Monday, October 09, 2006

188.பாம்புக்கு பால் வார்க்கும் இந்தியர்கள

காஷ்மீரில் நடக்கும் போராட்டம் "தேசிய இன எழுச்சி" என்ற மாயையை இடதுசாரி எழுத்தாளர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இவர்கள் அரசியல் நடக்க இம்மாதிரி பிரச்சாரம் அவசியமாகிறது. ராணுவத்தில் உள்ள கறுப்பு ஆடுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை இவர்கள் பெரிதுபடுத்தி அந்த பழியை இந்தியா மீது திருப்பும் வேலையை வெகு சாமர்த்தியமாக ( அறிந்தோ, அறியாமலோ ) செய்கின்றனர். மும்பை குண்டுவெடிப்புக்கள், பாராளுமன்ற தாக்குதல் ஆகியவை இவற்றின் எதிர்வினையே என்ற பொய்ப்பிரச்சாரமும் வெகு சாமர்த்தியமாக நடத்தப்படுகிறது. பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் அனைவரும் பாகீஸ்தானியர். அந்த முயற்சியில் இறந்தவர்கள் அனைவரும் ஜெய்ஷ், லஷ்கர் ஆகிய தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள். எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியர்கள். இப்படி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நடத்திய தாக்குதலை வெகு சாம்ர்த்தியமாக தேசிய இனங்களின் எழுச்சி என்ற போர்வையில் போர்த்து மூடி அதன் உள்ளே இருக்கும் பயங்கரவாத பூதத்தை, இந்தியமக்களுக்கு எதிரான போரை புனுகு பூசி மறைக்கும் வேலை இடதுசாரி எழுத்தாளர்களால் வெகு சாமர்த்தியமாக நடத்தப்படுகிறது. காஷ்மீர் பற்றிய பதிவில் அல்கொய்தா படத்தை போட்டதற்கு என் மேல் விமர்சனங்கள். இவர்கள் வாதம் என்னவென்றால் காஷ்மீரில் போரிடுபவர்கள் காஷ்மீரிகளாம். அல்கொய்தாவினரோ, பாகிஸ்தானியரோ இல்லையாம். இது அப்படியே பாகிஸ்தானிய அரசின் பிரச்சார உத்தியாகும். சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசு நடத்தும் தூஷண பிரச்சரத்தை இந்திய அளவில் இவர்கள் செய்து கொண்டுள்ளனர். காஷ்மீரில் போரிடும் கும்பல்கள் அனைத்தும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாத குழுக்கள். சூடானிகள், ஆப்கானியர்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் ஐஎஸ் ஐ மற்றும் லஷ்கர், ஜெய்ஷ், அல்கொய்தா ஆகியவற்றின் உதவியுடன் பாகிஸ்தானின் ஸ்கர்து பகுதியில் உள்ள பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று எல்லை தாண்டி வந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர். இதை காஷ்மீரி மக்களின் எழுச்சி, சுயநிர்னய போர் என பாகிஸ்தான் அரசு சர்வதேச அளவில் ஜல்லி அடிக்க, அதை அப்படியே வழிமொழிந்து இடதுசாரி லிபரல்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றனர். காஷ்மீரில் அல்கொய்தா இருக்கிறது. அவர்களுக்கு கஷ்மீர் விடுதலை எல்லாம் நோக்கமல்ல. உலகம் தழுவிய ஒரு மத அரசாங்கத்தை அமைக்கவேண்டும். பாகிஸ்தானும், காஷ்மீரும் அதில் சேர வேண்டும். முதலில் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைத்துவிட்டு பிறகு பாகிஸ்தானையும் அந்த ஒரு மத அரசுடன் இணைக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். இது ஏதோ நான் இட்டுகட்டி சொல்கிறேன் என நினைத்து விடாதீர்கள். கஷ்மீரின் மிக புகழ் பெற்ற(!) பெண் தீவிரவாதியான அசியா ஆன்ட்ரபி என்பவர் சொல்வது இதைத்தான். இவர் துக்தரன் இ மில்லட் எனும் இயக்கத்தை சார்ந்தவர். பர்தா அணியாத பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டியவர். காஷ்மீரில் இவர் நினைத்தால் பந்த், நடந்தால் பேரணி, உட்கார்ந்தால் மாநாடு எனும் அளவு (மிரட்டல்) செல்வாக்கு படைத்தவர். அவர் சொல்வது என்ன தெரியுமா? "எனக்கு காஷ்மீரியத்தில் நம்பிக்கை இல்லை. தேசியவாதத்தில் நம்பிக்கை இல்லை. உலகில் இரண்டே நாடுகள் தான் உள்ளன. ஒன்று முஸ்லிம்கள், இன்னொன்று காபிர்கள். நான் ஒரு முஸ்லிம். எனை காஷ்மீரி என அழைப்பது பற்றி நான் துளி கூட கவலைப்படுவதில்லை. நான் ஆந்ராபி, சையது வம்சத்தை சார்ந்தவள். நான் அரபி. என் முன்னோர் அரேபியாவிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்கள்..." நான் காஷ்மீரத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. உம்மா எனும் உலகம் தழுவிய இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவதே என் நோக்கம். அதற்கு முதல்படி காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரியவேண்டும். இது துக்தரன் -இ-மில்லட்டால் மட்டுமே நடக்கும் காரியமல்ல.உலகெங்கும் இந்த நோக்கத்தில் இயங்கும் பல குழுக்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து போரிடவேண்டும். உம்மா எனும் மத அரசை ஏற்படுத்துவது நீண்டகால குறிகோள். தற்காலிக குறிக்கோள் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்... -------- இந்த ஜல்லியை எல்லாம் "காஷ்மீரின் சுய நிர்ணயம்" "காஷ்மீரி தேசிய இனத்தின் எழுச்சி" என்ற போர்வையில் உலகுக்கு விற்கும் வேலையை பாகிஸ்தான் சாம்ர்த்தியமாக செய்கிரது.ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் நடப்பது என்ன என்பதை அறிந்தவை. அல்கொய்தாவுக்கு எதிராக அவை திரும்பியவுடன் காஷ்மீரில் இனி உலக நாடுகள் தலையிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக உதவும் சாத்தியகூறு சுத்தமாக அழிந்துபோனது. பாகிஸ்தானே மறந்துவரும் இந்த ஜல்லியை இன்னும் மறக்காமல் இந்திய இடதுசாரி எழுத்தளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்த குப்பை இயக்கங்களை எல்லாம் "காஷ்மீரி மகக்ளின் சுய நிர்ணய போர்" என்ற லேபிளை ஒட்டி விற்கும் வேலையை அழகாக செய்துவருகின்றனர் (தொடரும்)
Post a Comment