Saturday, November 16, 2013

தானிய உணவும் சிசோபெர்னியாவும்

தானியங்களில் உள்ள க்ளூடன் வகை புரதத்தில் உள்ள நியுரோஆக்டிவ் பெப்டின்கள் தான் சிசோபெர்னியா எனும் மனநோய் வர காரணம். அதனால் தானியம் உணவில் குறைவாக இருந்தால் சிசோபெரினியா எனும் வியாதியும் குறைவாக இருப்பதாக பய்லாஜிகல் சைக்கியாட்ரி ஜர்னலில் பதிப்பிக்கபட்ட ஆய்வு கூறுகிறது.

தானியம் சுத்தமாக சாப்பிடாத, மிக குறைவாக உண்ணும் கீழ்க்கண்ட பழங்குடி இனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்ட்டது. சுமார் 65,000 பழங்குடி இனத்தவர் சுமார் 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆராயபட்டனர். ஆய்வின் காலகட்டம்

பப்பாநியு கினி தீவுகள் (1950 முதல் 1967 வரை)
மலைட்டா, சாலமன் தீவுகள் (1980- 1981 வரை)
மைக்ரனேசியா தீவுகள் (1947- 1948)

இவர்களில் 65,000 பேரை ஆராயந்ததில் வெறும் 2 பேருக்கு மட்டுமே சிசோபெர்னியா இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் 65,000 பேரில் 130 பேருக்கு சிசோபெர்னியா வியாதி இருந்தது.

பின்னாட்களில் இதே மக்கள் உணவில் அரிசி, கோதுமை, பார்லி பியர் முதலானவை சேர்ந்தபின்னர் இவர்களிடம் சிசோபெர்னியா அதிக அளவில் பரவி ஐரோப்பிய விகிதங்களை அடைந்ததாக இந்த ஆய்வு கூறுகிறது.

Biol Psychiatry. 1984 Mar;19(3):385-99.

Is schizophrenia rare if grain is rare?

Abstract

If, as hypothesized, neuroactive peptides from grain glutens are the major agents evoking schizophrenia in those with the genotype(s), it should be rare if grain is rare. To test this, we analyzed the results of our clinical examinations (e.g., kuru) and observations of anthropologists on peoples consuming little or no grain. Only two overtly insane chronic schizophrenics were found among over 65,000 examined or closely observed adults in remote regions of Papua New Guinea (PNG, 1950-1967) and Malaita , Solomon Islands (1980-1981), and on Yap , Micronesia (1947-1948). In preneuroleptic Europe over 130 would have been expected. When these peoples became partially westernized and consumed wheat, barley beer, and rice, the prevalence reached European levels. Our findings agree with previous epidemiologic and experimental results indicating that grain glutens are harmful to schizophrenics.



No comments: