Wednesday, May 24, 2006

92.குரங்கே இனி கடவுள்.

மதுமிதா அவர்களுக்காக இந்த பதிவு வலை பதிவர் பெயர் : செல்வன் வலைப்பூ பெயர்: உலகின் புதிய கடவுள் வலைப்பதிவின் சுட்டி: www.holyox.blogspot.com www.holyape.blogspot.com ஊர்: கோவை நாடு: இந்தியா வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானே கண்டுபிடித்தேன். முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 17 2006 இது எத்தனையாவது பதிவு:92 இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://holyox.blogspot.com/2006/05/92.html வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கடவுளாக வேண்டுமென்றுதான். சந்தித்த அனுபவங்கள்: தரம் வாய்ந்த கட்டுரைகளை இடவேண்டும் என்பதே என் லட்சியம்.அதற்குண்டான ரசிகர் வட்டம் சிறிது என்றாலும் தரத்துடன் சுவாரசியத்தை கலந்தால் நல்ல ரசிகர் வட்டம் வருமென நம்புகிறேன்.எழுத துவங்கியபோது அதற்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என பயந்தது உண்மை.அந்த பயம் இன்னும் அப்படியே இருக்கிறது என்றாலும் இதுவரை என் மீது எந்த முத்திரையும் குத்தப்படாமல் இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி.முற்போக்குவாதம்,பிற்போக்குவாதம்,ஆத்திகம்,நாத்திகம்,சினிமா,கதைகள், பெண்ணியம்,வணிகம்,தத்துவம்,பின்நவீனத்துவம் என அனைத்தையும் கலந்து எழுதிவருவதால் அனைவரும் குழம்பிப்போய் எனக்கு எந்த முத்திரையும் குத்தாமல் இப்படியும் ஒரு ஜந்து தமிழ்மணத்தில் இருக்கட்டும் என விட்டு வைத்துள்ளனர் என நினைக்கிறேன். பெற்ற நண்பர்கள்: என் பதிவை படிக்கும் அனைத்து வாசகர்களும் எனக்கு வலைப்பதிவு மூலம் கிடைத்த நண்பர்களே. கற்றவை: Politically correctஆக எழுதுவது மிகவும் சிரமம்.ஆனால் எழுத்துலகில் சர்வைவலுக்கு அது அவசியம். எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்தே சுதந்திரத்தின் உயிர்நாடி தானே?என் எழுத்துக்களுக்கு நானே அணிவித்துக்கொண்ட விலங்குகள் அன்றி வேறேதும் தடைகள் இதுவரை வந்ததில்லை.எழுத்துலகில் புரட்சி செய்ய இன்னும் நான் வளர வேண்டும் என உணர்கிறேன். இனி செய்ய நினைப்பவை: கொஞ்சம் காசு கிடைத்தால் என் பிளாக்கை ஒரு வலைத்தளமாக மாற்றுவது.இணைய பத்திரிக்கை ஒன்று துவக்குவது.இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற சொல்லாலும்,செயலாலும் உதவுவது. உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: நான் கடவுள். இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: கடவுள் இறந்துவிட்டார்.மனிதனே இனி உலகின் புதிய கடவுள்.அந்த பொறுப்பை அவன் ஏற்க வேண்டும்.அவன் அதை செய்ய தயங்குகிறான்.பழைய கடவுள் சாகவில்லை,உயிரோடு இருக்கிறார் என அவன் அஞ்சுகிறான்.அந்த அச்சத்தை விடுத்து பழைய கடவுளின் சாம்பல் மேல் புதிய கடவுளாக மனிதன் உலகை ஆள வேண்டும். Homo sapiens குரங்கே இனி கடவுள்.

291 comments:

«Oldest   ‹Older   201 – 291 of 291
Unknown said...

எஸ்.கே ரெண்டு மூணு பதிவுக்கு முன்னேயே உங்களை வாழ்த்தியதை இப்போது நினைவு கூற விரும்புகிறேன்..

எல்லாப் புகழும் எஸ்கேவுக்கே :):///



ஆமாம் அக்கா
வேதம் சொல்லும் அவர் வாயால் வாழ்த்தியது பலிச்சுடுச்சு.

நீங்க கொடுத்த ஆதரவையும் மறக்க முடியுமா?ஆற்றலரசியின் ஆற்றல் என்னன்னு காட்டிட்டிங்க.உங்களுக்கும்,சிவபாலனுக்கும்,டேவ்,அஷ்லின்,வவ்வாலுக்கும் எப்படி நன்றி சொல்ரதுன்னே தெரியலை

Sivabalan said...

செல்வன்,

மேலான்மை மாணிக்கம் சிவபாலன்..

ஒரு பட்டத்தை கொடுத்து மகிழ்விச்சிடீங்க..

பொன்ஸ்~~Poorna said...

//அக்ஷய திருதியை முன்னாடி கிடையவே கிடையாது.இப்ப புதுசா கிரேஸ் கிலம்பிருக்கு,.இதெல்லாம் படிச்சவங்க மத்தில தான்.,
//
உண்மைதான்.. மனிதனுக்குப் புதிது புதிதா ஏதாவது வேண்டியிருக்கு.. முன்னாடி பதினெட்டாம் பெருக்கு, மாதப் பிறப்புன்னு கொண்டாடிகிட்டு இருந்தோம், இப்போ காதலர் தினம், மகளிர்தினம்.. அவ்வளவுதான்.. ஏதாச்சும் புதுசா ஒரு நாள்..

