Wednesday, June 07, 2006

101.மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்

மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம் "சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியின் "அழகு" மாணவி நான். இந்த வருடம் எங்கள் கல்லூரியில் கல்சுரல்ஸ் ஆரம்பமானது. பங்ஷனில் சிறப்பு விருந்தினராக, சாக்லெட் பாயை அழைத்திருந்தோம்... அதாங்க, நம்ப சினிமா நடிகர் மாதவன்... அவருக்கு இத்தனை ரசிகைகள் இருப்பார்கள் என்று நாங்களும், எங்கள் கல்லூரி ஆசிரியர்களும் நினைக்கவே இல்லை.காலையில் இருந்தே, "மேடி...மேடி...' என, மாதவன் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது எல்லாருக்கும். மாதவனுக்காக காத்திருந்தனர் மாணவியர். மாதவனின் கார் கல்லூரியில் நுழைய அத்தனை மாணவியரும் அவரது காரை நோக்கிப் பாய்ந்து ஓட ஆரம்பித்தனர். அரண்டு போன ஆசிரியர்கள், ஸ்டேஜின் அருகிலேயே மாதவனது காரைக் கொண்டு வந்து நிறுத்த வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை இறக்கினர்.அப்படியும் பல கல்லூரி மாணவியர் அவரைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு, அவர் மேல் பாய்ந்து, நகங்களால் அவர் கைகளைக் கீறினர். துடித்துப்போன மாதவன், ஒரு வழியாக ஸ்டேஜில் ஏறினார்.மீண்டும் அவரை பத்திரமாக அனுப்பி வைப்பதற்குள் போலீஸ் வெகுவாகத் திண்டாடியது; மாணவியர் மீது தடியடி நடத்தாத குறைதான். "மேடி... மேடி...' என்ற கோஷமடங்க, அரைமணி நேரம் ஆனது." இங்கு நாம் பார்த்தது என்ன? ஒரு புதிய மதத்தை. ஒரு புதிய கடவுளை. செலெபிரிடி வர்ஷிப் எனும் மதத்தை நாம் இங்கு பார்த்தோம்.இங்கு பிரபலமே கடவுள்.ரசிகர்களே பக்தர்கள். சமூக அறிவியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் இதை ஒரு அங்கீகரிக்கப்படாத மதமாக தான் கருதுகின்றனர்.அதனால் தான் இதை செலெபிரிடி வர்ஷிப்(பிரபலத்தை வழிபடுதல்) என குறிப்பிடுகின்றனர். பிரபலத்தை வழிபடுதல் மிகவும் நல்ல பழக்கம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.பிரபலத்தை வழிபடுதல் நம் வாழ்வை வெற்றிகரமாக வாழ உதவுகிறதாம்.ஒரு துறையில் வெற்றி அடைந்த மனிதரை வழிபடுதல் இயல்பானதே என உயிரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பழங்காலத்தில் பிரபலமான வேடர்களை மக்கள் வழிபட்டனராம்.இப்போது வேட்டை அவ்வளவு முக்கியத்துவமில்லாதது என்பதால் பணக்காரர்களையும் நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் வழிபடுகிறோமாம். இதுபற்றி ஒரு மனோதத்துவ ஆய்வை மெக்கட்சியான்,ஜேம்ஸ் அவுரான் ஆகிய ஆய்வாளர்கள் நடத்தினர்.சுமார் 600 பேரை ஆராய்ந்து பார்த்ததில் கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவந்தன.கிட்டத்தட்ட 20% மக்கள் ஒரு பிரபலத்தை கூர்ந்து கவனித்து அவரின் ரசிகராக இருப்பார்களாம்.இது harmless fun எனும் வகையறாவை சேர்ந்தது.கிட்டத்தட்ட 10% பேர் பக்தர்கள் ரேஞ்சுக்கு போய்விடுவார்களாம்.தமக்கும் அந்த பிரபலத்துக்கும் இடையே ஒரு "தெய்வீக உறவு" நிலவுவதாக அவர்கள் நம்புவார்களாம்.இதற்கும் அடுத்த கட்டம் "மனநிலை பாதித்த கட்டம்".பிரபலத்துக்காக அடுத்தவரை அடித்தல்,வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கும் அவர்கள் தயாராகிவிடுவார்களாம்.இக்கட்டத்தை "borderline-pathological" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். டீனேஜ் தான் பிரபலத்தை வழிபடுவதற்கு ஏதுவான இடமாம்.இந்த வயதில் தான் தம் வாழ்க்கை பாதையை எப்படி அமைத்துக்கொள்வது என இளைஞர்கள் யோசிப்பார்களாம்.