Tuesday, May 30, 2006
94.ஜெய் ஹிந்த்
சீன் 1:
இந்தியா மீது படை எடுக்க பாகிஸ்தான் முடிவு செய்கிறது.ரகசியமாக மீட்டிங் நடக்கிறது.பாகிஸ்தான் சர்வாதிகாரி+ஜனாதிபதி+படைதளபதி ஆனந்த்ராஜ் பெரும்படை ஒன்றை சேர்த்துக்கொண்டு ஆயிரக்கணக்கான டாங்கி,பீரங்கிகளுடன் இந்திய எல்லையை நோக்கி வருகிறார்.
"இந்தியா ஒழிக" என தமிழில் கோஷமிட்டபடி பாகிஸ்தான் வீரர்கள் வருகின்றனர்.படைக்கு முன்பு ஆனந்த்ராஜ் அம்பாசிடர் காரில் சிரித்தபடி வேகமாக வருகிறார்.காரை சுற்றி முன்னும் பின்னும் பைக்க்குகள் வேகமாக போகின்றன.
படை வர வர டைட்டில் ஓடுகிறது.டைட்டில் காட்சி முடிந்தவுடன் "இந்தியா" என தமிழில் எழுதியுள்ள எல்லைக்கோடு வருகிறது.அந்த எல்லைக்கோடை பாகிஸ்தான் படை தாண்டியவுடன் டைட்டில் காட்சி நிறைவு பெறுகிறது.
சீன் 2:
இந்தியாவில் பாகிஸ்தான் படை நுழைந்து முன்னேறுகிறது.சென்னை அண்ணாசாலை வழியாக பாகிஸ்தான் படை பைக்,கார்,ஆட்டொ ஆகியவற்றில் வருகிறது.பாகிஸ்தான் வீரர்கள் வரும் வழியெங்கும் சோடா பாட்டில் வீசி ரகளை செய்கின்றனர்.ஆனந்ராஜின் கார் ஒரு பழ வண்டியின் மீது மோதி நிற்காமல் போகிறது."பாவி..நீ நல்லா இருப்பியா..என் பொழப்பை கெடுத்தியே" என ஏழை பழ வியாபாரி கதறுகிறார்.அதை காதில் வாங்காமல் ஆனந்த்ராஜ் சிரித்தபடி போகிறார்.
"போடா போ.உன் திமிரை அடக்க சக்தி தம்பி வரப்போறான்" என பழ வியாபாரி சாபம் கொடுக்கிறார்.
சீன் 3:
பாகிஸ்தான் படை ஒரு கிராமத்து பஸ் ஸ்டாப் வழியாக செல்கிறது.அங்கே மழை தண்ணிர் தேங்கி நிற்கிறது.அதில் வேகமாக ஆனந்த்ராஜின் கார் இறங்கி பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது சேற்றுத்தண்ணீரை இறைக்கிறது.
"அட பாவி..நீ நல்லா இருப்பியா..சக்தி வந்து இவங்க திமிரை அடக்குப்பா.." என கிராமத்தவர்கள் குரல் கொடுக்கின்றனர்.ஆனந்த்ராஜ் சிரித்தபடி போகிறார்
சீன் 4:நமிதா அருவியில் குளித்துக்கொண்டே பாடுகிறார்.ஆனந்த்ராஜ் அங்கே வந்து காரை நிறுத்தி பாட்டு முடிந்ததும் நமிதாவை காரில் கடத்திக்கொண்டு வில்லன் சிரிப்பு சிரித்தபடி போகிறார்.
சீன் 5:ஆனந்த்ராஜின் படை வேகமாக போகிறது.சாலைக்கு குறுக்கே ஒரு பைக் நிற்கிறது.அதில் படுத்து ஆகாயத்தை நோக்கி புகை விட்டபடி சக்தி(அர்ஜுன்).ரசிகர்கள் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது.பாகிஸ்தான் படை பிரேக் போட்டு நிற்கிறது.
சக்தி பைக்கில் இருந்து இறங்குகிறார்.அவர் கண்ணை குளோசப்பில் காமிரா காட்டுகிறது.மெதுவாக பாகிஸ்தான் படையை நோக்கி நடக்கிறார்.அவர் நடக்க நடக்க பாகிஸ்தான் படை பின்னோக்கி நடக்கிறது.டான்கிகள்,விமானங்கள் ஆகியவை ரிவர்ஸில் பின்னால் போகின்றன.எலிகாப்டர் கூட பின்னால் போகிறது.