கடவுள், வழிபாடு இதெல்லாம், எல்லா நாளையும் ஒரே நாளாக இல்லாமல், ஏதாவது மாற்றம் உள்ள நாளாக்கும் முயற்சி.. அவ்வளவு தான்.. இல்லையா?!!

இந்தக் கடவுள் இல்லை என்றால், வேறு ஒரு மனித வடிவில் கடவுள்.. நாட்களும் வாழ்க்கையும் ஒரே மாதிரி போகாமல் இருக்க ஒரு சேன்ஞ்... சில சமயம், வீக்னஸுக்கு ஒரு வடிகால்..

Sivabalan said...

செல்வன்,


பட்டத்தை கொடுத்துக்கூட மதவாதிகள் அரசரை போதை எற்றி அழித்திருப்பார்களோ.

பொன்ஸ்~~Poorna said...

//ஆற்றலரசியின் ஆற்றல்//
இந்தப் பேரை யார் குடுத்தாங்கன்னு தெரியலை.. இதுவரை எனக்கு இருந்த நிக் நேமிலயே கொஞ்சம் டீசன்டான பட்டம் இது தான் :)

ஆனா, சிவபாலன் பட்டத்தைக் கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம சொல்லி இருந்தா நல்லா இருக்கும், மேலாண்மை மாணிக்கம் சிவபாலன் :)

Unknown said...

மேலான்மை மாணிக்கம் சிவபாலன்..

ஒரு பட்டத்தை கொடுத்து மகிழ்விச்சிடீங்க.. ///


பட்டம் மட்டுமா அடுத்து பொற்கிழியே தரலாம்னு இருக்கேன்.அ.கு.மு.கல வசூல களை கட்டட்டும்.செயல்வீரர்களுக்கு அண்ணன் குமரன் கையால்(தயவில்) பொற்கிழி குடுத்துடுவோம்:-)))

Unknown said...

பட்டத்தை கொடுத்துக்கூட மதவாதிகள் அரசரை போதை எற்றி அழித்திருப்பார்களோ.///

சிவபாலன்
இந்த பெருமை புலவர்களையே சாரும்.

வள்ளல்னு பட்டம் கொடுத்து வாரி வாரி வழங்க வெச்சுட்டாங்க:-)))

Unknown said...

இந்தப் பேரை யார் குடுத்தாங்கன்னு தெரியலை.. இதுவரை எனக்கு இருந்த நிக் நேமிலயே கொஞ்சம் டீசன்டான பட்டம் இது தான் :)

ஆனா, சிவபாலன் பட்டத்தைக் கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம சொல்லி இருந்தா நல்லா இருக்கும், மேலாண்மை மாணிக்கம் சிவபாலன் :) /////

யார் கொடுத்தா என்ன?உண்மையிலேயே நீங்க ஆற்றலரசி தான்.

புதுசா தங்கமன பொன்ஸ் அக்கான்னு பட்டம் கொடுக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்

Sivabalan said...

செல்வன்,

இந்த பதிவில் நீங்க 200 அடிச்சிட்டதால உங்களை நாத்தீக வாதின்னு முத்திரை குத்தப்போரங்க..

அதனால, நம்ம பாம்பாட்டி சித்தர் மருதமலையில் இன்னும் பாம்பு வடிவில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. இது மாறி ஏதாவது பதிவு போடுங்க..

படிப்போம்.. தெரிந்துகொள்வேம்...

Unknown said...

நம்மளை நாத்திகவாதின்னு முத்திரை குத்த மாட்டாங்க சிவபாலன்.கேட்டா இது ஆஞ்சநேயர் பதிவுன்னு சொல்லி சமாளிச்சுடலாம்.:-))

கோவையை பற்றி ஒரு கலக்கல் பதிவு அடுத்த வாரம் போடலாம் என இருக்கிறேன்.அன்னபூர்ணா ஓட்டல் பற்றி எழுதபோகிறேன்

Sivabalan said...

// சிவபாலன் பட்டத்தைக் கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ..//

ஆகா.. அப்ப என்னுடைய பதிவின் தலைப்பே தப்பா..

உடனே மாத்திவிடுகிறேன்..

பொன்ஸ்~~Poorna said...

//கேட்டா இது ஆஞ்சநேயர் பதிவுன்னு சொல்லி சமாளிச்சுடலாம்//
:)))

//.அன்னபூர்ணா ஓட்டல் பற்றி எழுதபோகிறேன்
//
இப்போவே பசிக்குதே!! :)

Sivabalan said...

செல்வன்,

அன்னபூர்ணா ஓட்டல் பற்றியா..

மறக்காம சோலா பூரியைப் பற்றி எழதிருங்க...

Unknown said...

ஆமாக்கா.சூப்பரான உணவகம்.கோயமுத்தூர்காரங்க எங்க போனாலும் சிறுவாணியையும் அன்னபூர்ணா கவுரிசங்கர் ஓட்டலையும் மறக்க மாட்டாங்க

Unknown said...

கண்டிப்பா எழுதுகிரேன் சிவபாலன்.சோலாபூரி,இட்லி,சாம்பார் அன்னபூர்ணா காப்பி என எழுதப்போகிறேன்

Unknown said...

njaana sikaamani ashlyn

I am typing a paper.ha ha.....my work never stops.

பொன்ஸ்~~Poorna said...