அப்போது தான் அதற்கு ஏதுவான ஒரு பிரபலத்தை தேர்ந்தெடுத்து வழிபட துவங்குவார்களாம். இப்படி ஒரு பிரபலத்தை வழிபடுவது டீனேஜ் இளைஞர்களுக்கு நல்லதாம்.டீனேஜர்கள் இளைஞர்களாக விரைவில் வளர்ச்சி அடைய இது உதவுகிறது என பிரிட்டனில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.11 முதல் 16 வயதிலான டீனேஜ் இளைஞர்களுக்கு பிரபலங்களை வழிபடுவது socialize செய்ய மிகவும் உதவிகரமானதாக இருக்கிறதாம்.இதை செய்யாவிட்டால் தமது வகுப்புதோழர்களை பற்றி negative gossip செய்வார்களாம்.பிரபலங்களை வழிபடுவதால் இது தவிர்க்கப்படுகிறதாம். பிரபலத்தை வழிபடுதலில் தீமைகளும் உள்ளன.அளவுக்கு மீறிய மதப்பற்று பிரச்சனையாகத்தானே வந்து முடியும்?பிரபலங்களை வழிபடுதலும் இதற்கு விதிவிலக்கல்ல.கடவுள் பக்தர்கள் தம் சொந்த வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்து வெறி பிடித்த பக்தர்களாக மாறுவதுபோல் இம்மதத்திலும் உண்டாம்.அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி வந்தவர்கள் வழிபாட்டுத்தலமே கதி என கிடப்பதுபோல் இந்த பக்தர்களும் தம் நட்சத்திரத்தை உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பின் தொடர்வார்களாம். நாம் ஏன் பிரபலத்தை வழிபடுகிறோம்? இது நம் தப்பே இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபலத்தை வழிபடுதல் நம் டி.என்.ஏவில் புரொக்ராம் செய்யப்பட்ட ஒன்றாம்.ஒரு பிரபலத்தை தேர்ந்தெடுத்து அவரை வழிபடுதல் நம் டி.என்.ஏவில் புரொக்ராம் செய்யப்பட்ட குணாதிசியமாம். "மனிதன் ஒரு சமூக விலங்கு. பிரபலத்தை வழிபட,பின் தொடர நாம் புரொக்ராம் செய்யப்பட்டுள்ளோம்" என்கிறார் விஞ்ஞானி ஃபிஸ்சாப். ஆனால் சிலர் இந்த டி.என்.ஏவை எளிதில் வெல்ல,கையாளத் தெரிந்தவர்களாம். அவர்கள் பிரபலத்தை வழிபட மாட்டார்களாம். இவர்கள் பிரபலத்தை வழிபடுபவர்களை கிண்டல் செய்வார்களாம். பிரபலங்கள் தப்பு செய்தால் அவர்கள் மீது கொண்ட பக்தி என்ன ஆகும்? ஒன்றும் ஆகாதாம். பிரபலங்களின் பக்தர்கள் அந்த செயல் தப்பே இல்லை என வாதிடுவார்களாம்.அந்த பிரபலம் செய்ததாலே அந்த செயல் நியாயப்படுத்தப்படுமாம். பக்தர்கள் தம் ரோல்மாடல் செய்ததாலேயே அந்த செயலை செய்வார்களாம். பிரபலம் சிகரெட் குடித்தால்,மது அருந்தினால் அவர் பக்தர்களும் அருந்துவார்களாம். சின்ன வீடு செட்டப் செய்தால் பக்தர்களும் செய்வார்களாம்.பிரபலம் தற்கொலை செய்து கொண்டால் பக்தர்களும் தற்கொலை செய்துகொள்வார்களாம். மர்லின் மன்றோ தற்கொலை செய்துகொண்டதும் அமெரிக்க தற்கொலை விகிதம் 12% அதிகரித்ததாம். சுருக்கமாக சொன்னால் typical copycat syndrome. பிரபலம் செய்வது எல்லாம் நியாயம்.அவர் சொல்வது அனைத்தும் சரி. கண்ணை மூடிக்கொண்டு அவர் வாழ்ந்தது போலவே வாழ்வது தான் வாழ்வில் உய்வடைய சரியான வழி. சுருக்கமாக சொன்னால் இது ஒரு மதம். மதப்பற்றின் அனைத்து நன்மை தீமைகளும் அச்சு அசல் மாறாமல் இம்மதத்திலும் உள்ளன. References: 1) http://www.dinamalar.com/2006may14varamalar/ithu.asp 2) http://news.bbc.co.uk/1/hi/health/3147343.stm 3) http://www.theage.com.au/articles/2003/08/14/1060588497208.html 4) http://www.bellaonline.com/articles/art31383.asp 5) http://tvguide.webmd.com/content/article/119/113311.htm?pagenumber=2 6) http://news.bbc.co.uk/1/hi/health/2861429.stm (தமிழோவியத்தில் வந்த என் கட்டுரை.பிரசுரித்த தமிழோவியத்துக்கு என் நன்றி)

