Saturday, September 30, 2006

178.முஷாரப்பின் சொந்த கதையும் சோக கதையும்

உளவு பார்த்தல் என்பது சட்டபூர்வ நடவடிக்கை அல்ல.பல சட்டமீறல்களை செய்து தான் உளவு அமைப்புகளை நடத்த வேண்டும்.அப்படித்தான் அனைத்து நாடுகளும் செய்து வருகின்றன.அப்படி திரைமறைவில் உளவு வேலை செய்யும்போது திரையை அந்த நடடின் ஜனாதிபதியே தூக்கினால் என்ன ஆகும்? முஷாரப்பின் புத்தகம் செய்தது அந்த வேலையைத்தான் என சாடுகிறார் பாகிஸ்தானின் லிபரல் எழுத்தாளரான இர்ஃபான் உசேன். இந்த புத்தகத்தை சுயபுராணம் என்று வகைப்படுத்துவதா அல்லது கற்பனைக் கதை என வகைப்படுத்துவதா என தெரியாமல் வரலாற்று ஆசிரியர்கள் குழம்பிப்போயிருப்பதாக கூறுகிறார் இர்ஃபான் உசேன் பாகிஸ்தானை கற்காலத்துக்கு கொண்டு செல்லப்போவதாக அமெரிக்கா சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்கிறார் இர்ஃபான் உசேன்.பாகிஸ்தானின் மனப்பான்மை ஏற்கனவே கற்காலத்தில் தான் இருக்கிறது என்கிறார்.அமெரிக்கா இப்படி சொன்ன தகவலை முஷாரப்புக்கு தெரிவித்தவர் ஐஎஸ்.ஐ தலைவர் அஹமது.9/11 நடந்தபோது அஹமது வாஷிங்க்டனில் தான் இருந்தாராம். முஷாரப்பின் புத்தகத்தால் அஹமதுவை பற்றிய பல யூகங்கள் கிளம்பி விட்டனவாம்.தலிபான் கும்பல் மீது தாக்குதல் நடத்த போவதாக அமெரிக்கா சொல்லி, அதை தவிர்க்க வேண்டுமானால் பின்லேடனை ஒப்படைக்க வேண்டும் என்றதாம்.அப்போது முல்லா ஓமரிடம் தூது போக அஹமது தலைமையில் ஒரு தூதுக்குழு போனதாம். அங்கே போய் அஹமது டபிள் கேம் ஆடினாராம்.கொஞ்ச நாள் விட்டு பிடியுங்கள்,சண்டையை இழுங்கள் என ஐடியா கொடுத்ததே அஹமதுவாம். ஐ.எஸ்.ஐ என்பது ஒரு குண்டர் படை என சாடுகிறார் இர்ஃபான் உசைன்.சில நாட்களுக்கு முன் ஐ.எஸ்.ஐயால் அனுப்பப்பட்ட குண்டர் படையினர் ஒரு வீட்டில் புகுந்து ஒரு இளைஞனை அடித்து துவைத்தனராம்.அந்த இளைஞன் செய்த தவறு என்ன?ஐ.எஸ்.ஐ அதிகாரி ஒருவரின் மகனும் அவனும் நெருங்கிய நண்பர்களாம்.நண்பர்களுக்கிடையே சின்ன உரசல்.ஐ.எஸ்.ஐ அடியாள் படையை அனுப்பி அடித்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால் ஐ.எஸ்.ஐ கும்பல் அடித்த இளைஞன் ஒரு ஆர்மி ஆபிசரின் மகனாம்.பல வீரப்பதக்கங்கள் வாங்கியவராம்.விவகாரம் பெரிதாகி கடைசியில் முஷரப்பே அந்த ஜெனரலுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்க வேண்டி வந்ததாம். "ஐ.எஸ்.ஐ மீது எனக்கு 200% நம்பிக்கை இருக்கிரது" என்கிறாராம் முஷாரப்.ஆனால் பாகிஸ்தானியரே ஐ.எஸ்.ஐ கும்பலின் கோணிப் புளுகுகளை நம்புவதில்லையாம்.இங்கிலாந்தில் குண்டுவைக்க முயன்று பிடிபட்ட ஒரு பாகிஸ்தானிய இளைஞன் ஐஎஸ்.ஐ தான் தனக்கு பயிற்சி அளித்தது என இங்கிலாந்து போலிசிடம் ஒப்புதல் வாக்குமூலம் தர,ஐ.எஸ்.ஐ அவன் குடும்பத்தை அடித்து உதைத்து அந்த வாக்குமூலத்தை திரும்ப பெற வைத்ததாம். இப்படிப்பட்ட கோணிப்புளுகு அமைப்பான ஐ.எஸ்.ஐயை பற்றி உண்மையை தன் அடுத்த புத்தகத்தில் எழுதுவாரா முஷார்ப் என கேட்கிறார் இர்ஃபான் ஹூசைன். (தொடரும்) 176.கோழித்திருடன் முஷாரப் 174.முஷாரப்பின் நகைச்சுவை விருந்து

14 comments:

கால்கரி சிவா said...