ஹைதராபாத்தில் அன்னபூர்ணா சங்கிலியில் ஒரு உணவகம் ஆரம்பிச்சாங்க.. நான் சாப்பிட்டிருக்கேன். நல்லாத்தான் இருந்தது.. ஆனா ரொம்ப காஸ்ட்லி.. ஒரு ஆறு மாதத்தில் அதை மூடி விட்டார்கள்..

Sivabalan said...

ஆற்றலரசி பொன்ஸ் அக்காவுக்கு மிக்க நன்றி

பிழைதிருத்தம் செய்தற்காக

பொன்ஸ்~~Poorna said...

சாரி... அது பேர் அன்னலக்ஷ்மி.. ரெண்டும் ஒண்ணுதானா என்று தெரியவில்லை..

Unknown said...

அன்னபூர்ணா கோவையில் அவ்வளவு காஸ்ட்லி கிடையாது அக்கா.20 ரூபாய்க்கு புல்மீல்ஸ் கிடைக்கும்.மசால் தோசை 10 ரூபா.காப்பி 5 ரூபா

Sivabalan said...

// தென்கொரியாவில் மிகக்குறுகிய காலத்தில் 50% கிறிஸ்தவ மதம் பரவிவிட்டது.//

அதிர்ச்சியான செய்தி..

Unknown said...

அன்னலக்ஷ்மி வேற அன்னபூர்ணா வேற.
அன்னலஷ்மி ரொம்ப விலை அதிகம்.கோவையில் பணக்காரர்கள் மட்டுமே அங்கு போவார்கள்

Unknown said...

சிவபாலன்,

உலகில் மிஷனரிகள் அதிகமாக செயல்படுவது தென்கொரியாவில் தான் என்று நினைக்கிறேன்.ஆப்பிரிக்காவிலும் கிறிஸ்தவம் வேகமாக பரவுகிறது.

Unknown said...

அஷ்லின்
நான் ரெசிடென்சி ஓட்டலில் சாப்பிட்டேன்.அங்கும் கூட சாப்பாட்டில் பூச்சி இருந்தது.ஆனா கடைசியில் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.இதெல்லாம் எல்லா ஓட்டலிலும் இருப்பதுதான்.

Sivabalan said...

செல்வன்,

சீனாவில் மட்டும் எப்படி தடுத்தார்கள்?

Unknown said...

ashlyn
karappaan puuchchi is full of proteins.You should actually have paid more.:-)))

Unknown said...

சிவபாலன்
சீனாவில் கத்தோலிக்க திருச்சபையையே தடை செய்து விட்டனர்.கம்யூனிஸ்ட் அரசு தான் அங்கே கத்தோலிக்க திருச்சபையை நடத்துகிறது.பலூன் காங் எனப்படும் மதத்தை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து கிட்னி முதலானவற்ரை அவர்கள் அனுமதி இன்றி எடுத்துக்கொள்கின்றனர்.

Sivabalan said...

//அடைத்து கிட்னி முதலானவற்ரை அவர்கள் அனுமதி இன்றி எடுத்துக்கொள்கின்றனர் //

Oh no..

It is really sad..

ஆனால் இந்த மதவாதிகள் செய்யும் மூலை சலவையைவிட இது குறைவுதான் என்று நான் நினைக்கிறேன்.

Sivabalan said...

ரெசிடென்சி desert நல்லாக இருக்கும்..

பொன்ஸ்~~Poorna said...

//ஆற்றலரசி பொன்ஸ் அக்காவுக்கு மிக்க நன்றி //
மறுபடியும் அக்காவா? !! சிவபாலன், உங்க பொண்ணு என்னை அக்கான்னு கூப்பிட்டா ஓக்கே, நீங்களே கூப்பிட்டா? நான் யார்ட்ட போய் சொல்ல?!! :(

Unknown said...

அஷ்லின் தமிழ் கத்துட்டாச்சா?வெரிகுட்...so happy

ரொம்ப சந்தோஷம்.சீக்கிரம் பிளாக் ஆரம்பிச்சு எழுத ஆரம்பிச்சிடுங்க

Unknown said...

சிவபாலன்
ரெஸிடென்சி டெச்செர்ட் நல்லா இருக்கும்./I agree

Unknown said...

சிவபாலன்.
மதவாதிகள் மோசம் என்றாலும் சீன அரசு செய்வது மனிதாபிமானமே இல்லாத செயல்.இதை ஏற்கவே முடியவில்லை

Unknown said...

சிவபாலன்

நீங்க தான் பொன்ஸ் தங்கச்சின்னு சொல்லிடுங்களேன்.

Sivabalan said...

இல்லை செல்வன்

இது இருகோடுகள் தத்துவம்.

சீன அரசு ஒரு தலைமுறை தான் அழிக்கிறது..

ஆனால் இந்த மதவாதிகள்..

Unknown said...

உண்மைதான் சிவபாலன்,
மதவெறி மூலம் மனதை விஷமாக்கினால் அது ஒரு சமூதாயத்தையே அழித்துவிடும்

Sivabalan said...

என் தங்கை பொன்ஸ்...

வாழ்க!! வளர்க !!

Unknown said...

என் தங்கை பொன்ஸ்...

வாழ்க!! வளர்க !//

I second it.,

vaazka sakoothari pons

பொன்ஸ்~~Poorna said...

அப்பாடா.. இப்போதான் நிம்மதி :)

என் தங்கை கல்யாணி மாதிரி ஒரு feel வந்தாலும், ஓகே.. 250 ஆச்சா?