38 comments:

Unknown said...

பிளாக்கர் சொதப்பலால் காலையிலேயே இதை வெளியிட முடியவில்லை.சில நண்பர்கள் பின்னூட்டங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தனர்.அதை பிரசுரித்து விட்டேன்.ஏதும் பின்னூட்டம் பிரசுரிக்காது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.

கால்கரி சிவா said...

மனிதனின் உள்ளத்தை உள்நோக்கி ஆராய்ந்து எழுத பட்ட கட்டுரை.

Unknown said...

சிவா, நன்றி.

சமூகவியல் மற்றும் உளவியலில் இது ஒரு சுவாரசியமான ஆய்வு தலைப்பாகும்.

பொன்ஸ்~~Poorna said...

கட்டுரை நல்லா இருக்கு...முதற்கண் செய்தியாகவே சொல்லி இருக்கலாம்.. "அப்படியாம், இப்படியாம்" என்பது கொஞ்சம் அன்னியப் படுத்திகிறதோ?
சரி, இது மாதிரி ஈர்க்கக் கூடிய ஹீரோ பர்சனாலிடி யாராகவேண்டுமானாலும் இருக்கலாம? அதற்கு சில இலக்கணம் இருக்கின்றது என்று படித்துள்ளேன்.. இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறீர்களா?

Unknown said...

பொன்ஸ்,

இது பற்றி முன்னர் எழுதியதில்லை.அடுத்த முறை "அப்படியாம்" என்பதை தவிர்க்கிறேன்.நீங்கள் சொன்ன பின் தான் எனக்கே பொறிதட்டியது.ஏன் அப்படி எழுதினேன் என தெரியவில்லை.

பிரபலம் மீது ஈர்ப்பு வர அந்த நபருக்கு ஏதோ துறையில் திறமை இருக்க வேண்டும்.திறமை இருந்தால் தானே பிரபலமாக முடியும்?(சார்லஸ்,டயானா போல் அதிர்ஷ்டத்தால் பிரபலமாவதும் உண்டு)

VSK said...

எல்லா இடத்திலும் போய்,
அப்படிச் செய்திருக்கலாம்;
இப்படிச் செய்திருக்கலாம் என்று
சிலர் சொல்லுவதைப் பார்த்து அலுப்பாய் இருக்கிறது!

+
செல்வனின் தலப்பிலுள்ள செய்தியைப் பார்க்கவும்!

குமரன் (Kumaran) said...

நல்ல ஆராய்ச்சி கட்டுரை செல்வன். 'அப்படியாம்' 'இப்படியாம்' என்று எழுதியது அப்படி ஒன்றும் அன்னியமாக இல்லை. :-)

Sivabalan said...

செல்வன்,

சஞ்சய் ராமசாமியே(சூர்யா) (எனக்கு) கடவுள்!!

இன்றய இளய சமுதாயம் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம்.

மிக நல்ல பதிவு!!

(அஸினே தெய்வம் என்று இருந்தால் பின்னூடம் 100 தாண்டியிருக்க்ம்)

Machi said...

//பிரபலத்தை வழிபடுதல் நம் டி.என்.ஏவில் புரொக்ராம் செய்யப்பட்ட ஒன்றாம்//

எல்லா பைத்தியகாரதனத்துக்கும் இது தான் காரணமா? அப்ப நாம திருந்தவே முடியாதா?

//அடுத்த முறை "அப்படியாம்" என்பதை தவிர்க்கிறேன்.நீங்கள் சொன்ன பின் தான் எனக்கே பொறிதட்டியது.ஏன் அப்படி எழுதினேன் என தெரியவில்லை. //

இது நான் சொல்வதில்லை படிச்சேன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்பதால் "அப்படியாம் கிப்படியாம்" போட்டு எழுதுகிறோம்.

Unknown said...

குறும்பரே

மனிதன் சமூக விலங்கு எனும்போது ஒரு பிரபலத்தை விரும்பியே ஆகவேண்டும்.அப்போதுதான் ஒரு சமூகம் உருவாக முடியும்.பெரும்பாலான சமூகங்கள் ஒரு பிரபலத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும்.பிரபலம் இல்லாத போதிலும் நாம் அந்த சமூகத்துக்கு ஒரு தலைமை தாங்க ஒரு பிரபலத்தை உருவாக்கிக் கொள்கிறோம் (எ,கா. தமிழன்னை,கன்னட தல்லி)

இது ஜீன்களில் உள்ளது எனும்போது இதை மாற்றுதல் இயலாது என தோன்றுகிறது.நீங்கள் சொன்னதுபோல் திருந்துதல் சாத்தியம் இல்லை தான்.

Unknown said...

சிவபாலன்
சூர்யா எனக்கும் பிடிக்கும்.நம்ம கோயமுத்தூர் தங்கமாச்சே?விட்டுடுவோமா?அசின் படம் எதுவும் பார்த்ததில்லை.நான் இங்க வந்தப்ப சிம்ரன் தான் டாப்.அதனால்தான் அவங்க பெயரை தலைப்பில் இட்டேன்

பொன்ஸ்~~Poorna said...

