Friday, June 09, 2006

105.விண்கல் காமடி உலகம் லபோ திபோ

உலகை மாற்றி ஒரு புது பொன்னுலகம் படைப்போம் அப்படின்னு கிளம்பினவங்க எல்லாம் காணாம போயிட்டாங்க.பொன்னுலகம் வரும்,வரும்னு ஆகாசத்தை உத்து பாத்துக் கிட்டிருக்கறவங்களும் பாத்துக்கிட்டே தான் இருக்காங்க. சாமி செத்துட்டார்ன்னு சொன்ன நீட்ச்சேவும் செத்து போயிட்டார்.ஜாதியை அழிக்கறேன்னு சொன்ன பெரியாரும் போய் சேந்துட்டார்.வறுமையை ஒழிக்கறேன்னு கிளம்பின இந்திரா காந்தியும் போய் சேந்துட்டார்.வர்க்க பேதத்தை ஒழிக்கரேன்னு கிளம்பின மார்க்ஸும் போயி சேந்துட்டார்.வறுமை,ஜாதி,சாமி,கொலை,கொள்ளை, கற்பழிப்பு,திருட்டு,புரட்டு,பணம்,பணக்காரன்,ஏழை,கோடீச்வரன், அமெரிக்கா,சுயநலம்,ஈகோ முதலிய அனைத்தும் அப்படியே தான் புடிச்சு வெச்ச சாணி புள்ளயாராட்டா அப்படியே இருக்கு. சுத்தும் பூமி சுத்திக்கிட்டே தாங்க இருக்கு.நிக்கலை.எது எதெல்லாம் ஒழியணும்னு பெரியவங்க நினைச்சாங்களோ,அதுக்காக அவங்க உயிரை குடுத்தாங்களோ அதெல்லாம் ஒழியலீங்க.ஒழியவும் ஒழியாது.பழைய தீமைகள் புது அவதாரத்துல வந்துகிட்டே தாங்க இருக்கும்.அதை ஒழிக்கறேன்னு கிளம்பினவங்களும் முளைச்சுகிட்டே தான் இருப்பாங்க.அதுவும் ஒழியாது,இவங்களும் விடமாட்டாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் குழு மனப்பான்மைங்க.பணக்காரனுக்கு ஏழையை கண்டாலே புடிக்காது.ஏழை ரோட்டுல நின்னு பிச்சை கேப்பான்.பை ஸ்டார் ஓட்டலுக்கு வெளில கப்பரையோட நிப்பான்.பிளாட்பாரத்தை அசிங்கம் பண்ணுவான்.வெளிநாட்டுகாரங்க கண்ணுல பட்டு மானத்தை வாங்குவான். ஏழைக்கும் பணக்காரனை கண்டா ஆகாது.அவன் கார்ல போறது,மாளீகை மாதிரி வீட்ல இருக்கறது,கிளி மாதிரி பொண்ணோட கார்ல போறது இதெல்லாம் கண்டா அவனுக்கு கோபம் வரும்ங்க. பெரும்பாலான பிரச்சனைகளை இந்த ரெண்டு வர்க்கத்துக்கு நடுவுல இருக்கற போராட்டமா சித்தரிச்சார் மார்க்ஸ்.இந்த ரெண்டுல ஒரு வர்க்கத்துக்கு - அதாவது ஏழை வர்க்கத்துக்கு - சக்தி வந்தா உலகத்தோட பிரச்சனைகள் தீர்ந்துடும்ணு சொன்னார் மார்க்ஸ். இவருக்கு முன்னாடி பல பேர் பல யோசனைகளை சொன்னாங்க."அட கூமுட்டைகளா.உலகத்துல ரெண்டு வகையான ஆளுங்க தான் இருக்காங்க.ஒருத்தன் நல்லவன் அப்ப்டிங்கர இனம்.இன்னொருத்தன் கெட்டவன் அப்படிங்கர இனம்.