Unknown said...

250 நாட் அவுட் தந்த தங்கை பொன்ஸ்,சிவபாலன்,எஸ்.கே,அஷ்லின் வாழ்க

Sivabalan said...

செல்வன்,

நான் பணி ஆற்றுவது சிகாகோ டவுன் டவுன். வீடு இருப்பது 50 மைல் தள்ளி..

அதனால் விடை பெறுகிறேன்...

மீன்டும் இதே பதிவில் சந்திகிறேன்..

Unknown said...

ஓக்கே சிவபாலன்,
அருமையான வார விடுமுரையை கொண்டாடுங்கள்

பொன்ஸ்~~Poorna said...

வார விடுமுறையா? என்னங்க செல்வன், அவர் தான் திரும்பி வர்றேன்னு சொல்றாரே.. வரட்டும்..

பாக்கலாம் சிவபாலன்.. (நான் அண்ணா எல்லாம் சொல்லமாட்டேனாக்கும்.. எனக்கு ஒரே அண்ணன் கைப்பு மட்டும் தான் :) )

Unknown said...

இனிய வார இறுதின்னு சொல்ரது இனிய பின்னூட்டங்கள் இடுவதுதான் அக்கா.:-)))

VSK said...

It is really heartening to see this post crossing 200 and still going strong!
My Tamil font [jafna library] is not opening up for reasons unknown to me and hence this English post, as I dont want to do the Thanglish!

BTW, the first 125 are fine but after that this post has taken a drift and has become a chat box!

I saw a post from 'Pons' that she was continuing this till evening for me to come and reply to her querry!

I thought I replied to hers and Selvan's querry on being an 'instrument' of God instead of making God your 'instrument'!
அவருக்கு, அன்பே வடிவான அவருக்கு, மற்றவர் நலமே பேணி இருக்கும் அவருகு நாம கருவியா இருக்கிறது சேவை!

அதுதான் பிறந்த பயனைத் தரும் ஒரு பெரு வாழ்வு!

அப்பப்போ குறை இருக்கறப்போ, பழனி முருகன் காதுல ஒரு சங்கதி போட்டுட்டுப் போற பொன் ஸுக்கும் சரி,
ஆன்மீக கட்டுரைகளுக்காக துணைக்கழைக்கிற செல்வனுக்கும் சரி,
இந்த 'உள்ளே வெளியே' ஆட்டம் ஆடற வவ்வால் அண்ணாச்சிக்கும் சரி,

தேடற நேரத்துல, வந்து கொடுக்கற சாமி, மனிதன் மூலமாத்தான்!

'தெய்வம் மானுஷ ரூபேண' என்று வேதம் சொல்லுகிறது!

அந்த மாதிரி, மற்றவனுக்கு நன்மை பண்ணுகிற , [ஆண்டவனின்] கருவியாக நாம் இருக்க வேண்டும் என மீண்டும் சொல்கிறேன்!//

God is Love and wants to be of help to all mankind and only man can do it as HIS representaative, taking up HIS cue and render service to whoever comes in your way.

When even a MONKEY can become God, why not a man? But, first, look at that Monkey and Its deeds and how it became God!

And, btw, Pons and Selvan, do not even think for a moment that the next generation will be more atheistic and in a few more, everyone will be!

We don't worship as our grandparents did 50-60 years ago, but honestly, can you say that people have lost faith in God?!

I really want to elaborate this in Tamil and so will continue after an hour or so, when i treach home and try it from there!

Unknown said...

Dear SK,

Yes.Please comeback.I know this has become a chat,but what else do we have pathivus for?chumma oru damash.

My thanks goes to you for making this cross 250.

பொன்ஸ்~~Poorna said...

//We don't worship as our grandparents did 50-60 years ago, but honestly, can you say that people have lost faith in God?!
//
Not lost faith in God.. but just that I have more faith on myself, and less on God..

I also dont like to type or discuss this in English or Thanglish.. waiting for you to go back :)

Unknown said...

Dear SK,

Faith on God need not go down,but can change,right?

God can take a different role in the liberalised world.Earlier we did so many rituals back in India,but it is not possible to do that here in USA.

In India we used to do "sani poottu koolam iduthal". But is it possible here?

பொன்ஸ்~~Poorna said...

//I know this has become a chat,but what else do we have pathivus for?//

Sorry Selvan, I differ in this..

இது 200 பின்னூட்டம் பெறும் உங்கள் முதல் பதிவு என்பதால் தான் நான் இந்த மாதிரி அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.. அரட்டை இல்லாமல், உருப்படியான விவாதங்கள் மட்டுமே முன்வைத்தும், நாம் 200க்கு கொண்டு போயிருக்க முடியும்.. என்ன, இன்னும் கொஞ்சம் தாமதமாகி இருக்கும்.. அவ்வளவுதான்..

அரட்டைப் பின்னூட்டங்கள் அந்த நிமிடம் படிக்க நன்றாக இருந்தாலும் இன்னும் சில நாட்கள் கழித்து எடுத்துப் பார்க்கும் போது பயனற்றவையே.. நான் முன்னமேயே சொன்னது போல், உங்கள் பதிவுகள் //கொஞ்சம் சுயமா சிந்திக்கிறவங்க வந்துட்டு போகும் பக்கம்//. இந்த மாதிரி வெட்டி அரட்டைகள் இல்லாமல் இருக்குமாயின் நன்றாக இருக்கும்.. இந்தப் பதிவை ஒரு உதாரண / எச்சரிக்கைப் பதிவாக வைத்துக் கொள்ளுங்கள்.. இதுவரை நாம் பேசி இருப்பதை ஒருமுறை தொடர்ந்து படித்துப் பாருங்கள்; உங்களுக்கும் சரி என்று தோன்றும் :)

Unknown said...

Yes.I agree.

நிறைய பதிவுகள் ஜனங்களுக்கு பயனளிக்க வேண்டும் என்று தான் எழுதுகிறேன்.ஆனா ஜாலிக்கும் சில பதிவுகள்.கவுண்டமணி பதிவுபோல்.

இதை நீங்க சொன்னமாதிரி ஆழமா விவாதிச்சிருக்கலாம்.ஆனா இவ்வளவு சீக்கிரம் 200 வந்திருக்காது.200 அப்படிங்கறது சைகலாஜிகலா ஒரு feeling of achievement தருவது உண்மைதான்.அந்த வகையில் இது என்னால் மறக்கவே முடியாத பதிவு

குமரன் (Kumaran) said...

:-))))))))

Unknown said...

குமரா,தலைவா

சொல்லிட்டு சிரிக்கணும் இல்லை சிரிச்சுட்டு சொல்லணும்.இரண்டுமே செய்யாமா தெய்விக சிரிப்பு மட்டும் சிரிச்சா அது தகுமா?நியாயமா?

பொன்ஸ்~~Poorna said...

//.200 அப்படிங்கறது சைகலாஜிகலா ஒரு feeling of achievement தருவது உண்மைதான்.அந்த வகையில் இது என்னால் மறக்கவே முடியாத பதிவு //

கரெக்ட் செல்வன்.. நானும் இது மாதிரி சைக்கலாஜிகல் ஆசைக்காக ஒரு 150 பதிவு போட்டேன்.. அதுக்கப்புறம் பின்னூட்ட விதிமுறைகளை (ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஒரு தனி நன்றி பின்னூட்டம் டைப்) எல்லாம் விட்டுவிட்டு, தேவையில்லாத(வெட்டியாக வம்பிழுக்கும்) பின்னூட்டங்களுக்கு மறுமொழி கூட கொடுக்காம, அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டுத் தான் திரும்பி பழைய மாதிரி பயனுள்ள பின்னூட்டம் ஸ்டைலுக்கு வரவேண்டி இருந்தது..

உங்க பதிவில் அந்தக் கஷ்டம் இருக்காது.. ஏனெனில் 200க்காக ஜல்லியடித்தது நானும் எஸ்கேவும் சிவபாலனும் தான் என்பதால், மீண்டும் அது மாதிரி செய்யவும் மாட்டோமே!! :)

Unknown said...

ஆமாம்ங்க

அடுத்த பதிவிலிருந்து நானும் பின்னூட்ட ஆசையை விட்டுட்டு ஒழுங்கா பதிவு போட பார்க்கிறேன்.

எண்ணிக்கை தரமல்ல.எழுத்தே தரம்.

பொன்ஸ்~~Poorna said...

//எண்ணிக்கை தரமல்ல.எழுத்தே தரம். //
"எழுத்தே கடவுள்" உங்க அடுத்தப் பதிவுக்கு தலைப்பு எப்படி?? :)

இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.. இனி எஸ்கே ஐயா வந்ததும் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கும் :)

VSK said...

இந்தக் குமரனின் 'ஆழச்சிரிப்புக்கு' பொருள் வேண்டுமெனில் அவரது 'குழாம், கோஷ்டி' பதிவில் அவரது 102-வது பின்னுட்டத்தைப் படிக்கவும்!

பொன்ஸ் சொன்ன கருத்தைதான் நான் கொஞ்சம் நவிசாகச் சொல்லியிருந்தேன்.

பின்னூட்ட மட்டுறுத்தல், அனுமதிப்பதில் மட்டுமல்ல;
அளவோடு வழி நடத்துவதிலும் இருக்கிறது!

இருப்பினும், நீங்கள் சொன்ன அந்த 'முதலாம் 200' உற்சாகத்தில் இதையெல்லாம் மறந்து விடலாம்!

அதுதான் நான் வந்து விட்டேனே,
[விதண்டா]வாதம் செய்ய!!

Unknown said...

எழுத்தே கடவுள்.நல்லா இருக்கு.ஆனா அடுத்ததா எழுதபோற கடவுள் யார்ன்னு சொன்னதும் டேவ் சண்டைக்கு வந்திட்டார்.இந்த பதிவோட ஆரம்ப பின்னூட்டங்களில் இருக்கும்.

சரி..நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.எஸ்.கே சார் வரட்டும்.அப்புறம் அடுத்த இன்னிங்க்ஸ்

Unknown said...

எஸ்.கே சார்
இப்ப தான் உங்களை பத்தி பேசிட்டிருந்தோம். 100 ஆயுசு.

அக்காவும் அண்னன் குமரனும் சொன்ன மாதிரி இந்த பதிவோட இந்த பின்னூட்ட ஆட்டம் போதும்.

பொன்ஸ்~~Poorna said...

//பின்னூட்ட மட்டுறுத்தல், அனுமதிப்பதில் மட்டுமல்ல;
அளவோடு வழி நடத்துவதிலும் இருக்கிறது!
//
Well said SK... உங்களின் தமிழுக்கு நான் ஒரு ரசிகர் (ரசிகை) மன்றம் ஆரம்பிக்கலாமா என்று பார்க்கிறேன்!!