//நான் சொல்வதில்லை படிச்சேன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்பதால் "அப்படியாம் கிப்படியாம்" போட்டு எழுதுகிறோம்//

சரிதான்.. பொதுவாக செல்வன் அப்படி எழுதுவதில்லை.. அதனால் தான் சட்டென தோன்றியது.. :)

எஸ்.கே, உங்க பதிவுல வந்து சஜசன் எல்லாம் எழுதமாட்டேங்க :) சிம்ரன் கடவுளா இல்லையாங்கிறத பத்தி ஒண்ணுமே சொல்லாம போய்ட்டீங்க?!!!

Unknown said...

நன்றி குமரன்,

அப்படியாம் என எழுதியது குறும்பன் சொன்னதுபோல்

//இது நான் சொல்வதில்லை படிச்சேன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்பதால் "அப்படியாம் கிப்படியாம்" போட்டு எழுதுகிறோம்//

இந்த காரணத்தினால் இருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது.

Unknown said...

//சிம்ரன் கடவுளா இல்லையாங்கிறத பத்தி ஒண்ணுமே சொல்லாம போய்ட்டீங்க?!!! //

அவர் சொன்னாலும் சொல்லாட்டாலும் சிம்ரன் கடவுள்தான்.

பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு அர்த்தமாம்.:-)))

நன்மனம் said...

நல்ல அலசல் செல்வன்.

//பழங்காலத்தில் பிரபலமான வேடர்களை மக்கள் வழிபட்டனராம்.இப்போது வேட்டை அவ்வளவு முக்கியத்துவமில்லாதது என்பதால் பணக்காரர்களையும் நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் வழிபடுகிறோமாம்.//

இதில் அரசியல்வாதிகள் இல்லாதது ஏன்? ஒரு வேளை நம்ம ஊர் சைட் டி.என்.ஏ ல மட்டும் தான் இப்படி புரோக்ராம் செய்ய பட்டுள்ளதா அல்லது "பணக்காரர்கள்" என்ற கேட்டகரியில் வருகிறதா.

Unknown said...

நன்றி நன்மனம்,

//இதில் அரசியல்வாதிகள் இல்லாதது ஏன்? ஒரு வேளை நம்ம ஊர் சைட் டி.என்.ஏ ல மட்டும் தான் இப்படி புரோக்ராம் செய்ய பட்டுள்ளதா அல்லது "பணக்காரர்கள்" என்ற கேட்டகரியில் வருகிறதா.//

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?ஜப்பான்ல உள்ள ஷின்டோ மதத்தில் ஜப்பான் ராஜா தாங்க கடவுள்.நம்மூர்லயும் எம்ஜிஆருக்கு கோயில் எல்லாம் கட்டிருக்காங்க.எம்ஜிஆர் சமாதியில் மொட்டை அடிச்சு அலகு குத்திக்கறவங்க உண்டு.இதயதெய்வம்னு தானே அம்மாவை அழைக்கறாங்க.நம்ம சட்டசபை குறிப்புகளை எடுத்து படிச்சு பார்த்தா கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சார்ச்சனையே நடந்திருப்பது தெரியவரும்.:-))

நன்மனம் said...

செல்வன், நான் கேட்டது, நீங்க எழுதினதுல

//பணக்காரர்களையும் நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் வழிபடுகிறோமாம்//

ஏன் அரசியல் வாதிங்கள விட்டுட்டீங்கனு.

Unknown said...

நன்மனம்,

பொதுவா விளையாட்டு வீரர்கள் தாங்க அதிகம் வழிபடப்படுவார்கள்.அடுத்ததாக பணக்காரர்கள் (ராஜாக்கள்,ஜமிந்தார்கள் எல்லாம் இந்த வகையறாவில் வந்துவிடுவார்கள்).இதுபோக நிறைய வகையறாக்கள் (நடிகர்,நடிகையர்,சாமியார்கள்,அரசியல்வாதிகள்) வருவார்கள்.ஒரு உதாரணத்துக்கு தான் 2 வகையறாவை குறிப்பிட்டேன்.பொதுவா பிரபலம்னாலே அதில் அனைத்துவகை புகழ்பெற்ற மனிதர்களும் அடங்கிவிடுவார்கள்.

G.Ragavan said...

செல்வன்.....நல்ல கட்டுரை. இன்றைய மதங்கள் எப்படி உருவாகின என்று நினைக்கிறீர்கள்? இப்படித்தான். ஆனால் இதை ஒப்புக்கொள்ளும் துணிவு யாருக்கும் கிடையாது என்பதுதான் உண்மை.

Unknown said...

உண்மைதான் ராகவன்,

மதங்களின் வரலாற்றை கிளறினால் எத்தனையோ புதையுண்ட ரகசியங்கள் வெளிவரும்.

