Saturday, September 02, 2006

147.முதல்வராகிறார் திண்டிவனத்தார்

2011ல் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரம்.அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் திண்டிவனம் ராமமூர்த்தி.பதறி அடித்துக்கொண்டு அவர் மகன் ஓடி வந்து அவரை எழுப்புகிறான். "அப்பா..அப்பா..என்ன இது?இன்னும் தூக்கம்?யாருக்கும் தெரியாம இப்படி ஒரு சாதனை பண்ணிட்டு படுத்துகிட்டே ஜெயிச்சிருக்கீங்க." "என்னடா சொல்றெ..நம்ம கட்சிக்காரன் எவனாவது டெபாசிட் வாங்கிட்டானா?" என கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்கிறார் தின்டிவனத்தார் "கிழிஞ்சது போங்க..நீங்க முத்லவராவே ஆயிட்டிங்கன்னு சொல்றேன்.டெபாசிட்டை பத்தி பேசிகிட்டிருக்கீங்களே" என்கிறான் மகன். துள்ளி விழுகிறார் திண்டிவனம் ராமமூர்த்தி.செல்பேசி அடிக்கிறது.எடுக்கிறார்.அவர் கட்சி பொதுசெயலாளர் ராஜசேகரன் பேசுகிறார். "வாழ்த்துக்கள்,அண்ணே,..அண்ணே..என்ன அண்ணே..வாழ்த்துக்கள் முதல்வரே.." என சொல்லிவிட்டு ஆனந்தத்தில் பேச்சுமூச்சின்றி நெஞ்சடைத்து விம்முகிறார். "என்னடா..இதெல்லாம்...கனவா,நனவா.."என கிள்ளிக்கொள்கிறார் திண்டிவனத்தார்.மீண்டும் போன் வருகிறது.ஜி.கே.எஸ்.வாசன். "திண்டிவனத்தாரே.....காங்கிரஸ் பூரா தொகுதியிலும் தோத்துடுச்சு....அந்த வருத்தம் ஒரு புறமிருந்தாலும் நீங்கள் முதல்வரானதில் சந்தோஷம்.வாழ்த்துக்கள்.அப்புறம் ஒரு சின்ன ரெகமெண்டேஷன்.." "ரெகமெண்டேஷன் எல்லாம் நம்ம செக்ரட்டரி கிட்ட பேசிக்குங்க.இப்ப பதவியேற்புக்கு நாள் பார்க்கணும்.வரட்டா.."என நமட்டுச்சிரிப்புடன் போனை கட் செய்தார் திண்டிவனத்தார்."எத்தனை நாள் உன் கிட்ட ரெகமென்டேஷன் கேட்டிருப்பேன்.கண்டுட்டியா நீ என்னை?பண்னையார் திமிருன்னா சும்மாவா.பதவிஏற்றவுடன் முதல் ஆப்பு உனக்குத்தான்.." என முணுமுணுத்துக்கொண்டே வெளியே எட்டிப்பார்த்தார் திண்டிவனத்தார். அலைகடலென இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது."முதல்வர் திண்டிவனத்தார் வாழ்க,வாழ்க" என ஒரே கோஷம்.அவர் தலை வெளியே தெரிந்ததும் விசில் சத்தமும்,கரகோஷமும் விண்ணைப் பிளந்தது. "அமைதி..அமைதி...குளித்து விட்டு வந்து உரையாற்றுகிறேன்" என்றார் திண்டிவனத்தார்."தலைவா....உன் பூமுகத்தை ஒருதரம் காட்டிவிட்டு போ.."என ஒருவர் குரல்கொடுத்தார்."பொறுமை,பொறுமை..."என சொல்லிவிட்டு குளிக்க போனார் தலைவர். குளிக்க,குளிக்க கதவு தட்டப்பட்டது.கவர்னர் போனில் என மகன் சொன்னான்."அட வெவரம் கெட்டவனே....பாத்ரூமில் கதவை தட்டிகிட்டு...ஜார்ஜ்புஷ் கூப்பிட்டாலும் வெளியே வந்துதான் பேச முடியும்"என சத்தம் போட்டார் திண்டிவனத்தார். வெளியே வந்தவுடன் பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்."உங்கள் முதல் திட்டம் என்ன?" என கேட்டார் தினத்தந்தி நிருபர். "அட இரய்யா..."