Unknown said...

ஆமாம்.எஸ்.கே அருமையாக கவிதை எழுதுகிறார்.எஸ்.கே பேசாமல் நீங்கள் நம்ம அ.கு.மு.க வில் இணைந்துவிடலாமே?தலைவர் குமரன் நீங்கள் பொதுசெயலாளர்ன்னு இருந்தா களை கட்டுமல்லவா?

பொன்ஸ்~~Poorna said...

செல்வன், இன்னிக்கு நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன்.. வந்து பார்த்து நல்லா இருக்கான்னு சொல்லுங்க..

அண்ணன் குமரன் கழகத்தில் எஸ்கேவா?? எனக்கு உடன்பாடில்லை..

எஸ்கேவுக்குத் தனி மன்றம்.. எஸ்கே என்பது தான் ஆங்கிலப் பெயராக இருக்கிறது.. அதைக் கொஞ்சம் ச.கு.ர.ம என்றால் போதும்..

அப்புறம் நான் சொல்வது முன்னேற்றக் கழகம் இல்லை.. அது அரசியல் கழகம் ஆகிவிடும்.. இது ரசிகர் மன்றம்...

ரசிக்க வைக்கையில் கைதட்டு,
தலைவர் தப்பு செய்யும் போது
தலையில் ஒரு குட்டு.. :)

எப்படி?

Unknown said...

உங்க கவிதையை முன்பே படித்து பின்னூட்டம் இட்டுவிட்டு வந்துவிட்டேன்.

ச.கு.ர.மன்னு பேர் வெச்சாலும் அதுலையும் இது தமிழ் எழுத்து இல்லைன்னு யாராவது வம்புக்கு வருவாங்க.

தமிழும் ஆங்கிலமும் கூட்டணி அமைச்சா தான் முன்னேற முடியும்.தனித்து தமிழ் போட்டியிட்டால் ப.ஜ.க மாதிரி ஆயிடும்

Thekkikattan|தெகா said...

செல்வன் சார்,

இங்கெ என்ன நடக்குது, காலையில் உட்கார்ந்தேன் உங்களுக்கு வந்த பின்னூட்டங்களெ படிக்க இன்னும் முடிக்க முடியலெ.

இப்பொ ஒரு முடிவுக்கு வந்து சொல்றேன், இங்க பின்னூட்டமிடுகிற எல்லோருமே கடவுள்கள்...

அன்பே கடவுள் :-))

தெகா.

Unknown said...

வாங்க தெக்கிட்டான்

அப்ப நீங்களும் கடவுள் தான்.

அன்பே சிவம்...

மாற்றுக்கருத்தில்லை

Sivabalan said...

செல்வன்,

இந்த பின்னூடத்தை மட்டும்...

நீங்கள் 275 அடித்தை முன்னிட்டு

"VVS இலட்சுமனே இனி கடவுள்"


பின்னூடங்கள் புரிதலுக்கான அனுபங்களாகவே நான் பார்கிறேன்.


// பின்னூட்ட மட்டுறுத்தல், அனுமதிப்பதில் மட்டுமல்ல;
அளவோடு வழி நடத்துவதிலும் இருக்கிறது! //

ஆனால் SK சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

தெகா சொன்னது போல் அனைவரும் கடவுள்

Unknown said...

VVS இலட்சுமனே இனி கடவுள்//

Ha..ha...

munnadi dravid kadavul.ippa latchumanana???:-)))

because of you all I touched 277.Thanks sivabalan

anbudan
selvan

Unknown said...

என்னங்க இது பின்னூட்ட பாக்ஸை chat service மாதிரி ஆக்கிட்டீங்க. 277 and counting... ஜமாய்ங்க..

Unknown said...

என்னங்க இது பின்னூட்ட பாக்ஸை chat service மாதிரி ஆக்கிட்டீங்க. 277 and counting... ஜமாய்ங்க.. //

ஹி ஹி..வலைபதிவு உலகுக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சர்வீஸ் தான் இந்த சேட் பாக்ஸ்:-)))

Amar said...

வருத்தபடாதீங்க செல்வன்.

முனாவது செஞ்சரி அடிச்சிடலாம்!

//மனிதனே இனி உலகின் புதிய கடவுள்//

நோ நோ...மனுஷனால எப்போ லைட் ஸ்பீடுல பிரயானம் செய்ய முடியுதோ அப்போ தான் அவன் கடவுள் ஆகிறான்.

Unknown said...

வாங்க சமுத்ரா

300 அடிக்க முடியுமான்னு பாத்துகிடிட்டிருந்தேன்.கை கொடுக்க ஜெனெரல் மானேக்ஷா வந்துட்டார்.இனி என்ன கவலை?

Unknown said...

ஒளியின் வேகத்தில் போவது கடவுள்னா அப்ப ஒளியே கடவுளாகா இருக்கலாமா என்ன?

கடசியில் நெருப்பே கடவுள்ன்னு நம்ம நெருப்பு வழிபாட்டுக்கு வந்துடுவீங்க போலிருக்கு:-))

இந்த பதிவில் கூட நெருப்பு வழிபாடு பத்தி பேசிருந்தோம்

Unknown said...

வாழ்த்துக்கள் செல்வன்.

ஒரு சின்ன் வேண்டுகோள் என் பெயர் தேவ்... டேவ் அல்ல.

குமரன் சொல்லிட்டேன் இனி செல்வன் சரியா டைப் பண்ணுவார்.

செல்வன் வாதம் செய்வதில் நீங்கக் கெட்டிக்காரர் தான் ஆனால் நான் தட்டிய கருத்துக்களில் நான் பிடிவாதமாய் நிலைத்து நிற்கிறேன்.

இந்த உலகில் உங்கள் மூளைக்கு எட்டாத ரகசியங்கள் இருக்கும் வரை... இறைநம்பிக்கைத் தொடரும்...
பல ரகசியங்கள் என்றும் புரியப் போவதுமில்லை...:)

Unknown said...

ஒரு சின்ன் வேண்டுகோள் என் பெயர் தேவ்... டேவ் அல்ல.//

Accept my aplologies தேவ்

Unknown said...

செல்வன் வாதம் செய்வதில் நீங்கக் கெட்டிக்காரர் தான் ஆனால் நான் தட்டிய கருத்துக்களில் நான் பிடிவாதமாய் நிலைத்து நிற்கிறேன்.//


பிடிவாதமாக நம் கருத்தில் நிற்பது பெரிய விஷயமல்ல தேவ்.

நம் கருத்து சரியா தப்பா என அறியும் ஞானம், அறிந்த பின் அதை ஏற்கும் பக்குவம், தப்பான கருத்தை நாம் கொண்டிருந்தால் அதை ஏற்பது இதுவே மிக கடினமான காரியம்.

ஐயன் சொன்னது போல் மெய்ப்பொருள் காண்பதே அறிவு

Unknown said...

இந்த உலகில் உங்கள் மூளைக்கு எட்டாத ரகசியங்கள் இருக்கும் வரை... இறைநம்பிக்கைத் தொடரும்...
பல ரகசியங்கள் என்றும் புரியப் போவதுமில்லை...:) //
விவாதம் ஆத்திகம் நாத்திகம் என மாறுகிறதோ?

நானே ஆத்திகன்.நான் ஏன் நாத்திகத்தை ஆதரித்து பேசப்போகிறேன்?

என் கருத்து "மனிதன் உய்ய கடவுள் தடையாகக்கூடாது.மனிதனே கடவுள்.செத்த பின் என்ன இருக்குன்னு அப்புரம் பாத்துக்கலாம்" என்பதுதான்

Amar said...

//ஒளியின் வேகத்தில் போவது கடவுள்னா அப்ப ஒளியே கடவுளாகா இருக்கலாமா என்ன?//

இல்லீங்க,நாம் ஒளியின் வேகத்தில பயனம் செஞ்சா தானே காலத்தை ஜெயிக்க முடியும்?

காலத்தையும் வென்றால் தானே கடவுள்?

Time மனித குலத்துக்கு மிக பெரிய constraint இல்லையா?

Unknown said...

ஆம் சமுத்ரா.

காலத்தை விஞ்சி பயணம் செய்யாவிட்டால் தொலை தூர விண்வெளிப்பயணம் சாத்தியமே இல்லை.நமக்கு மிக அருகிலிருக்கும் நட்சத்திரத்துக்கு ஒளியின் வேகத்தில் சென்றாலே பல ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டுமாம்.

ஒளியின் வேகத்தை விஞ்சினால் கிடைக்கும் இன்னொரு பலன் நமக்கு இளமை திரும்பும் என்பது:-)))

Amar said...

//காலத்தை விஞ்சி பயணம் செய்யாவிட்டால் தொலை தூர விண்வெளிப்பயணம் சாத்தியமே இல்லை//

பயனம் போவதைவிட கடவுள் என்பவள் should be independent of time and space.

ஆனால் பாருங்கள் நம்மால் ஒரு விஷயத்தை time and spaceகளை தவிர்த்து சிந்திக்ககூட முடியாது.

நன்மனம் said...

//இப்பொ ஒரு முடிவுக்கு வந்து சொல்றேன், இங்க பின்னூட்டமிடுகிற எல்லோருமே கடவுள்கள்...

அன்பே கடவுள் :-))//

நானும் வந்துட்டேங்க செல்வன்.

உண்மைய சொல்லனம்னா 20 பின்னூட்டத்துக்கு மேல படிக்கல அப்படியே மேஞ்ச போது தெ.கா பின்னூட்டம் கண்ணுல பட்டுது சரி நாமும் ஒன்னு போடலாமேனு தான்.

வர்ட்டா.

Unknown said...

வாங்க நன்மனம்

இங்க எல்லா பின்னூட்டத்தையும் படிச்சா எல்லாரும் பதில் போடறாங்க?சும்மா ஜாலிக்கு ஒரு விளையாட்டு.அம்புட்டுதேன்:-))

Unknown said...

பயனம் போவதைவிட கடவுள் என்பவள் should be independent of time and space.

ஆனால் பாருங்கள் நம்மால் ஒரு விஷயத்தை time and spaceகளை தவிர்த்து சிந்திக்ககூட முடியாது. ///

ஆமா சமுத்ரா..

பெருவெடிப்பு தான் காலத்தையும் நேரத்தையும் உருவாக்கியது.அப்ப அதுக்கு முந்தி இருந்தது என்ன?யாருக்கும் தெரியாது....

