Friday, September 22, 2006

168.நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

"நாடு சரியில்லை,அரசியல்வாதி சரியில்லை,மாநகராட்சி சரியில்லை" என அனைவரும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள்.கோயமுத்தூர்காரர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள்.பொறுப்புள்ள குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை செய்து காட்டுவார்கள். கோவையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.அனைத்துக்கும் அரசையே நம்பியிருக்க முடியுமா?மக்களுக்கு மக்கள் தான் உதவ முடியும் என்ற நோக்கில் துவக்கப்பட்டது தான் சிறுதுளி இயக்கம்.இன்று இது மக்கள் இயக்கமாக மாறி கோவையையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. சிறுதுளி என்பது கோவை பிரிகால் இயக்குனர் வனிதா மோகன்,பண்னாரி அம்மன் சுகர்ஸ் தலைவர் திரு பாலசுப்பிரமணியன்,சங்கரா கண் மருத்துவமனை தலைவர் திரு வெங்கட்ரமணி ஆகியோர் தலைமையில் துவக்கப்ப்ட்ட ஒரு மக்கள் தன்னார்வலர் இயக்கம்.இதன் நோக்கம் என்னவெனில் 1.குளங்களை சுத்தப்படுத்துதல் 2.மழைநீர் சேகரிப்பு 3.பாலிதீன் பைகள் மற்றும் நசிவு கழிவுகளுக்கு எதிரான போர் 4.மரங்களை நடுதல் 5.ஏழைகளுக்கு கல்வி அறிவு புகட்டுதல் 6.சமூக நலத்திட்டங்கள் செய்தல் குமாரசாமி குளம் - சுத்தப்படுத்தி தூர்வாரியதற்கு முன்பகுமாரசாமி குளம் - சுத்தப்படுத்தி தூர்வாரியதற்கு பின்ப செல்வம்பதி குளம் - சுத்தப்படுத்துவதற்கு முன்பசெல்வம்பதி குளம் - சுத்தப்படுத்தியதற்கு பின்ப சிறுதுளி வருவதற்கு முன் இருந்த கிருஷ்ணாம்பதி குளம் சிறுதுளி வந்தபின் இருக்கும் கிருஷ்ணாம்பதி குளம் சிறுதுளியின் சாதனைகள் 1.கோவையின் மிகப்பெரும் குளங்களான கிருஷ்ணாம்பதி, நரசம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வசிந்தாமணி, குறிச்சிகுளம் மற்றும் பெரியகால்வாய் ஆகியவற்றை சீரமைத்தது சிறுதுளி.குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு,தூர் வாரப்பட்டு,கரைகள் பலப்படுத்தப்பட்டன.இதனால் குளங்களில் நீர் சேகரிப்பு அதிகரித்து இந்த 7 குளங்களால் பாசன வசதி பெறும் இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.808 ஏக்ரா நிலங்கள் நீர் வசதி பெற்றன. 2.அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் நொய்யல் நதியை காக்க நதியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன நதியில் உள்ள 8 சிறு அணைகள் பலப்படுத்தப்பட்டன ஐம்பது கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்பட்டது ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி உதவியுடன் அகற்றப்பட்டன குளம் வெட்டினால் போதுமா?மரம் இருந்தால் தானே மழை வரும்?இதுவரை 1 லட்சம் மரக்கன்றுகளை இந்த ஏரிகளின் கரையோரங்களில் சிறுதுளி நட்டுள்ளது.கோவை போலிஸ் டிரெய்னிங் கல்லூரி மாணவர்கள் இதற்கு உதவினர்.மேலும் ஒரு நாலைக்கு 500 மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய பூங்கா அமைத்துள்ளனர். அம்மன்குள சாக்கடைகழிவை அகற்ற நுண்ணுயிரிகளை வளர்த்து குளத்தில் இட்டதில் ஒரே வாரத்தில் 7% அளவுக்கு அம்மன்குளத்திலிருந்த சாக்கடைநீர் சுத்தமானது வீடுவீடாக குப்பை அள்ளி,சிறுதுளி குப்பைத்தொட்டிகளை அமைதத்து.100 மெட்ரிக் டன் அளவு குப்பைகளை அகற்ற ஒரு திட்டமும் தீட்டியுள்ளது. இதுவரை 180 போர்வெல்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் பல அமுல் செய்யப்பட்டுள்ளன. இது அத்தனைக்கும் நிதி கோவை மக்களிடமிருந்தும்,நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் பல தன்னார்வல தொண்டர்கள் மூலமுமே சாத்தியமானது என்பதை குறிப்பிட வேண்டும்.மக்கள் பணி செய்ய தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,கோவை மாநகராட்சியும் இனைந்தே இந்த சாதனைகளை செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒரு மக்கள் இயக்கம்.இதில் யாரும் ஜாதி வித்யாசம் பார்க்கவில்லை,மதபேதம் இல்லை,ஏழை - பணக்காரன் என்ற பேதமில்லை.அனைவரும் பொருள் தந்தோம்,முடியாதவர் உடல் உழைப்பை தந்தோம். சிறுதுளி பெருவெள்ளம்.உங்கள் ஊரிலும் ஒரு சிறுதுளீ இயக்கத்தை துவக்குங்கள்.மக்களுக்கு உதவுங்கள்.மக்களுக்கு உதவுவதுதான் தேசபக்தி,தேச சேவை. உன்னை சுற்றியுள்ள மக்கள் தான் தேசம்.அவர்கள் மேல் நீ காட்டும் அன்புதான் தேச பக்தி.அவர்களுக்கு செய்யும் சேவை தான் தேச சேவை. அதில் எங்கள் கோவைக்குதான் முதலிடம்.கோயமுத்தூர் ஏன் முன்னேறுகிறது என்று கேட்டால் இதனால் எல்லாம் தான். It is so easy to talk the talk. But it all comes down to doing the deed. இதுபற்றிய சுட்டிகள் சிறுதுளி வலைத்தளம் சிறுதுளி பற்றிய பத்திரிக்கை செய்திகள
Post a Comment