Wednesday, September 06, 2006

152.சமண முனிக்கு கோவணம் கட்டுவதா பகுத்தறிவு?

சமண முனிவர்கள் நிர்வாணமாக போனதற்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் எத்தனை அழகாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.உலகெங்கும் தனிமனித சுதந்திரத்தின் காவலனாக பகுத்தறிவு இயக்கங்கள் செயல்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் கற்புக்காவலனாகவும்,பண்பாட்டுக் காவலனாகவும் பகுத்தறிவு இயக்கங்கள் செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.தமிழ்நாட்டின் பால்தாக்கரேக்களாக இவர்கள் மாறிவிட்டது போல் தோன்றுகிறது. சமண முனிவர்கள் ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக நிர்வாணமாக தான் இருக்கின்றனர்.அவர்களை நிர்வாணமாக பார்த்து எந்த பெண்ணாவது உனர்ச்சி வசப்பட்டிருக்கிரார்களா?போலீஸில் புகார் தெரிவித்திருக்கிரார்களா?முகலாய ஆட்சியில்,வெள்ளையன் ஆட்சியில் எல்லாம் அவர்கள் நிர்வாணமாகத்தானே சென்றார்கள்?யாராவது புகார் கூறியிருக்கிறார்களா? சமணத்தை பார்ப்பனிய்யத்தோடு இணைத்து ஜல்லி அடித்திருக்கிறார் ராஜேந்திரன்.பார்ப்பனியத்தை எதிர்த்து ஜாதி கொடுமையை அழிக்க தோன்றியவையே பவுத்தமும்,சமணமும்.காலம்,காலமாக பிராமணீயத்தை எதிர்த்தெ வந்த,வேதத்தை மலத்தோடு ஒப்பிட்ட சமணத்தை,சமண முனிவர்களை,வைதீக மதத்தை ஏற்பதை விட கழுவேறுவதே மேல் என கழுவில் ஏறிய சமண மதத்தாரை இன்று பாரதீய ஜனதா கட்சியினர் வந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு பகுத்தறிவு இயக்கத்தினர் கொண்டுவந்து விட்டுள்ளனர்.எங்கே சொல்லி அழ இந்த கொடுமையை? பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டது எதனால்?அந்த விஷயத்தை ராஜேந்திரன் பூசி மெழுகுகிரார். //அய்ரோப்பாவில் - பூர்ஷ்வா நிர்வாண சங்கம் மற்றும் பூர்ஷ்வா அல்லாத நிர்வாண சங்களுக்கும் நாத்திகர் சங்கங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் என்று பல இடங்களுக்குப் போய் நேரில் பார்த்தார் பெரியார். புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த நாட்டின் ‘நிர்வாண சங்கங்கள்’ மக்களை ஏமாற்றும் மதத் தத்துவங்களோடு தொடர்புடையவை அல்ல. சூரியக் குளியல், உடல் பயிற்சி என்று உடலைப் பாதுகாக்கும் கண்ணோட்டத் தோடு உருவாக்கப்பட்டவை. அவை அரசின் அனுமதியோடு செயல்பட்ட அமைப்புகள், பொது ஒழுங்குக்கு எதிராக - வீதிகளில் கண்டபடி நிர்வாணமாக திரிகிறவர்கள் அல்ல// ஆக நிர்வாணமாக பொது இடங்களில் இருப்பது இவருக்கு பிரச்சனையில்லை.அதை மதத்தின் பெயரால் செய்வதுதான் பிரச்சனை.தன் மதத்தை பின்பற்றுவது ஒருவனின் தனிமனித உரிமை என்பது கூட தெரியாத அளவுக்கு பகுத்தறிவு இயக்கம் இவரது கண்களை குருடாக்கி உள்ளது. விக்டோரியா காலத்து இங்கிலாந்தின் ஒழுக்க நடைமுரைகளை இன்னுமும் பிடித்துக்கொண்டு பகுத்தறிவு இயக்கத்தினர் பண்பாட்டு,கலாச்சார காப்பாளர்களாக மாறி சமன முனிவர்களுக்கு கோவணம் கட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். //ஆடு மாடு, மிருகங்களைத் தவிர மனிதர்கள் எவராக இருந்தாலும், ‘எந்தத் தத்துவத்தையும்’ கூறிக் கொண்டு வீதிகளில் நிர்வாணமாகத் திரிவது சட்டத் துக்கு எதிரானது; தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.// ஏன் ஆடு,மாடு மட்டும் நிர்வாணமாக திரியவேண்டும்?அதையும் பிடித்து தமிழ்பண்பாட்டுப்படி வேட்டி,சட்டை,புடவை அணிவிக்க வேண்டியதுதானே?அதுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? அப்படிப்பட்ட சட்டம் இருந்தால் அது முட்டாள்தனமான சட்டம்.கும்பமேளாவில் எத்தனையோ நூறாண்டுகளாக நிர்வாண சாமியார்கள் பலலட்சம் மக்களுக்கு முன் பல்லாயிரம் போலிசாருக்கு முன்,குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முன் போகிறார்கள்.யாராவது தவறாக நினைக்கிறார்களா?புகார் தந்திருக்கிறார்களா? எந்த மதத்தையும் எதிருங்கள்.ஆனால் மதத்தை பின்பற்ற மக்களுக்கு இருக்கும் உரிமையை எதிர்க்காதீர்கள்.முன்னது எப்படி உங்கள் உரிமையோ,பின்னது அப்படி அவர்களது உரிமை. கொல்லாமையை,சூத்திரனுக்கு மறுவாழ்வை,அனைத்து உயிர்களுக்கும் அன்பை வலியுறுத்திய சமணத்தை மதிக்காவிட்டாலும் மிதிக்காதீர்கள். இதுபற்றிய ரோசா வசந்தின் பதிவை நிச்சயம் படியுங்கள்.
Post a Comment