர் ஆகிய தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள். எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியர்கள். இப்படி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நடத்திய தாக்குதலை வெகு சாம்ர்த்தியமாக தேசிய இனங்களின் எழுச்சி என்ற போர்வையில் போர்த்து மூடி அதன் உள்ளே இருக்கும் பயங்கரவாத பூதத்தை, இந்தியமக்களுக்கு எதிரான போரை புனுகு பூசி மறைக்கும் வேலை இடதுசாரி எழுத்தாளர்களால் வெகு சாமர்த்தியமாக நடத்தப்படுகிறது.
காஷ்மீர் பற்றிய பதிவில் அல்கொய்தா படத்தை போட்டதற்கு என் மேல் விமர்சனங்கள். இவர்கள் வாதம் என்னவென்றால் காஷ்மீரில் போரிடுபவர்கள் காஷ்மீரிகளாம். அல்கொய்தாவினரோ, பாகிஸ்தானியரோ இல்லையாம். இது அப்படியே பாகிஸ்தானிய அரசின் பிரச்சார உத்தியாகும். சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசு நடத்தும் தூஷண பிரச்சரத்தை இந்திய அளவில் இவர்கள் செய்து கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் போரிடும் கும்பல்கள் அனைத்தும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாத குழுக்கள். சூடானிகள், ஆப்கானியர்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் ஐஎஸ் ஐ மற்றும் லஷ்கர், ஜெய்ஷ், அல்கொய்தா ஆகியவற்றின் உதவியுடன் பாகிஸ்தானின் ஸ்கர்து பகுதியில் உள்ள பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று எல்லை தாண்டி வந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர். இதை காஷ்மீரி மக்களின் எழுச்சி, சுயநிர்னய போர் என பாகிஸ்தான் அரசு சர்வதேச அளவில் ஜல்லி அடிக்க, அதை அப்படியே வழிமொழிந்து இடதுசாரி லிபரல்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றனர்.
காஷ்மீரில் அல்கொய்தா இருக்கிறது. அவர்களுக்கு கஷ்மீர் விடுதலை எல்லாம் நோக்கமல்ல. உலகம் தழுவிய ஒரு மத அரசாங்கத்தை அமைக்கவேண்டும். பாகிஸ்தானும், காஷ்மீரும் அதில் சேர வேண்டும். முதலில் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைத்துவிட்டு பிறகு பாகிஸ்தானையும் அந்த ஒரு மத அரசுடன் இணைக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்.
இது ஏதோ நான் இட்டுகட்டி சொல்கிறேன் என நினைத்து விடாதீர்கள். கஷ்மீரின் மிக புகழ் பெற்ற(!) பெண் தீவிரவாதியான அசியா ஆன்ட்ரபி என்பவர் சொல்வது இதைத்தான். இவர் துக்தரன் இ மில்லட் எனும் இயக்கத்தை சார்ந்தவர். பர்தா அணியாத பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டியவர். காஷ்மீரில் இவர் நினைத்தால் பந்த், நடந்தால் பேரணி, உட்கார்ந்தால் மாநாடு எனும் அளவு (மிரட்டல்) செல்வாக்கு படைத்தவர்.
அவர் சொல்வது என்ன தெரியுமா?
"எனக்கு காஷ்மீரியத்தில் நம்பிக்கை இல்லை. தேசியவாதத்தில் நம்பிக்கை இல்லை. உலகில் இரண்டே நாடுகள் தான் உள்ளன. ஒன்று முஸ்லிம்கள், இன்னொன்று காபிர்கள். நான் ஒரு முஸ்லிம். எனை காஷ்மீரி என அழைப்பது பற்றி நான் துளி கூட கவலைப்படுவதில்லை. நான் ஆந்ராபி, சையது வம்சத்தை சார்ந்தவள். நான் அரபி. என் முன்னோர் அரேபியாவிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்கள்..."
நான் காஷ்மீரத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. உம்மா எனும் உலகம் தழுவிய இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவதே என் நோக்கம். அதற்கு முதல்படி காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரியவேண்டும்.
இது துக்தரன் -இ-மில்லட்டால் மட்டுமே நடக்கும் காரியமல்ல.உலகெங்கும் இந்த நோக்கத்தில் இயங்கும் பல குழுக்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து போரிடவேண்டும்.
உம்மா எனும் மத அரசை ஏற்படுத்துவது நீண்டகால குறிகோள். தற்காலிக குறிக்கோள் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்...
--------
இந்த ஜல்லியை எல்லாம் "காஷ்மீரின் சுய நிர்ணயம்" "காஷ்மீரி தேசிய இனத்தின் எழுச்சி" என்ற போர்வையில் உலகுக்கு விற்கும் வேலையை பாகிஸ்தான் சாம்ர்த்தியமாக செய்கிரது.ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் நடப்பது என்ன என்பதை அறிந்தவை. அல்கொய்தாவுக்கு எதிராக அவை திரும்பியவுடன் காஷ்மீரில் இனி உலக நாடுகள் தலையிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக உதவும் சாத்தியகூறு சுத்தமாக அழிந்துபோனது.
