Tuesday, June 27, 2006

116.அஞ்சேல் எனாத ஆண்மை - 2

இளங்கோவும் சந்துருவும் அந்த மீட்டிங்குக்கு போனபோது இரவாயிருந்தது."மீட்டிங்க்ல உங்க நிஜ பேரையும் ஊரையும் சொல்ல வேண்டாம்" என இளங்கோ எச்சரித்தார்.ஏன் என்று கேட்டதற்கு அப்புறம் சொல்றேன் என சொன்னார்.அது என்ன காரணமாக இருக்கும் என யோசித்துக்கொண்டே சந்துரு போனான். மீட்டிங் என்று சொன்னாரே தவிர 10 பேர் மட்டும் தான் இருந்தனர்.சந்துருவும் இளங்கோவும் மட்டுமே தமிழர்கள்.மற்ற அனைவரும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள்.அனைவரும் தங்கள் சோக கதைகளை சொன்னார்கள்.இனி என்ன செய்வது என ஆலோசித்தனர்.சந்துரு கவனித்தவரை சங்கத்து உறுப்பினர்கள் யாரும் பணக்காரர்களோ,செல்வாக்கு படைத்தவர்களாகவோ இருக்கவில்லை.சராசரியான மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருந்தனர்.பாதி பேர் நடுத்தர வயதை தாண்டியவர்கள். என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.உருப்படியான எந்த ஐடியாவும் வரவில்லை.சந்துரு எழுந்து ஒரு ஐடியா சொன்னான்.அதாவது அந்த மடத்தின் முக்கிய புள்ளி ஒருவர் வீட்டில் புகுந்து அதிரடியாய் மிரட்டி அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை அறியவேண்டும்.முடிந்தால் தம் குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். மும்பையில் அந்த மடத்தின் பெரும்புள்ளி சந்துருவை அடித்த பிட்சுதான்.அவரை கடத்துவது என முடிவு செய்தார்கள்.கடத்த தன் மாருதி வேனை தருவதாக சேட்டு சொன்னார்.தன் மகனையும் உதவிக்கு அனுப்புவதாக சொன்னார். அந்த கூட்டத்தில் யாருக்கும் முன்பின் அப்படி ஒரு காரியம் செய்து பழக்கமில்லை.ஆனால் உற்சாகமாக களத்தில் இறங்கினர்.வேனுக்கு பெயின்ட் மாற்றி,போலி எண்களை எழுதினார் சேட்டு.கள்ள கைதுப்பாக்கிகள் சிலவற்ரை தந்தார் இன்னொருவர்.பிட்சுவின் நடவடிக்கைகளை கண்காணித்து உளவு சொல்லும் பொறுப்பை ஒருவர் ஏற்ருக்கொண்டார். பிட்சு அப்படி ஒன்றும் பாதுகாப்பாக உலா வரவில்லை.பெரும்பாலான இடங்களுக்கு மொப்பெட்டில் தான் போனார்.அவர் வீட்டருகே தீயணைப்பு நிலையம் இருந்ததால் வீடு புகுந்து அடிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.வழியில் கடத்த முடிவு செய்தனர். மடத்து ஆபிஸ் வாசலில் வேன் நின்றது.பிட்சு வெளியே வந்தார்.மோப்பட்டில் ஏறினார்.சேட்டு மகன் மோத்தி வேனை எடுத்தான்.மொப்பட் பின்னால் வேனை மோத பிட்சு கீழே விழுந்தார்.மொப்பட்டுக்கு அடியில் மாட்டிக்கொண்டார்.சந்துருவும் இருவரும் கீழே குதித்து பிட்சுவை உருட்டு கட்டையால் அடித்தனர்.அவரை தூக்கி வேனில் போட்டனர்.வேன் சீறிக்கொண்டு கிளம்பியது. மடத்து வாட்ச்மேன் அதிர்ச்சி அடைந்து உள்ளே ஓடி போலிஸுக்கு போன் செய்தான்.சிக்னல் அருகே வேன் நிற்கும்போது வயர்லெஸ்சில் மும்பை முழுக்க தகவல் பறந்தது.போலிஸ் ஜீப் ஒன்று வேனை துரத்த துவங்கியது.உள்ளே இருந்த அனைவரும் பீதி அடைந்தனர்.மோதி மட்டும் பயப்படவில்லை.போலிஸ் ஜீப்புக்கு தண்ணி காட்டினான்.குடித்து விட்டு இரவில் வண்டியை வேகமாக ஓட்டி அவனுக்கு பழக்கம்.ஆனால் ரொம்ப நேரம் தண்ணி காட்ட முடியவில்லை.இரண்டு மூன்று ஜீப்கள் துரத்த ஆரம்பித்தன. ஐரோலி பாலத்தில் வேனை இரண்டு பக்கமும் சுற்றி வளைத்தனர். "என்ன செய்வது" என பீதியுடன் கேட்டார் இளங்கோ. மோத்தி அக்சிலரேட்டரில் காலை வைத்தான்.ஒரே அழுத்து.நேராக போலிஸ் ஜீப்பை நோக்கி கொலைவெறியுடன் பாய்ந்தது வேன்.போலிஸ் முதலில் டயர்களில் சுட்டார்கள்.அதன்பின் அடுத்த குண்டு மோதியின் தலையில் பாய்ந்தது.ஆனால் அதற்குள் வேன் ஜீப்பை அடித்து நொறுக்கி முன்சென்றது.பாலத்து சுவற்றில் மோதி நின்றது. (தொடரும்) அத்யாயம் 1