என சொல்லிவிட்டு "கவர்னர் என்னடா சொன்னாரு?" என மகனிடம் கேட்டார் திண்டிவனத்தார் "பதவி ஏற்பு எப்ப வெச்சுக்கலாம்னு கேட்டாரு"என சொல்ல"அதெல்லாம் ஜோசியரை கேட்டுத்தான் சொல்லமுடியும்" என சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார் திண்டிவனத்தார்.பிறகு "பொதுக்குழுவை கேட்டுட்டுதான் முடிவெடுக்க முடியும்னு சொல்லிடு.அப்படியே நம்ம நாராயண பணிக்கருக்கு போன்போட்டு நல்ல நாள் ஒண்ணு பாரு" என சொல்லிவிட்டு நிருபர்களை எதிர்கொண்டார். "என் முதல் திட்டம் என்னவென்றால்.." என ஆரம்பிக்க மீண்டும் போன்."ஏ.சி.சண்முகம் வாழ்த்து சொல்ல கூப்பிடறார்" என்றான் மகன். "கொண்டா போனை.." என வாங்கினார் திண்டிவனத்தார்."அடேய் சண்முகம்.நான் பதவி ஏற்றவுடன் முதல் ஆப்பு உனக்குத்தாண்டா.உன்கூட கூட்டணி வெக்க எத்தனை கெஞ்சு கெஞ்சியிருப்பேன்.ஒரு சீட்டாவது தந்தாயா?அதனாலதான் தனித்து போட்டியிட்டு முதல்வராகியிருக்கேன்.இத்தனை நாள் சிரிச்சு,சிரிச்சு உங்கிட்ட குழைஞ்சுட்டிருந்ததால உன் மேல எனக்கு கோபம் இல்லைன்னு நினைச்சுக்காதெ.உனக்கு ஆப்பு அடிக்காம விடமாட்டேன்" என கர்ஜித்தார் திண்டிவனத்தார். "அட பாவி..உன் மனசுல இப்படி ஒரு நயவஞ்சகம் இருக்கறது தெரிஞ்சிருந்தா உன்னை முதல்வராக்கியிருக்கமாட்டேன்.சரி..இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.உன்னை இந்த நிமிஷமே டிஸ்மிஸ் பண்ணிட்டு வேற முதல்வரை நியமிச்சுடறேன்" என கர்ஜித்தார் சண்முகம். "நீ யாருடா டிஸ்மிஸ் பண்றதுக்கு..இது மக்கள் குடுத்த பதவி"என கர்ஜித்தார் திண்டிவனத்தார்."உன் எஞினியரிங் காலேஜில் ஊழல் செய்தாய் என்று சொல்லி உன்னை கம்பி எண்ண வைக்கலை என் பேர் திண்டிவனம் ராமமூர்த்தியுமில்லை.நான் காமராஜரின் வாரிசுமில்லை" என கர்ஜித்தார் திண்டிவனத்தார். "அட பாவி.அந்த எஞ்சினியரிங் காலேஜுக்குதாண்டா உன்னை முதல்வராக்கி தந்தி அனுப்பினேன்.இப்ப அதையே மூடுகிறேன் என்கிறாயா?நீ டிஸ்மிஸ்.." என சொல்லி போனை வைத்தார் சண்முகம். "என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க.காலேஜ் முதல்வராகி எனக்கு சீட்டு வாங்கிக்கொடுப்பிங்கன்னு பாத்தா பொசுக்குன்னு டிஸ்மிஸ் பண்ணிட்டாரே" என்றான் மகன். "ஏண்டா..அப்ப நீ சொன்ன முதல்வர் பதவி எஞ்சினியரிங் காலேஜ் முதல்வர் பதவியா,தமிழக முதல்வர் பதவி இல்லையா..?"என குழப்பத்துடன் கேட்டார் திண்டிவனத்தார். "தமிழக முதல்வரா..நீங்களா.." என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தான் மகன்.நிருபர்களும் சிரித்தனர்.கடும்கோபத்துடன் நின்றுகொண்டிருந்தார் திண்டிவனத்தார். சீட்டு கேட்டு வெளியே நின்றிருந்த மாணவ்ர்களும் மெதுவாக கலைந்து செல்ல துவங்கினர்.மகனை பிடித்து அடிக்க துரத்தினார் திண்டிவனத்தார்.அவன் தப்பி ஓடி பைக்கை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