சரி..எப்படியோ தம் ஆதிமூதாதையர் ஒருவரை தானே வழிபடுகின்றனர் என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்று சொல்லி திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்:-)))

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

நானும் பதில் சொல்லலாம்னு பார்க்கிறேன் பிளாக்கர்கே பிடிக்கலைப்போல விடவே இல்லை என்னை :-)) நல்ல பதிவு. நீங்களும் இமேஜ் என்ற ஒரு மாய வட்டத்தில் சிக்கிட்டிங்க (ரஜினி,விஜய் போல) எல்லா பதிவுகளிலும் அவரே தெய்வம் ,இவரே தெய்வம் எனப்போடாமல் எழுத வருவதில்லை :-))

இது போன்ற ஆதர்ச நாயகன் / நாயகி வழி பாடு தேவை ,நன்மை என்று சொல்கிறார்ப்போல் உள்ளது உங்கள் கட்டுரை.இல்லை நான் தான் மாற்றி புரிந்து கொண்டேனா தெரியவில்லை!

உண்மையில் ஆதர்ச வழிப்பாடு இல்லாமல் இருப்போர் எண்ணிக்கை தான் அதிகம். ஆதர்ச வழிபாடு செய்வது ஒரு வகையான மன பிழற்வு என்றே சொல்கிறார்கள். சமுகத்தில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேறு வழி இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நல்லா கிரிக்கெட் ஆடுவான்,படிப்பான், பாடுவான், என அடையாளப்படுத்தி சொல்லிக்கொள்ள ஏதும் இல்லாமல் போகும் போது அந்த நடிகனின் ரசிகர் கட் அவுட் கு பால் அபிஷேகம் செய்தேன் என சொல்லி தன்னை அடையாளப்படுதிகொள்கிறான். IDENTITY CRISIS என சொல்ல வேண்டும்.இது தவிர்க்க பட வேண்டிய ஒன்று. சக்தி மான் என்ற தொலைக்காட்சி தொடர் வந்த போது சில சிறுவர்கள் சக்தி மான் என்னை காப்பத்து என மாடியில் இருந்து குதித்து இறந்து போய் இருக்கிறார்கள் சக்தி மான் வந்து காப்பாத்துவார் என நம்பி.

புனையப்பட்ட கதைகளில் நம்மால் இயலாத மனித தன்மைக்கு சாத்தியமில்லாத செயல்களை ஒருவர் செய்யும் போது நமக்கு இயல்பாக இந்த சமூகத்தின் அவலத்தை கண்டு அதனை ஏதும் செய்யாமல் இருக்கிறோமே என்ற மன அழுத்தம் காரணமாக திரையில் பார்த்ததை நம்பி கண்மூடித்தனமாக பின்பற்ற மனம் விழைகிறது.அந்த அறியாமையை சிலர் தூண்டி தொடர்ந்து தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்.எனவே இது போன்ற ஆதர்ச வழிபாடுகள் களையப்பட வேண்டிய ஒன்று!

Unknown said...

பதிவை விட அருமையான பின்னூட்டம் இட்டு பெயர் தட்டிக்கொண்டு போவது வவ்வாலுக்கு வழக்கமாகிவிட்டது.:-)))

விரிவான பதிலை இவருக்கு அளிக்க வேண்டும்.விரைவில் இடுகிறேன்.

நன்றி வவ்வால்

Unknown said...

//பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு அர்த்தமாம்//

தியானத்தில் ஈடுப்பட்டால் யோகம் கிட்டுமாம்

அப்படியா செல்வன்:-)

பட்டணத்து ராசா said...

வவ்வால்
//சமுகத்தில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேறு வழி இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.//
இந்த அடையாள படுத்திக்கிறதுதான் socailize பண்ணிக்க உதவுறது. தாழ்வுமானப்பான்மை உள்ளவர்கள் சுய கழிவிரக்கம் உள்ளவர்கள் பொதுவா இண்டரோவட் ஆசாமிகளுக்கு இந்த ஆதர்ச வழிபாடு ஒர் அளவுக்கு கை கொடுக்கும். இது சமர்த்தியமா உபயோகப்படுத்தினா நல்லது

Unknown said...

//அடுத்த கட்டம் "மனநிலை பாதித்த கட்டம்".பிரபலத்துக்காக அடுத்தவரை அடித்தல்,வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கும் அவர்கள் தயாராகிவிடுவார்களாம்.இக்கட்டத்தை "borderline-pathological" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.//

//எல்லா பைத்தியகாரதனத்துக்கும் இது தான் காரணமா? அப்ப நாம திருந்தவே முடியாதா? //

எல்லா மதக் கடவுள்கள்,கடவுளின் தூதர்கள் ,குருஜிக்கள்,கடவுள் இல்லை என்று சொல்லும் சீர்திருத்த வாதிகள்,அனைத்து ரக பாபாக்கள்,சாமியார்கள்,விளையாட்டு வீரர்கள்,எழுத்தாளர்கள்,வரலாற்று கதாநாயகர்கள்,பிரபலமான காதாபாத்திரங்கள்...அப்புறம் எதோ வலைப்பதிவாளர்களாமே அவுங்களையும் சேத்துக்கங்க....

இவர்களை வழிபட ஆரம்பித்தவர்கள் தனது நம்பிக்கையை கேள்வி கேட்கத் துணிவதே இல்லை.இவர்கள் அனைவரும் சுயத்தை இழக்கத் தயாரனவர்களே.நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்து தனக்கென்று அடையாளத்தை உருவாக்க முடியாதவர்கள் பிறரின் அடையாளங்களின் பின்னால் வாழ்வதே சுயமென்று அழிந்து போகிறார்கள்.

இரசிகனாக,பார்வையாளனாக,வாசகனாக இருக்கலாமே தவிர தான் கண்டதும், கேட்டதும், அனுபவிப்பதும் மட்டுமே உலகம் என்று எண்ணி அங்கேயே நின்று விடக்கூடாது. முடிந்தவரை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதே நல்லது.

உலகம் பெரிசு மாமோய்.

செல்வன்,
சிம்ரன் தெய்வத்துக்கு எங்காவது கோவில் இருக்கா? பழைய நேத்திக்கடன் ஒன்று பாக்கியிருக்கு :-)

வவ்வால் said...

வணக்கம் செல்வன் !

நான் பெயர் தட்டும் ஆசை எல்லாம் இல்லை(ஒரு வேளை இருக்குமோ?) உண்மையை சொல்லப்போனால் நீங்கள் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறீர்கள் உங்கள் பதிவுகளின் மூலமாக எனவே நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி செல்வன்! மேலும் நிறைய எழுதுங்க நானும் பின்னூட்டம் போட்டே பொழைச்சுகிறேன் :-))

வவ்வால் said...

வணக்கம் பட்டினத்து ராசா!

//தாழ்வுமானப்பான்மை உள்ளவர்கள் சுய கழிவிரக்கம் உள்ளவர்கள் பொதுவா இண்டரோவட் ஆசாமிகளுக்கு இந்த ஆதர்ச வழிபாடு ஒர் அளவுக்கு கை கொடுக்கும். இது சமர்த்தியமா உபயோகப்படுத்தினா நல்லது //

இந்த சாமர்தியம் இருந்த அவன் ஏன் இப்படி மூடத்தனமா கட் அவுட் கு பால் அபிஷேகம் பண்ணப் போறான் :-))

சிவமுருகன் said...

//மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்" //

சார் பதிவு போடும் போது, கொஞ்சம் நல்ல தலைப்பா வைங்க(நீங்க உலகின் புதிய கடவுள்ன்னு பதிவு இருக்கும் போது), தலைப்பை பார்த்தா படிக்கவே தோனலை,

சரின்னு மனச தேத்திகிட்டு உள்ளே வந்தா, நல்ல ஆய்வா எழுதி இருக்கீங்க, நானும் அந்த தினமலர் செய்தியை படித்தேன். சமுகத்திற்க்கு தேவையான சிந்தனை.

Unknown said...

வவ்வால்,

தனிமனித வழிபாடு தப்பில்லை.பட்டனத்து ராசா சொன்னதுபோல் இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கி பலர் பலனடைகிறார்கள்.ஒரு புகழ் பெற்ற மனிதரை முன்னுதாரணமாக வைத்து முன்னுக்கு வந்தவர்கள் பலர் உண்டு.பில்கேட்ஸை,இன்போசிஸ் நாரயணாசாமியை முன்னுதாரணமாக வைத்து முன்னேறியவர்கள் நிறைய பேர் உண்டு.

//சக்தி மான் என்ற தொலைக்காட்சி தொடர் வந்த போது சில சிறுவர்கள் சக்தி மான் என்னை காப்பத்து என மாடியில் இருந்து குதித்து இறந்து போய் இருக்கிறார்கள் சக்தி மான் வந்து காப்பாத்துவார் என நம்பி.//

அதே சக்திமான் சொல்லி தினமும் பால் குடிக்கும்,கீரை சாப்பிடும் குழந்தைகள் உண்டு.அமெரிக்காவில் பாப்பாய் ஷோ வந்தபின் கீரை சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததாம்.

இது ஒரு ஆயுதம் வவ்வால்.அதை நல்லதுக்கு பயன்படுத்துவதும்,கெட்டதுக்கு பயன்படுத்துவதும் நம் கையில் தான் உள்ளது.

அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி வவ்வால்

வவ்வால் said...

வணக்கம் தேவ்!
//பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு அர்த்தமாம்//

சிம்ரன பார்த்தா மனசு ஒரு நிலை கொள்ளாம அலைபாயுது அப்புரம் எங்கேருந்துங்கண்ணா தியானம் செய்கிறது :-))

Unknown said...

//இரசிகனாக,பார்வையாளனாக,வாசகனாக இருக்கலாமே தவிர தான் கண்டதும், கேட்டதும், அனுபவிப்பதும் மட்டுமே உலகம் என்று எண்ணி அங்கேயே நின்று விடக்கூடாது. முடிந்தவரை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதே நல்லது.//

உண்மை.

நல்ல பிரபலங்களை வழிபட்டால் முன்னேறலாம்.தப்பான ஆட்களை தேர்ந்தெடுத்தால் அழிந்துதான் போவோம்.

//சிம்ரன் தெய்வத்துக்கு எங்காவது கோவில் இருக்கா? பழைய நேத்திக்கடன் ஒன்று பாக்கியிருக்கு :-) //

நாமளே கோயில் கட்டிட வேண்டியதுதான்.:-))

///இவர்களை வழிபட ஆரம்பித்தவர்கள் தனது நம்பிக்கையை கேள்வி கேட்கத் துணிவதே இல்லை.இவர்கள் அனைவரும் சுயத்தை இழக்கத் தயாரனவர்களே.//

அருமையான வரிகள்.ரசித்தேன்.நன்றி

Unknown said...

//தியானத்தில் ஈடுப்பட்டால் யோகம் கிட்டுமாம்

அப்படியா செல்வன்:-) ///


தீபக்கை தான் கேக்கணும் தேவ்.என்ன தியானம் செஞ்சு யோகம் அடைஞ்சாருன்னு தெரியலை:-)))

Unknown said...

///வணக்கம் செல்வன் !

நான் பெயர் தட்டும் ஆசை எல்லாம் இல்லை(ஒரு வேளை இருக்குமோ?) உண்மையை சொல்லப்போனால் நீங்கள் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறீர்கள் உங்கள் பதிவுகளின் மூலமாக எனவே நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி செல்வன்! மேலும் நிறைய எழுதுங்க நானும் பின்னூட்டம் போட்டே பொழைச்சுகிறேன் :-)) ///

வவ்வால்,

அருமையான ஆழமான அறிவும் விஷயஞானமும் உங்களுக்கு இருக்கு.உங்க கவிதைகளை படித்தால் அருமையான கலைஞானம் இருக்கு.உங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு மேலும் வலிமை தான் சேர்க்கிறது.என் பதிவுக்கு வருபவர்கள் ஒரு முழுமையான உரையாடலை படித்த நிறைவுடன் செல்கின்றனர்.

Unknown said...

///சார் பதிவு போடும் போது, கொஞ்சம் நல்ல தலைப்பா வைங்க(நீங்க உலகின் புதிய கடவுள்ன்னு பதிவு இருக்கும் போது), தலைப்பை பார்த்தா படிக்கவே தோனலை,

சரின்னு மனச தேத்திகிட்டு உள்ளே வந்தா, நல்ல ஆய்வா எழுதி இருக்கீங்க, நானும் அந்த தினமலர் செய்தியை படித்தேன். சமுகத்திற்க்கு தேவையான சிந்தனை. ///

கோவிச்சுகாதீங்க சிவமுருகன்,

தலைப்பை கோணங்கித்தனமா வைப்பதுதான் என் பழக்கம்.அதுக்கு ஆரம்பத்தில் திட்டு கிடைத்தபோதும் இப்போது எல்லாருக்கும் அது பழகிவிட்டது.யாரும் திட்டுவதில்லை.தொலைஞ்சு போகட்டும்னு விட்டுட்டாங்க:-)))

Unknown said...

//சிம்ரன பார்த்தா மனசு ஒரு நிலை கொள்ளாம அலைபாயுது அப்புரம் எங்கேருந்துங்கண்ணா தியானம் செய்கிறது :-)) ///


அதுக்குதான் கண்ணை மூடி தியானம் செய்யணும்ங்கறது:-)))

கண்ணைமூடினாலும் அவங்க உருவமே மனசுக்குள் வருதுன்னா நான் பொறுப்பில்லை:-)))

(எங்க வீட்டுல யாராவது இந்த பதிவை படிச்சா நான் அம்பேல்:-))))

தாணு said...

செல்வன்
ஆதர்ச வழிபாடு என்பது நீங்கள் சொன்னதுபோல் டிஎன்ஏ-வில் ப்ரோகிராம் செய்யப் பட்டிருக்கவேண்டும். பிரபலங்களின் பரிச்சயமில்லாத அப்பாவி கிராமத்தான்களுக்கும் அது இருக்கிறதே. பெண்களுக்கு பொதுவாக இந்த வழிபாட்டு பண்பு அதிகம் என்று நினைக்கிறேன். தன் தந்தையோ சகோதரனோ கூட முக்கிய வழிபாட்டு ஆளாக இருப்பார்கள். அதே சாயலில் கணவன் அமையாதபோது அங்கும் பிரச்னைதான். தாயைப் போல் மனைவி அமையப் பெறாத எத்தனை ஆண்கள் மனதுக்குள் சுருண்டு போய்விடுகிறார்கள்.
நீங்க சொன்ன விடலைப் பருவ வழிபாடு எல்லாராலும் கடந்து செல்லப் பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். I think it is a part of life which is unescapable by every one.ஆனால் அதுதானா இதுன்னு எல்லோரும் ஒரு நிமிஷம் யோசித்துப் பார்க்கலாம். தீவிர ஈடுபாடு உள்ளவங்களை மட்டுமே அடுத்தவர் பார்க்க முடிகிறது. பிரபலங்களை போற்றுபவர் விமர்சிக்கப் படுவார்கள், எல்லை மீறுபவர்கள் துன்பப் படுவார்கள்.
எப்படியோ என் வழிபாடு அந்தக்கால கமலில் ஆரம்பிச்சு இந்தக்கால ஆர்யா, சூர்யா வரை சுமுகமா போய்க்கிட்டு இருக்கு. எங்க வீட்லே சொல்லி மாட்டி வைச்சிடாதீங்க!!!

Unknown said...

அருமையான பின்னூட்டம்.நன்றி தாணு

//பெண்களுக்கு பொதுவாக இந்த வழிபாட்டு பண்பு அதிகம் என்று நினைக்கிறேன்.//

பெண்களை எளிதில் அடக்கும் சமூகங்களில் இப்படி இருக்கலாம் என நினைக்கிறேன்

//தன் தந்தையோ சகோதரனோ கூட முக்கிய வழிபாட்டு ஆளாக இருப்பார்கள். அதே சாயலில் கணவன் அமையாதபோது அங்கும் பிரச்னைதான். தாயைப் போல் மனைவி அமையப் பெறாத எத்தனை ஆண்கள் மனதுக்குள் சுருண்டு போய்விடுகிறார்கள். //

உண்மை.நம் கலாச்சாரத்தில் தாய்தந்தை வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது.

//எப்படியோ என் வழிபாடு அந்தக்கால கமலில் ஆரம்பிச்சு இந்தக்கால ஆர்யா, சூர்யா வரை சுமுகமா போய்க்கிட்டு இருக்கு. எங்க வீட்லே சொல்லி மாட்டி வைச்சிடாதீங்க!!! //

நானே என் கட்டுரை தலைப்பை வீட்டுல பாத்தா உதைகிடைக்குமோன்னு பயந்துட்டு இருக்கேன்.:-))))

வவ்வால் said...

//அருமையான ஆழமான அறிவும் விஷயஞானமும் உங்களுக்கு இருக்கு.உங்க கவிதைகளை படித்தால் அருமையான கலைஞானம் இருக்கு.உங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு மேலும் வலிமை தான் சேர்க்கிறது.என் பதிவுக்கு வருபவர்கள் ஒரு முழுமையான உரையாடலை படித்த நிறைவுடன் செல்கின்றனர்//

நன்றி செல்வன் ,தடை ஏதும் இல்லாமல் எனது பின்னூட்டங்களை முழுதாக வெளியிட்டு ஆதரவளித்தமைக்கு.ரொம்ப நீளமாக போகுதே எப்படி சுருக்கமா எழுதுவது என்று மண்டை உடைத்து கொண்டாலும் நீளமான பின்னூட்டமாகவே போய்விடும். நல்ல வேளை ரொம்ப நீளமாக இருக்குனு தூக்கிடாம நீங்க போடுறிங்க!நன்றி!

//அதுக்குதான் கண்ணை மூடி தியானம் செய்யணும்ங்கறது:-)))

கண்ணைமூடினாலும் அவங்க உருவமே மனசுக்குள் வருதுன்னா நான் பொறுப்பில்லை:-)))//

கண் மூடினால் உன் நியாபகம் பூ பூத்ததே என் வாலிபம் நு ஒரு பாடல் வரும் அப்புறம் எங்கே கண் மூடி தியானம் ,நிரந்தரமா கண் மூடின பிறகு தான் அலை பாயமா இருக்குமோ மனசு :-))

பின்குறிப்பு: தியானம் செய்யும் போது கணகளை மூடாமல் செய்ய வேண்டும் அதுவே சரியான முறை என்கிறார்கள்.இதனை இராமலிங்க அடிகள் கண் மூடி பழக்கம் மண் மூடி போக வேண்டும் என்கிறார். கண்களை திறந்து கொண்டு நமது மூக்கு நுனியை பார்த்தவாறு மனதை ஒரு முக படுத்த வேண்டும் என சொல்கிறார்கள்.இதற்கு உதாரணம் மகாவதார் பாபாஜி இந்த யோக நிலையில் தான் இருப்பதாக படம் உள்ளது ,பாபாவில் காட்டுகிறார்களே அவர் தான்!