Friday, June 09, 2006

106.மார்க்ஸின் ஆவியுடன் ஒரு உரையாடல்

மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல் மார்க்ஸ் இறந்த பின் அவரது கொள்கைகளை வழியெடுப்பது எங்கல்ஸுக்கு வேலையாய்போனது.மார்க்ஸின் எழுத்துகளை தேடி தொகுத்து டாஸ் கேபிடலின் இரண்டு வால்யூம்களை வெளியிட்டார்.அது போக "பியுயர் பாக் தீஸிஸ்" எனும் புத்தகத்தையும் வெளியிட்டார். மார்க்ஸியம் அதன்பின் சோஷியாலஜிஸ்டுகளால் ஆழ்ந்து நோக்கப்பட்டது.மாக்ஸ் வெபர் இவர்களில் முக்கியமானவராவார்.நீட்ச்சேவும்,மார்க்ஸும் வெபரை மிகவும் பாதித்தனர்.அப்போதைய பிரிட்டானிய சோஷியலாஜி மாணவர்களுக்கு பரிட்சையில் இம்மாதிரி கேள்வி கேட்கப்பட்டது. "வெபரின் சோஷியாலஜி மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல் எனும் வாக்கியத்தை விவரி" "மார்க்ஸியத்தில் மாற்றம் தேவை" எனும் கருத்து அப்போது வலுப்பெறத் துவங்கியிருந்தது.எடுவார்ட் பெர்ன்ஸ்டீன்(1850-1932) மார்க்ஸியத்தில் மாற்றம் தேவை எனும் கருத்தை துணிந்து முன்வைத்தார்.சோஷியல் டெமாக்ராட் இதழில் "சோஷலிசத்தின் பிரச்சனைகள்" எனும் தொடரை எழுதினார்.மார்க்ஸ் எதிர்த்த முதலாளித்துவம் மறைந்துவிட்டது,இப்போதைய முதலளித்துவத்துக்கு ஏற்ப மார்க்ஸீயம் மாற வேண்டும் என அவர் வாதிட்டார். ஆனால் கார்ல் காடுஸ்கி(1854 - 1938) தலைமைலான அதிதீவிர மார்க்ஸிஸ்டுகள் அவரது வாதங்களை நிராகரித்தனர்.மார்க்ஸியத்தில் மாற்றம் கேட்ட முதல் முயற்சி இவ்வாறு தோல்வியில் முடிந்தது. காரல் காடுஸ்கி அதிதீவிர மார்க்ஸிஸ்ட்.டாஸ் கேபிடலின் நாலாம் பாகத்தின் எடிட்டர் அவர்தான்.எங்கெல்ஸின் மறைவுக்கு பின் மார்க்ஸிஸத்தின் தலைவரானார்.ஜெர்மானிய சோஷியல் டெமாக்ராட் கட்சியின் மார்க்ஸிஸ்ட் பிரிவு தலைவராக இருந்தார்.ஆனால் ரஷ்யாவில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசை அவரால் ஏற்க முடியவில்லை.லெனினுடன் கடுமையாக மோதத்துவங்கினார். "அவர் ஒரு பிரிவினைவாதி" என லெனின் அவரை சாடினார்.காடுஸ்கியின் பதில் அதை விட தீவிரமாக இருந்தது.மார்க்ஸிசமும் போல்ஷ்விசசமும் எனும் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதினார் காடுஸ்கி. "லெனினின் தலைமயிலான போல்ஷிஸ்டுகள் ஜாரின் காட்டாட்சியை அகற்றிவிட்டு புது காட்டாட்சியை அங்கு நிறுவியுள்ளனர்" ரஷ்ய மார்க்ஸிசம், ஐரோப்பிய மார்க்ஸிசம் என இரண்டு பிரிவினைகள் ஏற்பட்டது இவர்கள் மோதலுக்கு பிறகுதான்.ஐரோப்பிய மார்க்ஸியம் ஜார்ஜ் லூகாஸ்,அன்டோனியோ கிரம்ஸ்சி போன்ற அறிஞர்களால் வளர்ந்தது.ரஷ்ய மார்க்ஸியம் லெனின் ஸ்டாலின் வழியில் சென்றது. பிரான்க்பர்ட் பள்ளி பெலிக்ஸ் வெய்ல் முயற்சியால் 1924ல் நிறுவப்பட்டது.அறிவியல் மார்க்ஸியத்தை ஆய்வதே இதன் முக்கிய பணியாக இருந்தது.ஆனால் இவர்கள் மார்க்ஸியத்தை மார்க்ஸின் எல்லைகளை தாண்டி விரிவுபடுத்துவது பழமைவாத மார்க்ஸிஸ்டுகளுக்கு பிடிக்கவில்லை.மார்டின் ஜே "பிரான்ப்க்பர்ட் பள்ளி சொல்லித்தருவது மார்க்ஸீயமே அல்ல" என கடும்கோபத்துடன் எழுதினார்.சோஷியாலஜி பற்றி ஆராய்ந்ததால் அது வெபரியம் மார்க்ஸியமல்ல என்று கண்டித்தவர்களும் உண்டு. இப்பள்ளியை முக்கிய உறுப்பினர்கள் யூதர்கள் என்பதால் இவர்களை வெறுத்தவர்களும்,உள்நோக்கம் கற்பித்தவர்களும் உண்டு.இட்லர் ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக்கு இரட்டை ஆபத்து வந்தது.இட்லருக்கு யூதர்களையும் பிடிக்காது,கம்யூனிஸ்டுகளையும் பிடிக்காது.யூதர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் சொல்லவும் வேண்டுமோ? இந்த பள்ளி இழுத்து மூடப்பட்டு ஐரோப்பிய மார்க்ஸிஸ்டுகள் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினர்.அவர்கள் ஐரோப்பாவில் வேண்டாத விருந்தாளிகள்,ரஷ்யர்களுக்கு எதிரிகள்.ஆக மார்க்ஸிஸ்டுகளுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் கிடைத்தது என்பது தான் ஐரனி.அங்கு சென்ற இவர்கள் அமெரிக்க அரசின் பாதுகாப்பில் இருந்துகொண்டு அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.ரஷ்யாவில் இருந்துகொண்டு ரஷ்ய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லித்தெரியவேண்டியதில்லை. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் உறவு மோசமானதும் இவர்களுக்கும் பிரச்சனை வந்தது.ஆனால் லாஸேஞெலிசுக்கு சென்ற மார்க்ஸிஸ்டுகள் அங்கிருந்து தம் வேலைகளை தொடர்ந்தனர்.1947'ல் dialectic of enlightenment எனும் புத்தகத்தையும், 1951ல் மினிமா மொராலியா எனும் புத்தகத்தையும் வெளியிட்டனர். உலக யுத்தம் முடிந்து 1950ல் (முதலாளித்துவ) வடக்கு ஜெர்மனிக்கு திரும்பிய ஐரோப்பிய மார்க்ஸிஸ்டுகள் பிரான்க்பர்ட் பள்ளியை மீண்டும் நிறுவினர்.மார்க்ஸிஸத்தை தத்துவ ரீதியில் இவர்களும் அரசியல் ரீதியில் ஸ்டாலினும் அதன் பின் முன்னெடுத்து சென்றனர் (இது திண்ணையில் வெளிவந்த என் கட்டுரை.பிரசுரித்த திண்ணைக்கு என் நன்றி)

