Sunday, October 27, 2013

சைத்தானின் சகோதரன்


இணையத்து வராமல் நேற்று முழுக்க டெவில்ஸ் டபிள் (சைத்தானின் இரட்டையர்) என்ற நூலை படித்து முடித்தேன்.

நூல் ஆசிரியர்: லதீஃப் -யாகியா. சர்வாதிகாரிகள் தம்மை போலவே உள்ள ஒருவரை தயார் செய்து முக்கியமற்ற பொதுகூட்டங்கள், ஆபத்தான இடங்கள் ஆகியவற்றுக்கு அனுப்புவது வழக்கம். சதாம் உசேன் இதுபோல் இருவரை டபிளாக வைத்து இருந்தார். அவர் மகன் உதய் உசேன் லதீஃப் யாகியாவை இதுபோல் தன் டபிளாக வைத்து இருந்தார்.

லதீப் உதய் உசேனை போலவே இருந்தார். இராக் படையணியில் பணியாற்றி வந்தார். உதய் உசேன் பட்டத்து இளவரசன். தந்தைக்கு அடுத்து ஜனாதிபதி ஆக அவர் தான் வருவார் என நம்பப்பட்ட நிலை. அவர் தனக்கு டபிள் ஆக பணியாற்ற லதீப்பை தேர்ந்தெடுத்தார். துவக்கத்தில் லதீப் மறுக்க அவரை இணங்கவைக்க உதய் உசேன் வித்தியாசமான தண்டனை முறையை தேர்ந்தெடுத்தார்.



முழுக்க, முழுக்க சிகப்பு நிறம் மட்டுமே உள்ள அறை ஒன்றில் லதீப் அடைக்கபட்டார். போர்வை, உடல், கூரை, ஜன்னல் அனைத்தும் சிகப்புநிறம். வேறு நிறமே இல்லாததால் லதீபுக்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது. 10 நாள் இதில் அடைத்துவைத்து லதீப்பை வழிக்கு கொண்டுவந்தார் உதய்

உதய் ஒரு பிளேபாய்.உதய் உசேன் பள்ளியிலேயே மைனர். ஒரு நாள் வகுப்புக்கு கேர்ள்பிரண்டை கூட்டி வந்து அருகில் அமர வைத்துகொண்டார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் அவரிடம் போய் "வகுப்பில் இதெல்லாம் வேண்டாமே" என்றார். அடுத்த நாள் முதல் அந்த ஆசிரியரை யாருமே பார்க்கவில்லை.

உதய் விதவிதமான கார்கள் வைத்து இருப்பார். கார் நிறம் அவரது உடை நிறத்துக்கு மாட்ச் ஆகணும். அத்தனை எண்ணிக்கையில், நிறங்களில் பென்ஸ், போர்சே, ரோல்ச்ராய்ஸ், லாம்போர்கினி, மாரசெர்ட்டி மாதிரி கார்களை வைத்து இருந்தார். மாலையில் காரை எடுத்து பாக்தாத் மகளிர் கல்லூரிகள் பக்கம் வண்டியை ஓட்டி வருவார். அழகாக எதாவது பெண் கண்ணில் தென்பட்டால் அவ்வளவுதான். பிடித்து வண்டியில் போடுவார். அதன்பின் பாலியல் பலாத்காரம் நடக்கும். சில நாள் கழித்து அலுத்துப்போனபின் அந்த பெண்ணை கொன்றுவிடுவார். நல்லபடி ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லபடி மரணம் கிடைக்கும். இல்லையெனில் அவர் வளர்க்கும் வேட்டைநாய்கள் உள்ள கூன்டில் உணவாக அடைத்து வைத்துவிடுவார். அல்லது அவரது பாடிகாட்டுகளிடம் கொடுத்துவிடுவார். அவர்களும் பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிவிடுவார்கள்.

இதனால் உதய் உசேனுக்கு எதிரிகள் அதிகம். அவரை கொல்ல பலர் முயன்றார்கள். அதனால் ஆபத்தான இடங்களுக்கு லதீபை அனுப்பி வைப்பார். லதீப் மேல் அப்படி 26 கொலை முயற்சிகள் நடந்தன.

இந்த நிலையில் சதாம் உசேன் சமீரா எனும் பெண்ணை இரண்டாவதாக மணந்துகொன்டார். சமீராவை சதாமுக்கு அறிமுகபடுத்தியவர் சதாமின் தலைமை சமையல்காரர் கமால் என்பவர். இதனால் சதாமின் முதல் மனைவியும், உதய் உசேனின் தாயுமான சஜீதா கடும் கோபமடைந்து அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கமால் மீது கடும் கோபத்தில் இருந்த உதய் உசேன் எகிப்து அதிபர் முபாரக்கின் மனைவி சுஸான் முபாரக்குக்கு அளிக்கபட்ட விருந்தில் வைத்து கமாலை பகிரங்கமாக கத்தியால் குத்தி கொன்றுவிட்டார்.

