டோரிடோஸ் எனும் சிப்ஸ்…ஒரே ஒரு சிப்சை மட்டும் யாராலும் சாப்பிட முடியாது. ஒன்று சபபிட்டால் பாக்கட்டையே முடிக்கணும் என தான் நினைப்பார்கள். அதன் காரணம் என்ன என்பதை இக்கட்டுரை விளக்குகிறது அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் எனும் கெமிக்கல்கள் தொடர்ந்து சாப்பிடணும் எனும் உணர்வை நமக்கு ஊட்டும். இதன் விளைவாக சிப்சை சாப்பிட்டு முடித்தபின்னர் கூட பலரும் கையில் உள்ள சிகப்பு கலர் கெமிக்கலை நக்குவார்கள். கம்பனி அதை பெரிய விஷயமாக "பவுடரை கூட விடாமல் நக்குகிறார்கள், அந்த அளவு டேஸ்ட்" என சொல்லி விளம்பரம் செய்யும்.
மூளைக்கு கொழுப்பை உண்டால் தான் பரமதிருப்தி கிடைக்கும். டோரிடோஸில் பாதிக்கு பாதி காலரி கொழுப்பில் இருந்து வருது. ஆனால் அது டிரான்ஸ்பேட் எனும் ஆபத்தான வகை கொழுப்பு., சன்பிளவர் ஆயில், கார்ன் ஆயில் மாதிரி ஆயில்களில் வரும் கொழுப்பு. இதனால் சிப்ஸ் வாயில் வைத்தாலே கரையும் போன்ற உணர்வு மூளைக்கு வரும். அதை சாப்பிட்டதாகவே மூளை கணக்கில் வைக்காது. பஞ்சுமிட்டாயை வாயில் வைத்தாலும் இதே உணர்வுதான் வரும். முழு பஞ்சுமிட்டாய் ஆயிரம் காலரி.சாப்பிட்டு முடித்தபின்னும் பசி அடங்கியது போன்ற உணர்வு இருக்காது. இன்னொரு பஞ்சுமிட்டாய் வாங்கலாம் என தோன்றும்
அதுபோக அதில் மூன்று செயற்கை நிறங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களை கவர தூண்டும் நிறங்கள்.
மொத்தத்தில்…அது உணவல்ல, எலிப்பொறி
Thanks:http://nypost.com/2013/10/03/why-doritos-are-as-addictive-as-crack/
No comments:
Post a Comment