30 comments:

ALIF AHAMED said...

கவர்னர் போனில் என மகன் சொன்னான்."

"ஏண்டா..அப்ப நீ சொன்ன முதல்வர் பதவி எஞ்சினியரிங் காலேஜ் முதல்வர் பதவியா,தமிழக முதல்வர் பதவி இல்லையா..?"என குழப்பத்துடன் கேட்டார் திண்டிவனத்தார்.
/./

குழப்பத்துடன்
::)))

Unknown said...

Governor is the chancellor for all universities.So he might participate in some functions conducted by colleges,particularly if it involves politicians.

siva gnanamji(#18100882083107547329) said...

எஞ்சீனியரிங் காலேஜ் முதல்வர் பத்வி என்னா
எம்மெல்லே எம்பி பதவியா?

அதுக்கு எம்.இ., பிஹெச்.டி பட்டமும் 16 வருஷம் விரிவுரையாளர்
அனுபவமும் வேணும்...அதுவும்
சுயநிதிக்கல்லூரியா இருந்தா,நீட்ற இடத்திலே கண்ணெ மூடிட்டு கையெழுத்து போடவும் தெரிஞ்சிருக்கணும்

Unknown said...

சிவஞானம்ஜி,

ஜோக் கதையில் லாஜிக் பாக்க கூடாது.மூளையை கழட்டி வெச்சுட்டு சிரிக்கணும்:)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பதவி ஏற்பு எப்ப வெச்சுக்கலாம்னு கேட்டாரு"என சொல்ல"அதெல்லாம் ஜோசியரை கேட்டுத்தான் சொல்லமுடியும்" என சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார் திண்டிவனத்தார்.பிறகு "பொதுக்குழுவை கேட்டுட்டுதான் முடிவெடுக்க முடியும்னு சொல்லிடு//

நச்!
கவர்னர் தான் கொஞ்சம் குழப்பினார்.
உங்கள் பின்னூட்டம் பார்த்த பின் ஓகே!

சீக்கரம் அவர பதவியேத்துக்க சொல்லுங்க அப்பு. அப்புறம் ஸ்கூல் முதல்வர் ன்னு சொல்லிடப்போறங்க!

ஹா ஹா ஹா.

Unknown said...

கண்ணபிரான்,

எங்கே போயி இனி அவர் பதவி ஏற்க?அதான் சண்முகம் வேற பிரின்சிபால் நியமிச்சுட்டாரே...வேணும்னா நீங்க சொன்ன மாதிரி இனிமே ஸ்கூல் பிரின்சிபலாவோ,டுடோரியல் கல்லூரி முதல்வராகவோ ஆகலாம்:))))

Santhosh said...

ஆகா செல்வன் கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு.

லதா said...

"சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா" என்ற தலைப்பில் இந்த நகைச்சுவை பதிவிற்கும் எழுதப்பட்டுள்ளதா ?
:-)

ALIF AHAMED said...

/./
செல்வன் said...
சிவஞானம்ஜி,

ஜோக் கதையில் லாஜிக் பாக்க கூடாது.மூளையை கழட்டி வெச்சுட்டு சிரிக்கணும்:)))))

/./


::::))))))))))
::::::))))))))))))))
::::::::::::)))))))))))))

இருந்தா தானே கழட்டி வைக்க.!!!

Unknown said...

என்னங்க மின்னல்,மூளை இருக்கா,இல்லையான்னு யோசிக்க மூளை வேண்டும் இல்லையா?

இது எப்படி இருக்கு?ஹா..ஹா..:)))

ALIF AHAMED said...

செல்வன் said...
என்னங்க மின்னல்,மூளை இருக்கா,இல்லையான்னு யோசிக்க மூளை வேண்டும் இல்லையா?
/.,/

jelly fish க்கு மூளை இருக்கா...????

Unknown said...

//jelly fish க்கு மூளை இருக்கா...????//


ஓ..நீங்க பாயின்டை அப்படி புடிக்கறீங்களா?:))

ஜெல்லி ஃபிஷுக்கு மூளை இல்லை.அதானால் தான் தனக்கு மூளை இருக்கா,இல்லையான்னு அது யோசிக்கறதில்லை:))

நாமக்கல் சிபி said...

ஜோக் சொன்னா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

Unknown said...

13

Unknown said...

தலை சந்தோஷ்,

ஏதோ ஞாபகத்துல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போடாம வுட்டுட்டேன்.நன்றி தலை.

பரிட்சை முடிஞ்சுதான் ஃபுல் ஸ்விங்க்ல கிளம்பணும்.அதுவரைக்கும் அடக்கித்தான் வாசிக்கணும்:))))

ALIF AHAMED said...

/./
ஜெல்லி ஃபிஷுக்கு மூளை இல்லை.அதானால் தான் தனக்கு மூளை இருக்கா,இல்லையான்னு அது யோசிக்கறதில்லை:))
/./

நீங்க பாயின்டை திரும்பவும் புடிக்கறீங்களா?
சிரிப்பான் போட்டா சரியா வராது அதனால

ஹி ஹி ஹி

Unknown said...

