Saturday, September 02, 2006

147.முதல்வராகிறார் திண்டிவனத்தார்

2011ல் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரம்.அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் திண்டிவனம் ராமமூர்த்தி.பதறி அடித்துக்கொண்டு அவர் மகன் ஓடி வந்து அவரை எழுப்புகிறான். "அப்பா..அப்பா..என்ன இது?இன்னும் தூக்கம்?யாருக்கும் தெரியாம இப்படி ஒரு சாதனை பண்ணிட்டு படுத்துகிட்டே ஜெயிச்சிருக்கீங்க." "என்னடா சொல்றெ..நம்ம கட்சிக்காரன் எவனாவது டெபாசிட் வாங்கிட்டானா?" என கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்கிறார் தின்டிவனத்தார் "கிழிஞ்சது போங்க..நீங்க முத்லவராவே ஆயிட்டிங்கன்னு சொல்றேன்.டெபாசிட்டை பத்தி பேசிகிட்டிருக்கீங்களே" என்கிறான் மகன். துள்ளி விழுகிறார் திண்டிவனம் ராமமூர்த்தி.செல்பேசி அடிக்கிறது.எடுக்கிறார்.அவர் கட்சி பொதுசெயலாளர் ராஜசேகரன் பேசுகிறார். "வாழ்த்துக்கள்,அண்ணே,..அண்ணே..என்ன அண்ணே..வாழ்த்துக்கள் முதல்வரே.." என சொல்லிவிட்டு ஆனந்தத்தில் பேச்சுமூச்சின்றி நெஞ்சடைத்து விம்முகிறார். "என்னடா..இதெல்லாம்...கனவா,நனவா.."என கிள்ளிக்கொள்கிறார் திண்டிவனத்தார்.மீண்டும் போன் வருகிறது.ஜி.கே.எஸ்.வாசன். "திண்டிவனத்தாரே.....காங்கிரஸ் பூரா தொகுதியிலும் தோத்துடுச்சு....அந்த வருத்தம் ஒரு புறமிருந்தாலும் நீங்கள் முதல்வரானதில் சந்தோஷம்.வாழ்த்துக்கள்.அப்புறம் ஒரு சின்ன ரெகமெண்டேஷன்.." "ரெகமெண்டேஷன் எல்லாம் நம்ம செக்ரட்டரி கிட்ட பேசிக்குங்க.இப்ப பதவியேற்புக்கு நாள் பார்க்கணும்.வரட்டா.."என நமட்டுச்சிரிப்புடன் போனை கட் செய்தார் திண்டிவனத்தார்."எத்தனை நாள் உன் கிட்ட ரெகமென்டேஷன் கேட்டிருப்பேன்.கண்டுட்டியா நீ என்னை?பண்னையார் திமிருன்னா சும்மாவா.பதவிஏற்றவுடன் முதல் ஆப்பு உனக்குத்தான்.." என முணுமுணுத்துக்கொண்டே வெளியே எட்டிப்பார்த்தார் திண்டிவனத்தார். அலைகடலென இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது."முதல்வர் திண்டிவனத்தார் வாழ்க,வாழ்க" என ஒரே கோஷம்.அவர் தலை வெளியே தெரிந்ததும் விசில் சத்தமும்,கரகோஷமும் விண்ணைப் பிளந்தது. "அமைதி..அமைதி...குளித்து விட்டு வந்து உரையாற்றுகிறேன்" என்றார் திண்டிவனத்தார்."தலைவா....உன் பூமுகத்தை ஒருதரம் காட்டிவிட்டு போ.."என ஒருவர் குரல்கொடுத்தார்."பொறுமை,பொறுமை..."என சொல்லிவிட்டு குளிக்க போனார் தலைவர். குளிக்க,குளிக்க கதவு தட்டப்பட்டது.கவர்னர் போனில் என மகன் சொன்னான்."அட வெவரம் கெட்டவனே....பாத்ரூமில் கதவை தட்டிகிட்டு...ஜார்ஜ்புஷ் கூப்பிட்டாலும் வெளியே வந்துதான் பேச முடியும்"என சத்தம் போட்டார் திண்டிவனத்தார். வெளியே வந்தவுடன் பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்."உங்கள் முதல் திட்டம் என்ன?" என கேட்டார் தினத்தந்தி நிருபர். "அட இரய்யா..."