அடங்காமல் முஷாரப்பை தாக்கும் தங்களின் மனவலிமையை பாராட்டுகிறேன்.

தங்களின் சுயநலத்திற்காக முஷாரப் தீவிரவாதிகளின் எதிரி என புஷ் நிர்வாகம் சொல்வது ஜோக் என்றால்

முஷாரப் சொல்வது உண்மை இந்தியாதான் அவர்களை உசுப்பிவிட்டு தீவிரவாதி ஆக்கிவிட்டார்கள் என நம் நாட்டு அறிவுசீவிகளும் பத்திரிகைகளும்
சொல்வது வேதனை

Unknown said...

//முஷாரப் சொல்வது உண்மை இந்தியாதான் அவர்களை உசுப்பிவிட்டு தீவிரவாதி ஆக்கிவிட்டார்கள் என நம் நாட்டு அறிவுசீவிகளும் பத்திரிகைகளும்
சொல்வது வேதனை//

சிவா,

பாம்புக்கு பால் வார்ப்பது தான் இந்திய கலாச்சாரமாச்சே,இவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.காஷ்மீரில் உள்ள "சுதந்திர போராட்ட தியாகிகளை" பற்றி கட்டுரை தட்டிக்கொண்டிருக்கிறேன்.நாளை அல்லது திங்களன்று அதை இட இருக்கிறேன்.

Machi said...

அதான் UK ல இருந்து போன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஆளு ISI ஐ கலைச்சா தான் பாக்கிஸ்தான் உருப்படமுடியும் என்று சொல்லிட்டாரே.

அந்த அளவுக்கு கட்டுக்கடங்காமல் போயிறிச்சு. இதை அதிகமா தாக்கினால் தனக்கு ஆபத்து என்பது தெரியாத ஆளா முஷாரப்?

Unknown said...

வாங்க குறும்பரே

ஐ.எஸ்.ஐ என்பது தேசத்துக்குள் ஒரு தேசம்.அதை எல்லாம் கட்டுப்படுத்த இனி முஷாரப்பாலோ மற்றவர்களாலோ முடியாது.ஐ.எஸ்.ஐயை தீவிரவாத இயக்கமாக உலக நாடுகள் அறிவித்தால் தான் அது ஒழியும்.

ஐ.எஸ்.ஐயை கட்டுப்படுத்த முயல்வது வீண்.அதை ஒழிப்பதே இனி உலக நாடுகள் செய்ய வேண்டியது.

வஜ்ரா said...

செல்வன்,

//
காஷ்மீரில் உள்ள "சுதந்திர போராட்ட தியாகிகளை" பற்றி கட்டுரை தட்டிக்கொண்டிருக்கிறேன்.
//

இந்த பேச்சு பேசும் லிபரலிஸ்டுகள், பாலஸ்தீனர்களை இஸ்ரேலியர்கள் விரட்டிவிட்டு இஸ்ரேல் நாட்டை அமைத்துக் கொண்டனர் என்றெல்லாம் கதருபவர்கள், கஷ்மீர் பண்டித்துகளை விரட்டிவிட்டு பழங்குடி இஸ்லாமியர்கள் தனி கஷ்மீர் கேட்பதை ஆதரிக்கின்றனரே, அதைப் பற்றியும் எழுதவும்.

Unknown said...

ஷங்கர்

காஷ்மீரில் உள்ள பண்டிட்கள் கொல்லப்படுவதை கண்டிப்பாக எழுதுவேன்.நிறைய விவரங்கள் சேர்த்து கொண்டிருப்பதால் சற்று தாமதமாகிறது

bala said...

மூல காரணம்(root cause)என்ற அயோக்யத்தனத்தை வைத்தே, தீவிர வாதத்திற்கு சப்பை கட்டு கட்டுவதில் வல்லவர் முஷாரஃப்.

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ராணுவம் மற்றும் ISI ,இவைகளை தண்ணீர் மற்றும் உரம் போட்டு அசுரத்தனமாய் வளர்த்து விட்ட அமெரிக்கா,இன்றும் இதற்கு துணை போவது. ஒரு 9/11 போதாது போலும்.
பாலா

Amar said...

ஐ.எஸ்.ஐ யாரால் வளர்க்கபட்டது?

ஜியா உல் ஹக் காலத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்றபட்டது.அதை ஜியா தனது சுயலாபத்திற்க்கு செய்தாரா அல்லது நிஜமாகவே மத காரனங்களால் செய்தாரா என்று தெரியவிட்டாலும் பாகிஸ்தானில் அடிப்படைவாத இயக்கங்களின் தொடக்கம் ஜியா உல் ஹக் காலத்தில் தான் ஏற்பட்டது என்பது மாற்று கருத்து கிடையாது.

இந்தியாவை ஆயிரம் துண்டுகளாக வெட்டி சாய்பது, கார்கில் போரின் முதல் ஒரிஜினல் blue print ஆகியவை ஜியா காலத்தில் தான் தயார் செய்யபட்டன.(apr 1998)

ஆக, ஜியா தான் ஐ.எஸ்.ஐயை வளர்த்துவிட்டார்.