சீன் 6:சக்தியை பார்த்ததும் நமிதாவுக்கு லவ் வந்து விடுகிறது.டூயட் பாடல் ச்விட்சர்லாந்தில் இருவரும் பாடுகிறார்கள்
அர்ஜுன் :
1980 செய்த தவம்,தவம்
உன்னை பெற்ற அதன் வரம்,வரம்
பிடித்தேன் உன் கரம்,கரம்
அணைத்தேன் தினம் தினம்
நமிதா: எனக்கு பிடித்தது சேலை
உன்னை சந்தித்தது இந்த சாலை
சந்தித்த சேரம் சாயங்காலை
இதுவே உன் மடி சாயுங்காலை
(டூயட் முடிவடைகிறது...)
சீன் 7:
"அடிச்சு நொறுக்குங்கடா இவனை" என ஆனந்த்ராஜ் கட்டளையிடுகிறார்.உருட்டுக்கட்டை,அரிவாள்,செயுனுடன் பாகிஸ்தான் படை சக்தியை சுற்றி வளைக்கிறது.சக்தி பறந்து பறந்து அவர்களை அடிக்கிறார்.அடி வாங்கி பாகிஸ்தான் படையினர் ஓடுகின்றனர்.டாங்கி,பீரங்கி,எலி காப்டர் ஆகியவை பாகிஸ்தான் நோக்கி பின் வாங்கி ஓடுகின்றன.அர்ஜூன் மோட்டர் சைக்க்கிளில் துரத்துகிறார்.
விறுவிறுப்பான பைக் சேசிங் நடக்கிறது.அர்ஜுன் டாங்கிக்கு தனது பைக்கில் வீலிங் கொடுக்கிறார்.டாங்கி சுவற்றை இடித்துக் கொண்டு ஆற்றில் விழுகிறது.பீரங்கியின் அருகே போகும் அர்ஜுன் வழியிலிருந்த பெட்டி கடையில் பிடுங்கிய பழத்தோலை முன்னெ போட பீரங்கி அதில் வழுக்கி ரோட்டை விட்டு கீழே விழுகிறது.
சீன் 8:
காய்கறி மார்க்கட்டில் பாகிஸ்தான் படை நுழைகிறது.அங்கே விறுவிறுப்பான சண்டை நடக்கிறது.சண்டை முடிவில் போலிஸ் வந்து பாகிஸ்தான் படையை கைது செய்கிறது.",
சீன் 9:
அர்ஜுன் நமிதா டூயட் பாடுகின்றனர்.
அர்ஜுன் :1980 செய்த தவம்,தவம் உன்னை பெற்ற அதன் வரம்,வரம்......
பின் குறிப்பு: இது நகைச்சுவை பதிவு என்று நினைத்துக்கொண்டு யாரும் ஏமாறக்கூடாது.இது நான் எழுதிய ஒரு படத்தின் அவுட்லைன்.இந்த கதையை படமாக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
நான் படமெடுக்காலம் என்று இருந்தேன். கதையைக் கேட்டதும் இதுக்கு நம்மகிட்டே பணமில்லை. கீயோனோ ரீவ்ஸ் ஐ வைத்து லோ பட்ஜட்டில் ஒரு படமெடுக்கலாம் என முடிவை மாற்றிவிட்டேன் கீயானோ ரீவ்ஸ் க்கு ஏற்ற மாதிரி ஒரு கதை சொல்லுங்களேன்
அவுட்லைன் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்!
ஒரு விவேக் [அ] வடிவேலு இல்லாத தமிழ்ப்படம்......??
கதை எவ்வளவு காமெடியா இருந்தாலும்,
இதெல்லாம் இல்லைன்னா போணி ஆவாதுண்ணா!!
செல்வன்
"சரவணன் என்ன கொடுமை இது" ... பிரபு சந்திரமுகியில் பேசும் வசனம் நியாபகதிற்கு வருகிறது..
இன்றைய தமிழ் சினிமாவின் நிலையை இலவசமாக படம்பிடித்து கான்பித்திருக்கீர்கள்..
