Thursday, June 08, 2006

103.இட்லி காப்பி வடை சாம்பார்

இந்த இழை முழுக்க சாப்பாட்டு விஷயம் தான். என் மனம் கவர்ந்த பல ஓட்டல்களை பற்றி எழுதப்போகிறேன். அன்னபூர்ணா கவுரிசங்கர்,கோவை: அன்னபூர்ணாவில் புகழ் பெற்ற விஷயங்கள் இரண்டு.காப்பி மற்றும் சாம்பார் இட்லி.அன்னபூரணா அதிபர் முதலில் கோவை சென்ட்ரல் திரையரங்கில் கேன்டீன் வைத்து நடத்திகொண்டிருந்தார்.கள்ளிசொட்டு போல் அவர் போட்ட காப்பியை குடிப்பதற்காக டிக்கட் வாங்கி வந்து காப்பி மட்டும் குடித்துவிட்டு போனவர்கள் உண்டு. அன்னபூரணா சாம்பார் இட்லிக்கு நான் என்றும் அடிமை.அங்கு சாம்பார் என்ற குளத்தில் இட்லி நீச்சல் அடிக்கும்.வாயில் வைத்தால் அமுதம் தான்.விலையும் அதிகமில்லை,ஜென்டில்மன் 7 ரூபாய் தான். மசால்தோசை தமிழ்நாடெங்கும் பல இடங்களில் ப்பிடிருக்கிறேன்.சரவனபவன் தான் ஓரளவு அன்னபூர்ணா அளவு நல்ல மசால் தோசை தரும்.வேறெங்கும் அன்னபூரணா சுவை வந்ததில்லை. காப்பி,இட்லி ரசிகர்கள் அன்னபூர்ணாவில் ஒருமுறை சாப்பிட்டால் அடிமை ஆய்விடுவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ? கோவை அன்னலட்சுமி அன்னலட்சுமி ஓட்டல் கோவையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ளது.கவுண்டம்பாலயத்திலும் உள்ளது.இது ஒரு மடத்தால் பொதுசேவைக்கு நடத்தப்படும் உணவகமாகும். இங்கு நான் ஒரே முறை தான் போயிருக்கிறேன்.இந்த உனவகம் பற்றி பலவித வதந்திகள் உலா வரும்.இங்கு சமைப்பவர் அனைவரும் கோடீச்வரர்கள்,அந்த சாமியாரின் பக்தர்கள் தான் சமைக்கிறார்கள்,வரும் லாபம் முழுக்க பொதுசேவைக்கு போகிறது என்பார் சிலர். நான் வேலை செய்த அலுவலகத்தில் சிலரோடு அங்கு போன போது எங்களுக்கு அங்கு உணவு பரிமாறியது "அம்மா"வை மிஞ்சும் அளவு நகை அணிந்த ஒரு நடுத்தர வயது மாது.பார்த்தால் ராஜபரம்பரை என்று சொல்லும் அளவு கம்பீரமாக இருந்தார்.அவர் அணிந்திருந்த நகை உண்மையான வைரம் மற்றும் தங்கம் என்று சொன்னார்கள். உணவு அற்புதம்.உனவருந்த வேலைப்படான கலைநயம் மிக்க தட்டு.மிக அற்புதமான தரம்.ஆனால் ஆனைவிலை குதிரை விலை. விலை காரணமாக இரண்டாம் தரம் அங்கு போகவில்லை.ஆனால் மேட்டுப்பாளயம் சாலையிலுள்ள இன்னொரு அன்னலட்சுமியில் சாப்பிட்டு விட்டு நமக்கு எவ்வலவு தொகை தரவேண்டுமென்று தோன்றுகிறதோ அவ்வளவு தரலாம்.மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டு 2 ரூபாய் கூட தரலாம். இதை கேள்விப்பட்டபிறகு அப்படி ஒரு அதிசயமான ஓட்டலுக்கு போக ஆசை வந்து வீட்டது.ஆனால் என் நண்பர்கள் என்னிடம் அங்கு போகிறவர்கள் பலர் சாப்பிட்டுவிட்டு 2000 அல்லது 10000 என்று கொடுக்கிறார்கள் என்றார்கள்.அதன்பிறகு அங்கு போகும் ஆசையே போய்விட்டது. RK பானிபூரி ஸ்டால. கிராஸ்கட் சாலை 9ம் நம்பர் ரோட்டில் உள்ளது.இதன் உரிமையாளர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.கோவையில் முதல் முதலில் பானிபூரி அறிமுகப்படுத்தியது இவர் தான் என்பார்கள். இவர் கடையில் ஒரு நாளைக்கு 1000 பானிபூரி சர்வசாதரணமாக ஓடும்.பானிபூரி,கட்லட்,பேல்பூரி,டைபப்படிசாட் போன்றவை இங்கு கிடைக்கும்.சுவை நன்றாக இருக்கும்.அளவும் அதிகம்.விலை 11 ரூபாய் தான். இவரை பார்த்து அந்த தெருவில் பானிபூரி கடை போட்டவர்கள் ஏராளம்.