கெட்ட்வன் எனும் இனத்தில் இருப்பவன் எல்லாம் நல்லவன் எனும் இனத்துக்கு வந்துட்டா பிரச்சனை இல்லடா" அப்படின்னு வள்ளுவன்,கண்ணன்,ஏசு மாதிரி ஞானிங்க எல்லாம் சொல்லி நல்லவன் யாரு , கெட்டவன் யாருங்கரதுக்கு விளக்கம் எல்லாம் தலையாணை சைசு புத்தகத்துல போட்டுட்டு போயிட்டாங்க. அப்புறம் லெனின் வந்தாரு.அவரும் நல்லவன் யாரு,கெட்டவன் யாருன்னு ஒரு வெளக்கம் கொடுத்தாரு.நம்ம பெரியாரு வந்தாரு அவரும் நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு ஒரு வெளக்கம் கொடுத்தாரு.இப்படி பல பேரு வர்ரதும் போறதுமா இருக்காங்க. அடிப்படையா பிரச்சனை என்னன்னா ஒரு கும்பலுக்கு இன்னொரு கும்பலை கண்டா ஆறதில்லை.பிடிக்கரதில்லை."என்னை மாதிரி இவன் இல்லையே" அப்படின்னு அடுத்தவனை கண்டா கோபம்.என்னை மாதிரி இல்லாத கும்பலை ஒழிக்கணும்னு ஒரு ஆங்காரம்.அதுக்கு தான் கத்தி எடுத்து சண்டை புடிக்கறது,உபதேசம் பண்ண்றது,புத்திமதி சொல்றது அப்படின்னு நெறைய வழிமுரைகள் வெச்சிருக்கோம். போலிஸ் ஸ்டேஷன்,கோர்ட்டு இதெல்லாம் இப்படி உருவானதுதாங்க.ஒரு சமூகம் தன்னை மாதிரி இல்லாத, தனது பிரதி பிம்பமாக இல்லாத ஒருத்தனை சகிச்சுக்கறதில்லை.அவனை புடிச்சு ஜெயில்ல போட்டு அடிச்சு திருத்தி வழிக்கு கொண்டு வருது. இந்த குழுப்போரையும்,தன்னைபோல் இல்லாதோரை சகிக்கும் தன்மையும் ஒரு விதத்துல உலகை நல்லா வழிநடத்தி போயிருக்கு.வலிமையான குழுக்கள் ஜெயிச்சுட்டே வந்திருக்கு.வலிமையற்ற குழுக்கள் தோத்து போயிருக்கு.தோத்த குழுக்கள் ஜெயிச்ச குழுவோடு இணைக்கப்பட்டு உலகம் முன்னேறி இருக்கு. சகிப்புத்தனமை இல்லாது பல விதத்திலும் நல்லதுங்க.சகிப்புத்தன்மையின்மையின் விளைவே போர்,சண்டை,மானுட முன்னேற்றம்,வலிமையற்ற குழுக்களின் அழிப்பு,வலிமை வாய்ந்த குழுக்களின் உருவாக்கம்,ஜனநாயகம்,அறிவியல்,கருத்துருவாக்கம்,கருத்து பறிமாறல்,கலை,இலக்கியம் ஆகியவை. ஆனா பாருங்க.கடைசில ஒரு விண்கல் இதெல்லாத்தையும் அழிச்சு போட்டுடலாங்க.அதுதாங்க காமடியின் உச்சகட்டம். ஒரே செகண்டில் பூமி முழுவதையும் அழிச்சுட்டு பிரபஞ்சம் சிரிச்சுகிட்டே சுத்தலாங்க.அப்ப இந்த குழு எல்லாம் லபோ திபோன்னு அலறும்.எல்லாரும் ஒண்ணா சேந்தாலும் சேந்துகிடலாம்.அப்ப ஒண்ணு சேந்து ஏதாவது பிரயோஜனம் உண்டா என்ன?
Post a Comment