பாகிஸ்தானே மறந்துவரும் இந்த ஜல்லியை இன்னும் மறக்காமல் இந்திய இடதுசாரி எழுத்தளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்த குப்பை இயக்கங்களை எல்லாம் "காஷ்மீரி மகக்ளின் சுய நிர்ணய போர்" என்ற லேபிளை ஒட்டி விற்கும் வேலையை அழகாக செய்துவருகின்றனர்
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
செல்வன்,
ஆளும் வர்க்கம் எதை செய்தலாலும் அது தவறாகதான் இருக்கும் என்பது சிலரின் மனநிலை. அந்த மனநிலையில் உள்ளவர்கள்தான் இந்த தீவிரவாதிகளை விட அபாயகரமானவர்கள் .
இவர்கள் செய்யும் "புரட்சி" யால் விளையபோவது ஒரு வன்முறை உலகமே
ஆபத்தான இந்நிலையினைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதி வருவது ஆறுதலாயிருக்கிறது, செல்வன்.
உற்சாகமாகவுமிருக்கிறது.
வாழ்த்துகள்.
//இவர்கள் செய்யும் "புரட்சி" யால் விளையபோவது ஒரு வன்முறை உலகமே //
அப்படி ஒரு உலகம் விளையக்கூடாது, விளையவும் விளையாது சிவா. இந்தியா ஏழை நாடாக இருக்கலாம். ஆனால் கோழை நாடல்ல
எஸ்.கே
நன்றி. யாரும் சொல்ல பயந்துகொண்டு இருக்கும் விஷயத்தை எழுதுகிறேன். யார் என்ன கட்டம் கட்டினாலும் கவலை இல்லை.
தொடர்ந்து எழுதுங்கள். எதிர்ப்புகளை கண்டு பயப்பட வேண்டாம்
செல்வன், நான் தண்டனை, இனவிடுதலை ஜல்லிகளும் மாற்றுப்பார்வையும் பதிவு எழுத ஆரம்பித்தபோது உங்கள் பதிவு இல்லை. முடித்து பப்ளிஷ் செய்துவிட்டு பார்த்தால் அதற்குள் நீங்களும் பாம்புக்கு பால் வார்ப்பதை பற்றி எழுதியிருக்கிறீர்கள்..
*
// ஆபத்தான இந்நிலையினைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதி வருவது ஆறுதலாயிருக்கிறது, செல்வன்.
உற்சாகமாகவுமிருக்கிறது // SK, போன வருடம் இதே நேரத்தில் பலவித ஜல்லிகளையும், ஜல்லிக்கு பாதுகாப்பு அரண் அமைத்தவர்களின் ஜல்லிகளையும், அதை மேற்பார்வை பார்த்த ஜல்லிகளையும் மீறி எழுதுபவர்களை ஒத்தை கைவிரல்களால் எண்ணிவிடலாம். இன்று அந்த நிலை மாறியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.. புதிய பதிவர்களில் செல்வன் நம்பிக்கைக்குறியவராக இருக்கிறார்.
//இந்த ஜல்லியை எல்லாம் "காஷ்மீரின் சுய நிர்ணயம்" "காஷ்மீரி தேசிய இனத்தின் எழுச்சி" என்ற போர்வையில் உலகுக்கு விற்கும் வேலையை பாகிஸ்தான் சாம்ர்த்தியமாக செய்கிரது.....அல்கொய்தாவுக்கு எதிராக அவை திரும்பியவுடன் காஷ்மீரில் இனி உலக நாடுகள் தலையிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக உதவும் சாத்தியகூறு சுத்தமாக அழிந்துபோனது//
செல்வன்,
இது தற்காலிகமானதாகவும் கூட இருக்கலாம்! நம் விழிப்பு நமக்கு எப்பவும் வேண்டும். அமெரிக்காவால் சில இயக்கங்கள் தடை செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் பல பெயர்களில், பல அவதாரங்களில் வரும் கலையில் கைதேர்ந்தவர்களுக்கு, இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று வேண்டுமானால் நம் அண்டை நாடு இருக்கலாம்.
நம் விழிப்பு நமக்கு எப்பவும் வேண்டும்!!
பாம்புக்கு அல்ல. சாத்தானுக்கு
முகமூடி, நன்றி. வேறென்ன சொல்ல? சொல்வதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான். தேச பாதுகாப்பையும் வழக்கம் போல் இடது சாரி, வலதுசாரி பிரச்சனையாக்கி அப்சலை கதாநாயகனாக்கி விட்டார்கள். எங்கே போய் எதை சொல்ல?வருத்தமாக இருக்கு
தெரியாத அமைப்புகளை பற்றிய விடயங்களை பதிப்பித்து இருக்கிறீர்கள்.