ஆனால் கூட்டம் போவது இவர் கடைக்குத்தான்.அதிக அளவில் இனிப்பு கலக்கிறார்,அதனால் தான் சுவை என்று பக்கத்து கடைக்காரர்கள் கோள் மூட்டுவார்கள்.ஆனால் அது உண்மையில்லை. ஆனால் மற்ற பானிபூரி கடைகளை விட இவர் நல்ல சுவையாய் கொடுப்பது உண்மைதான். டெக்ஸாஸ் எனது கனவு தேசம்.வீரத்துக்கு புகழ் பெற்ற மானிலம்.அங்கு காலடி எடுத்து வைத்ததும் நான் கேள்விபட்டதெல்லாம் உண்மை என புரிந்தது. ஆஜானுபாகுவாய் டெக்ஸாஸ் மக்கள்.கவ்பாய் தொப்பி அணிந்துகொண்டு வாழ்க்கையை இன்பமாய் அனுபவிக்கிறார்கள்.சங்கீதமும்,காதலும் வீரமுமே அவர்கள் வாழ்க்கை.ஆண்கள் ஆஜானுபாகர்களாய் இருக்கிறார்கள்.அமெரிக்கன் என்பதில் பெருமை கொள்கிறார்கள்.டெக்ஸாஸை சேர்ந்தவன் என்று பெருமை கொள்கிறார்கள்.டெக்ஸாஸின் பெருமை பேசும் ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டிகொள்கிறார்கள்.சிவாஜி படத்தில் வருவது போல் நீளமான வேட்டை துப்பாக்கிகளை கடைகளில் சர்வசாதரணமாக விற்கிறார்கள்.அற்புதமான மார்கரிட்டா எனும் மதுவை அருந்துகிறார்கள்,.ஏசுபிரான் மீது எல்லை கடந்த காதல் கொண்டுள்ளார்கள்.பக்தி,காதல்,வீரம் இவை மூன்றும் சேர்ந்த அற்புத மானிலம் தான் டெக்ஸாஸ். டெக்ஸாஸில் நான் பிரமித்து போனேன் என்பது மிகையல்ல.சான் அன்டோனியோவில் ஹில்டன் ஓட்டலில் தங்கினோம்.ஆரியக்கூத்தாடி ஓரளவு டிஸ்கவுண்ட் வாங்கினோம்.ஆனால் அங்கு எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை.மருந்துக்கு கூட ஒரு சைவ உணவு இல்லை. சான் அன்டோனியோ என்றதும் அனைவரும் ரிவர்சைட் போங்கள் என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள்.அப்படி என்ன அங்கு இருக்கிறது என்று பார்க்க அனைவரும் கிளம்பினோம்.ஒரு அழகான ஆறு.அமைதியாய் கான்க்ரீட் கரைகளுக்கு நடுவே தூய்மையாய் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.அதன் இரு புறங்களிலும் மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்கள்.உணவு பரிமாற அழகிய மயில்கள்.ஆற்றின் அழகை ரசித்துகொண்டே சாப்பிடலாம். ஒவ்வொரு உணவகமாய் சைவ உணவு இருக்கிறதா என்று கேட்டுகொண்டே போனோம்.என் நண்பர்களுக்கு எப்போதும் நான் தரும் சிரமம் இதுதான்.கடைசியில் ஒரு ரெஸ்டாரண்டில் எனக்காக சைவ பரிட்டோ செய்து தர ஒத்துகொண்டார்கள். அனைவரும் நதிக்கரையில் ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம்."சிங்கார வேலன்" கமல் போல் உடல் முழுவதும் இசைகருவி வைத்திருந்த ஒரு ஸ்பானியர் வந்து இசைகருவி வாசிக்கட்டுமா என கேட்டார்.45 நிமிடம் நாங்கள் சாப்பிட்ட நேரம் முழுவதும் இருந்து பாடி கணிசமான பரிசுலும் பெற்றுகொண்டு தான் சென்றார். மார்கரிட்டா எனும் ஸ்பானிய ஒயினை கொடுத்தார்கள்.நண்பர்கள் ஆகா ஓகோ என்றார்கள்.எனக்கு கோக்கும் பரிட்டோவுமே துணை.ஸ்டப்ப்ட் பொட்டேட்டொ என்று ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்கள்.சகிக்கவில்லை.கடைசியில் கொண்டுவந்த பில்லும் சகிக்கவில்லை.போதாகுறைக்கு பெண் வெயிட்டர்கள் என்றால் டிப்ஸ் நிறைய கொடுத்தாகவேண்டும் என்ற மூட நம்பிக்கையும் எங்கள் குழுவில் நிலவுகிறது. ரிவர்ஸைடில் சாப்பிடுவது இனிய அனுபவம்.ஆனால் அங்கு சைவர்கள் போவது வீண் வேலை
Post a Comment