Sunday, December 13, 2015

ஒரு பொருளாதார வல்லரசின் கதை கல்தோன்றி மண்தோன்றா காலம் முதல் முகலாயர் காலம் வரை உலகின் பொருளாதார வல்லரசுகள் என்றால் அது இந்தியாவும் சீனாவும் தான் என்றால் நம்ப முடிகிறதா? மவுரியர் காலத்தில் உலக உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 30%, சீனாவின் பங்கு 30%. (ஒப்ப்பிட்டுக்கு அமெரிக்காவின் பொற்காலத்தில் கூட உலக உற்பத்தியில் அதன் பங்கு 25% தான்டியதில்லை). அன்றைய உலகின் முக்கியவல்லரசுகள் இவை இரண்டும்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே போரில்லை, போட்டியில்லை, சுமுக உறவும் நட்புமே நீடித்து வந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வணிகம், பவுத்தம், கலாசாரம் என பரிவர்த்தனைகள் நடந்துவந்தன

அடுத்த 1700 ஆண்டுகளில் உலகவரலாறு மாறினாலும் இந்த பொருளாதார நிலை மாறவில்லை. கிபி 1600ல் அக்பரிடம் 17.5 மில்லியன் ப்ரிட்டிஷ் பவுண்டு மதிப்புள்ல சொத்துக்கள் இருந்ததாக மதிப்பிட்படுகிறது. கிபி 1800ல் பாதி உலகை காலனிமயமாக்கியபின்னும் ப்ரிட்டிஷ் அரசின் கஜானாவில் 16 மில்லியன் பவுண்டுகள் தான் இருந்தன என்றால் பார்த்துகொள்ளலாம். கிபி 1700ல் அவுரங்கசீப் ஆட்சியின் இறுதிகட்டத்தில் உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 27%

ஆக இத்தனை உயர்ந்த நிலையில் இருந்த பொருளாதார வல்லரசு ப்ரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஒட்டுமொத்தமாக, திட்டமிட்டு அழிக்கப்பட்டது. ப்ரிட்டிஷ் ஆட்சியில் நடந்தது போன்ற பெருமளவு பஞ்சங்கள், கொலைகள், பட்டினிசாவுகள், பொருளாதார அழிப்புகள் இந்தியாவின் நீண்டநெடிய வரலாற்றில் எந்த ஆட்சிகாலத்திலும் நிகழ்ந்ததில்லை. வெளிநாட்டில் இருந்து வந்து நாடுபிடித்து ஆன்ட குஷானர், முகலாயர் முதலானோர் கூட இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு திரும்பிபோக தாய்நாடு என எதுவும் இருக்கவில்லை. ஆனால் ப்ரிட்டிஷார் அப்படி இல்லை. ப்ரிட்டன் ஒரு குட்டிநாடு. இந்தியா மாதிரி பெரிய நாட்டை ஆள்வது எப்படி என அவர்களுக்கு தெரியவில்லை. நிர்வாகதிறமை என்பது அவர்களுக்கு கொஞ்சமும் இல்லை. சோழர்கள், முகலாயர், மவுரியர் அவ்வளவு ஏன்,,ஒரு சில வருடமே ஆண்ட ஷெர்ஷா சூரியிடம் இருந்த நிர்வாகதிறன், நாட்டை பிரித்து ஆளும் திறன், கால்வாய்களை வெட்டி உற்பத்தியை பெருக்குதல் என எதுவும் அவர்களிடம் இல்லை.

இதனால் ப்ரிட்டிஷ் ஆட்சியில் ஏராளமான பஞ்சம் வந்து கோடிக்கணக்கில் மரணம் ஏற்பட்டது. 1940களில் வந்த வங்காள பஞ்சம், 19ம் நூற்ரான்டின் இறுதியில் சென்னைமாகாணத்தில் வந்த பஞ்சம் ஆகியவை மிக கொடூரமானவை. அன்றைய சென்னை ராஜதானியின் ஜனதொகையில் மூன்றில் ஒரு பங்கு பஞ்சத்தில் அழிந்தது என்றால் பார்த்துகொள்ளலாம்..இது முழுக்க, முழுக்க ப்ரிட்டிஷ் அரசின் நிர்வாகதிறனால் விளைந்தது என்பதே பல வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது. (காண்க படம்: சென்னை ராஜதானியின் பஞ்சம் 1876- 1878)உப்புக்கு வரிவிதித்து நாட்டின் குறுக்கே வேலி அமைத்த கதையெல்லாம் இந்த தலைமுறைக்கு தெரியாது. காந்தி ஏன் உப்புசத்தியாகிரகம் செய்தார் என்றால் அதன் பின்னணி இதுதான். உப்புவரியால் மட்டுமே இந்தியா முழுக்க கொள்ளையடிக்கபட்டது. மான்செஸ்டர் பருத்தி விற்பனையாக இந்திய மஸ்லின் துணி நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டியதாக என் பள்ளி வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவார். ப்ரிட்டிஷ் கப்பல்கம்பனிக்கு போட்டியாக சுதேசி கப்பல் கம்பனி துவக்கிய சிதம்பரனாருக்கு நேர்ந்த கதையை நாம் அறிவோம். அன்றைய ஜமீந்தார்கள், மன்னர்கள், பாளையகாரர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வரர்கள். அவர்களை திட்டமிட்டு ஒருவருடன் ஒருவர் மோதவிட்டு கட்டபொம்மன் சொன்னதுபோல் "கிஸ்தி, திறை, வரி,வட்டி" என வரி செலுத்த வைத்தே அழித்தார்கள். அவர்களுக்கு ஆண்வாரிசு இல்லையெனில் நாட்டை ப்ரிட்டனே எடுத்துகொண்டது. வரிவசூலின் கொடுமை தாங்கமுடியாமல் இந்தியாவே கண்ணீர் விட்டு கதறியது.

இத்துடன் ப்ரிட்டிஷ் அரசு உலகெங்கும் நடத்திய போர்கள் அனைத்திலும் இந்திய வீரர்கள் லட்சகணக்கில் உயிரிழந்தார்கள். ஆப்பிரிக்கா, முதல் உலகபோர், இரண்டாம் உலகபோர், என இந்திய வீரர்களின் ரத்தத்தால் நனையாத பகுதி உலகில் எதுவுமே இல்லை. தென்னாப்பிர்க்கா, இலங்கை, மலேசியா, பிஜி, மேற்கிந்தியதீவுகள் என ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு தேவையான ரப்பர்,காபி,டீ, சர்க்கரை உற்பத்திக்கு கோடிக்கணக்கான இந்திய்ர்கள் நாடுகடத்தபட்டு கொத்தடிமைகள் ஆக்கபட்டார்கள். இவர்கள் ரத்தத்திலும், உழைப்பிலும், செல்வத்திலும் கொள்ளையடிக்கபட்டு உயர்ந்து வல்லாரசான நாடே ப்ரிட்டன்.

ஆக இந்த இருநூறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம், மக்கள் நலம் அனைத்துமே திடட்மிட்டு கொள்ளையடிக்கபட்டது. 1947ல் இந்தியா விடுதலை அடைகையில் உலக ஜிடிபியில் அதன் பங்கு வெறும் 5% மட்டுமே.

No comments: