Wednesday, May 24, 2006
92.குரங்கே இனி கடவுள்.
மதுமிதா அவர்களுக்காக இந்த பதிவு
வலை பதிவர் பெயர் : செல்வன்
வலைப்பூ பெயர்: உலகின் புதிய கடவுள்
வலைப்பதிவின் சுட்டி: www.holyox.blogspot.com
www.holyape.blogspot.com
ஊர்: கோவை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானே கண்டுபிடித்தேன்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 17 2006
இது எத்தனையாவது பதிவு:92
இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://holyox.blogspot.com/2006/05/92.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
கடவுளாக வேண்டுமென்றுதான்.
சந்தித்த அனுபவங்கள்:
தரம் வாய்ந்த கட்டுரைகளை இடவேண்டும் என்பதே என் லட்சியம்.அதற்குண்டான ரசிகர் வட்டம் சிறிது என்றாலும் தரத்துடன் சுவாரசியத்தை கலந்தால் நல்ல ரசிகர் வட்டம் வருமென நம்புகிறேன்.எழுத துவங்கியபோது அதற்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என பயந்தது உண்மை.அந்த பயம் இன்னும் அப்படியே இருக்கிறது என்றாலும் இதுவரை என் மீது எந்த முத்திரையும் குத்தப்படாமல் இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி.முற்போக்குவாதம்,பிற்போக்குவாதம்,ஆத்திகம்,நாத்திகம்,சினிமா,கதைகள்,
பெண்ணியம்,வணிகம்,தத்துவம்,பின்நவீனத்துவம் என அனைத்தையும் கலந்து எழுதிவருவதால் அனைவரும் குழம்பிப்போய் எனக்கு எந்த முத்திரையும் குத்தாமல் இப்படியும் ஒரு ஜந்து தமிழ்மணத்தில் இருக்கட்டும் என விட்டு வைத்துள்ளனர் என நினைக்கிறேன்.
பெற்ற நண்பர்கள்:
என் பதிவை படிக்கும் அனைத்து வாசகர்களும் எனக்கு வலைப்பதிவு மூலம் கிடைத்த நண்பர்களே.
கற்றவை:
Politically correctஆக எழுதுவது மிகவும் சிரமம்.ஆனால் எழுத்துலகில் சர்வைவலுக்கு அது அவசியம்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
எழுத்தே சுதந்திரத்தின் உயிர்நாடி தானே?என் எழுத்துக்களுக்கு நானே அணிவித்துக்கொண்ட விலங்குகள் அன்றி வேறேதும் தடைகள் இதுவரை வந்ததில்லை.எழுத்துலகில் புரட்சி செய்ய இன்னும் நான் வளர வேண்டும் என உணர்கிறேன்.
இனி செய்ய நினைப்பவை:
கொஞ்சம் காசு கிடைத்தால் என் பிளாக்கை ஒரு வலைத்தளமாக மாற்றுவது.இணைய பத்திரிக்கை ஒன்று துவக்குவது.இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற சொல்லாலும்,செயலாலும் உதவுவது.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
நான் கடவுள்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
கடவுள் இறந்துவிட்டார்.மனிதனே இனி உலகின் புதிய கடவுள்.அந்த பொறுப்பை அவன் ஏற்க வேண்டும்.அவன் அதை செய்ய தயங்குகிறான்.பழைய கடவுள் சாகவில்லை,உயிரோடு இருக்கிறார் என அவன் அஞ்சுகிறான்.அந்த அச்சத்தை விடுத்து பழைய கடவுளின் சாம்பல் மேல் புதிய கடவுளாக மனிதன் உலகை ஆள வேண்டும்.
Homo sapiens குரங்கே இனி கடவுள்.
Subscribe to:
Post Comments (Atom)
291 comments:
1 – 200 of 291 Newer› Newest»செல்வன்,
// கடவுள் இறந்துவிட்டார்.மனிதனே இனி உலகின் புதிய கடவுள் //
அருமையான வரிகள்.
நல்ல சிந்தனை.
//குரங்கே இனி கடவுள்.//
உண்மை!?!
நன்றி சிவபாலன்.
ஆம்.
குரங்கு தான் கடவுள்.குரங்குகள் தான் இனி பிரபஞ்சத்தை வென்றெடுக்க வேண்டும்.
அன்புடன்
செல்வன்
செல்வன்,
// குரங்குகள் தான் இனி பிரபஞ்சத்தை வென்றெடுக்க வேண்டும்.
//
மனிதனின் பரிமானத்தின் முன் நிலை என்பதால் அவ்வாறு சொல்கிறீர்களா??
அன்பின் சிவபாலன்,
மனிதன் என்பவன் நீங்கள் சொன்னதுபோல் பரிணாமத்தின் ஒரு நிலைதான்.மதங்கள் சொல்லுவதுபோல் அவன் இயற்கையின் உன்னத படைப்பு அல்ல.இயற்கையின் மற்றுமொரு பரிசோதனை இக்குரங்கினம்.அவ்வளவுதான்.தற்போது பிரபஞ்சத்திலேயே வலிமை வாய்ந்தவன் மனிதன் தான்.அதனால் அவனே கடவுள்.
அன்புடன்
செல்வன்
செல்வன், நீங்க ஆஞ்சநேய பக்தரா
ஆமா சிவா.ஆஞ்சநேயர் என் இஷ்ட தெய்வம்.அவரை பற்றி "உலக சாதனை செய்த ஆஞ்சநேயர்" எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இதோ
http://holyox.blogspot.com/2006/02/blog-post_113901493753665734.html
செலவன், நான் உங்களின் முந்தைய பதிவை பார்க்கமலேயே ஒரு ஜோக்குகாக தான் கேட்டேன்.
அஞ்சநேய வீரா..அனுமந்த சூரா
வாயுகுமாரா...
கடவுள் செல்வன்,
என்னங்க, நேற்று முழுவதும் ரஜினி தான் கடவுள்னு எழுதிகிட்டு இருந்தீங்க? அதுக்குள்ள குரங்குக் கடவுள் கிட்ட போய்ட்டீங்க?!!
எல்லாரும் தான் கடவுள்னு சொல்லியாச்சே, அப்புறம் எதற்கு உங்க பதிவின் பெயரில் ஒரு holy?
நீங்கள் அந்த பதிவை பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும் சிவா.அது ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதியது.சும்மா ஆஞ்சநேயர் பற்றி பேச்சு வந்ததால் அந்த சுட்டியை தந்தேன்.(சைடில் நைசாக பழைய பதிவுக்கு ஒரு விளம்பரம்...ஹி.ஹி..ஹீ :-))))))
இன்னைக்கு மட்டும் பழைய பதிவுகளோட சுட்டியை தந்து 7 பின்னூட்டம் வாங்கிவிட்டேன்.:-)))
பொன்ஸ் அக்கா
ரஜினி கூட homosapiens தானே?:-))
ரஜினி நடிப்பு கடவுள்ன்னு ஒன்றே குலம் ரஜினியே தெய்வம் பதிவுல போட்டிருந்தேன்.
holyox என்பது கோயில் மாடு என்பதை குறிக்கும்.எங்க அம்மா என்னை "நல்லா தின்னுட்டு கோயில் மாடு மாதிரி சுத்து"ன்னு திட்டுவாங்க.அதனால அந்த பெயரை வெச்சேன்.மத்தபடி நல்ல மனிதர்கள் அனைவரும் holy தான்.
செல்வன்
படத்தில் இருப்பவரைப் பற்றி சில் வரிகள்?
// நல்ல மனிதர்கள் அனைவரும் holy தான்.//
இது உங்கள் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது!
மனிதர்கள் அனைவரும் ஹோலி தான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!?
மற்றபடி, ரஜினிக்கும், குரங்குக்கும் நிறைய சம்பந்தம் உண்டென்பதை அவரே தன் திரைப்படங்களில் காட்டியுள்ளார்!
எங்கே!
ரஜினி ரசிகர்கள் வந்து எனக்குக் கை கொடுங்கள் பார்ப்போம்!
ரஜினி பற்றிய இந்தப் பதிவு ஒரு 100 பின்னூட்டமாவது பெறாவிட்டால்,
.................................................................
நாமெல்லாம் ரஜினி ரசிகராயிருந்தும்,
செல்வனின் சிந்தனைச் சுரங்கங்களைச் சுவைத்தும்,
என்ன பயன்!?
வாங்க!
வந்து ஒரு கை கொடுங்க!
அவர் தான் முதல் முதலாக கடவுளின் மரணத்தை உலகுக்கு அறிவித்தவர் சிவபாலன்.அவரை பற்றி இதுவரை இரண்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.
http://holyox.blogspot.com/2006/02/39.html
http://holyox.blogspot.com/2006/02/blog-post_06.html
நீட்சே!!!!!!!!!!!!!!
எஸ்.கே சார்
குரங்கு பதிவில் ரஜினியை இழுத்து வந்த உங்களுக்கு என்ன தண்டனை தருவது என யோசித்துகொண்டிருக்கிறேன்.ஒன்றும் பிடிபட மாட்டேன் என்கிறது.
தமிழ்மண ரஜினி ரசிகர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வை சொல்லுங்களேன்:-)))
அனைத்து மனிதரும் holy என்று சொல்ல ஆசைதான்.ஆனால் அவர்கள் தீய குணங்களை விட்டால் தான் holy ஆவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.
நீட்சே!!!!!!!!!!!!!! ////
அது.....
சூப்பர்...
செல்வன்,
எனக்கு தண்டனை தருவதை ஒத்தி வைத்து,
அவசியமில்லாமல், இந்தப் பதிவில் ரஜினியை இழுத்த பொன்ஸைக் கண்டிக்க மனமின்றி,
எனக்கு தண்டனை தர நினைக்கும் உங்களையும்.....
அதே ரஜினி ரசிகர்களிடம் விட்டு விடுகிறென்!!
பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்பது இதுதானோ!
பெண்ணென்றால் பேயும் இரங்கும் எனச் சொல்வர்!
நீங்களுமா!!!!!
:))
ஒரு 'கால்'தான் வித்தியாசம்!!
பொன்ஸ் அக்கா ரஜினி மீது மாறாத அன்பும் பாசமும் உடையவர்.ஆனால் நீங்கள் விஜய்காந்த் ரசிகர்.அதனால் தான் சந்தேகப்படவேண்டியதாயிருக்கிரது:-))))
இருந்தாலும் அண்ணன் குமரனின் ஆணைக்கு கட்டுப்பட்டு ரஜினி ரசிகர்களும் கேப்டன் ரசிகர்களும் இணைந்தே பணியாற்றுவது என்று முடிவிலிருப்பதால் இப்போதைக்கு தண்டனை ஒத்தி வைக்கப்படுகிறது:-)))
சினிமாவில் ரஜினி சூப்பர்ஸ்டார்
அரசியலில் கேப்டன் சூப்பர்ஸ்டார்
//சினிமாவில் ரஜினி சூப்பர்ஸ்டார்
அரசியலில் கேப்டன் சூப்பர்ஸ்டார் //
எல்லாம் நேரம்ய்யா ம் நடத்துங்க...
ராசா..டேவ் தம்பி.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.கேப்டன் முதல்வரா கூட வந்துடுவார்:-))))
//கேப்டன் முதல்வரா கூட வந்துடுவார்:-)))) //
செல்வன் அண்ணா இந்த தகவலுக்கு நன்றி...:)
எழுதுங்கய்யா என்ன வேணும்னாலும் எழுதுங்க...:)
//ரஜினிக்கும், குரங்குக்கும் நிறைய சம்பந்தம் உண்டென்பதை அவரே தன் திரைப்படங்களில் காட்டியுள்ளார்!//
SK, இப்படி சொல்லுறதுல்ல உங்களுக்கு ஒரு சந்தோஷம்.:)
//ரஜினி ரசிகர்கள் வந்து எனக்குக் கை கொடுங்கள் பார்ப்போம்!//
எங்கே கையை நீட்டுங்க...பாப்போம்ன்னு ரஜினி ரசிகர்கள் லைனில் நிக்குறாங்கப்பூ:)
எல்லாமே தமாஸ் தான் இந்த உலகத்திலே:)
செல்வன் அண்ணா இந்த தகவலுக்கு நன்றி...:)
எழுதுங்கய்யா என்ன வேணும்னாலும் எழுதுங்க...:) //
இந்த தேர்தலில் கேப்டனுக்கு 8% ஓட்டு.அடுத்த தேர்தலில் இதை டபிளாக்கினால் 2016ல் அசைக்க முடியாத சக்தி ஆயிடுவார் கேப்டன்.லெட் அஸ் வெயிட் அன்ட் வாட்ச்
எல்லாமே தமாஸ் தான் இந்த உலகத்திலே:) //
வலைப்பூ இருக்கறதே டமாசுக்கு தானே டேவ்?:-))
வலைப்பு மூலம் கைகொடுத்தவர்கள் நிரைய பேர் உண்டு.கால்கரி சிவாவுக்கு கொத்தனார் கைகொடுத்தது எப்படி?வலைப்பூ மூலம் தானே?
அடுத்த தலைப்பு என்னாங்கண்ணா வலைப்பூவே கோயில் வலைஞர்களே கடவுள்கள்?
ம்ம்ம் பின்னுங்க...:)
//அவசியமில்லாமல், இந்தப் பதிவில் ரஜினியை இழுத்த பொன்ஸைக் கண்டிக்க மனமின்றி,//
எஸ்கே, என்னங்க பிரச்சனை நமக்குள்ள? எங்க போனாலும் வம்புக்கு வர்றீங்க?!!
//பெண்ணென்றால் பேயும் இரங்கும் எனச் சொல்வர்!//
செல்வன் உலகின் புதிய கடவுள்னு சொல்லிக்கிடறாரு, அவரைப் போய் ம்ச்.. என்ன எஸ்கே இது?!!
:))
//ரஜினிக்கும், குரங்குக்கும் நிறைய சம்பந்தம் உண்டென்பதை அவரே தன் திரைப்படங்களில் காட்டியுள்ளார்!//
இதைத் தான் செல்வனே சொல்லிட்டாரே!!
// ரஜினி கூட homosapiens தானே?:-))//
:)))
அடுத்த தலைப்பு என்னாங்கண்ணா வலைப்பூவே கோயில் வலைஞர்களே கடவுள்கள்?
ம்ம்ம் பின்னுங்க...:)///
அடுத்ததாக எழுதவிருக்கும் தலைப்புகள்
1.மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்
2.ஒன்றே குலம் விருமாண்டியே தெய்வம்
விரைவில் எதிர்பாருங்கள் :-)))
அக்கா,...நைசா எனக்கும் எஸ்.கேவுக்கும் சண்டை மூட்டி விடறீங்களா?நியாயமா?:-)))
ரஜினி homo sapiens என்பது உண்மைதான்:-)))
//ஒன்றே குலம் விருமாண்டியே தெய்வம்//
அதானே பார்த்தேன்.. ஒரேயடியா ரஜினி சார்பாவே பேசிகிட்டு இருக்கீங்களேன்னு :)
//நைசா எனக்கும் எஸ்.கேவுக்கும் சண்டை மூட்டி விடறீங்களா?நியாயமா?//
நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி,
புல்லுக்கும் ஆங்கே... :)
காலைலேர்ந்து நானும் எஸ்.கேவும் தனியா சண்டை போட்டுகிட்டு இருந்தோம், குமரன் பதிவில்.. இப்போ குமரனைக் காணோம்.. அதான் :)
// கடவுள் இறந்துவிட்டார்.மனிதனே இனி உலகின் புதிய கடவுள் //
அதான் எப்போதோ ஆகிவிட்டதே. முப்பதுமுக்கோடி தேவர்கள் என்று இதை தான் சொன்னரோ!
ம்ஹம் இப்படியே போனாக் கட்டாயம் முத்திரை குத்திடுவாங்க சாமி...
சாமி குத்தம் ஆயிரப் போகுது பாத்துப் பதியுங்க
ஒன்றே குலம் ஒருவனே தேவன்... ( தேவன் அப்படின்னு கேப்டன் நடிச்ச படம் ஒண்ணு வந்துருக்குன்னு நினைக்கிறேன்)
அக்கா நமக்கு ரஜினி பிடிக்கும் என்றாலும் விருமாண்டியும் பிடிக்கும்.(ஆனால் இது வேறு விருமாண்டி:-)))))
நீஙக் எஸ்.கே சாரை வம்பிழுக்கறீங்க.அவர் தலைமரைவாயிட்டார்.அனேகமா இப்ப தூங்கிட்டிருப்பார்னு நினைக்கறேன்.காலையில் சண்டைக்கு வரலாம்:-)))
ம்ஹம் இப்படியே போனாக் கட்டாயம் முத்திரை குத்திடுவாங்க சாமி...
சாமி குத்தம் ஆயிரப் போகுது பாத்துப் பதியுங்க
ஒன்றே குலம் ஒருவனே தேவன்... //
டேவ்
நம்ம ஆளுங்க கிட்ட இருக்கும் சில தப்பான சிந்தனைகளை ஒழிக்க தான் இப்படி பதிவு போடுகிறேன்.
ரஜினியை,சிம்ரனை கடவுள் என்று சொன்னால் ஏதோ சாமி குத்தம் என்று அலறுகிறார்கள்.ஏதோ கடவுளை கேவலப்படுத்தி விட்டதாக நினைப்பு.ரஜினி மோசம்,சிம்ரன் சினிமா நடிகைதானே..இவர்களை போய் கடவுள் என்பதா என்று ஒரு நினைப்பு.செய்யும் தொழிலை வைத்து மனிதரை எடை போடும் பழக்கத்தின் விலைவு இது.அதுபோக சாமியோடு ஒருவரை ஒப்பிடுதல் தப்பு என்ற மதம் கற்பித்த மூடப்பழக்க வழக்கம் வேறு.அதை எல்லாம் மாற்ர வேண்டும்.
அதற்குதான் இப்படி தலைப்பு வைக்கிறேன்.
தலைப்புக்கு பொருத்தமான கட்டுரை தான் எழுதுவேன்.படித்தால் அனைவரும் பாராட்டத்தான் செய்வார்கள்.
மற்றபடி முத்திரை குத்துவது பற்றி எல்லாம் கவலை இல்லை.அனைத்து முத்திரைகளையும் உடைத்தெறிவது தான் நமது வேலை.
அதான் எப்போதோ ஆகிவிட்டதே. முப்பதுமுக்கோடி தேவர்கள் என்று இதை தான் சொன்னரோ! ///
இல்லைங்க சிவமுருகன்.
அது நீட்சே சொன்ன ஒரு தத்துவம்.இதுபற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதினேன்.நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்கவும்
http://holyox.blogspot.com/2006/03/70.html
முன்பு ஒரு முறை கேட்ட அதே கேள்வி... நீங்கள் கடவுள் மறுப்பாளாரா? இல்லை மதங்களின் மறுப்பாளரா?
நான் ஆத்திகவாதி... கடவுள் நம்பிக்கை உள்ளவ்ன்...மதங்களில் நம்பிக்கை குறைவு.. ஆனாலும் மதங்கள் தேவையா இல்லையா என்றால் எனக்கு விடைச் சொல்ல முடியாது...
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கடவுளை மறுக்கச் சொல்லுகிறீர்களா? இல்லை கடவுள் நம்பிக்கையை மறுக்கச் சொல்லுகிறீர்களா?
மதங்களை எதிர்க்கிறீர்களா?
விளக்கம் ப்ளீஸ்
அன்பின் டேவ்,
இதற்கு பதில் அவ்வளவு சுலபமல்ல.
நான் யாரையும் கடவுளை நம்பவோ,மறுக்கவோ சொல்லவில்லை.
கடவுள் பக்தி இருந்தால் அது மனதுக்குள்,வீட்டின் பூஜையறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவன்.
வீட்டுக்கு வெளியே காலடி எடுத்து வைத்தால் செக்யூலரிஸ்டாக மாறிவிட வேண்டும்.
நம் மத நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணித்தல் தவிர்க்கப்படவேண்டும்.நாம் நம் மத நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்கிறோம் என்பது தெரியாமலே அதை செய்துகொண்டிருக்கிறோம்(எ.கா கற்பு,ஒழுக்கம்,நேர்மை,உண்மை,தூய்மை)
உலகை de-divinize செய்ய வேண்டும் என்பது என் ஆசை.கடவுளை ஒழிக்க வேண்டும் என்பது de-divinizing அடிப்படையில்தான்.
மற்றபடி ஒரு தனிமனிதன் தன் உள்மனதில் எந்த நம்பிக்கையை வைத்திருந்தாலும் அது none of my business.
அதை அடுத்தவர் மீது திணிக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.நாம் அதை செய்கிறோம் என்பதை நாம் அறியாமலே இருக்கிறோம்.
என்னை பொறுத்தவரை என் வீட்டுக்குள் நான் ஆத்திகன்.வீட்டை தாண்டி காலடி எடுத்து வைத்தால் நான் ஒரு செக்யூலர் லிபெரல்.
எனக்கு நான் வைத்திருக்கும் அளவுகோல்களை வைத்து நான் அடுத்தவரை மதிப்பிடுவதில்லை.அதுவே என்னளவில் உண்மையான ஆத்திகம்.
மதங்களை நான் எதிர்க்கிறேன்.ஏனெனில் அவை புனித நூல்கள் என்று சொல்லி மனிதனின் சிந்தனையை முடக்கிவைத்துவிட்டன.
சட்டங்கள் காலத்துக்கேற்ப மாறவேண்டும்.ஒரே புத்தகத்தின் மூலம் எந்த மனிதனும் தன் வாழ்வின் அனைத்து நன்மை தீமைகளையும் அடைய முடியாது.மதநூல்களின் சில பகுதிகள் கடவுளே வந்து சொன்னதுபோல் அவ்வலவு நன்றாக இருக்கும்.சில பகுதிகள் சைத்தான் வந்து எழுதியது போல் அறுவெறுப்பாக இருக்கும்.
அந்த அறுவறுப்பான பகுதிகளையும் கடவுளின் வார்த்தை என்று சொல்லித்திணித்தால்...
எனக்கு பிடிக்காதது அதுதான்.
இது உங்கள் கருத்து இதை நீங்கள் பதிவுப் போட்டு தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவர் மீது திணிக்கிறீர்கள்...( உங்கள் வாதப் படி).. நீங்களும் உங்கள் கருத்துக்களை உங்கள் மனத்தோடு வைத்திருக்கலாமே என்ற எதிர் வாதம் எழுந்தால்...
இது தொடர் வாதமாக அல்லவாச் செல்லும்.....
வாதங்கள் வ்ழி காட்டுமா? வலி காட்டுமா? தெரியவில்லை...
டேவ்,
என் கருத்தை நான் என் கருத்து என்று சொல்லி அல்லவா சபையில் வைக்கிறேன்?"இது தெய்வத்தின் கட்டளை.ஏற்காவிட்டால் நரகம்" என்றா சொல்லுகிறேன்?
என் கருத்துக்களை நான் காரன காரியங்களுடன்,சாதக பாதகங்களை சொல்லித்தான் எடுத்து வைப்பதாக நினைக்கிறேன்.ஆனால் மதம் சொல்லும் கருத்துக்கள் "சாமி சொன்னார்.அதனால் இது சரி/தப்பு" என்றல்லவா வருகின்றன?
ஆயிரம் கருத்துக்களை சொல்லலாம்.பரிசீலிக்கலாம்.ஆனால் "கடவுள் வார்த்தையில் "பரிசீலனை என்பதே கிடையாதல்லவா?அதுதானே பிரச்சனை.
//குரங்கே இனி கடவுள்.//
செல்வன் இதனை விரித்து ஒரு பதிவு
போடுங்களேன்.
அடுத்து உங்களுக்கு எந்த முத்திரையும் குத்தப்படாமல் இருப்பதற்காக நான் வருந்துகிறேன். எல்லோரிடத்திலும், எப்போதும் நாம் நல்லப் பிள்ளையாக இருக்க முடியாது! உலகில் இதுவரை எழுதப்பட்டு வரும் அனைத்தும் ஒரு வர்க்கச் சார்புடையதே!
சந்திப்பு சத்தியமான வரிகள்:))
வருக சந்திப்பு.
இது பற்றி முன்பே சில பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.
இனியும் இதுபற்றி விரிவாக எழுதப்போகிறேன்.
நான் சார்பற்ற முறையில் எழுதுவதாக சொல்லவில்லை.ஆனால் இலக்கியவாதி,ஆன்மிகவாதி,நாத்திகவாதி என முத்திரைகள் ஏதும் நானறிந்து என் மீது என் பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலோ அல்லது மற்றவர்களின் பதிவுகளிலோ குத்தப்பட்டதில்லை.அது ஒரு மிகப்பெரும் விடுதலை உணர்வை எனக்கு தருகிறது.ஒரு இமேஜ் விழுந்து அதற்கு தோதான ரசிகர் வட்டம் உருவாகிவிட்டால் அதன்பின் அதிலிருந்து வெளிவருவது கடினம்.
Enna aachu? Are you saying it conceptully to motivate people? Do you really mean it? Then why are you writing about Rama and Sita in your blogs? Sometimes you sound like a hypocrite. //
Ashlyn,
I say it so that people can take control of their lives.Many people live a religion centred life.God's current role in society has to be reversed.We have to draw our law from fellow humans and not from God.When I say dethrone God it doesnt mean atheism.It means redescribing God,religion and her role in society.
When I write about kamban its literature.When I write about postmodernism it is philosophy.I write both because I am interested in both.
செல்வன்,
//என்னை பொறுத்தவரை என் வீட்டுக்குள் நான் ஆத்திகன்//
இது எனக்கு ஒரு புது செய்திங்க.. இதை நான் எதிரே பார்க்கலை..
சந்திப்பு,
முத்திரை குத்தப்படாததால், எல்லாருக்கும் 'நல்ல' பிள்ளையாக இருக்கிறார் என்று அர்த்தமா என்ன? எல்லாருக்கும் 'கெட்ட' பிள்ளையாக இருந்தால் கூட போதுமே.. செல்வன் சொல்லுவது சரியாகத் தோன்றுகிறது.. ஒரு இமேஜ் விழுந்துவிட்டால் அப்புறம் மாற்றி எழுதுவது கடினம்..
சரி, செல்வன், அது என்னங்க, மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்? ஒரு ஜோதிகாவோ, லைலாவோ தெய்வமாக மாட்டாங்களா?!! :))
பொன்ஸ் அக்கா
நான் ஆத்திகம்,பக்தி பற்றி நிறைய கட்டுரை என் பிளாக்கிலேயே எழுதியுள்ளேன்.கடவுள் என்பது மனிதனை உயர்த்தும் ஒரு தத்துவமாக ஆக முடியும் என எனக்கு நம்பிக்கை உண்டு.ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பும் மிக அதிகம்.என்னளவில் அதிலுள்ல நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வதாக தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
சிம்ரன் பிடிக்கும் என்பதால் சிம்ரனே தெய்வம்.ஜோதிகா லைலா எல்லாம் அவ்ளவா பிடிக்காது.:-)))
Ashlyn,
It is difficult to explain my concept of God via feedbacks.I will post a seperate article on that next week and will explain my religious beliefs.I hope that will clear all doubts.
அய்யய்யோ செல்வன்,
அங்கே குமரன் 100 அடிக்கிறாரு!
நீங்க இன்னும் 50-ஏ தாண்டலை!
அதுக்குள்ளே, நான் இன்னொரு பதிவு போடறேன்னு பொசுக்குன்னு முடிச்சிட்டீங்களே!
சுத்த வெவரம் தெரியாத புள்ளையா இருக்கீங்களே!
சும்மா, வளத்த வேண்டாமா!
அப்புறம், நீங்க எப்படி 100 அடிக்கிறது?
வாங்க பொன்ஸ், ஐயாவைத் தேத்திருவோம்!!
:))
இப்ப என்ன சொல்ல வர்றீங்க, செல்வன்,
கடவுள்னு ஒருத்தர் கண்டிப்பா வேணும்னு ஒத்துக்கிறீங்கதானே!?
நம்ம ராமர், கிருஷ்ணர் இவங்கல்லாம் கூட அப்பைடி மனுஷங்களா இருந்து தெய்வமா ஆனவங்க தானே?
என்ன நான் சொல்றது?....!
எஸ்.கே, நமக்கு இந்த ஆத்திகம் நாத்திகம் கான்சப்ட்ல நிறைய தெரியாது..
தீவிர ஆத்திகவாதியா இருந்த நான், கொஞ்சம் சொந்தமா சிந்திக்க ஆரம்பிச்சதுக்கப்புறம்(??!!) பாதி நாத்திகவாதியா ஆகிட்டேன்..
ராமர், கிருஷ்ணர் எல்லாம் மனுசங்களா இருந்தாங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும், என்ன ஆதாரம்னு கேக்கிற ஆளு நான்..
இந்தப் பதிவில் அடுத்தப் பின்னூட்டம்னு நான் போட நினைச்சது இது தான்:
"செல்வன், ரஜினியால் இணைஞ்ச நம்ம இப்படி சிம்ரனால பிரிவதை எண்ணி வேதனைப் படுகிறேன். இப்போதும் உங்கள் முடிவை மாற்றும் நாளில் மீண்டும் ஒரு நேர்கோட்டில் சந்திப்போம்" (கொஞ்சம் ஓவரா இல்லை?!!)
இதெல்லாம் எழுதி ஜல்லியடிக்க செல்வன் பதிவுகள் சரியான இடம் இல்லை என்று எண்ணியதால் (அதாவது, இது கொஞ்சம் சுயமா சிந்திக்கிறவங்க வந்துட்டு போகும் பக்கம்) அப்படியே விட்டுட்டேன்..
வேணா வாங்க, ரஜினி, விகா பத்திவேணா பேசலாம்.. செல்வன் பேரு கூட ரொம்ப சின்னதா இருக்கு, பிரிச்சி மேய முடியலை :(
100 அடிக்க வழி காட்டிய வித்தகர் எஸ்.கே வாழ்க,வளர்க...
கடவுள்ன்னு ஒருத்தர் வேணுமா இல்லையான்னு கேட்டா தெரியலைன்னு தான் சொல்வேன்.கடவுளால எனக்கு சில பலன்கள் கிடைச்சிருக்கு.ஒரு கற்பனை நட்புன்னே வெச்சுகிட்டாலும் என்னோட பல கஷ்டங்களை கடவுள் கிட்ட சொன்னா ஏதோ ஒரு மனதிருப்தி.அந்த வகையில அவர் எனக்கு ஒரு பர்சனல் பிரெண்ட்.
இது எனக்கு பழகிபோனதால கடவுள் வேணும்னு தோணற மாதிரி இருக்கலாம்.ஆனா சீனாவுல 70% சாமி நம்பிக்கை இல்லாம தான் இருக்காங்க.அவங்க வேற வழியில தான அவங்க தீத்துக்குவாங்க?ஆக என் கடவுள் நம்பிக்கை எனக்கு கற்பிக்கப்பட்டதால் அது எனக்கு தேவையா தெரியுது.
ராமன்,கிருஷ்ணன்,ஏசு இவங்க மேல எல்லாம் எனக்கு பயங்கர பாசம் உண்டு.ஏன்னா இவர்களை தெய்வமாக,உயர்வாகவே படிச்சு நான் பழக்கப்பட்டுவிட்டேன்.வேற மாதிரி சிந்திக்கவே தோணலை.இவங்க கதை எல்லாம் படிச்சா "ஆகா..இப்படியும் சிலர் வாழ்ந்திருக்காங்களான்னு தோணுது".
சுருக்கமா சொன்னா மதம் என்பது ஒரு குற்றம்,குறை,நிரை அனைத்தும் உள்ள துறை.புனிதநூலை கேள்வி கேட்க கூடாது என்பதை தவிர்த்து அதில் உள்ள நல்லதை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டால் அது நமக்கு மிகவும் உதவியா இருக்கும்.
ஆனா கடவுள் என்பவர் மனிதனை விட உயர்வானவர்,அவரை கும்பிடாவிட்டால் நரகம்,அவரை கும்பிட்டால் சொர்க்கம் இதை எல்லாம் ஏற்கவே முடியவில்லை.அவரை எனக்கு நண்பராக ஏற்க தயார்.
கடவுளிடம் உள்ள இறைதன்மையை அழித்து,எனக்கு சமமானவனாக என் நண்பராக ஏற்க முடிந்தால் எனக்கு சந்தோஷம்.அப்படிப்பட்ட கடவுளை தான் நான் விரும்புகிறேன்.
பொன்ஸ் அக்கா,
சிம்ரன் பத்தி கட்டுரை எழுதியதும் நீங்களே என்னை பாராட்டுவீங்க.அதுல ஒரு வரி கூட தப்பா இருக்காது.முழுக்க முழுக்க சமூக அறிவியல் கட்டுரை அது.விருமாண்டியே கடவுள் கட்டுரை கூட அப்படித்தான்.
//கடவுளிடம் உள்ள இறைதன்மையை அழித்து,எனக்கு சமமானவனாக என் நண்பராக ஏற்க முடிந்தால் எனக்கு சந்தோஷம்.அப்படிப்பட்ட கடவுளை தான் நான் விரும்புகிறேன். //
நியாயமான பேச்சு செல்வன்.. முருகன் தெரியுமா முருகன்.. அதாங்க, இந்த பழனி மலை மேல உட்கார்ந்திருப்பாரே.. அவரு நம்ம க்ளோஸ் பிரெண்டு.. ஏதாச்சும் பிரச்சனைன்னா அவர் கிட்ட ரெண்டு வார்த்தை புலம்பிட்டு அடுத்த வேலைய பாக்கப் போய்டுவேன்.. இது தான் நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு!! :)
எஸ்.கே வாங்க வாங்க, எங்க சைட்ல ஆள் நிறைய சேர்ந்துடுச்சு.. வந்தீங்கன்னா 100 போட்டுரலாம் :)
நியாயமான பேச்சு செல்வன்.. முருகன் தெரியுமா முருகன்.. அதாங்க, இந்த பழனி மலை மேல உட்கார்ந்திருப்பாரே.. அவரு நம்ம க்ளோஸ் பிரெண்டு.. ஏதாச்சும் பிரச்சனைன்னா அவர் கிட்ட ரெண்டு வார்த்தை புலம்பிட்டு அடுத்த வேலைய பாக்கப் போய்டுவேன்.. இது தான் நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு!! :)////
இதே தான் நம்ம கதையும் பொன்ஸ் அக்கா.
கடவுள் என்பவர் ஒரு பர்சனல் பிரெண்ட்.நாம எப்படி தோணுதோ அந்த மாதிரி அவர் கூட நட்புறவு வெச்சிருக்கிறோம்.புனித நூல்ல சொல்லியிருப்பது எல்லாம் மற்ற மனிதர்கள் எந்த மாதிரி அனுபவத்தை கடவுளிடம் அடைந்தார்கள் என்பதுதான்.
அதை முழு உண்மை,அப்படியே பின்பற்ற வேண்டும் என சொல்லுதல் தான் தப்பு.
கடவுளை பயன்படுத்தி நாம் முன்னேற முடியும்.பின்னேறவும் முடியும்.
கடவுள் ஒரு கருவி.கத்தி மாதிரின்னு வெச்சுக்கலாம்.கொலையும் பண்ணலாம்.ஆபரேஷன் பண்ணி உயிரையும் காப்பாத்தலாம்.
[நம்ம கமல் இஷ்டைல்ல படிங்க!]
கொஞ்சம் விட்டா, கடவுளை ஒரு பேனா மாதிரி பாக்கெட்ல சொருகிகிட்டுப் போயிடுவீங்க போல இருக்கே!!
நம்ம 'கோவிகண்ணன்' இருக்காறே, அவர் இப்படித்தான் ஒரு கவிதை ஒரு 3 நாளைக்கு முன்னாடி எழுதியிருந்தாரு.
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஒரு காலத்துல;
ஒரு நாளு உன் மார்ல முப்புரி நூலப் பாத்துட்டேன்
என்கிட்ட அது இல்லேன்றதால, நீ வேண்டாம்னு முடிவு பண்ணி
இப்ப நான் மலை மேல போயி குந்திக்கிட்டேன்னு!
அட, என்னாடா, நல்லவராச்சே நம்ம கோவி அப்படீன்னு
அவருக்கு ஒரு பதில் எழுதிப் போட்டேன்!
அவரு, நா எழுதின எத்தையும் கண்டுக்காம,
ஒன் கவிதை நல்லா இருந்துச்சு;
நல்ல வெண்பா மாதிரி எழுதறே அப்படீன்னு டீல் வுட்டுட்டுப் போயிட்டாரு.
[எனக்கு இந்த சுட்டி கொடுக்கற வித்தையெல்லாம் இன்னும் தெரியல்ல!
நம்ம செல்வன்கிட்டதான் ட்யூஷன் எடுத்துக்கணும் ஒரு நாளு!]
இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா,
கடவுளுக்குத்தான் நாம கருவியா இருக்கணுமே தவிர,
அவரைக் கருவியா வெச்சுக்கக் கூடவே கூடாது!
மிச்சத்தை அடுத்த பி. ஊ. ல கொடுக்கறேன்!
அல்லாத்தையும் இதிலியே சொல்லிப்டா, அப்புறம்
100 வாங்கறதுக்குள்ளே தாவு தீந்துடாது!!
எஸ்.கே சார்
எனக்கும் பின்னூட்டத்துல சுட்டி எப்படி தர்ரதுன்னு தெரியாது.அதுக்கு ஒரு புது பதிவு மாதிரி போட்டு மெனக்கெடணும்னு சொல்லுவாங்க.கட் அன்ட் பேஸ்ட் தான் நம்ம பாலிசி.
கடவுளுக்கு நாம கருவியா இருந்து நமக்கென்ன பலன் எஸ்.கே சார்?நம்ம மூலமா கடவுளுக்கு கிடைக்க வேண்டியது ஒன்றுமில்லை.அவருக்கு தேவையே இல்லைன்னு எல்லாரும் சொல்றாங்க.இப்படி இருக்கும்போது இந்த "அற்ப மானிடர்கள்" மூலம கடவுள்ளுக்கு வேண்டியது என்ன?
நமக்கு உயர்வு வேண்டும்,நல்லது வேண்டுமென்றால் கடவுளை கருவியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.அவருக்கு நம் மூலம் வேண்டுவது யாது?
//இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா,
கடவுளுக்குத்தான் நாம கருவியா இருக்கணுமே தவிர,
அவரைக் கருவியா வெச்சுக்கக் கூடவே கூடாது!
//
சாரி எஸ்.கே, என்னைப் பொருத்தவரை, கடவுளே நம்ம(மனிதர்கள்) கண்டு பிடித்த ஒரு கருவி தானே!! கடவுள்னு ஒருத்தர் இருக்காருன்னு நம்ம பெரியவங்க சொன்னாங்க, அவங்களுக்கு அவங்க பெரியவங்க சொல்லி இருப்பாங்க.. அவ்வளவு தான்.
மனுசன் சோர்ந்து போகும் போது, "அட, நீ என்னத்துக்கு இப்போ வருத்தப் படறே?!! ஆனானப்பட்ட இராமனே கொஞ்ச நாள் கஷ்டப்படலையா? கிருஷ்ணனுக்கே பிரச்சனைகள் வரலையா"ன்னு கேட்டு கொஞ்சம் சந்தோஷப்படுத்த- ஊக்கப் படுத்த - மனுசன் கண்டு பிடிச்சது தானே இந்த கடவுள் கான்சப்ட் எல்லாம்?(முருகா, இந்தப் பக்கத்தை எல்லாம் என் அம்மா படிக்காமல் இருக்கக் கடவது :) )
பொன்ஸ் அக்கா சொல்றது தான் சரின்னு படுது எஸ்.கே சார்.
தேவையே இல்லாத கடவுளுக்கு மனிதன் எனும் கருவி எதற்கு?கருவி என்பதே எதாவது ஒன்றை அடைய தானே?எதுவுமே வேண்டாம் எனும் கடவுளுக்கு கருவியே வேண்டியதில்லையே?
மனிதனுக்கு தான் கடவுள் தேவை.
என்னங்க ரெண்டு பேரும் இப்படிப் படுத்தறீங்க?!! தமிழ்மண அப்ரண்டைஸான நானே பின்னூட்டத்தில் சுட்டி கொடுக்க கஷ்டப்படலை :)
சரி சரி.. ரொம்ப சிம்பிள்.. சுட்டி எதுக்குக் கொடுக்கப் போறீங்களோ அந்த வார்த்தையைச் சுத்தி < a > போடணும்.. அவ்வளவு தான்.. இப்போ இந்தப் பக்கத்தின் சுட்டியே இங்க கொடுக்கணும்னு வைங்க, < a href = http://holyox.blogspot.com/2006/05/92.html > இங்கே < / a > - இங்கே.. அவ்வளவு ன்.. :))
செல்வன், உங்களோட சேர்ந்து எனக்கும் ஒரு தெய்வக்குத்தம் - அட, அது இல்லைன்னா, ஒரு எஸ்கே குத்தமாவது வரப் போகுது :)
சொல்ல மறந்துட்டேன், space இல்லாம போடணும்
சோதனை முயற்சி
< a href = http://kaipullai.blogspot.com.html > வ.வா அ.கு.மு.க கூட்டணி வாழ்க < / a >
சொதப்பிடுச்சு
< a href = http://kaipullai.blogspot.com> வ.வா அ.கு.மு.க கூட்டணி வாழ்க < / a >
< a href = http://kaipullai.blogspot.com> வ.வா அ.கு.மு.க கூட்டணி வாழ்க < / a > -
வ.வா அ.கு.மு.க கூட்டணி வாழ்க-
சண்டை பிடிக்கும் ஆர்வத்தில், நிறைய மறந்துவிடுகிறது :).. இந்த லைனை விட்டுட்டேனே:
//கொஞ்சம் விட்டா, கடவுளை ஒரு பேனா மாதிரி பாக்கெட்ல சொருகிகிட்டுப் போயிடுவீங்க போல இருக்கே!!//
என்ன எஸ்கே இது, தனியா வேற பாக்கெட்ல சொருகணுமா? நான் தான் கடவுள், எனக்குள் கடவுள் அப்டின்னு தானே சொல்லிகிட்டு இருக்கோம்?!! இருந்தாலும் ஒரு அடையாளத்துகாக, என் கைப்பையில் ஒரு சிவலிங்கம் வச்சிருக்கிறது உண்மைதான். (பின்னாளில் ஆசிரமம் ஆரம்பிக்கும் எண்ணமெல்லாம் இல்லை, முருகன் அவ்வளவு கைக்கடக்கமாக இல்லை :) )
சுப்பர் செல்வன், கரெக்டா பிடிச்சிட்டீங்க போலிருக்கே!! :)
ஆற்றலரசி பொன்ஸ் அக்கா வாழ்க-
நான் தான் கடவுள், எனக்குள் கடவுள் அப்டின்னு தானே சொல்லிகிட்டு இருக்கோம்?!! //
எஸ்.கே சார்,
"நானே கடவுள்" என்பது தானே இந்து மதத்தின் கொள்கை?