12 comments:

Unknown said...

பிளாக்கர் பகவான் மீண்டும் சொதப்பி இரண்டு பதிவுகளை உருவாக்கி விட்டார்.இன்னொரு பதிவை அகற்றிவிடுகிறேன்.இந்த பதிவிலேயே பின்னூட்டம் இடும்படி கேட்டுகொள்கிறேன்.

Anonymous said...

test from selvan

Anonymous said...

test from selvan once again

மாயவரத்தான் said...

டெஸ்ட்

Unknown said...

Thanks a lot mayavarathaan.

வவ்வால் said...

//இப்பள்ளியை முக்கிய உறுப்பினர்கள் யூதர்கள் என்பதால் இவர்களை வெறுத்தவர்களும்,உள்நோக்கம் கற்பித்தவர்களும் உண்டு//

கார்ல் மார்க்ஸும் ஒரு யூதர்ரே,ஹிட்லரிடம் இருந்து தப்பிக்க அவர் ரஷ்யாவிற்கு புலம்பெயர்ந்தார் ,கார்ல் மார்க்ஸ்கு பிறகும் யூதர்கள் ஜெர்மனியில் இருந்து செயல்பட்டார்களா,ஹிட்லர் இருக்கும் போதே எப்படி அது சாத்தியமாயிற்று?

Unknown said...

அன்பின் வவ்வால்

காரல் மார்க்ஸ் 19 நூற்றாண்டிலேயே இறந்து விட்டார். ஹிட்லர் ஆண்டது 1930 முதல் 1945 வரை.காரல் மார்க்ஸ் இறந்தபோது ஹிட்லர் பிறக்கவே இல்லை

வவ்வால் said...

யூதர்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து தப்பிக்க கார்ல் மார்க்ஸ் குடும்பம் புலம் பெயர்ந்தது என படித்தேன் அது ஹிட்லரின் அடக்குமுறையால என நானாகவே நினைத்துவிட்டேன் ஹிட்லருக்கு முன்னரே ஐரோப்பாவில் இருந்து யூதர்கள் துரத்தப்பட்டுள்ளார்கள், கால கட்டத்தை சரியாக கவனிக்கவில்லை.பிழையாகிவிட்டது மன்னிக்கவும்!