அமெரிக்கா சோவியத் யூனியனை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற ஐ.எஸ்.ஐ மூலம் முஜாஹிதீனுக்கு பன/ஆயுத உதவிகளை செய்தது. operational control போன்ற இதர முக்கியமான விஷயங்களில் ஐ.எஸ்.ஐ பார்த்துகொண்டது.

ரஷ்யாகாரன் பாகிஸ்தான் மேலே இன்னும் கோபத்தில் தான் இருக்கிறான்...சந்தர்ப்பம் கிடைத்தால் துவைத்துவிடுவான்.

ஆக, எல்லோரையும் ஏமாற்றி ஐ.எஸ்.ஐ தன்னை வளர்த்து கொண்டது.

அரசாங்க பனம் மட்டும் அதற்க்கு போதாது. ஆப்கானிஸ்தானில் போருள் சாகுபடியிலும் அது ஈடுபடுகிறது. தாலிபான் காலத்தில் எல்லொரையும் தடுத்துவிட்டு தான் மட்டும் போதை பொருள் உற்பத்தி செய்தது ஐ.எஸ்.ஐ.

ஐ.எஸ்.ஐ இந்தியாவின் அல் கொயதா.
அதை கட்டுபடுத்த பாகிஸ்தான் அரசே தினறி போகிறது.

உனர்ந்து, திருந்துங்கள் இந்தியர்களே! :))

Amar said...

செல்வன்,

அப்ரேஷன் டொபேக் - அதான் இந்தியாவை ஆயிரம் துண்டுகளாக வெட்டும் ஆப்ரேஷன் பற்றிய விபரங்கள் இங்கே.

http://www.kashmir-information.com/Miscellaneous/OperationTopac.html

bala said...

"ஐ.எஸ்.ஐ யாரால் வளர்க்கபட்டது?

ஜியா உல் ஹக் காலத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்றபட்டது.அதை ஜியா தனது சுயலாபத்திற்க்கு செய்தாரா அல்லது நிஜமாகவே மத காரனங்களால் செய்தாரா என்று தெரியவிட்டாலும் பாகிஸ்தானில் அடிப்படைவாத இயக்கங்களின் தொடக்கம் ஜியா உல் ஹக் காலத்தில் தான் ஏற்பட்டது என்பது மாற்று கருத்து கிடையாது."

சமுத்ரா அவர்களே,,
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

ராணுவத்தை பலப்படுத்தவும்,அரசியல் கட்சிகளின் பலத்தை குறைக்கவும் ஜியா செய்த சூழ்ச்சி பாகிஸ்தானில் மதவாதத்தை ஊக்குவித்தது.
ஷியா இஸ்லாமியர்களுக்கு,மற்றும் Ahmediaக்களுக்கு எதிரான வன்முறைக்கு வித்திட்டவர் ஜியா.

மேலும் சி ஐ யே மூலம் பெரும் பணம் பெற்று
ஜிகாதிஸ்ட்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை நிறுவிய பெருமையும் ஜியாவையே சாரும்.
"இங்கு நல்ல முறையில் ஜிஹாதிஸ்ட்கள்
செய்து தரப்படும்" என்று போர்டு மாட்டிக்கொண்டு நூற்றுக்கணக்கில் உலகத்துக்கே இன்று பாகிஸ்த்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது.

பாலா

Unknown said...

Thanks a lot for the informative comments bala and samudhra.Will reply in detail tomorrow.

Thanks
selvan

Unknown said...

சமுத்ரா,பாலா

நன்றி.

ஐ.எஸ்.ஐ என்பது நோயல்ல.அதன் அறிகுறிதான்.அது இல்லாவிட்டால் இன்னொரு பாகிஸ்தானி அமைப்பு தன் இடத்தில் உருவாகியிருக்கும்.

முஷாரப்,ஜியா,பெனாசிர் எல்லாரும் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு தீங்கு செய்தவர்கள் தான்.இதில் இவர் நல்லவர்,இவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையாது.முஷாரப் இப்போது ஆடும் டிராமாவை "எனக்கு பின் அழிவு" இதற்கு முன் பலர் ஆடிவிட்டனர்.

பாகிஸ்தான் கல்வி அறிவு பெற்று திருந்தினால் காஷ்மிர் பிரச்சனை தானாக ஒழியும்.இல்லாவிட்டால் இந்த அல்கொய்தா கும்பலை அமெரிக்கா ஒழிக்க வேண்டும்.அப்போது திருந்தலாம்.இது இரண்டும் நடக்காமல் அது திருந்துவது நட்வாது

bala said...

செல்வன்,

ISI is more powerful than the civilian authority. Agreed that, Benazir and Nawaz cannot do away with their Kashmir and anti-india posture,But the military/mullah nexus has an agenda of its own and ISI is the organ which the military uses to weaken the political parties and cause various acts of sectarian violence ,rigging elections etc.


bala

Unknown said...

Bala

ISI is a symptom of the malaise that is pakistan.ISI is as bad as pakistani politics are.

If true political refors are carried out and if ISI comes under the control of coolheaded leaders,this problem will go away.But such a possibility is very remote.