(photo: சமீரா உசேன்)



கடும் கோபமடைந்த சதாம் உதய் உசேனை ஸ்விட்சர்லாந்துக்கு நாடுகடத்தி விட்டார். ஸ்விட்சர்லாந்துக்கு நாடுகடத்துவது தான் தண்டனையா என கேட்க கூடாது :-) பின்னாளில் ஜோர்டான் அதிபர் உசேன் வேண்டுகோளின் பேரில் அந்த "தண்டனை" நீக்கபட்டு உதய் உசேன் இராக் திரும்ப வந்தார்

உதய் உசேனுக்கு பொறுப்பு கொடுத்தால் திருந்துவான் என நினைத்த தந்தை உதய் உசேனை இராக் ஒலிம்பிக் சங்க தலைவராக நியமித்தார். உதய் உசேனுக்கு ஒலிம்பிக்ஸ் வளையத்தில் எத்தனை வளையம் உள்ளது என்பது கூட தெரியாது. எந்த விளையாட்டும் தெரியாது. போட்டியில் தோற்கும் வீரரகளுக்கு தண்டனை கொடுக்க மட்டும் தெரியும். ஜப்பானுடன் கால்பந்து போட்டியில் தோற்ற இராக் கால்பந்து அணியினரை கான்க்ரீட் கால்பந்தில் ஒரு முழு ஆட்டத்தையும் விளையாட வைத்து தண்டனை கொடுத்தார். 

இப்பேர்ப்பட்ட சீரும், சிறப்பும் வாய்ந்த உதய் உசேன் ஒரு நாள் ஓட்டல் ஒன்றில் ஒரு புதிதாக மணமான கேப்டன் அவர் மனைவி ஆகியோரை பார்த்தார். பெண்ணை பார்த்து கமெண்ட் அடிக்க, அது உதய் உசேன் என தெரியாமல் அந்த பெண் திட்ட இப்போது உதய் உசேன் என்ன செய்திருப்பார் என நினைக்கிறிர்கள்?

கரெக்ட் அதேதான்..கணவன் கண்முன் பெண் இழுத்து செல்லப்ட்டார். அறைகதவை திறந்து வைத்துக்கொன்டு அவரை பலாத்காரம் செய்தார் உதய். அதன்பின் அந்தெ பெண் மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டார். கேப்டன் பொய்புகாரின் பேரில் ஜெயிலில் அடைக்கபட்டு விடுதலை ஆகி சதாம் உசேனிடம் புகார் செய்ய அவர் மாளிகைக்கு சென்றார். மாளிகை வாசலில் அவரை உதய் உசேனின் ஆட்கள் மடக்கினார்கள். காப்டன் கொல்லபட்டார்

இறுதியில் இராக்-அமெரிக்கா யுத்தத்தின்போது இராக்கில் இருந்து லதீப் யாகியா தப்புகிறார். ஆஸ்திரியா தப்பி செல்கிறார்.


(லதீப் யாஹியா தற்போது: டெவில்ஸ் டபிள் திரைபப்டம் ஆகையில் தன் வேடத்தில் நடித்த நடிகர் டாமினிக் கூப்பருடன்)

உதய் உசேனின் முடிவு என்ன ஆனது?

1996ல் வழக்கம்போல் பாக்தாத் மகளிர் கல்லூரி வீதியில் காரை மெதுவாக ஓட்டி வருகிறார் உதய் உசேன். கார் மெதுவாக நகர்கையில் காரை ஒருவன் திறக்கிறான். நாலுபேர் காரை சூழ்கிறார்கள். ஐம்பது ரவுண்டு துப்பாக்கியால் சுடுகிறார்கள். அதில் 17 குண்டுகள் உதய் உசேன் உடலில் பாய்கின்றன. உதய் உசேன் பிழைத்துகொண்டாலும் ஆண்மையை இழக்கிறார். முதுகுதண்டு பாதிக்கபட்டு படுத்த படுக்கையில் வீழ்கிறார்.

2003ல் இராக்கை பிடித்த அமெரிக்க படை உதய் உசேனை சுட்டு கொல்கிறது. சதாம் தூக்கில் போடபடுகிறார். சதாமின் இரு மகள்களும், இரு மனைவியரும் ஜோர்டான் தப்பி செல்கிறார்கள்.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_3396.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

மார்ஸ் பற்றிய பதிவை அறிமுகப்படுத்தியதற்கும், அதை தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் நன்றி