Friday, September 27, 2013

ஸ்டாடின் பிராடு


புகழ்பெற்ற சயன்ஸ் அறிவியல் ஜர்னலில் பேராசிரியர் சுல்தான் மற்றும் ஹைம்ஸ் இருவரும் கொலஸ்டிரால் குறைப்பு மருந்தான ஸ்டாடின்களை ஆராய்ந்து எழுதியிருப்பதாவது:

ஸ்டாடின்கள் 20 பில்லியன் டாலர் வணிகம். மெடிக்கல் வரலாற்றில் மிகப்பெரும் டிராஜடி ஸ்டாடின்கள். கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களை நோயாளிகள் ஆக்கி, ஊட்டசத்து பற்றாகுறையை ஸ்டாடின் மூலம் ஏற்படுத்தியது மருத்துவதுறை

நாம் (மருத்துவர்கள்) மெடிக்கல் கம்பனிகளின் மார்க்கட்டிங்கில் மயங்கி ஸ்டாடின்களின் பின்விளைவுகளை சரியாக ஆராமாயம் விட்டுவிட்டோம்.

கொலஸ்டிரால் எனெர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி, கொழுப்பை எரிக்கும் தன்மை, தய்ராய்டு நலன், லிவர் நலன், மன அழுத்தம், அட்ரினலின், மூலை வளர்ச்சி மற்றும் செக்சுக்கு முக்கியமான , அவசியமான மூலப்பொருள்

கொலஸ்டிரால் அளவு குறைந்தால்

எனெர்ஜி அளவு குறையும்
கொழுப்பை எரிக்கும் சக்தி குறையும்
தய்ராய்டு நலன் குறையும்
மன அழுத்தத்தை கையாளும் ஆற்றல் குறையும்
அட்ரினலின் கிளாண்ட்கள் பழுதடையும்
மூளைவளர்ச்சி, செக்ஸ் வாழ்க்கை, பிள்ளைபெறும் திறன் ஆகியவை அழியும்

ஸ்டாடின்களால் நன்மையடைபவர்கள் யாரெனில் ஏற்கனவே மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்கள் தான், வேறு யாருக்கும் ஸ்டாடினால் துளீ நன்மை கிடையாது. ஆனால் மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்களுக்கு கூட ஸ்டாடின் அளிக்கும் நன்மை என்பது தினம் ஆஸ்பிரின் சபபிடுவதை விட குறைவான அளவு நன்மைதான்!!!!!!!!

ஸ்டாடின் உட்கொள்பவர்களில் 10,000 பேரில்

307 பேருக்கு காட்ராக்ட் வரும்
23 பேருக்கு கிட்னி பழுதடையும்
74 பேருக்கு லிவர் பழுதடையும்
40 பேருக்கு சரிசெய்யவே முடியாத அலவு லிவர் டேமேஜ் ஆகும்
பெண்களுக்கு அதிக அளவில் டயபடிஸ் வர காரணமாக ஸ்டாடின் அமையும்
வயதான பெண்கள் ஸ்டாடின் உட்கொண்டால் டயாப்டிஸ் வருவதற்கான சாத்தியகூறு 9% அதிகம்
ஸ்டாடின் பயன்படுத்துபவர்கலுக்கு காட்ராக்ட் வரும் வாய்ப்பு 50% அதிகம்
பார்கின்சன் வியாதி வரும் வாய்ப்பும் ஸ்டாடினால் உண்டு!!!!!

கடைசியில் முக்கியமா....

இதயத்தில் உள்ள சுவர்களில் கால்ஷியம் படிய ஸ்டாடின்கள் காரணமாக உள்ளன. இது மாரடைப்பு வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது

அப்பிடிபோடு.....

அதனால் ஸ்டாடின்கள் கொலஸ்டிராலை குறைக்கும் மருந்தே ஒழிய இதய அடைப்பை தடுப்பதில் அவை துளீயும் பலனற்றவை என்கிறது இந்த ஆய்வு. துளியும் பலனற்ற மருந்துகளுக்கு இத்தனை பின் விளைவுகள், அதீத விலை வேறு!!!!


http://www.scirp.org/journal/PaperInformation.aspx?PaperID=34065



No comments: