Wednesday, September 27, 2006

174.முஷாரப்பின் நகைச்சுவை விருந்து

முஷாரப் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டாலும்,வெளியிட்டார்.அதை படித்து விட்டு எல்லாரும் சிரியோ சிரி என சிரிக்கிறார்கள்.பாகிஸ்தானில் பலருக்கு அதை படித்து விட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம். "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் பாகிஸ்தானில் குண்டு போட்டு கற்காலத்துக்கு கொண்டுபோயிடுவேன்" என ரிச்சார்ட் ஆர்மிடேஜ் சொன்னார் என ஒரு அடி அடித்தார்.அமெரிக்காவே விழுந்து,விழுந்து சிரித்தது.இதுவரைக்கும் எந்த ஜனாதிபதியும் இப்படி "அவன் என்னை கிள்ளினான்,குத்தினான்" என ஸ்கூல் குழந்தைகள் மாதிரி புகார் செய்ததில்லை.இவர் அதை சொல்லிவிட்டு அமெரிக்கா போய் ஜார்ஜ்புஷை சந்தித்து சிரித்து பேசுகிறார்.கை கொடுக்கிறார். இது என்ன காமடின்னு அமெரிக்கவே விழுந்து,விழுந்து சிரிக்குது.பாகிஸ்தானில் அவனவனுக்கு இதை கேட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம்.பின்ன மிலிட்டரி ஜெனெரலே பயந்தா அப்புறம் அந்த நாட்டு ராணுவத்துக்கு என்ன மதிப்பு?"எனக்கு பயமா இருக்கு"ன்னு எவன் வேணா சொல்லலாம்,மிலிட்டரிகாரன் அதுவும் பாகிஸ்தான் முப்படை தளபதி சொல்லலாமோ?:-)) "கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் வெற்றி அடைந்தது" என இன்னொரு ஜோக்கையும் அடித்து வைத்துள்ளார்.முதலில் அண்னாத்தே என்ன சொல்லிட்டிருந்தாருன்னா கார்கிலில் சண்டையிட்டது "சுதந்திர போராட்ட தியாகிகள்" என கதை அடித்தார்.கார்கிலில் ஏதடா தியாகிகள் என குழம்ப வேண்டாம்.சூடான்,வடகிழக்கு பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகளை தான் சுதந்திர போராட்ட தியாகி என்றார்(இப்போது அந்த தியாகிகளை இவரே தடை செய்து விட்டார்.அவர்கள் இவருக்கு 3 பாம் வைத்தார்கள்.தப்பித்து விட்டார்:-) முதலில் அது தியாகிகள் நடத்திய யுத்தம் என்றார்.பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை,அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தான் அரசு ஜோக் எல்லாம் அப்போது அடித்துகொண்டிருந்தது.இப்போது "அது பாகிஸ்தான் ராணுவம் இனைந்து இட்ட் சண்டை,அதில் நாங்கள் ஜெயித்தோம்" என ஒரு அடி அடித்தார் பாருங்கள்,இந்திய ராணுவத்தில் அவனவன் அரண்டு போய்விட்டானாம்.பின்ன?4000 பாகிஸ்தான் வீரர்கள் அதில் செத்ததா பாகிஸ்தான் ரிடையர்ட் ராணுவ அதிகாரிகள் பலர் சொல்லிருக்காங்க.அதை அண்ணாச்சி வெற்றி என்கிறாரே என குழம்பியுள்ளனர் இந்தியாவுக்கு எப்படி அப்துல் கலாமோ பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு ஏ.கியூ.கான்.அவர் தான் பாகிஸ்தானின் அணுஆயுத தந்தை.அப்துல்கலாமுக்கு நாம என்ன மரியாதை தந்தோம்ணு எல்லாருக்கும் தெரியும்.கான் என்ன ஆனாருன்னு தெரியுமா?வீட்டு சிறையில் களிதிண்ணுட்டு இருக்கார்.காரனம் மனுஷன் அணுகுண்டை கடலைமிட்டாய் கணக்கா வர்ரவன் போறவனுக்கெல்லாம் வித்திருக்கார்.அதனால முஷாரப் அவரை பிடிச்சு உள்ளே வெச்சுட்டார். ஆனாலும் பாவம்யா பாகிஸ்தானின் அணுஆயுத தந்தை:-) இப்ப முஷாரப் அண்னாத்தே என்ன கதை அடிக்கிறாருன்னா இந்தியாவின் அணுஆயுத திட்டம் பாகிஸ்தானை பாத்து காப்பி அடிச்சதுன்னு சொல்றார்.நம்ம ஆளுங்க நமட்டு சிரிப்பு சிரிக்கறாங்க.முதல் காரணம் அது பொய் என்பது.ரெண்டாவது காரனம் பாகிஸ்தானிலிருந்து அணுகுண்டை காப்பி அடித்திருக்கவே வேண்டியதில்லை.கான் அண்ணாத்தெக்கு மாமூல் வெட்டிருந்தா அவரே குடுத்திருப்பார். இது எல்லாவற்றையும் விட மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் புத்தகம் வெளிவந்த சிலநாட்களிலேயே அதை வாங்க ஆளில்லாமல் அமேசான் அந்த புஸ்தகத்துக்கு 50% வரை தள்ளுபடி கொடுத்து விற்கிறது.இதை கேட்டா முஷாரப் அண்ணாத்தேக்கு ரத்தகொதிப்பே வந்துடும்,பாவம்.இதை ஒரு சிறந்த நகைச்சுவை சித்திரமா விற்க அமேசானுக்கு ஐடியா கொடுத்தா விற்பனை பிச்சுகிட்டு ஓடும்.என்ன சொல்றீங்க? எப்படியோ சர்வதேச அளவில் சிரிப்பு மூட்டிய முஷாரப்புக்கு என் பாராட்டுக்கள்.இந்த சிறந்த நகைச்சுவை சித்திரத்தை அனைவரும் வாங்கி படித்து இன்புறுவீர்களாக. ஓம் சாந்தி.
Post a Comment