பெருவெடிப்புக்கு முன் என்பதே விஞ்ஞானத்தில் பெரும் குழப்பம் தான்.ஏனேனில் காலம் பிரந்ததே பெருவெடிப்பின் போதுதான்.ஆக "முன்" என்பது அங்கு பொருந்துவதில்லை

Amar said...

//ஒளியின் வேகத்தை விஞ்சினால் கிடைக்கும் இன்னொரு பலன் நமக்கு இளமை திரும்பும் என்பது:-))) //

ஒளியின் வேகத்தில் பயனிப்பது என்பது நமது ஆயுட்காலத்தில் நடக்கவே நடக்காது.

(ஹும் நடந்தா பரவாயில்லை!)

Unknown said...

ரஷ்ய தயாரிப்பான மிக் விமானம் ஒளியின் வேகத்தில் போகுமாம் சமுத்ரா.

அதில் ஏறினால் பல லட்சம் மைல் தொலைவிலுள்ள வைகுண்டத்தை ஒரே வினாடியில் அடையலாமாம்.:-))))

Unknown said...

சரி.

நள்ளிரவு தாண்டி ரொம்ப நேரமாச்சு.எல்லாரும் ஆளுக்கு ஒரு பின்னூட்டம் போட்டா 300 ஆயிடும்.295 ஆச்சு.இன்னும் 5 தான் பாக்கி 300க்கு.300வது பின்னூட்டம் இடும் நபருக்கு அ.கு.மு.க சார்பில் ஒரு தொகுதி இலவசம் என்பதை அறிவித்துக்கொண்டு பெருமகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன்.


:-))))

Amar said...

//ரஷ்ய தயாரிப்பான மிக் விமானம் ஒளியின் வேகத்தில் போகுமாம் சமுத்ரா.//

சின்ன எழுத்துப்பிழை செஞ்சுடீங்களே செல்வன்...ஒளியல்ல ஒலி.
(லலிதா ஜுவல்லரி பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் ஒருத்தர் சொல்லுவாரே அந்த effectல)

Unknown said...

//பிடிவாதமாக நம் கருத்தில் நிற்பது பெரிய விஷயமல்ல தேவ்.//

வேறுபடுகிறேன் செல்வன்... கருத்தில் தான் பிடிவாதம். காரணம் கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை.

செல்வன் ஆழமாக யோசிக்காமல் நான் சபையில் எதுவும் பேசுவதில்லை.. உங்கள் பதிவுகளில் இந்தப் பதிவு பொழுதுபோக்குப் பதிவாய் இருந்திருக்குமானால் இவ்வளவு பேசியிருக்க மாட்டேன். நீங்கள் சொல்ல வந்த கருத்தைக் குறித்து சில சந்தேகங்கள் எனக்கு இருந்ததால் கேட்டு விளக்கம் பெற்றேன். அந்த விளக்கம் சிலக் கருத்து பரிமாற்றங்களுக்கு வழி வகுத்தது. அந்தக் கருத்து பரிமாற்றங்களின் முடிவினில் என் நிலையைச் சொல்லுதல் முறை என்ற மரபின் படியே நான் இன்னும் என் கருத்துக்களில் பிடிவாதமாய் இருப்பதைத் தெரிவித்தேன்.


//நம் கருத்து சரியா தப்பா என அறியும் ஞானம், அறிந்த பின் அதை ஏற்கும் பக்குவம், தப்பான கருத்தை நாம் கொண்டிருந்தால் அதை ஏற்பது இதுவே மிக கடினமான காரியம்.//

மேற்கூறிய வரிகளில் உள்ள உண்மை மறுக்க முடியாதது.

//ஐயன் சொன்னது போல் மெய்ப்பொருள் காண்பதே அறிவு//

மெய்பொருள் நீங்களும் காண என் வாழ்த்துக்கள்

Amar said...

//அதில் ஏறினால் பல லட்சம் மைல் தொலைவிலுள்ள வைகுண்டத்தை ஒரே வினாடியில் அடையலாமாம்.:-)))) //

நொ! அந்த மாதிரி விமானம் கிடைச்சா வைகுண்டத்துக்கா மொதல்ல போவாங்க?

பெருமாள ஏற்கனவே ஒரு நாளைக்கு பத்து தடவ பார்த்துகிட்டு இருக்கேன்.

மிஸ்.ரம்பா எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு வண்டிய நேரா அங்க போகவச்சிடுவேன்.

Unknown said...

செல்வன் உங்களையும் உங்கள் கருத்துக்களையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால் உங்கள் கருத்துக்கள் பலவற்றில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

Unknown said...

உங்கள் அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

அப்புறம் என் பெயரைச் சரியாக உச்சரித்து குமரனின் சந்தேகத்தைப் போக்கியதற்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்:)

Amar said...

//நள்ளிரவு தாண்டி ரொம்ப நேரமாச்சு//

என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு?
கொயம்புத்தூர்ல இப்ப மத்தியானம் மனி 1:33!

அப்ப நீங்களும் புதரகத்தில் இருந்து தான் எழுதறீங்களா?

Unknown said...

300 அடித்த சிங்கக்குட்டி தேவுக்கு நன்றியும் வாழ்த்தும்.

மணி 2.30AM தூங்க போறேன்.காலையில் பதில் போடுகிறேன்.

நண்பா சமுத்ரா.நான் இருப்பது புதரகத்தில்தான்:-)))

நன்றி தேவ்,சமுத்ரா....

«Oldest ‹Older   201 – 291 of 291   Newer› Newest»