21 comments:

நாகை சிவா said...

அப்பு, பயங்கர விறுவிறுப்பாக இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் பெரிதா எழுதலாம். ஒரு பக்க கதை மாதிரி சின்னதா இருக்கு, ஆனால் Interesting இருக்கு........

Unknown said...

சிவா,
நன்றி.ரொம்ப நீளமா எழுதினா படிக்க போரடிக்குமோ என தோணுது.அடுத்த அத்யாயத்தை நீளமா எழுதுகிறேன்

Amar said...

கரெக்ட்டான இடத்துல பிரேக்விட்டுடீங்க.

விறுவிறுப்பா போய்கிட்டு இருக்கு...

Anonymous said...

$elvan ரொம்ப வேகமா போறீங்க...
கதைக்கு வர்ணனையும் ரொம்ப முக்கியம்...உங்களுடைய வர்ணனைதான் கதைய கண் முன்னாடி நடக்குற மாதிரி காட்டனும்...இன்னும் வர்ணனைய கூட்டுங்க...
நாவல்னு ஆரம்பிச்சிட்டு நீளமா எழுதினா படிக்க போரடிக்குமோனு கவலைப்பட்டா எப்படி? போரடிக்காம எழுதறதுலதான திறமையே இருக்கு...
ராஜேஷ் குமார் மாதிரி எழுத வேண்டாம்...ஆனால் இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதலாம்.
கடத்துற சீன் மட்டுமே ஒரு பதிப்பல வரலாம்... கண்டிப்பா விறுவிறுப்புக்கு குறை இருக்காது.

-பாலாஜி

இலவசக்கொத்தனார் said...

என்ன தந்தியில் கதை சொல்வது போல் கிடுகிடுவென எழுதுகிறீர்களே. கொஞ்சம் கதை நடக்கும் இடங்கள் பற்றி எல்லாம் சொல்லுங்கள்.

Unknown said...

பாலாஜி நன்றி.

நிச்சயம் அடுத்த அத்யாயத்தில் இருந்து நீளமா எழுதுகிறேன்.இதுக்கு முந்தி பதிவு என்ன நீளத்தில் போட்டேனோ அதே நீளத்தில் எழுதினேன்.அதை விட இனி அதிகம் எழுதுகிறேன்.