வஜ்ரா said...

செல்வன் இதில் நான் ஏற்கனவே இட்ட பின்னூட்டம் காணாமல் போனதாகச் சொல்லி உங்கள் மடல் கிடைதது...

மறுபடியும் இடுகிறேன்..

யேசுவின் தத்துவத்தைத் தொகுத்த அவரது சீடர்கள், முகம்மதுவின் தத்துவத்தைத் தொகுத்த அவரது சீடர்கள் போல் மார்க்ஸின் தத்துவத்தைத் தொகுத்த அவரது சீடர்கள் அதுவே உண்மை, அதைத் தவிர்த்து உலகில் வேறேதும் பெரிய உண்மை இல்லை என நம்பிக் கொண்டு இருப்பது எவ்வளவு கச்சிதமாக ஒரே அச்சில் பொருந்துகிறது என்பதை கவனித்தீர்களா?

Arthur Koestler கூறியது போல்...இன்று மார்க்ஸ்வாதமும், இஸ்லாம், கிறுத்துவம் போல் ஒரு Closed system ஆகிவிட்ட அவல நிலையில் இருக்கிறது.

Unknown said...

வருகைக்கு நன்றி ஷங்கர்,

சும்மா இருக்காமல் பதிவில் ஹாலொஸ்கான் பொருத்தி இப்போது இரண்டு கமன்ட் sections உருவாகிவிட்டன.ஒரு sectionil நீங்கள் இட்ட பின்னூட்டம் ஹாலொஸ்கானில் கேள்விக்குறியாய் தொக்கி நிற்கிறது.(தமிழ் ஒருங்குறியை ஹாலொஸ்கான் ஏற்பதில்லை போல.)

பின்னூட்ட குழப்பத்துக்கு மன்னிக்கவும் சங்கர்

அன்புடன்
செல்வன்

Unknown said...

அதனால் பிரச்சனை இல்லை வவ்வால்.பின்னூட்ட பெட்டியில் ஏற்பட்ட குழப்பத்தில் இதை சரியாக கவனிக்காமல் பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.மன்னிக்கவும்

Unknown said...

ஷங்கர்,

மார்க்ஸியத்தின் சில குறைபாடுகளை பற்றி என் மார்க்சும் காந்தியும் என்ற பதிவில் எழுதியிருந்தேன்.விண்ணுலக சொர்க்கம் யான் வேண்டேன் எனும் பதிவிலும் மதம் பற்றிய மார்க்ஸியத்தின் பார்வையை குறிப்பிட்டிருந்தேன்.அதில் நான் குறிப்பிட்டிருந்தது

"...மார்க்ஸ் மதங்களை வெறுத்ததும் இதனால் தான்.அவற்றால் எந்த நடைமுறை பயனையும் அவர் காணவில்லை.இப்பொதைய பசிக்கு அவை எதுவும் செய்வதில்லை,அவை காட்டும் மோட்சம் இறந்தபிறகே அடையகூடியது என்பதை உணர்ந்ததும் அவர் வருத்தம் அடைந்தார்.ஆனால் மதங்கள் மனிதனின் தற்போதய வாழ்வை இறந்தபின் வரும் சொர்க்கதிற்க்காக தியாகம் செய்ய சொல்வதை உணர்ந்ததும் அவர் கடும் கோபம் அடைந்து 'மதம் மனிதனின் எதிரி' என்று சாடும் அளவுக்கு அவர் சென்றார்.நடைமுறை வாழ்வில் பயனளிக்காத எந்த ஒரு தத்துவத்தயும் எதிர்த்தவர் மார்க்ஸ்.கெகலை அவர் சாடியதும் அதன் அடிப்படையில் தான்.

ஆனால் கெகலின் அடிப்படை சித்தாந்தமான "சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய தேடலின் உருவாக்கம்" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.மார்க்ஸியம் என்பதை 'அந்த சுயதேடல் இன்னும் முடிவடையவில்லை' என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார்.

மார்க்ஸ் செய்த தவறையும் இங்கு சுட்டி காட்ட வேண்டும்.அவர் மனிதனின் சுயதேடல் ஒரு புதிய சமுதாயத்தை உருவக்குவதன் மூலம் முழுமை அடையும் என நம்பினார்.ஆனால் காலம் அது தவறு என்பதை நிருபித்தது.ஒடுக்கப்பட்டவனின் கரத்தில் வந்த அதிகாரம் அவனை புதிய சர்வாதிகாரியாக்கியது.அவ்வளவுதான். பழைய கொடும்கோன்மை சமூகத்திற்க்கு பதில் ஒரு புதிய கொடும்கோன்மை சமுகம் உருவாகியது.."

பார்க்க
http://holyox.blogspot.com/2006/02/blog-post_04.html