சிவா,
பாகிஸ்தானுக்கு பதில் ரஷ்யா,டாங்கிக்கு பதில் கார் என்று வைத்துக்கொண்டால் போகிறது.காய்கறி மார்க்கட்டில் சண்டை என்பத்ற்கு பதில் டாலர் ஸ்டோர்ஸில் சண்டை என்று வைத்துக்கொண்டால் செலவு மிச்சமாகும் அல்லவா?
அடடா இந்த விவேக் போர்ஷனை மறந்துவிட்டேனே எஸ்.கே.சரி தனியாக ஒரு டிராக் எழுதி நடுவே நுழைத்து விட வேண்டியதுதான்
சிவபாலன்,
"என்ன கொடுமை சரவணன் இது?" என்று சொல்லும்படி மாமூல் மசாலா படம் எடுத்தால் வெற்றி உறுதி.அப்ப இந்த படமும் அருமையா ஓடும் என நினைக்கிறேன்:-)))
வணக்கம் செல்வன்,
உண்மை கதையோனு நினைச்சேன். அது என்னாங்க சரியா 9 சீன் மட்டும் :). டூயட் பாட்டு சூப்பர்ங்க!!
தலைவர் க்வுண்டமணி படத்திலே போடுங்க. அவர் லொல்லு தாங்காம ஆனந்ராஜ் இந்தியாவிலே தமிழகத்தை மட்டும் விட்டுர்ர மாறி எழுதுங்க. தலைவர் க்வுண்டமணி அப்படியே கொஞ்ஞம் நமிதாவையும் கண்டுகுவார்:)
உங்க கதையை நானே வாங்கி படம் எடுக்கிறேன்.:))
நன்றி,
நரியா
நாரியா
அருமையா திரைக்கதை சொல்றீங்க.சரி..இணை கதாசிரியரா உங்களை நியமிச்சிடுவோம்.படம் வேற எடுக்கறேன்னு சொல்லிட்டிங்க.இனி கவலை இல்லை.
வி.சி.டி எங்கே கிடைக்கும்? :-)
படம் எடுக்கவே ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன்.சிம்புவுக்கு ஐஸ் வைத்து பதிவு போட்டிருப்பதால் அவராவது படம் எடுக்கிறாரா என பார்க்கலாம்.படம் வந்ததுக்கு பிறகுதானே டி.வி.டி வரும்?
arjun is a patriot ashlyn.Thats why pakisthan:-))
செல்வன்,
உங்களுக்கே ஓவராப் படலை :)) அர்ஜுன் பொழப்புல் மண்ணை போட்டுறாதீங்க அப்பு
வீரபாண்டிய கவுண்டமனி டச் வரலை.டெவலப் பண்ணுங்க
(செல்வனின் சித்து வேலையை அறிந்த ஒரு நண்பர்)
:-))))))
//உங்களுக்கே ஓவராப் படலை :)) அர்ஜுன் பொழப்புல் மண்ணை போட்டுறாதீங்க அப்பு //
அர்ஜுனின் மார்க்கட்டை தூக்கி நிறுத்தப்போகும் படம்னு நினைச்சுகிட்டிருக்கேன்.நீங்க இப்படி சொல்லிட்டிங்களே:-))
இது கவனம் செலுத்தாம எழுதின ஒரு பதிவு.(மத்த எல்லா பதிவுக்கும் கவனம் செலுத்தறனான்னு கேக்கறீங்களா?:-)))
புரியாத ஆளா இருக்கீரய்யா நீர்.. சிவாஜி படத்து சூட்டிங்கே டி.வி.டியா வந்துகிட்டு இருக்கு... படம் எடுக்க ஆரம்பிக்கற முன்னாடியே கதையைப் பொஸ்தகமாப் போட்டு பணம் பண்ணுற வழியைப் பாரும்வே
பொஸ்தகமெல்லாம் யாருங்க தேவ் இப்பல்லாம் படிக்கறாங்க?மக்கள் வாசிக்கும் பழக்கத்தை குறைத்து பலநாளாகிறது.
பேசாம ஒரு தொலைகாட்சி சீரியலா எடுக்கலாமான்னு ஒரு ஐடியா இருக்கு
மெகா சீரியலா? வேண்டாம் சாமி, யாரு பார்க்குறது? ஏற்கெனவே தொல்லை தாங்கலை.
:-)
நன்றி குமரன்
testing how my name change appears in feedback box
Post a Comment