என சொல்லிவிட்டு "கவர்னர் என்னடா சொன்னாரு?" என மகனிடம் கேட்டார் திண்டிவனத்தார் "பதவி ஏற்பு எப்ப வெச்சுக்கலாம்னு கேட்டாரு"என சொல்ல"அதெல்லாம் ஜோசியரை கேட்டுத்தான் சொல்லமுடியும்" என சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார் திண்டிவனத்தார்.பிறகு "பொதுக்குழுவை கேட்டுட்டுதான் முடிவெடுக்க முடியும்னு சொல்லிடு.அப்படியே நம்ம நாராயண பணிக்கருக்கு போன்போட்டு நல்ல நாள் ஒண்ணு பாரு" என சொல்லிவிட்டு நிருபர்களை எதிர்கொண்டார். "என் முதல் திட்டம் என்னவென்றால்.." என ஆரம்பிக்க மீண்டும் போன்."ஏ.சி.சண்முகம் வாழ்த்து சொல்ல கூப்பிடறார்" என்றான் மகன். "கொண்டா போனை.." என வாங்கினார் திண்டிவனத்தார்."அடேய் சண்முகம்.நான் பதவி ஏற்றவுடன் முதல் ஆப்பு உனக்குத்தாண்டா.உன்கூட கூட்டணி வெக்க எத்தனை கெஞ்சு கெஞ்சியிருப்பேன்.ஒரு சீட்டாவது தந்தாயா?அதனாலதான் தனித்து போட்டியிட்டு முதல்வராகியிருக்கேன்.இத்தனை நாள் சிரிச்சு,சிரிச்சு உங்கிட்ட குழைஞ்சுட்டிருந்ததால உன் மேல எனக்கு கோபம் இல்லைன்னு நினைச்சுக்காதெ.உனக்கு ஆப்பு அடிக்காம விடமாட்டேன்" என கர்ஜித்தார் திண்டிவனத்தார். "அட பாவி..உன் மனசுல இப்படி ஒரு நயவஞ்சகம் இருக்கறது தெரிஞ்சிருந்தா உன்னை முதல்வராக்கியிருக்கமாட்டேன்.சரி..இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.உன்னை இந்த நிமிஷமே டிஸ்மிஸ் பண்ணிட்டு வேற முதல்வரை நியமிச்சுடறேன்" என கர்ஜித்தார் சண்முகம். "நீ யாருடா டிஸ்மிஸ் பண்றதுக்கு..இது மக்கள் குடுத்த பதவி"என கர்ஜித்தார் திண்டிவனத்தார்."உன் எஞினியரிங் காலேஜில் ஊழல் செய்தாய் என்று சொல்லி உன்னை கம்பி எண்ண வைக்கலை என் பேர் திண்டிவனம் ராமமூர்த்தியுமில்லை.நான் காமராஜரின் வாரிசுமில்லை" என கர்ஜித்தார் திண்டிவனத்தார். "அட பாவி.அந்த எஞ்சினியரிங் காலேஜுக்குதாண்டா உன்னை முதல்வராக்கி தந்தி அனுப்பினேன்.இப்ப அதையே மூடுகிறேன் என்கிறாயா?நீ டிஸ்மிஸ்.." என சொல்லி போனை வைத்தார் சண்முகம். "என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க.காலேஜ் முதல்வராகி எனக்கு சீட்டு வாங்கிக்கொடுப்பிங்கன்னு பாத்தா பொசுக்குன்னு டிஸ்மிஸ் பண்ணிட்டாரே" என்றான் மகன். "ஏண்டா..அப்ப நீ சொன்ன முதல்வர் பதவி எஞ்சினியரிங் காலேஜ் முதல்வர் பதவியா,தமிழக முதல்வர் பதவி இல்லையா..?"என குழப்பத்துடன் கேட்டார் திண்டிவனத்தார். "தமிழக முதல்வரா..நீங்களா.." என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தான் மகன்.நிருபர்களும் சிரித்தனர்.கடும்கோபத்துடன் நின்றுகொண்டிருந்தார் திண்டிவனத்தார். சீட்டு கேட்டு வெளியே நின்றிருந்த மாணவ்ர்களும் மெதுவாக கலைந்து செல்ல துவங்கினர்.மகனை பிடித்து அடிக்க துரத்தினார் திண்டிவனத்தார்.அவன் தப்பி ஓடி பைக்கை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.
Post a Comment