கொத்தனார்,

நல்ல யோசனை.நன்றி.அடுத்த அத்யாயத்திலிருந்து செய்கிறேன்.

writing is a learning process.Am learning a lot here.Thanks to all

VSK said...

ஒரு சில நிகழ்வுகள் "சொ. செ.சூ.வை."ன்னா, இது "அ.செ.நா.எ.க."வா??!!

ஒண்ணும் இல்லை, நீங்க தந்தித் தொடர்கதை எழுதறதுனல, நானும் சுருக்கமா சொல்லியிருக்கேன்.

கொஞ்சம் வலத்துங்க செல்வன்!
அப்பத்தான் விறுவிறுப்பு இருக்கும்.

படிக்கும்போது, ஒவ்வொருத்தரும், அவங்க அவங்க மனசுல ஒரு படம் ஓட்டிக்கிட்டே தான் படிப்பாங்க!

இந்த எபிசோடைப் படிக்கும்போது, படம் அங்கங்கே அறுவுது!
நாளையிலேர்ந்து சரி பண்ணிடுங்க!

VSK said...

ஒரு சில நிகழ்வுகள் "சொ. செ.சூ.வை."ன்னா, இது "அ.செ.நா.எ.க."வா??!!

ஒண்ணும் இல்லை, நீங்க தந்தித் தொடர்கதை எழுதறதுனல, நானும் சுருக்கமா சொல்லியிருக்கேன்.

கொஞ்சம் வலத்துங்க செல்வன்!
அப்பத்தான் விறுவிறுப்பு இருக்கும்.

படிக்கும்போது, ஒவ்வொருத்தரும், அவங்க அவங்க மனசுல ஒரு படம் ஓட்டிக்கிட்டே தான் படிப்பாங்க!

இந்த எபிசோடைப் படிக்கும்போது, படம் அங்கங்கே அறுவுது!
நாளையிலேர்ந்து சரி பண்ணிடுங்க!

Unknown said...

அ.செ.நா.எ.க//

என்ன தான் தந்தி பாசைன்னாலும் இது என்னன்னு சொல்லபடாதா?

சொ.செ.சூ அப்பப்ப செய்துகொண்டே இருப்பது தான் நம்ம பழக்கமாச்சே:-))

உண்மைதாங்க.நாளையிலிருந்து கதையை சரி செய்கிறேன்.முதல் நாலைந்து அத்யாயங்கள் இந்த மாதிரி தான் எழுதி வெச்சிருந்தேன்.அதை மாத்தி இடுகிறேன்.

VSK said...

//அ.செ.நா.எ.க//

சொ.செ.சூ.வை. ரேஞ்சுல யோசிச்சீங்கன்னா இதுவும் புரிஞ்சுரும்!!

"அடுத்தவர் செலவில் நாவல் எழுதக் கற்றுக்கொள்வது!!"

எவ்வளவு பேர் ஐடியா கொடுத்து உங்களைத் தேத்தறாங்க பாருங்க!

:))))

நரியா said...

// என்ன தந்தியில் கதை சொல்வது போல் கிடுகிடுவென எழுதுகிறீர்களே//
ஹா ஹா ஹா ஹா....

செல்வன்,
கதை நல்லா போகுது.
இப்பவே, அந்த பிட்சு நம்ம திரையுலக இளவரசராகவும், சந்ரு ஜெயராமனாகவும் (ஜூலி கணபதியில் அவர் கடத்தப்படுவார் :)) கற்பனைப் பன்னிட்டேன். தலைவர் கவுண்டமணி கதையிலே வருவாரா??

ஒரு கண்டுபிடிப்பு : அரசியல் தலைகள் சம்மந்தப்பட்டுருப்பாங்களே :)).

நன்றி!

Unknown said...

ஆரம்பத்திலேயே செகண்ட் கியர்ல தொடங்கி செமை விறுவிறுப்பா போயிட்டிருக்கு. மத்தவங்க சொல்வதைப்போல திரைக்கதை ஸ்டைலில் இருக்கு. வர்ணனையை கூட்டினீங்கன்னா கதையாகிடும்னு தோணுது. அத்தியாய நீளத்தையும் பாத்துக்கங்க.