//ஜோக் சொன்னா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;) ///

அதானே?ஆராய்ச்சி பண்றதுக்கு இதென்ன புளூட்டோ கிரகமா?ஜோக் படிச்சோமா,சிரிச்சோமான்னு ஒரு +குத்தினோமான்னு இருக்கணும்.பாருங்க..இம்பூட்டு நல்ல பதிவு இன்னும் ரெண்டே ஓட்டுல ரெண்டுநாளா தொங்கிட்டிருக்கு.(அதுல ஒண்ணு என்னுது)அலைகடலென வந்து ஓட்டு போட்டிருக்க வேண்டாமா உடன்பிறப்புக்கள்?இதெல்லாம் நானே சொல்லியா ஓட்டு கேக்கணும்?:)))))

Unknown said...

பாயின்டை புடிச்சதால எனக்கு மூளை இருக்குன்னு ஊர்ஜிதமாகிறது.ஆனா முன்னமே புடிக்காததால டியூப்லைட்ன்னும் ஊர்ஜிதமாகுது.:))))

இந்த பாயின்ட் எப்படி?ஹி..ஹி:)))))

ALIF AHAMED said...

/./
இதெல்லாம் நானே சொல்லியா ஓட்டு கேக்கணும்?:)))))
/./

ஓட்டு வேணும்னா கேட்டு தான் ஆவனும் இ கொ வை வேற காணும்
:)

திண்டிவனத்தார் கேட்கலையா..ஓட்டு ???

ALIF AHAMED said...

/./
செல்வன் said...
பாயின்டை புடிச்சதால எனக்கு மூளை இருக்குன்னு ஊர்ஜிதமாகிறது.ஆனா முன்னமே புடிக்காததால டியூப்லைட்ன்னும் ஊர்ஜிதமாகுது
//

இத மொத பின்னுட்டத்துக்கு பதில் போடும் போது சொல்லியிருந்திங்கள்னா ஓகே...

இப்ப சொன்னதால நீங்களும் ஒத்துக்கங்க..

இந்த பாயின்ட் எப்படி?ஹி..ஹி:)))))

Unknown said...

//திண்டிவனத்தார் கேட்கலையா..ஓட்டு ???//

அவரு ஓட்டு கேட்டுத்தான் எஞ்சினீயரிங் கல்லூரிக்கு முதல்வராயிட்டாரே?இனி எங்கே போயி அவரு ஓட்டு கேக்க?:))))

Unknown said...

சூப்பர் பாயின்ட்.

நீங்க மின்னும் மின்னல்.நான் பளிச்சிடும் டியூப்லைட்.மின்னலும்,டியூப்லைட்டும் கூட்டணி சேர்ந்து உலகுக்கே ஒளிதருவோம்:)))))

நாமக்கல் சிபி said...

"+" குத்தியாச்சு...

ALIF AHAMED said...

/./
கூட்டணி சேர்ந்து உலகுக்கே ஒளிதருவோம்:)))))
/./

உலகின் புதிய கூட்டனி கடவுள் ::)))

ALIF AHAMED said...

உலகின் புதிய கூட்டனி கடவுள்
பிதற்றலில் பின்னுட்டமிட சென்று இருப்பதால்..

நாளை செயற்குழு கூடி முடிவெடுக்கும்...::))

Unknown said...

பாலாஜி

ஓட்டுக்கு நன்றி,நன்றி.....இலவச டிவி அடுத்து வர இருக்கிறதான்னு கேக்க கூடாது:)))

மின்னல்.....கொங்குமண்ணின் நட்சத்திரத்துக்கு வாழ்த்து தெரிவிக்க அங்கெ போனேன்.தெரிவித்தேன்.வந்துவிட்டேன்.

உடல் மண்ணுக்கு,உயிர் கோவைக்கு:)))))

கதிர் said...

நல்ல காமெடி பதிவு!!

சென்ற தேர்தலில் நவரச நாயகனுக்கு அப்புறம் அதிகமா கிச்சு கிச்சு மூட்டினவரு நம்ம திண்டிவனத்தாருதான்.

Unknown said...

தம்பி,
அடுத்த தேர்தலில் நம்ம திண்டிவனத்தாரும்,கார்த்திக்காரும் கூட்டணி போட்டு இதை விட அதிகமாக கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்:)

ENNAR said...

பெருந்தலைவருடனே இருப்பார் அன்று நல்ல உண்மையான நேர்மையான அரசியல் வாதி அவரைப் போய் இப்படி நய்யாண்டி செய்கிறீர்களே. சரி சரி அடுத்த முறை அவர் ஜெயித்து முதல்வராக வந்ததும் ஆளுக்கொரு இலவச கணினி வழங்கச் சொல்கிறேன்.

Unknown said...

என்னார் ஐயா,
அது சும்மா தமாஷுக்கு எழுதியது.எல்லா அரசியல்வாதிகளையும் லேசாக கிண்டல் செய்வது என் வழக்கம்:))