
நம்ம ஊரு நல்ல ஊரு எழுதலாம் என ஆரம்பித்து பேரை மாற்றி வைத்துவிட்டேன்:)
அதாவது இன்று சூரியா- ஜோதிகா திருமணம்.அது பற்றிய பதிவுகள் தேன்கூடு வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்டுள்ளன.தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்டவை இடுகைகளில் மொத்தம் 10ல் ஏழு சூரியா- ஜோதிகா திருமணம் பற்றியது.
வாழ்க கோயமுத்தூர் மருமகள்.
இது பற்றிய
சிவபாலனின் பதிவை படியுங்கள்.
******************************
இடஒதுக்கீடு விவகாரத்தில் புதிய திருப்பமாக தமிழகத்தில் கிரீமி லேயருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தமிழக் அரசியல் கட்சிகள் இதை ஒத்துக்கொள்ளாது என்பதால் வரும் நாட்களில் சூப்பரான சண்டை காட்சிகளை எதிர்பார்க்கலாம்.
*************************************
ஜெயலலிதா தலைமை செயலகம் கட்ட திட்டமிட்டபோது அதை தடுக்க 50 கோடிக்கு மேல் பணம் தேவைப்படும் கட்டடங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை வாங்கவேண்டும் என்ற உத்தரவை திமுக அமைச்சர்கள் பிறப்பித்தனர்.இப்போது அரசு மாறியதால் அந்த உத்தரவு திருப்பி வாங்கப்பட்டுவிட்டது.பில்டர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.கழகங்கள் அரசியல் பழியெடுக்கவே சட்டங்களை பயன்படுத்துகின்றன என்பது உறுதியாகிறது.
*******************************
மின்னெசோட்டாவில் ஓரினச்சேர்க்கையாளரான பால் கோயரிங் என்பவர் செனட்டர் தேர்தலில் நிற்கிறார்.விடுவாரா எதிர்கட்சி உறுப்பினர்?"ஒழுக்கமும்,நாகரீகமும் அரசியலில் வேண்டும் என்போர் அவருக்கு ஓட்டு போடாதீர்கள்" என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.இந்த பிரச்சாரம் எடுபடும் வாய்ப்பு உண்டு.
அது சரி..நம்ம மின்னசோட்டா மின்னல் அண்ணன் குமரன் யாருக்கு ஓட்டு போடுவார்?
************
எதிர்பார்த்தது போல் நாவிதர் சங்க கட்டிட பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது.கருணாநிதி இன்று இதை ஜெயலலிதா தலித்களை அவமானப்படுத்தியதாக கூறியிருக்கிறார்.ஜெயலலிதா இதை கண்டுகொள்ளவில்லை என்றாலும் இது நிச்சயம் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது.ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதிதருபவர் கலிவரதன் என்பதால் விஷயம் பெரிதானால் அவருக்கு வேலை போகும் அபாயம் உள்ளது.
******************************
இன்றைய தினமலர் அதிமுக சார்பா?திமுக சார்பா?இன்றைய அரசியல் பகுதியை பார்த்தேன்.இந்த செய்திகள் இருந்தன.இதை வைத்து நீங்களே ஒரு தீர்ப்பு சொல்லுங்களேன்:)))))
தமிழ்நாடு
01.அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய சட்டம் * மத்திய அமைச்சர் வாசன் தகவல்
02.முதல்வர் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா
03.செப். 20ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு * மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சூசகம்
04.மலரவனுக்கு நோட்டீஸ்
05.பேச்சு...பேட்டி...அறிக்கை...
06.பதிலுக்கு பதில் கொடுத்து தரம் இறங்கிட கூடாது * முதல்வர் பதில்
07.சிக்குன்குனியா ஆர்ப்பாட்டம் 16ம் தேதி அ.தி.மு.க., நடத்துகிறது
08.அ.தி.மு.க., செயற்குழு இன்று கூடுகிறது
09.அ.தி.மு.க., ஆட்சியில் தான் குண்டுகள் வெடித்தன: சொல்கிறார் கிருஷ்ணசாமி
10.முனீர்ஹோடாவுக்கும், அழகிரிக்கும் ஒரு நீதி பிரேம்குமாருக்கும், மாரிமுத்துவுக்கும் ஒரு நீதியா? கேட்கிறார் ஜெ.,
11.உள்ளாட்சி தேர்தல் குறித்து மகளிர் காங்., ஆலோசனை
12.ஜெ., உள்நோக்கம் கற்பிப்பது துரதிர்ஷ்டவசமானது தமிழக உள்துறை செயலர் பவன் ரெய்னா அறிக்கை
*************************
8 comments:
தலைப்பை பார்த்துதான் நானும் புகுந்தேன்.
அதானே!
ஆனால் நானும் பார்த்தேன்
சும்மா சொல்லக்கூடாது போட்டி போட்டிகொண்டு எல்லோரும் நன்றாகத்தான்
பதிவு செய்திருந்தார்கள்
[:}}}}}}}}}}}}}}}}}}
செல்வன் சார்
என் பதிவின் சுட்டியை இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி..
//அறிக்கை எழுதிதருபவர் கலிவரதன் என்பதால் விஷயம் பெரிதானால் அவருக்கு வேலை போகும் அபாயம் உள்ளது. //
அட பாவமே.. சரி விடுங்க.. இன்னும் நிறைய பேரு இருபாங்க..
என்ன அதிசயமான ஒற்றுமை?
இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்ட முதல் மூவரும் கோயமுத்தூர்காரர்கள்.
எங்க ஊரு மருமகளுக்கு ஆரத்தி எடுக்க கோயமுத்தூர்காரங்க போட்டி போட்டுட்டு ஓடி வர்ராங்க:)))
கோயமுத்தூரா,கொக்கான்னானாம்:)))
ஏன் அவர்களை சரவணன் (சூர்யா) ரசிகர்களாக எடுத்து கொள்ளக்கூடாது?
என்ன கேட்ட பழனிச்சாமி (சிவக்குமார்) ரசிகர்களாகவும் எடுத்து கொள்ளலாம் ;)
சொல்ல மறந்துட்டேன்...
நானும் சூர்யா ரசிகன் தான் ;)
(அண்ணியையும் பிடிக்கும் ;))
enna panradhu oorodu othu vala vendiyirukkiradhu..nanum surya jothika parri padhivu pootavan thaan
நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள கருத்துக்களையும் சொல்லுங்க
//அறிக்கை எழுதிதருபவர் கலிவரதன் என்பதால் விஷயம் பெரிதானால் அவருக்கு வேலை போகும் அபாயம் உள்ளது//
கலிவரதன் தேவாவை கொன்றவுடனேயே எங்கள் தளபதி சூர்யா அவரை கொன்று விட்டாரே!
அதன் பிறகு அவர் தன் தாயுடன் சேர்ந்து விட்டார்...பாவம் அவருடைய கலெக்டர் தம்பி...அவருக்குத்தான் ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது.
தளபதி சூர்யா ரசிகர் மன்றம் (தர்போது லக்கியார் பாசரை)
அடிலைட்
ஆஸ்ட்ரேலியா
Post a Comment