Unknown said...

எஸ்.கே
நல்ல ஐடியா தான்.சொ.சே.சூ. வைத்து கொள்வதை அ.செ.க.எ.ப நல்லது என தோன்றுகிறது.

மயில் வந்து சேர்ந்த செய்தி வந்தது.:-)))

நாரியா,

தனியா கவுண்டமணின்னு வரமாட்டார்.ஆனா லேசா நகைச்சுவை ஒவ்வொரு பாத்திரத்து மூலமும் காட்ட முயன்றிரூக்கிறேன்.நம் அனைவருள்ளும் ஒரு கவுண்டமணி இருக்கிறார்.அவ்வப்போது வெளிவருவார்.

சஸ்பென்சை யூகிக்கெறேன்னு சொல்லிட்டு நீங்களே என்னை அரசியல் சம்பந்தம் இருக்கான்னு எல்லாம் கேக்க கூடாது.நீங்க தான் கண்டுபிடிக்கணும்:-))

அன்னியன் ஐயா

அடுத்த அத்யாயத்திலிருந்து சரி செய்து விடுகிறேன்.மெகா சீரியல் மாதிரி ஆகக்கூடாது என முதலில் நினைத்தேன்.ஆனா நண்பர்கள் சுட்டிகாட்ட அதை மாற்றலாம் என இருக்கிறேன்

Unknown said...

ஆனாலும் விடாம என்னை அன்னியன்னே கூப்பிடறீங்களே செல்வன்..:) நானே மறந்தாலும் நீங்க மறக்கமாட்டீங்க போலிருக்கு.

அடுத்த அத்தியாயத்துக்கு காத்திருப்பேன்.

Unknown said...

Dear friend,

I got your feedback.Thanks a lot.

Anbudan
selvan

Unknown said...

ஆனாலும் விடாம என்னை அன்னியன்னே கூப்பிடறீங்களே செல்வன்..:) நானே மறந்தாலும் நீங்க மறக்கமாட்டீங்க போலிருக்கு.

அடுத்த அத்தியாயத்துக்கு காத்திருப்பேன்.///

Ha..ha...Somehow that name got registered in my subconscious mind.Henceforth will call you as venkatramani.

I will post next chapter tomorrow.Sorry,dont have tamil in office.

Suka said...

நல்ல ஆரம்பம் செல்வன்... கடவுள் எனக்கு ரெம்ப பிடிச்ச ஆராய்ச்சிப் பொருள் :) நீங்க இதுல எதாவது ஒரு மெசேஜ் சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன் .. காத்திருக்கிறேன் அடுத்தபகுதிகளுக்கு..

சுகா

Unknown said...

வாருங்கள் சுகா ,

கடவுள் இதில் ஊறுகாய் போல் தான் வருவார்.இது ஒரு அக்மார்க் காதல் கதை.ஆக்ஷன் தோல் போர்த்திய காதல் கதை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

நன்றி சுகா

Unknown said...

கடவுளை ஊறுகாய் ரேஞ்சுக்கு தள்ளியாச்சா.. :))))))))))

Unknown said...

ஜூஸ் ரேஞ்சுக்கு அவ்வையார் பாடிருக்கார்.நான் ஊறுகாய்ன்னு சொன்னா தப்பா?


ஞானப்பழத்தை பிழிந்து ரசம் எடுப்பதாக பாடியுள்ளார்:-))))

இந்து மதத்தில் இரு ஒரு வசதி.சாமியை என்ன வேணா சொல்லிட்டு அதுக்கு ஒரு பாட்டை உதாரணம் காட்டி தப்பிச்சுகிடலாம்.

That's why I love it:-))

Unknown said...

Ashlyn,

Story will not end in 20-25 episodes.It will go on and on for quite some time.
I have added some varnanais today