நன்றி
நல்ல பதிவு
கண்ணபிரான்
இது தற்காலிக வெற்றி தான்.முழு வெற்றியும் தீவிரவாத இயக்கங்கள் அழிந்தபின் தான் வரும். நடுவே இது ஒரு சிறிய ஆறுதல். அவ்வளவே
அனானிமஸ் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி
Very good post.
//இது தற்காலிக வெற்றி தான்//
எந்த வெற்றியும் தற்காலிக வெற்றி தான். மனிதர்கள் இருக்கும் வரை சண்டைகள் நடந்துகொண்டே இருக்கும். வன்முறை இருக்கும். யுத்தம் இருக்கும். ஒரு எதிரி செத்தால் இன்னொருவன் உருவாகிறான்.
Eternal Vigilance is the Price of Liberty - Thomas Jefferson.
இடது-வலது சண்டைகள் இருக்க வேண்டியது தான். ஒருவகையில் இவை மற்றொரு பிரிவினர் எல்லை மீறாமல் இருக்க balances and checks போல செயல்படலாம்.
ஆனால் இப்போதுள்ள அறிவுஜீவிகள் are simply disgusting.
சரி, டாபிக்கை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டோம்.
கஷ்மீரில் இருந்து அந்த பக்கதிற்க்கு பேருந்து சேவை தொடங்கினார்கள் அல்லவா? அப்போது ஹுரியத் மாநாட்டுக்காரர்கள் கொஞ்சம் பேர் அந்த பேருந்துகளில் சென்றார்கள்.
எதோ பெரிய மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருப்பதை போல காட்டிக்கொள்ளும் இவர்களை வழியனுப்ப சென்றது மிஞ்சி போனால் 200 பேர் கூட இருக்காது!
இத்தனை பேசும் பாகிஸ்தானை ஸ்கர்துவுக்கு பேருந்து சேவை தொடங்க தயாரா என்று கேட்டு சொல்லுங்கள். அங்கே போய் பார்த்தால் தான் தெரியும் பாக் இரானுவம் காஷ்மீரிகளை நடத்தும்விதம்.
சமுத்ரா...நன்றி..காலையில் விரிவான பதிலிடுகிறேன்
நாம் கூப்பாடு போட்டு ஒன்றும் ஆகபோவதில்லை.
அநேகமாக அப்ஸலின் தூக்குதாண்டனை ரத்து ஆகப்போகிறது(ஆகிகொண்டிருக்கிறது). நம் செக்குலர் அரசியல்வாதிகள்(ஓட்டு பொருக்கிகள்) நிச்சயம் இதை செய்வார்கள்.
ஆக்சுவலி இந்த இடதுசாரி இந்திய சிந்தனாவாதிகள், எழுத்தாளர்கள் மாதிரி கேப்மாறிகள் கையேந்தி கையூட்டுப் பெற்றுக் கொண்டு எதிரியின் கருத்தை தாய்நாட்டினரின் ஒருசாரார் கருத்துமாதிரி தேசதுரோகம் செய்கின்றனர்.
இந்த தீவிரவாத அம்மணி ஆயிஷ இந்த்ரபியின் ஆவேசமான சில பேட்டிகளை கண்டபோதெல்லாம் வேதனையில் மனம் வலிக்கும்.
நம்ம விஜயகுமார் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது சிம்மசொப்பனமாக தீவிரவாதிகளுக்கு இருந்தார். என்கௌண்டர் என்பதை அதிவேக நீதிமன்றத்தீர்ப்பை நிறைவேற்றுவது என்றாக்கினார்.
காக்க காக்க டயலாக் தான் இவனுங்கள பிடிச்சு, வண்டிவச்சு, பெட்ரோல் போட்டு நீதிமன்றம் எடுத்துச்சென்று பணம் காசு, காலத்தை விரயம் செய்யக்கூடாது.
தீவிரவாதி வெடிவச்சு ஆளைக்கொன்னா என்கௌண்டர் தான் சரியான தீர்வு!
//நம்ம விஜயகுமார் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது சிம்மசொப்பனமாக தீவிரவாதிகளுக்கு இருந்தார். என்கௌண்டர் என்பதை அதிவேக நீதிமன்றத்தீர்ப்பை நிறைவேற்றுவது என்றாக்கினார்.
காக்க காக்க டயலாக் தான் இவனுங்கள பிடிச்சு, வண்டிவச்சு, பெட்ரோல் போட்டு நீதிமன்றம் எடுத்துச்சென்று பணம் காசு, காலத்தை விரயம் செய்யக்கூடாது.
தீவிரவாதி வெடிவச்சு ஆளைக்கொன்னா என்கௌண்டர் தான் சரியான தீர்வு!//
மசாலா சினிமா பார்ப்பது போல இருக்கு. தீவீரவாதிகள்
வலையிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
Post a Comment