மாட்டிகிட்டீங்களா?:-))
//"நானே கடவுள்" என்பது தானே இந்து மதத்தின் கொள்கை?//
செல்வன், இது தப்பான பாயின்ட்.. :(
இந்து மதத்துல கொள்கைகளுக்கு பஞ்சமே இல்லை.. இதுவும் ஒரு கொள்கை.. அப்புறம் கடவுள் வேற, மனிதன் வேற, மனிதன், கடவுளைத் தேடுவது தான் இந்து மதத்தின் கொள்கைன்னு எஸ்கே சொல்லிடப் போறாரு!! :)
அக்கா,
நீங்க சொன்ன மாதிரி எல்லா கொள்கையும் நம்ம ஊர்ல இருக்கு.:-))
ஆனா எஸ்.கே சார் இந்த பாயின்டை மறுக்கவே முடியாது.ஏன் என்றால் அனைவரும் கடவுள் என்று சொன்னவர் ஆதி சங்கரர் .கடவுள் வேறு மனிதன் வேறு அல்லன்னு அவர் சொன்னார்.ஆக எஸ்.கே சார் இதை மறுக்கும் வாய்ப்பே கிடையாது
ஆதி சங்கரருக்கும் எஸ்கேவுக்கும் அப்படி என்ன கனெக்ஷன்?!!
எஸ்கே, எஸ்கேப்??!!
:-)
வணக்கம் செல்வன்!
எல்லாம் குரங்கு கைல மாட்டின பூமாலை போல பிச்சு உதறிட்டு இருக்காங்கலேனு வேடிக்கைப்பார்த்தான்,சரி பொருத்தது போதும் பொங்கிழெடா தமிழ் காளையேனு நானே தட்டிக்கொடுத்துகிட்டு உள்ள வந்துட்டேன்!:-))
//என்றால் அனைவரும் கடவுள் என்று சொன்னவர் ஆதி சங்கரர் .கடவுள் வேறு மனிதன் வேறு அல்லன்னு அவர் //
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் அவன் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்....
எனவே எல்லாருமே இன்னாட்டு மன்னர்கள் மட்டும் அல்ல தெய்வமும் தான்.
கடவுள் வெளியே தேடக்கூடாது நம்முள்ளே தேட வேண்டும் அது தான் கடவுளைக்காணும் வழி, கடவுள் என்ற பெயரே அப்படி தான் வந்தது.
கடவுள் = கட +உள்,நாம் நம் உள்ளே கடந்து உள் மனதிற்கு செல்ல வேண்டும்,அப்படி சென்றால் கடவுளை காணலாம்.நம் அந்தராத்மா தான் கடவுள்.எனவே முயன்றால் நாம் அனைவரும் கடவுளைக் காணலாமே!
தெய்வம் சமஸ்கிருத சொல், டெவு என்ற சொல்லில் இருந்து வந்தது ,டெவு என்றால் வெல்ல முடியாதது என்று பொருள்.தெலுங்கில் தேவுடா! என்று சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டார் கூட அதான் தேவுடா தேவுடா நம்ம பக்கம் சூடுடா என்கிறார்!( அப்பாட ஒரே கல்லில இரண்டு மாங்கா,சூப்பர் ஸ்டாரும் சொல்லியாச்சு ,கடவுளும் பார்த்தாச்சு :-))
அடுத்தா நான் கடவுள் அஜித் நு யாரும் வரப்போராங்க :-))
தலைவா,,
பதிலே சொல்லாமல் சிரித்தால் என்ன அர்த்தம்?எங்களுக்கு வழிகாட்டுங்கள் குமரா.கந்தா.கடம்பா
வவ்வால்,
அருமை.அருமை.
உங்களுக்குள் ஒரு அருமையான ஆன்மிகவாதி இருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.அனைத்தையும் கடந்து நம் உள் நிற்பவர் தான் கடவுள் என்று அந்தப்பெயர் காரணத்தை படித்துள்ளேன்.
சூப்பர்.
அஜீத் கடவுளாகிறாரோ இல்லையோ சூப்பர்ஸ்டார் ஆக முயற்சிப்பது நல்லது.:-))இப்பவே விஜய் அந்த பட்டத்தை தட்டிகிட்டு போயிட்டார்.இரண்டாம் இடத்துக்கான போட்டியில் விக்ரமும் சூர்யாவும் இருக்காங்க.விட்டா மூணாவ்து இடம் கூட போயிடும் போலிருக்கு:-))
//கடவுள் = கட +உள்,நாம் நம் உள்ளே கடந்து உள் மனதிற்கு செல்ல வேண்டும்,அப்படி சென்றால் கடவுளை காணலாம்.//
வவ்வால், கடைசியா, நீங்களும் நானும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போறோங்க.. இதே விளக்கத்தை ரெண்டு வாரம் முந்தி நந்தனோட பதிவில் நான் எழுதி இருந்தேன் :)
பரமசிவன் இருந்த அழகுக்கு, நான் கடவுள் எந்த அழகுல இருக்கப் போகுதோ..!!!
ஆன்மீக சூப்பர் ஸ்டார் குமரனின் எண்ணங்கள் இந்தப் பதிவில் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகின்றன :)
பொன்ஸ் அக்கா
எஸ்.கே சார் சிறந்த ஆன்மிகவாதி.ஆன்மிகம் படிக்கும் யாரும் ஆதி சங்கரரின் கருத்துக்களை மறுக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர் சிவனையும் பாடியுள்ளார்,விஷ்ணுவையும் பாடியுள்ளார்,முருகனையும் பாடியுள்ளார்.அதனால் சைவர்கள்,வைஷ்ணவர்கள் என்று அனைவருக்கும் அவர் பொதுவானவர்.அதனால் தான் எஸ்.கே சார் அவரது கருத்துக்களை மறுக்க மாட்டார் என சொன்னேன்.
பொன்ஸ் அக்கா
நந்தனின் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை படித்தேன்.நந்தன் பதிவும் அதே மாதிரி தான் எழுதப்பட்டிருக்கு.யோசிச்சு பாத்தா நாம என்ன கேள்விகளை கேட்கிறோமோ அதையே தான் அப்பவும் கேட்டிருக்காங்கன்னு தோணுது.பதிலும் ஒவ்வொருத்தரை பொறுத்து வித்யாசமான பதில் கிடைச்சிருக்கு.புதுசா இதுக்கு எந்த பதிலும் கிடைக்கும்னு தோணலை.
அம்மா பொன் ஸ் ஒத்து போய்டுச்சா அப்போ கார ஜாங்கிரிக்கு வழி இல்லாம போய்டுச்சே!:-))
வணக்கம் செல்வன்,
நாம ஆன்மீகவாதிலாம் இல்லை.சில தேடல்களின் விளைவாக சில புதிய கருத்துகளை அறிந்துகொண்டேன் அவ்வள்வே.
//அவர் சிவனையும் பாடியுள்ளார்,விஷ்ணுவையும் பாடியுள்ளார்,முருகனையும் பாடியுள்ளார் //
முருகனைப்பாடியுள்ளார் என்கிறீர்கள் ஆனால் தமிழம் தவிர்த்து இந்தியாவில் எங்கும் பெரிய அளவில் முருக வழிபாடு இல்லையே ஏன்? முருகன் தமிழ் கடவுள் என்பதாலா,அப்படி எனில் சிவன் ,பார்வதி மகன் என்பது புனையப்பட்ட ஒன்றா?
அப்பா! ஒரு மணி நேரம் அலுவலகத்தை விட்டு வீடு வந்து அவசர அவசரமா கணினியைத் தொறந்தா,
ஆளாளுக்கு இப்படிப் போட்டுத் தாக்கி இருக்கீங்களே!
கடவுளை நாம் கருவியா வெச்சுக்கறது வியாபாரம்!
அவருக்கு, அன்பே வடிவான அவருக்கு, மற்றவர் நலமே பேணி இருக்கும் அவருகு நாம கருவியா இருக்கிறது சேவை!
அதுதான் பிறந்த பயனைத் தரும் ஒரு பெரு வாழ்வு!
அப்பப்போ குறை இருக்கறப்போ, பழனி முருகன் காதுல ஒரு சங்கதி போட்டுட்டுப் போற பொன் ஸுக்கும் சரி,
ஆன்மீக கட்டுரைகளுக்காக துணைக்கழைக்கிற செல்வனுக்கும் சரி,
இந்த 'உள்ளே வெளியே' ஆட்டம் ஆடற வவ்வால் அண்ணாச்சிக்கும் சரி,
தேடற நேரத்துல, வந்து கொடுக்கற சாமி, மனிதன் மூலமாத்தான்!
'தெய்வம் மானுஷ ரூபேண' என்று வேதம் சொல்லுகிறது!
அந்த மாதிரி, மற்றவனுக்கு நன்மை பண்ணுகிற , [ஆண்டவனின்] கருவியாக நாம் இருக்க வேண்டும் என மீண்டும் சொல்கிறேன்!
மீதி அடுத்த பி.ஊ.வில்--- சதம் நோக்கி!
செல்வன், சமீபத்துல படிச்ச ஒரு புத்தகத்திலிருந்து:
"உலகில் கடவுளைப் பற்றி நான்கு விதமான கருத்துகள் உள்ளன:
1. கடவுள் இருக்கிறார்
2. கடவுள் இருக்கலாம்
3. கடவுள் இல்லாமல் இருக்கலாம்
4. கடவுள் இல்லை
நான் பார்த்தவரை முதல் நிலையிலிருந்து எல்லாரும் நான்காவது நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். முதலும் நான்காம் நிலையும் தேக்க நிலைகள். மற்ற நிலைகளில் இருப்பவர்கள் தேடலில் இருக்கிறார்கள்.." - இப்படிப் போகும்
புத்தகம் - ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா.
நல்லா இருந்ததினால் நினைவில் இருந்தது.. விவாதத்திற்குத் தொடர்புடையதால், இங்கே :)
அன்பின் வவ்வால்,
கார்த்திகேய கடவுளை பற்றி வால்மீகி ராமாயணத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.அதனால் முருகன் வழிபாடு வேறு எங்கும் இல்லை என்பது சரியல்ல.மேலும் ஸ்கந்த புராணம் என்று எல்லாம் வடக்கே உள்ளது.
முருகன் வேறு ஸ்கந்தன் வேறு என்று ஒரு ஆரிய திராவிட விவாதம் உண்டு.அதில் இறங்கினால் முடிவே கிடையாது.:-))
எஸ்.கே அவர்களே
இந்த கேள்விக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை.
1.கடவுள் தேவை இல்லாதவர்.தேவை இருந்தால் தானே அதை அடைய கருவி தேவை?தேவையே இல்லாத கடவுளுக்கு நம்மால் கிடைக்கப்போகும் பலன் என்ன?
ஆன்மிக வழியே பார்த்தால் கூட நமக்கு தான் கடவுள் தேவையே தவிர,கடவுளுக்கு நம்மால் ஆக வேண்டியது ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.
கடவுளுக்கு நாம் என்ன உபகாரம் செய்துவிட முடியும்?
பொன்ஸ் அக்கா
சூப்பரான கருத்துக்கள்.ஆம் இரண்டும்,மூன்றும் இருப்பது தேடல் நிலைதான்.ஆனால் 1ம், 4ம் நிறைவடைந்த நிலையாகவும் இருக்கலாமல்லவா?2,3ன் நோக்கம் 1 அல்லது 4 அடைவது தானே?
நோக்கத்தை அடைந்துவிட்டால் தேடல் முற்றுப்பெற்றுவிட வேண்டியதுதானே சரி?
வணக்கம் செல்வன்!
நீங்கள் ஸ்கந்த புராணம் சொல்வீர்கள் என நான் சொல்லாமல் விட்டேன் :-))
ஸ்கந்த புராணம் எல்லாம் பின்னாளில் வந்தது என சொல்வார்கள்.கனபதிக்கு உள்ள முக்கியத்தும் ஏன் முருகனுக்கு இல்லை வட இந்தியாவில் என்பது என் கேள்வி.மேலும் பெரிய முருகன் கோவில்கள் இல்லை தமிழர் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் சிறிய அளவில் முருகன் கோவில்கள் உள்ளது.ஆரியர்கள் திராவிட நிலத்தின் வழிப்பாட்டை உள்வாங்கி கொண்டு ஸ்கந்த புராணம் போட்டாலும் வழிப்பட விரும்பவில்லை என நினைக்கிறேன்.
//கடவுள் தேவை இல்லாதவர்.தேவை இருந்தால் தானே அதை அடைய கருவி தேவை?தேவையே இல்லாத கடவுளுக்கு நம்மால் கிடைக்கப்போகும் பலன் என்ன?//
கடவுள் யாருக்கு தேவையோ இல்லையோ, கடவுளை வைத்து வியாபாரம் செய்வோர்க்கு மிகவும் தேவை! கடவுள் மிகப்பெரிய பிராண்ட் அம்பாசடர்,திருப்பதி லட்டு சொல்லும் மகிமையை.ஒரு கோயில் இருந்தால் அதனை சுற்றி பூ,பழம் ஊதுவத்தி என பூஜைப் பொருட்கள் விற்பது ,மொட்டை அடிப்பது, உணவகம் ,தங்கும் விடுதி என பல தொழில்கள் வளரும். எனவே அது போன்ற தொழில் செய்வோர்க்காகவாது கடவுள் தேவைப்படுகிறார் இந்த நூற்றாண்டிலும்!
உரக்கச் சத்தம் போட்டு,
உடனுக்கு 'சுரா'வை அழைத்து விட்டால்
உங்கள் வாக்கு அம்பலம் ஏறுமெனக்
கனவு காணும் சுந்தரியே! :)
எந்த அடிப்படையில்
யார் சொன்ன வாதத்தில்
அப்படியோர் கருத்ததனை
நீரிங்கு துணைக்கழைத்தீர்?
கடவுள் என்பதையே
கண்டிராத மனிதனிங்கு
கடவுளென்று கற்பித்தான்
என்றுதானே இதுவரையில்
சொல்லி வந்தீர்?
இந்நான்கு கருத்துகளுமே
எந்நாளும் இருந்திருக்கு
ஒவ்வொருவர் வாழ்விலுமே
இந்நான்கும் பொருந்தி நிற்பர்!
அடுக்கடுக்காய் துன்பம்
அடுத்து வந்து உறுத்தும்போது
அய்யா நீ இருக்கிறாயா எனக் கேட்கும்
மனிதரும் உண்டு!
தம் சுற்றம் பிழைத்துவிட்டு
அடுத்த வீட்டை சுனாமி
அடித்தன்று சென்ற போது
இருக்கிறான் அவனிங்கு
என்னுமொரு கருத்தினை
ஒருசிலரும் கொண்டதுண்டு!
மழை நிவாரணம் கேட்டு
தம் மக்கள் சென்றங்கு
வரிசையிலே மிதிபட்டு
மடிந்து போன சேதி கேட்டு
இருக்கிறானா அவன்?
எனக் கேட்கும் மாந்தருண்டு!
தன் பெருமை தான் மிகுந்து
தனக்குவமை இல்லாதான் செய்ததையும் மறந்து
தானே தனக்கு எனும் தற்பெருமை தூக்கி வர
தெய்வமே இல்லை எனும் தருக்கரும் இங்குண்டு!
ஆகையினால் சொல்லுகின்றேன்!
அவன் தாளைப் பணிந்திடுவீர்!
ஆக்குவதும் அவன் தான்!
அமைப்பதும் அவன் தான் !
அழிப்பதும் அவன் தான்!
எங்கள் பிரான் தயவிருக்க
எது வரினும் யாம் அஞ்சோம்
என்கின்ற அத்துவைத நிலை எய்தி
அனைவருமே வாழ்ந்திடுவீர்!
நன்றி!
வணக்கம்!
Pons,
I am still unable to understand this 'link' process!
May be, you or Selvan shopuld give me a one-on-one lesson!!
One more in the count!!
//1ம், 4ம் நிறைவடைந்த நிலையாகவும் இருக்கலாமல்லவா?2,3ன் நோக்கம் 1 அல்லது 4 அடைவது தானே?
நோக்கத்தை அடைந்துவிட்டால் தேடல் முற்றுப்பெற்றுவிட வேண்டியதுதானே சரி?
//
சரிதான் செல்வன்.. நிறைவடைந்த நிலைன்னுதான் சு.ரா சொல்லி இருக்காரு (புத்தகம் பார்த்துச் சொல்வது :) ). எதிலுமே நிறைவடைவது மனித இயல்பு இல்லை என்பது என் எண்ணம்.. அதான் அப்படிச் சொல்லிட்டேன்..
"தேடல் என்பது உள்ளவரை வாழ்வும் ருசித்திருக்கும்" என்பது எனக்குப் பிடித்த வரிகள் :)
ஸ்கந்தபுராண ஆராய்ச்சிக்கும், எஸ்கேவுக்கும் சரியான பதிலை மாலை வந்து சொல்கிறேன்.. இப்போ கொஞ்சம் வெளி வேலை வந்துடுச்சு :(
அன்பின் வவ்வால்
வட இந்தியாவில் கந்தனை நெருப்புக்கடவுளாக வணங்குகிறார்கள்.தமிழ்நாட்டில் தமிழாகவே வணங்குகிறார்கள்.தீ வழிபாட்டின் மூலத்தை ஆராய்ந்தால் அது கந்தனில் தான் வந்து நிற்கும்.
வட கிழக்கு பாகிஸ்தானில் குஷான மன்னர்கள் ஆண்டபோது கந்தன் உரு பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.ஸ்கந்த குப்தன், மவுரிய வம்சம்(மயிலோன்) என மன்னர்கள் உண்டு.
வடக்கே தோன்றிய வைணவ பக்தி அலை ஸ்கந்த வழிபாட்டை மூழ்கடித்திருக்கும் என நினைக்கிறேன்
I have to go for my son's senior nite party!
So, i woon't be available for the next 3 hors!
Don't call me names and say that I've escaped!!
one omore 'pinnuuttam' for the count!
எஸ்.கே சார்
சூப்பராக பார்ட்டியை முடித்துவிட்டு வாருங்கள்.பொன்ஸ் அக்காவும் வேலையை முடித்துக்கொண்டு வரட்டும்.
100வது பின்னூட்டம் இடும் அதிர்ஷ்டசாலிக்கு எஸ்.கே தங்க மோதிரம் அணிவிப்பார் என்பதை பெருமையுடன் அறிவிக்கலாம் என்று பார்த்தால் எஸ்.கே சார் அடித்தே விடுவார் போல் பயமாக உள்ளது.:-))
Congrats for your 100!
I'LL COME BACK AND CONTINUE AND REJOICE!!
அக்கா பொன்ஸூ எங்க காணோமேன்னு பாத்தா
இங்க வந்து கடவுள் ஆராய்ச்சி செஞ்சுகிட்டுடிருக்கறாங்க.
வந்ததுக்கு நானும் துண்ணூறு பூசிக்கிறேன்.
அப்பறமா எல்லாத்தையும் படிச்சுட்டு
பிகிலு உடறேன்.
நன்றி எஸ்.கே சார்
நூறடிக்க உதவிய உங்களை,ஆற்றலரசி பொன்ஸ் அக்காவை, வவ்வாலை மறக்கவே முடியாது.
பெருசு அண்ணா,
அக்கா கையால துண்ணூரு வாங்கிக்கங்க.எஸ்.கே சார் அவதார்ல இருக்குற முருகனுக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு மறக்காம காணிக்கை (பின்னூட்டம்) போட்டுடுங்க:-)))
வந்துட்டேன்!
வந்துட்டேன்!
வாங்க எஸ்.கே
இன்னும் 2 பின்னூட்டம் போட்டா 100.உங்களுக்கே அந்த பெருமை கிட்டட்டும்.பொன்ஸ் அக்கா. எங்க இருக்கீங்க?
வணக்கம் செல்வன்!
நெருப்பு கடவுளாக வணங்குகிறார்கள் சரி ஏதேனும் பெரிய அளவிலான கோவில்கள் உள்ளதா வட இந்தியாவில்?மேலும் தென்னிந்தியாவில் சிவன் ஆலயங்களில் சுற்றுப்பிரகாரத்தில் ஒரு இடத்திலாவது முருகன் சந்நிதி இருக்கிறது.அது போல தமிழகம் தாண்டி எங்கும் பார்த்த நினைவு எனக்கு இல்லை!
செல்வன்,
சத்தியராஜே கடவுள்!!
முதல் பின்னூட்டமும் 100வது பின்னூட்டமும் சிவபாலனின் பின்னூட்டம்.கலக்கிடீங்க சிவபாலன்.
100 பின்னூட்டம் இட உதவிய எஸ்.கே சார்,ஆற்றலரசி பொன்ஸ் அக்கா,நண்பர் வவ்வால்,சிவபாலன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
மாஞ்சு மாஞ்சு ஒரு கவிதை எழுதியிருக்கேனே?
யாராவது ஒரு வார்த்தை சொன்னீங்களா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!
ஒரு 100 வாங்கித் தர்றதுக்கு என்ன பாடு பட்டிருப்பேன்?
எல்லாம் கலிகாலம்பா!
வாழ்த்துகள் செல்வன்!!
:)))))
அன்பின் வவ்வால்,
கடவுள் ஒன்றே தவிர வழிபாட்டு முறைகள் ஊர் ஊருக்கு மாறுபடும்.வட இந்திய கோயில்களில் கர்பகிரகத்துக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம்.நம்மூர் கோயில்களில் அப்படி இல்லை.
வடக்கே அக்னியாக குமரனை வணங்குகின்றனர்.தெற்கே குளிர் பொதிகை மலை தமிழாய் வணங்குகின்றனர்.வழிபாட்டு முறைகள் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமே மாறுபடும்போது வடநாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே மாறுபடாதா என்ன?
அதிகம் தொழப்படும் தெய்வமான கண்னன் கூட வெவேறு வடிவங்களில் இந்தியா முழுக்க வழிபடப்படுகிறான்.எனக்கு இஸ்கான் கோயிலில் இருக்கும் கண்னனை பார்த்தால் தென்னிந்திய தெய்வம் போலவே தோன்றுவதில்லை.சேட்டு போல் தான் தெரிகிறான்.ஆனால் தெற்கே வேட்டி கட்டி,உருமாலை கட்டி தமிழக விவசாயி போல் கண்ணன் காட்சி அளிக்கிறான்.
இட ஒதுக்கீடைப் பற்றி ஒரு பதிவு போட்டேனே;
யாராவது ஒருத்தர் எட்டிப் பார்த்தீங்களா?
செல்வன்,
உங்க அடுத்த பதிவில் தான் இதை போடலாம் என்று இருந்தேன். இருந்தாலும் 100 அடிச்சதற்காக...
"செல்வனே கடவுள்"
எஸ்.கே சார்
சதமடித்து தந்த கருனை வள்லலே
உம் கவிதையை முழுதும் படித்தேன்.
ஆற்றலரசியாரை வம்புக்கிழுத்த கவிதை என்பதால் அவர் வந்து பதில் சொல்லட்டும் என காத்திருந்தேன்.
அத்வைத நிலை அடைய சொன்ன ஞான குருவே
அதை நான் அடைந்தால் என் குடும்பத்தை காப்பது யார்?
தற்போதைக்கு நான் துவைத நிலையிலேயே இருந்து வாழ்வை அனுபவித்துவிட்டு
முக்கியமாக பக்தி எனும் அமுதை அள்ளிப்பருகிவிட்டு
அனைத்தும் சலித்த பின் விட்டொழித்துவிட்டு
ஞான குரு ஒருவரின் தாள் பற்றி
அத்வைத நிலை அடைகிறேன்.
சதமடித்த சச்சின் டெண்டுல்கரே
உங்கள் அடுத்த பதிவின் போது அங்கு ஆஜராகி
உங்களை இரட்டை சதம் அடிக்க வைக்கிறேன்.
தமிழ்மணத்தில் தான் இன்று முழுக்க இருந்தேன்
முகப்பு பக்கத்தில் உங்கள் பதிவு வரவே இல்லையே
இதோ போய் பார்க்கிறேன்.
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள், செல்வன்?
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன்!
அவனை நீங்கள் நினைக்கும் கட்டுக்குள் கட்டிட நினைக்கலாமோ?
எங்கெங்கு காணினும் சக்தியடா எனப் பாடினான் பாரதி
இங்கு அவனை[ளை] அளந்திட கங்கணம் கட்டுகிறான் மனிதன்!!
சிவபாலன்,
:-))
சிவபாலனே கடவுள்
மருதமலையில் குடிகொண்டிருக்கும் அந்த சிவபாலனே என்றும் கடவுள்.
அன்பே சிவம்
எஸ்.கே சார்
எங்கும் நிறைந்த ஈசனை அன்பால் கட்டவில்லையா யசோதாவும் நாமதேவரும்?
அவர்கள் கட்டும்போது நான் கட்ட முடியாதா என்ன?
நாம் யார் நினைத்தாலும் கட்டலாம்.
வணக்கம் செல்வன்,
நூறடித்த 1000 இல் ஒருவன் செல்வன் புகழ் ஓங்குக :-))
அன்பின் வவ்வால்,
நூறடித்த பெருமை முழுக்க முழுக்க இங்கு பின்னூட்டமிட்ட வலைபதிவு தெய்வங்களையே சாரும்.நீங்கள் அனைவரும் சீக்கிரம் நூறடிக்க என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!!!:-)
செல்வன்,
என் குழந்தையை(பெண்) கடவுளிடம் அதிக ஈடுபாடு இல்லாமல் தான் வளர்க்கிறோம்.
எனக்கு தெரியவில்லை இது சரியா தவறா என்று...
அன்பின் சிவபாலன்,
எனக்கு குழந்தை வளர்த்த அனுபவம் இல்லை.இதற்கு என்ன தீர்வு என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் பிறந்த மண்னையும்,கலாச்சாரத்தையும் குழந்தைக்கு கற்பித்தல் அவசியம் என தோன்றுகிறது.இல்லாவிட்டால் அமெரிக்கா வாழ் தமிழர் வேரை இழந்த செடியாகிவிடுவர்.
//எனக்கு குழந்தை வளர்த்த அனுபவம் இல்லை//
செல்வன்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை?!!
நூறுக்கு வாழ்த்துக்கள்... :)))
பொன்ஸ் அக்கா
நூறுக்கு உங்களுக்கு தான் வாழ்த்து சொல்லணும்.பொன்ஸ் அக்காவும்,எஸ்.கே அண்னனும் புகுந்து விளையாடி கொடுத்த ஜாக்பாட் இது.
குழந்தை வளர்ப்பு என்றால் சாதாரண விஷயமா?ஒண்ணும் தெரியாமல் நாம் அட்வைஸ் கொடுத்து என்ன ஆகப்போக்குன்னு தான் அடக்கி வாசிச்சேன்.
// உரக்கச் சத்தம் போட்டு,
உடனுக்கு 'சுரா'வை அழைத்து விட்டால்
உங்கள் வாக்கு அம்பலம் ஏறுமெனக்
கனவு காணும் சுந்தரியே! :) //
எஸ்கே, இங்க யாருங்க உரக்கச் சத்தம் போட்டா?? எங்க போனீங்கன்னு கேட்டேன்.. அவ்வளவு தானே.. இருந்தாலும், சுந்தரின்னு சொன்னீங்க பாருங்க, அதுக்காக உங்களை மன்னிச்சிட்டு அடுத்த அடிக்கு போறேன்..
//கடவுள் என்பதையே
கண்டிராத மனிதனிங்கு
கடவுளென்று கற்பித்தான்
என்றுதானே இதுவரையில்
சொல்லி வந்தீர்? //
ஐயா, கடவுளைப் படைத்தது மனிதன்.. ஆனா அந்த மனிதன் கொஞ்சம் பழையகால மனிதன்.. நமக்குத் தான் யார் என்ன சொன்னாலும், அதை ஆராய்ச்சி செய்யாம ஏத்துகிற வழக்கம் இல்லையே!! அதுனால, இன்றைய மனிதன், முதலில் செஞ்ச வேலை அதை ஆராய்ச்சி பண்ணினது தான்.. இப்போ, நியூட்டன் புவி ஈர்ப்பு விசை பத்தி சொன்னாரு. அதைப் படிச்ச அடுத்த நாள் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு ஆப்பிளைக் கீழே போட்டு, அது கீழ தான் விழுதா இல்லையான்னு பார்க்கிறது இல்லை?!! அது மாதிரி தான்.. சோதனை செஞ்சு ஒத்துக்கிடற தலைமுறை இது... அதுனால தான் இத்தனை நிலைப்பாடுகள் இருக்கு.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நிலைப்பாடுகளை எடுக்கறாங்க.. இதை நீங்களே சொல்லிட்டீங்க:
"இந்நான்கு கருத்துகளுமே
எந்நாளும் இருந்திருக்கு
ஒவ்வொருவர் வாழ்விலுமே
இந்நான்கும் பொருந்தி நிற்பர்!"
"ஆகையினால் சொல்லுகின்றேன்!
அவன் தாளைப் பணிந்திடுவீர்!
ஆக்குவதும் அவன் தான்!
அமைப்பதும் அவன் தான் !
அழிப்பதும் அவன் தான்!"
இது உங்களுடைய இன்றைய நிலைப்பாடு..
எஸ்கே,
நாளை என்ன நடக்கும் இங்கே,
ஆளும் கருத்தும் ஆட்டம் காணுமா?
வேறே தெய்வம் என்று ஆகுமா?
யாரே இங்கு அறிந்திருப்பார்.??!!!
பொறுத்தே பார்ப்போம்.. இதுவே எம் நிலை :)
கஷ்டப்பட்டு நானும் ஒரு கவிதை சொல்லிட்டேன்... இதுக்கு மேல இந்த விவாதம் எங்கயும் போகாதுன்னு நினைக்கிறேன்:)
கவிதைக்கு கவிதையால் பதிலடியா?
சபாஷ்.சரியான போட்டி.
எஸ்.கே சார் இப்ப தூங்கிட்டிருப்பார்.காலையில் பதில் கவிதையோடு வருவார்:-))
என்ன செல்வன்,
நானே ரொம்ப யோசிச்சி, மூளையைக் கசக்கிப் பிழிஞ்சி,
"நாளை என்ன நடக்கும்"னு கேட்டா, நீங்க சுலபமா எஸ்கே சார் கவிதையோட வருவாருன்னு சொல்றீங்க?!! இதைக் கேட்கும்போது ஒரு 'படைப்பாளி'க்கு எத்தனை வருத்தமா இருக்கு?!!! :( ம்ச்!!!
அக்கா,
அது instant பின்னூட்டம்,அதை இட்டுவிட்டு உங்கள் பதிவுக்கு போய் இன்னொரு பின்னூட்டம் அனுப்பி விட்டு வர தாமதமாயிடுச்சு.
ஆன்மிகம் என்பது வளரும் துறை.
அதை பழங்கால சாமியார்களோடு நிறுத்திவிட்டு இதுக்கு மேல சிந்திக்ககூடாது.இதுதான் ஆன்மிகம்.இதை அப்படியே ஏற்றுக்கொள் என்று சொன்னால் அதன் பின் அறிவுவளர்ச்சியே இல்லாமல் போய்விடும்.
காலம் மாற மாற மனிதன் பழக்க வழக்கம் மாற மாற சாமியும் மதமும் மாறிகிட்டே இருக்கணும்.அப்ப தான் அந்த துறை வலரும்.இல்லாவிட்டால் தேங்கிவிடும்.
எஸ்.கே சொன்ன 4உடன் நிற்காது ஆன்மிகம்.ஐந்தாவதாக "மனிதன் கடவுள்" என்ற ஒரு நிலையும் இருக்கு.
அதை நோக்கியும் போகலமே?
எஸ்கே,
நாளை என்ன நடக்கும் இங்கே,
ஆளும் கருத்தும் ஆட்டம் காணுமா?
வேறே தெய்வம் என்று ஆகுமா?
யாரே இங்கு அறிந்திருப்பார்.??!!!
பொறுத்தே பார்ப்போம்.. இதுவே எம் நிலை :)/////
நாளை வரப்போகும் புதுதெய்வம் யார்?யாருக்கு தெரியும்?
தெய்வத்தின் மூலம் நமக்கு வேண்டியது என்னன்னு யோசிச்சா நாளை வரப்போகும் தெய்வத்தை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.
நமக்கு வேண்டியது எஜமானனான கடவுளா அல்லது நமக்கு சேவை செய்யும் கடவுளா?
எனக்கு எஜமானனாக இருக்க விரும்பும் கடவுளை பிடிக்காது.எனக்கு அடிமையாக இருக்க விரும்பும் கடவுளையும் பிடிக்காது.
ஒரு நண்பனாக,நல்ல பிரெண்டாக இருக்ககூடிய கடவுள் தான் வேண்டும்.
அன்பே சிவம்.
அடிமைத்தனமோ,எஜமானத்தனமோ சிவமல்ல.
//எஸ்.கே சொன்ன 4உடன் நிற்காது ஆன்மிகம்.ஐந்தாவதாக "மனிதன் கடவுள்" என்ற ஒரு நிலையும் இருக்கு.//
//எனக்கு எஜமானனாக இருக்க விரும்பும் கடவுளை பிடிக்காது.எனக்கு அடிமையாக இருக்க விரும்பும் கடவுளையும் பிடிக்காது.
ஒரு நண்பனாக,நல்ல பிரெண்டாக இருக்ககூடிய கடவுள் தான் வேண்டும்.//
விவாதத்தை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துப்போவதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.. ரொம்பச் சரி செல்வன்... எஸ்கே என்ன சொல்கிறார்னு நாளை பார்ப்போம் :)
ஓ.க்கே பொன்ஸ் அக்கா
எஸ்.கே சார் நாளைக்கு ரொம்ப பிசியா இருப்பார்.ஏன்னா வெடிகுண்டு பதிவு ஒண்ணு போட்டிருக்கார்.நாளைக்கு அவர் பதிவுல ஒரே விவாத மேடையா இருக்கும்:-))))
செல்வன்,
100 பின்னூட்டங்கள் வாங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முடிவுரைப் போட்டாச்சா? இல்லை வாதங்கள் இன்னும் நீளுமா?
வாங்க டேவ்,
நீங்க ஆரம்பிச்சு வெச்ச விவாதம்.உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.
வாதத்துக்கு முடிவேதும் உண்டா என்ன?அப்படி ஒண்ணும் கிடையாது.தொடரும் தான் போட்டிருக்கோம்.
அடடே, ஆரம்பிச்சு வச்சது தேவ் தான் இல்லை.. இப்போ தான் நினைவு வருது...
பை த பை, செல்வன், இப்படித் தனித் தனியா நன்றி சொல்லக் கூடாது!! அப்புறம் 100, 200 ஆவது ஏது??
"நூறுக்கு நீங்க லேட்டா வந்துட்டீங்க தேவ், இருநூறுக்கு நேரத்துக்கு வர வாழ்த்துக்கள்" இப்படி ஏதாவது சொல்லணும் :)
200ஆ?எனக்கு மயக்கமே வந்துடுமே?
ஓக்கே.அக்கா சொல்லே வேதவாக்கு.
2000மாவது பின்னூட்டத்துக்கு சீக்கிரம் வந்துடுங்க டேவ்.
200 அடிச்சேன்.அது 2000ம்னு மாத்தி பதிவாயிடுச்சு போல:-))
அய்யோ நான் வாத்ம் ஆரம்பிச்சு வைச்சேனா.. இல்லீங்க எனக்குப் புரியாத சிலதுக்கு விளக்கம் கேட்டேன்ங்க அவ்வளவு தானுங்க....
மறுபடியும் சொல்லுறேங்க... நான் ஆத்திகவாதி.. கடவுள் நம்பிக்கை உள்ளவன். அதுக்காக் நான் நிறைவானவன்னு அர்த்தம் இல்லிங்க... எனக்கு ஒரு சின்னக் கருத்து உண்டுங்க... கடவுளை நான் நம்புறதாலத் தான் என்கிட்ட இருக்க குறைகள் எனக்கு தெரியுது.. கடவுள்ங்கற உணர்வு இருக்கதாலத் தான் நான் சின்னவ்ன்னு ஒரு உண்மை புரியுது...
பொன்ஸ் கடவுள் பத்தி நான்கு நிலைகள் சொல்லியிருந்தாங்க....
அதுக்குப் பதில் அண்ணன் எஸ்.கே சொல்லிட்டாரு...
ஒண்ணுப் புரியல்ல நீங்களும் சரி..
மத்தவங்களும் சரி.. கடவுளைப் பத்தி அடுத்தவங்கச் சொன்னக் கருத்தை வச்சுகிட்டு வாதம் பண்ணிகிட்டு இருக்கீங்க்...
மனிதன் கடவுள் பற்றி நல்லதும் சொல்லுவான் அல்லதும் சொல்லுவான்...உண்மை ஆராய வேண்டாம்... உணர வேண்டும்... கடவுளை குற்றம் சாட்டுவதை விடுத்து கடவுளை வியாபாரம் செய்யும் மனிதனோடுப் போராடுங்கள்... கடவுளோடுப் போராடாதீர்கள். கடவுள் ஒரு அற்புதமான தனிமனித அனுபவம்....அவசரம் வேண்டாம் நண்பரே... முதலில் கடவுளை உணருங்கள்... பின்பு கடவுளைப் பற்றி விவாத்திக்கலாம்.
இன்னொரு சின்னக் கருத்து.. கடவுள் நம்பிக்கை வேறு.. மத நம்பிக்கை வேறு... இரண்டையும் போட்டுக் குழ்ப்ப வேண்டாம்.
என் கருத்தில் குறை இருந்தால் சொல்லுங்கள்.. நன்றி நண்பரே
செல்வன்
என்னங்க இது
ஐயோ கடவுளே!!!
நீங்க தான் இப்ப எனக்கு ராயல்டி தரணும்.
கமெண்ட் 130 க்கு மேல போயாச்சு.
இதுக்கு.
// கடவுளைப் பத்தி அடுத்தவங்கச் சொன்னக் கருத்தை வச்சுகிட்டு வாதம் பண்ணிகிட்டு இருக்கீங்க்...
//
ஓகே, செல்வன், நீங்களும் தேவும் கடவுளைப் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. எனக்குள் இருக்கும் கடவுள் கொஞ்சம் ஓய்வு கேட்கிறார்.. தூங்கிடுவேன்னு பயமுறுத்துகிறார்.. அவரை நான் கவனிச்சிட்டு, காலையில் வர்றேன்.. 200 போட்ருந்தீங்கன்னா, 300க்கு எடுத்துச் செல்வோம்!!! :))
டேவ்,
கடவுள் நம்பிக்கை உங்க மாதிரியே தான் எனக்கும்.பல்வேறு நிலைகளை எடுத்து நீங்க அனுபவப்பட்டிருக்கிங்கன்னு நினைக்கிறேன்.நானும் அப்படித்தான்.
நாம சின்னவங்களா பெரியவங்களா என்பதற்கு பதில் it depends என்று தான் சொல்வேன்.உலகமே பிரபஞ்சத்தில் சிறு துளி எனும்போது நாமெல்லாம் தூசு தான்.ஆக நாம் சின்னவங்கதான்.
ஆனா இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்த உயிரினம் நாம் தான் என்றால் (assumning it to be true) நாம் நிச்சயம் பெரியவர்களே.
கடவுளை நம்பித்தான் உணர வேண்டுமென்பதில்லை.அது ஒரு நிலைப்பாடு.ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் இங்கே நடப்பது அந்த நம்பிக்கையால் பலணுன்டா,என்ன வகையில் அந்த உறவுமுறை நீடிக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம்.
எஸ்.கே சார் நாம் கடவுளின் கருவி என்கிறார்.நானும் பொன்ஸ் அக்காவும் கடவுள் நம் வாழ்வை முன்னேற்ர உதவும் கருவி என்கிறோம்.
விவாதம் அந்த பாயின்டிலேயெ இன்னும் நிற்கிறது
நமக்காக கடவுளா,கடவுளுக்காக நாமா?
மதுமிதா அக்கா,
ராயல்டின்னா என்ன அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு நீங்க தான கேட்டீங்க?:-)))
உங்க புண்ணியத்துல உங்க பேரை போட்டு பதிவு துவங்கியதும் 130 தாண்டிடுச்சு.
உங்க புத்தகம் 130 லட்சம் பிரதி கண்டிப்பா விற்கும்.
ஓக்கே.பொன்ஸ் அக்கா.
காலையில் சந்திப்போம்.
//நமக்காக கடவுளா,கடவுளுக்காக நாமா? //
தலைவா, செல்வா, கலக்கறியே!! நீயாப்பா அ.கு.மு.கன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சி தனி நபர் கட்சியா மத்தவங்க முன்னேற்றத்துக்குப் பாடுபடற??!!! உனக்கே ஒரு ரசிகர் மன்றம், முன்னேற்றக் கழகம் எல்லாம் ஆரம்பிக்கணும்னு இப்போ எனக்குக் கை பரபரக்குதே!!! :))
அண்ணன் குமரனின் ரசிகனுக்கே ரசிகர் மன்றமா,
:-))
தலைவர் குமரன் பேர்ல மன்றம் ஆரம்பிச்சு பொருளாளரா ஆயி ஒரு நாலு காசு பாத்திடிருக்கேன்.கொஞ்சம் வசூலானா பிறகு பெரியாரை விட்டு பிரிந்த அண்னாதுரை போல்,கலைஞரை விட்டு பிரிந்த வைகோ போல் தனி கட்சி துவங்கலாம்னு இருக்கேன்..
//நமக்காக கடவுளா,கடவுளுக்காக நாமா?//
நமக்காக கடவுளா? - நிச்சயமாக ஆம் என்பேன்
கடவுளுக்காக நாமா? - இந்த முடிவு உங்கள் கையில்
//எஸ்.கே சார் நாம் கடவுளின் கருவி என்கிறார்.// - உணர்ந்தவரின் வார்த்தைகள். தன்னை வெறும் சிறு கருவி எனக் கூறும் எஸ்.கே அண்ணன் தன்னை விடப் பெரியவனான கடவுளை உணர்ந்ததால் அப்படிச் சொல்லுகிறார்.
//நானும் பொன்ஸ் அக்காவும் கடவுள் நம் வாழ்வை முன்னேற்ர உதவும் கருவி என்கிறோம்.// - நீங்கள் கடவுளின் உதவிக்காகக் காத்திருக்கிறீர்கள்... :))
வாதம் அல்ல செல்வன். தனித்திருங்கள்... விழித்திருங்கள்.. பசித்திருங்கள்..உங்களுக்கும் கடவுளுக்கும் உறவு பாலம் அமையுங்கள்.. உங்கள் குழப்பங்கள் தீரும்... பொறுமை அவசியம்
தேவ், தனித்து, விழித்து, பசித்து இருக்கேன்பா.. அப்படியே புஷ் அண்ணன் கிட்ட சொல்லி ரெண்டு புல் மீல்ஸ் அனுப்பு!! :)
//உணர்ந்தவரின் வார்த்தைகள். தன்னை வெறும் சிறு கருவி எனக் கூறும் எஸ்.கே அண்ணன் தன்னை விடப் பெரியவனான கடவுளை உணர்ந்ததால் அப்படிச் சொல்லுகிறார்.//
டேவ்,
ஏஸ்.கே அண்னனிடம் இதை தான் கேட்டேன்.அவர் இதுவரை பதில் சொல்லவில்லை.
தேவைகளே இல்லாத கடவுளுக்கு கருவிகள் எதற்கு?வேண்டுதல்க் வேண்டாமை இலானுக்கு மனிதன் எதற்கு பயன்படப்போகிறான்?
கடவுளுக்கும் எனக்கும் உரவுப்பாலம் அமைக்கதான் முயல்கிறேன் டேவ்.இந்த விவாதன்ங்கள் அதற்கு உதவும் என நம்புகிறேன்.தேடலின் ஒரு பகுதி விவாதமாக இருக்கலாமல்லவா?
akka,
புஷ் அண்னன் கிட்ட சொன்னா ஆர்மி இல்ல அனுப்பி குண்டு போட சொல்லுவாரு?
நல்ல ஆளை பாத்தீங்க :-)))
நல்லது நண்பரே...
நண்பரே கருவி எனபதன் அர்த்தம் பயன்பாடு மிக்க பொருள் அல்லவா
நாம் பயன் பட வேண்டும் என்றால் நாமாக இருந்தால் முடியுமா?
ஒரு கருவியாக வாகனம் முழுப் பயன் பெற வேண்டுமானால் நல்ல ஓட்டுனரைச் சென்று அடைய வேண்டும்.
ஒரு இசைக் க்ருவி நல்ல இசைத் தர வேண்டுமானால் ஒரு திறமையான இசைக் கலைஞனின் கைகளில் சென்று அடைய வேண்டும்.
ஒரு பேனா நல்ல எழுத்துக்களைப் பிரசவிக்க வேண்டுமானால் அது ஒரு அறிஞனின் கைகளில் சென்று சேர வேண்டும்.
இது போல் ஒரு நம்பிக்கைத் தான் நம் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டுமென்றால் நாம் கடவுளின் கையினில் கருவியாக வேண்டும்.
இந்த முடிவு எடுப்பது தனி மனிதனின் கையில்
But a friendly suggestion is TO MEET THE PURPOSE OF ONES LIFE.. WHY NOT GIVE GOD A CHANCE?
:))
அய்யோ அக்கா புஷ்க்கு நான் யார் என்னங்கற விவரமேத் தெரியாதே.. தல இருந்தா ஒரு எஸ் ஒரு எம் இன்னொரு எஸ் அனுப்புனா புஷ் குடும்பத்தோட வந்து உங்களுக்கு குழம்பு வச்சு குடுத்துட்டு நீங்கச் சாப்பிடும் போது போக குருப்பா கும்மியும் அடிச்சுட்டுப் போவாரே...
அது வரை நீங்கள் கடவுளை நம்புவது மேல்... ஆங் முதல் நிலைக்குத் திரும்புங்கள் சோறும் கிடைக்கும்...பேரும் கிடைக்கும் :)
200 அடிக்கலையா? தேவ் என்ன இப்படி ஓடிட்டாரு?!! சரி, எஸ் கே எங்கே?
Please wait till evening!
Some official work takes priority!
:-)
என்னைக்கு எல்லாப் பின்னூட்டங்களும் படிச்சு முடிக்க, என்னைக்கு நான் பின்னூட்டம் போட, அதான் சிரிப்பான் மட்டும் இப்போதைக்கு...
இன்னொரு சிரிப்பான் இங்கே :-)
வந்தாச்சு..வந்தாச்ச்...இதோ பதில்கள் பறக்கின்றன
எஸ்.கே ஏதோ ஆபிஸ் வேலை இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டார்.200 அடிக்கறெனோ இல்லையோ 150 அடிச்சுட வேண்டியதுதான்
அத்வைதம் ஏன் பிடிக்குதுன்னு நல்லாத் தெரிஞ்சுருச்சு செல்வன். :-)
அத்வைதம் பத்தி ஒரு பதிவு போடுங்களேன்?
நீங்க எழுதாட்டி நான் எழுத வேண்டி வரும். ஆனா எப்போன்னுத் தான் தெரியலை. :-)
//ஆங் முதல் நிலைக்குத் திரும்புங்கள் சோறும் கிடைக்கும்...பேரும் கிடைக்கும் :) //
முதல் நிலைக்குத் திரும்பி என்ன பயன்? நானே போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டேனாக்கும்.. புரியுதா? வேற யாரும் உதவலை.. நானே கடவுள்.. நானே எனக்கு உதவி பண்ணிகிட்டேன்.. :)
செல்வன்,
தேவ் இங்க தாங்க இருந்தாரு.. அவர் வந்து கை கொடுத்தா கூட 150 அடிச்சிடலாம்..
குமரனாவது ரெண்டு சிரிப்பான ரெண்டு பின்னூட்டமா போட்ருக்கலாம்.. என்ன பண்ண?!! நீங்க அவருக்கு முன்னேற்றக் கழகம் ஆரம்பிச்சாலும் இப்படி லேட்டா வந்து படுத்தறாரே!!
150 அடிச்சாச்சூஉ
குமரன்...
அத்வைதம் ஒரு கோட்பாடு என்ற வகையில் பிடிக்கும்.ஆனால் முழுக்க முழுக்க அதை பின்பற்றுவதில்லை.கர்ம யோகமே இப்போதைக்கு நம் வழி
ஆஷ்லின், என்ன இது.. மனுசங்களுக்குன்னு கேக்கறீங்க?!! நாங்க எல்லாம் தெய்வங்கப்பா.. முழுசா படிக்கிறது இல்லையா?!
உணர்ச்சி வசப் பட்டு குமரனைப் பத்தி எழுதினதுக்கு ஒரு சாரி.. :(.. குமரன், உங்க முன்னேற்றக் கட்சிக்கு நானும் என் 2 சென்ட்ஸ் கொடுக்கத் தயாரா இருக்கேன் (தாளாளரிடம் தரப் படாது!!!)
டேவ்,
எங்க இருக்கீங்க?அக்காவும் அண்ணன் குமரனும் அழைப்பது கேக்குதா?
டேவின் கேள்விகளுக்கு பதிலை தட்டிக்கொண்டிருக்கிறேன்
அக்கா,
நிதி முழுக்க என் கன்ட்ரோல்ல தான் இருக்கும்னு அண்ணன் குமரன் வாக்கு கொடுத்திருக்கார்
அதவைதம் தானே?சீக்கிரம் எழுதிருவோம் குமரன்.
ashlyn,
I guess you are jealous...ha..haaaa
டேவ்,
ஒரு கருவி முழுமையாக பயன்பெற வேண்டுமானால் நல்ல ஓட்டுனரை சேர வேண்டும் என்றீர்கள்.
ஆனால் அந்த உதாரணம் இங்கு பொருந்தாதே?கருவியே தேவைஇல்லத கடவுளுக்கு கருவி எதற்கு?
மனிதனுக்கு தான் கடவுள் தேவை.கடவுளுக்கு மனிதன் தேவை இல்லை.
அவன் வேண்டுதல் வேண்டாமை இலன்
குமரன் வரும் வாரம் அத்வைதம் பற்றி எழுதுகிறேன்.
ashlyn
உருப்படியா எதாவது" என்ற வார்த்தையை என்னை பார்த்து உபயோகப்படுத்தியதை கண்டிக்கிறேன்.என் அப்பா என்னை உருப்படாதவன் என்று தான் அழைப்பார்.அந்த பெயரை நான் கட்டி காப்பாத்த வேண்டாமா?:-)))
ashlyn,
chat room எதுக்கு?அதுக்கு தான் பின்னூட்டம் இருக்கே?:-)))
ஆஷ்லின், என்ன இது.. மனுசங்களுக்குன்னு கேக்கறீங்க?!! நாங்க எல்லாம் தெய்வங்கப்பா.. முழுசா படிக்கிறது இல்லையா?! //
அதானே?
நாங்க எல்லாம் homosapiens குரங்கா இருந்து மனுஷனா மாறி தெய்வம் ஆன ஞானிகள்.
செல்வன்,
இது சுததமா நல்லாயில்லை "குரங்கே இனி கடவுள்"க்கு 160 பின்னுடங்களா.
?!.
சேரி, அடித்தும் அடிச்சீங்க, 200 எட்டீடுங்க..
இதோ கேள்வி,
ஆசியாவில் மட்டும் ஏன் மத நம்பிக்கைகள் அதிகமாக உள்ளது?
முதல் நிலைக்குத் திரும்பி என்ன பயன்? நானே போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டேனாக்கும்.. புரியுதா? வேற யாரும் உதவலை.. நானே கடவுள்.. நானே எனக்கு உதவி பண்ணிகிட்டேன்.. :) ////
குட்
"கடவுளை நம்பினாலும் உன் குதிரை கடிவாளத்தை இறுக்க பிடிச்சுக்கோ" என ஒரு பழமொழி உண்டு.
வாங்க சிவபாலன்,
ஆசியாவில் தான் உலகின் அனைத்து மதங்களும் பிறந்தன.அதனால் இங்கு இயல்பிலேயே மத நம்பிக்கை அதிகம்.
ஐரோப்பாவில் பிறந்த மதங்கள் அனைத்தும் ஆசிய மதங்களால் அழிக்கப்பட்டன(கிரேக்க,ரோமானிய,கம்யூனிச மதங்கள்)
நாத்திகம் கூட இந்தியாவில் கார்வாகம் என தோன்றிய மதம்தான்.
தற்போது ஆசியாவில் மதநம்பிக்கை அதிகம் இருக்க காரனம் அதிகப்படியான ஜனத்தொகையும்,ஏழ்மையும் தான்
இது சுததமா நல்லாயில்லை "குரங்கே இனி கடவுள்"க்கு 160 பின்னுடங்களா.//
jey anjaneya....:-)))
ஆஞ்சநேயர் சக்தியே சக்தி:-))
செல்வன்,
நீங்க சொல்லறபடி பார்த்தா, ஏன் ஆப்ப்ரிக்காவில் குறைவாக உள்ள்து!
செல்வன்,
// jey anjaneya... //
ஜெய் ஜெய் ஆஞ்நேயா!!
ஆமா, ஆழ்வார்பேட்டை ஆஞ்நேயர் கோவிலுக்கு போயிருக்கீரீங்களா
Selvan,
How to type this "ஞ்".
Now I am doing cut & paste only.
இல்லை சிவபாலன்,
ஆபிரிக்கவெங்கும் கிறிஸ்தவம்,பழங்குடி மக்களின் மதம் என மதப்பற்று அதிகமாகத்தான் உள்ளது.மதப்பற்று குறைவாக இருப்பது கம்யூனிச சீனாவிலும்,ஐரொப்பாவிலும் தான்
சிவபாலன்
ஆழ்வார்பேட்டை போனதில்லை.நங்கநல்லூர் போயிருக்கிறேன்
சிவபாலன்
ஆழ்வார்பேட்டை போனதில்லை.நங்கநல்லூர் போயிருக்கிறேன்
சிவபாலன்,
ஞ் = nj அடிக்கவேண்டும்
//என் அப்பா என்னை உருப்படாதவன் என்று தான் அழைப்பார்.//
அப்போ கோயில் மாடு என்பது என்ன? வேற யாராவது கூப்பிடும் பெயரா? :)
//தற்போது ஆசியாவில் மதநம்பிக்கை அதிகம் இருக்க காரனம் அதிகப்படியான ஜனத்தொகையும்,ஏழ்மையும் தான்
//
சரி தான்; ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள மக்கள் ரொம்ப அதிவேகமா முன்னேறிகிட்டு இருக்காங்க.. நான் சொன்ன நியூட்டன் உதாரணத்தில் இந்த ஊர்ல எல்லாம் ஆப்பிளைக் கீழே போட்டு சோதிச்சவங்களுக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் தான் நம்ம எல்லாம் ஆப்பிளைக் கிழே போடும் அளவுக்கு பணங்காசு உள்ளவங்களானோம்.. !! அதான் மத நம்பிக்கை, அதாவது, எது சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் இருக்கு.. இப்போ உங்க பசங்க தலைமுறையில் அதெல்லாம் சுத்தமா மாறிடும் சிவபாலன்..
//மதப்பற்று குறைவாக இருப்பது கம்யூனிச சீனாவிலும்,ஐரொப்பாவிலும் தான்
//
அமெரிக்கா?
sivapaalan
more fonts
nja = ஞ
nji = ஞி
njaa = ஞா
அமெரிக்கா? ///
அமெரிக்காவில் சர்ச் ரெகுலராக போவோர் எண்ணிக்கை 45% க்கும் மேலே.
50% அமெரிக்கர்கள்(டெமாக்ராட்டுகள்) லிபெரல்கள்.பெயர் தான் ஜான்,ஜேம்ஸ் என இருக்குமே தவிர மற்றபடி கிறிஸ்துவ மதத்தை துளி கூட பிராக்டீஸ் செய்ய மாட்டார்கள்.
கொலராடோ மாநிலம் முழுக்க இயற்கையை,மரங்களை வழிபடுபவர்கள் உண்டு.
கலிபோர்னியா முழுக்க முழுக்க இடதுசாரி டெமாக்ராட்டுகள்.
ரூரல் அமெரிக்கா முழுக்க முழுக்க பைபிள் பெல்ட் என்று சொல்லக்கூடிய அலவு மதபற்று நிரைந்த இடம்.
வசதி படைத்த அமெரிக்க மாநிலங்களில்(கடலோர) மதப்பற்று குறைவு
அப்போ கோயில் மாடு என்பது என்ன? வேற யாராவது கூப்பிடும் பெயரா? :)////
கோயில் மாடு என்பது என் அம்மா திட்ட பயன்படுத்தும் சொல்."தின்னுட்டு கோயில் மாடு மாதிரி ஊர் சுத்த தான் லாயக்கு"ன்னு திட்டுவாங்க
அதான் மத நம்பிக்கை, அதாவது, எது சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் இருக்கு.. இப்போ உங்க பசங்க தலைமுறையில் அதெல்லாம் சுத்தமா மாறிடும் சிவபாலன்.. //
கரெக்ட்...
கேள்வி கேக்காம எதையும் ஏத்துக்க கூடாது.ஆனா எனக்கென்னவோ வருங்காலத்துல இதெல்லாம் மாறிடும்னு தோணலை.பாக்கலாம்.எதாவது நல்லது நடக்குதான்னு
// எது சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் இருக்கு.. இப்போ உங்க பசங்க தலைமுறையில் அதெல்லாம் சுத்தமா மாறிடும் சிவபாலன்.. //
நல்லா சொன்னீங்க பொன்ஸ் அக்கா!!
ஆனா, நம்ம ஆயுர்வேத மருதுவ முறையில் நல்லாதான் வந்துட்டுருந்தோம். ஆனா, நடுவில் தான் இப்ப்டி ஆகிவிட்டோமோன்னு தோனுது.
ஒரு வேலை பிரிட்டிஸ்காரனுங்க குழப்பி விட்டுடாங்களான்னு தெரியல..
செல்வன் நீங்க என்ன சொல்லரீங்க.
//ரூரல் அமெரிக்கா முழுக்க முழுக்க பைபிள் பெல்ட் என்று சொல்லக்கூடிய அலவு மதபற்று நிரைந்த இடம்.
வசதி படைத்த அமெரிக்க மாநிலங்களில்(கடலோர) மதப்பற்று குறைவு
//
அப்டின்னா செல்வன், ஒருவேளை, பணம் சேரச் சேர மனிதன் கடவுள், மதம் இவற்றின் மீது நம்பிக்கை இழந்து விடுகிறான்னு சொல்லலாமா? அத்தோட, நான் தான் கடவுள் என்னும் எண்ண்த்தை விட, அந்தக் காசுதான் கடவுள் என்னும் எண்ணத்தின் வெளிப்பாடு தான் இதுன்னு எடுத்துக்கிடலாமா?
//அதான் மத நம்பிக்கை, அதாவது, எது சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் இருக்கு.. இப்போ உங்க பசங்க தலைமுறையில் அதெல்லாம் சுத்தமா மாறிடும் சிவபாலன்.. //
நல்லா சொன்னீங்க பொன்ஸ் அக்கா!!
ஆனா, நம்ம ஆயுர்வேத மருதுவ முறையில் நல்லாதான் வந்துட்டுருந்தோம். ஆனா, நடுவில் தான் இப்ப்டி ஆகிவிட்டோமோன்னு தோனுது.
ஒரு வேலை பிரிட்டிஸ்காரனுங்க குழப்பி விட்டுடாங்களான்னு தெரியல..
செல்வன் நீங்க என்ன சொல்லரீங்க.
// ஒருவேளை, பணம் சேரச் சேர மனிதன் கடவுள், மதம் இவற்றின் மீது நம்பிக்கை இழந்து விடுகிறான்னு சொல்லலாமா //
அப்பீடீன்னா,Globalisation & Global ecconomy மத நம்பிக்கைகளுக்கு எதிரான சக்தி உருவாகுமா?
அப்டின்னா செல்வன், ஒருவேளை, பணம் சேரச் சேர மனிதன் கடவுள், மதம் இவற்றின் மீது நம்பிக்கை இழந்து விடுகிறான்னு சொல்லலாமா? அத்தோட, நான் தான் கடவுள் என்னும் எண்ண்த்தை விட, அந்தக் காசுதான் கடவுள் என்னும் எண்ணத்தின் வெளிப்பாடு தான் இதுன்னு எடுத்துக்கிடலாமா?///
பணம் சேர சேர அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கையை இழப்பதில்லை அக்கா.படிப்பு அதிகமாக அதிகமாக கடவுள் நம்பிக்கை போய் விடுகிறது.
அமெரிக்க பல்கலைகழகங்கள் முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனையில் ஊறியவை.மதத்தை முழுக்க முழுக்க வெறுப்பவை.
இந்தியாவில் "நான் இந்து" என்று சொன்னால் எப்படி மதவாதி போல் பார்க்கிறார்களோ அதே போல் அமெரிக்கவில் "நான் கிறிஸ்தவன்" என்று சொன்னால் மதவாதி போல் பார்ப்பார்கள்.
இங்கே சர்ச்சுக்கு போகும் ஒவ்வொரு வெள்ளை இன அமெரிக்கனும் புஷ் கட்சிக்கு தான் ஓட்டு போடுவான்.எதிர்கட்சியான டெமாக்ராட் கட்சிக்கு இந்தியர்கள்,யூதர்கள்,ஆபிரிக்க அமெரிக்கர்கள்,பணக்காரர்கள்,படித்தவர்கள்,மதநம்பிக்கையற்ரவர்கள்,பெண்ணுரிமைவாதிகள் என கச்சை கட்டிக்கொண்டு ஓட்டளிப்பர்.
அமெரிக்கா இருகூறாக பிரிந்து நிற்கிறது.
சிவபாலன்,
உங்களுக்கும் நான் அக்காவா? :(
இதெல்லாம் ஓவருங்க!! நான் தான் சின்னப் பொண்ணுன்னு என் பதிவில் சொல்லி இருக்கேனே..
வலைப்பதிவுக்கு வந்து என் வயசை நல்லா ஏத்திட்டாங்க!! :(
நல்லா சொன்னீங்க பொன்ஸ் அக்கா!!
ஆனா, நம்ம ஆயுர்வேத மருதுவ முறையில் நல்லாதான் வந்துட்டுருந்தோம். ஆனா, நடுவில் தான் இப்ப்டி ஆகிவிட்டோமோன்னு தோனுது.
ஒரு வேலை பிரிட்டிஸ்காரனுங்க குழப்பி விட்டுடாங்களான்னு தெரியல..
செல்வன் நீங்க என்ன சொல்லரீங்க. ////
நம்ம ஆயுர்வேதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த துறை சிவபாலன்.நாம் அதை நம் அறிவீனத்தால் இழந்துவிட்டோம்.நிதி இருந்தால் அதை ஆங்கில மருத்துவத்தை தோற்கடிக்கும் வகையில் சிறப்புற செய்ய முடியும்.
வெள்ளையன் தான் இத்துறையை கெடுத்தான் என்பது நமது தவறுகளுக்கு நாம் காரனம் கற்பிப்பது போலாகும்.முக்கிய காரனம் 56 தேசமாக பிரிந்திருந்து சண்டை போட்டதுதான்.சமாதான காலத்தில் தான் கலைகள் வளரும்
அப்பீடீன்னா,Globalisation & Global ecconomy மத நம்பிக்கைகளுக்கு எதிரான சக்தி உருவாகுமா? //////
நீண்டகால விளைவுகள் மத ஒழிப்பாக இருக்கலாம் சிவபாலன்.குறுகிய கால பலன்கள் என்று பார்த்தால் மதம் இதன்மூலம் வளரும் என்று தான் தோன்றுகிறது.இன்டெர்னெட்,டெலெவேஞலிசம் என புதிய ஊடகங்கள் மூலம் மதபிரச்சாரம் நடக்கிறது.புத்த நாடான தென்கொரியாவில் மிகக்குறுகிய காலத்தில் 50% கிறிஸ்தவ மதம் பரவிவிட்டது.
ஆனால் படிப்பு அதிகமாக அதிகமாக மதநம்பிக்கை குறையும்.இது நீண்டகாலத்தில் நடக்கக்கூடியது
// சிவபாலன்,
உங்களுக்கும் நான் அக்காவா? //
மன்னுச்சிடுங்க, ஒரு மரியாதைக்காக தான்..
(ஆனால், உண்மை வந்து என் வயதை குறைத்து கொள்ளவே)
இன்னும் ஐந்தே ஐந்து கமென்ட் தான் 200 அடிக்க.......
200 அடிப்பவர்களுக்கு எஸ்.கே தங்க மோதிரம் அணிவிப்பார் என்று அறிவிக்கலாம் என பார்த்தால் அடிக்க வந்துவிடுவார் போலிருக்கே?:-))))
செல்வன், நீண்ட நாட்கள் ஆகும்னு தோணலைங்க.. சீக்கிரமே நடந்துரும்..
இப்போ என்னையும் உங்களையுமே எடுத்துக்குவோமே, நம்ம பெற்றோர் சொல்லிய மாதிரி கடவுள் கதைகளை, பக்தி ரசம் பொங்க, நீங்களோ நானோ நம்ம அடுத்த தலைமுறைக்கு சொல்லப் போறோமா என்ன? ஏதோ, அதுவும் ஒரு நீதிக்கதைங்கிற அளவுல சொல்லலாம்.. அதைப் பார்த்து பக்தி வருமா?
எல்லா மீடியாக்களிலும் நாத்திகமும் பகுத்தறிவும் பேசப் படும் (அப்பட்டமான பக்தி மறுக்க அல்லது மறைக்கப் படும்) ஒரு சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள், நம்ம அளவுக்குக் கூட கடவுளை நம்ப மாட்டாங்களே!!
இன்னும் ரெண்டு தலைமுறையில் இதெல்லாம் முடிவுக்கு வந்து விடாதா?!!
செல்வன்,
"டிராவிட்டே இனி கடவுள்"
//200 அடிப்பவர்களுக்கு எஸ்.கே தங்க மோதிரம் அணிவிப்பார் என்று அறிவிக்கலாம் என பார்த்தால் அடிக்க வந்துவிடுவார் போலிருக்கே?:-)))) //
இருநூறு அடிக்க வந்துடுவாரா? இல்லை உங்களை அடிக்கவா?
செல்வன், கவலை வேண்டாம்.. ம்ம்ம்.. என்ன பண்ணலாம், சிவபாலன், மன்னிச்சிடுங்கன்னு சொன்னா விட்ருவோமான்னு சண்டை போடுவோமா?!! ;) :)
அக்கா
உங்களுடையதுதான் 200வது பின்னூட்டம்.
வாழ்க ஆற்றலரசி பொன்ஸ் அக்கா,மேலான்மை மாணிக்கம் சிவபாலன்,ஆன்மீக தளபதி எஸ்.கே,கட்டுசேரி காவலன் டேவ்,ஞான சிகாமணி அஷ்லின்,வருத்தப்படாத வாலிபன் வவ்வால் ஆகியோர்
இருநூறு ஆச்சு.. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் சரியா பதில் சொல்லிட்டா எஸ்கே வந்ததும் மிச்சம் தொடரலாம் :)
சிவபாலன்,
திராவிட சிவபாலனே இனி கடவுள்
200 அடிக்க கைகொடுத்த சிவபாலன் கூடிய விரைவில் அவர் பதிவில் 300 அடிக்க வாழ்த்துக்கள்
// இன்னும் ரெண்டு தலைமுறையில் இதெல்லாம் முடிவுக்கு வந்து விடாதா?!! //
பொன்ஸ் நீங்க சொல்லறது ஒரு விதத்தில் சரிதான்.
என்னுடைய பெண் குழந்தைக்கு, நம்ம சாமி பேரு எதும் தெரியாது. ஆனால் இது சரியா, தவறான்னு தான் தெரியல.
எஸ்.கே ரெண்டு மூணு பதிவுக்கு முன்னேயே உங்களை வாழ்த்தியதை இப்போது நினைவு கூற விரும்புகிறேன்..
எல்லாப் புகழும் எஸ்கேவுக்கே :):
http://holyox.blogspot.com/2006/05/89.html#c114832648168474590
ஓக்கே அக்கா
பழைய பக்தி குறைந்தாலும் அதற்கு போட்டியா புது பக்தி உருவாகுதுன்னு தோணுது.முன்னாடி வச்சிஷ்டர்,விசுவாமித்திரர்னு சொல்லுவோம்.இப்ப அம்ரிதானதமயி அம்மா,சாய்பாபான்னு புது ஞானிகள் வருகின்றனர்.முன்னாடி திருப்பதிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் போகும்.இப்ப அண்ணமலையான் கோயிலுக்கு அதே மாதிரி கூட்டம் போகுது.
அக்ஷய திருதியை முன்னாடி கிடையவே கிடையாது.இப்ப புதுசா கிரேஸ் கிலம்பிருக்கு,.இதெல்லாம் படிச்சவங்க மத்தில தான்.,
ஆக 2 தலைமுரைல இதெல்லாம் காணாம போகும்ணு தோணலை.தொடரும்னு தான் தோணுது
Post a Comment