Thursday, September 19, 2013

மருத்துவர்களுக்கு பரிசுகளை அள்ளிகொடுக்கும் மருந்து கம்பெனிகள்

மருத்துவர்களுக்கு பரிசுகளை அள்ளிகொடுக்கும் மருந்து கம்பெனிகள்: அதிர்ச்சி ரிபோர்ர்ட்

இந்திய நாடாளூமன்ற நிலைகுழு 2012ல் மருத்துவதுறையில் நடக்கும் மோசடிகள், குறிப்பாக மருத்துவர் - மருந்து கம்பனி கூட்டணி குறித்து கவலை தெரிவித்தது. புடவை, சர்ட்டு விற்பனைக்கு என்னன்ன உத்திகள் பயனாகிறதோ, அவையே மருந்துகளை விற்கவும் பயனாவதாகும் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்தது.

மருந்து கம்பனிகள் மருத்துவர்களுக்கும், மருந்து கடைகாரர்களுக்கும் அளிக்கும் "பரிசுகள்" அதிர்ச்சியடைவ வைக்கின்றன. ஏசி, தங்க செயின், மியூசிக் சிஸ்டம் அவ்ளோ ஏன் கார்கள் எல்லாம் பரிசுகளாக கொடுக்கபடுகின்றன.

ட்ரிகோ- டி எனும் வயிற்றுவலி மருந்தை சந்தைப்படுத்தும் யு.எஸ் பார்மசூடீகல்ஸ் கம்பனி இதுகுறித்து தன் கம்பனி மெடிக்கல் ரெப்புகளுக்கு அனுப்பிய கடிதம் அம்பலமாகி உள்ளது. அதில் 

"குழந்தைகள் மருத்துவரை தவிர வேறு அனைத்து மருத்துவரையும் டார்கெட் செய்யுங்கள். பிரசவம், காது, எலும்பு, பல், கண்,மூக்கு, தொண்டை என ஒரு மருத்துவரையும் விடவேண்டாம்" (இதுக்கும் வயித்துவலிக்கும் என்ன சம்பந்தம்?)

ஒவ்வொரு மருத்துவருக்கும் அவர் எந்த அளவு இந்த மருந்தை அதிகமாக பரிந்துரைக்கிறாரோ, அந்த அளவு நன்கொடை அளிக்கலாம். ஒரு மருத்துவருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 80,000 வரை "பரிசுகள்" கொடுக்கலாம்.

இந்த பரிசை அடைய ஒவ்வொரு மருத்துவரும் மாதம் 350 பிரிஸ்க்ரிப்ஷன்களில் ட்ரிகொ- டியை பரிந்துரைக்க வேண்டும் என்ற டார்கெட்டும் விதிக்கபட்டு உள்ளது.

அதுவும் மருத்துவர்கள் இதை வெறுமனே பரிந்துரைக்காமல் கட்டாயமா சாப்பிட்டே ஆகணும் என்ற ரீதியில் பரிந்துரைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது!!!

எலும்புமுறிவுன்னு மருத்துவர் கிட்ட போறிங்க. அவர் கிரெகோ டி எழுத்தி கொடுத்தா அது என்ன மருந்துன்னு நீங்க கேக்கவா போறீங்க?

அதுபோக "எம்பவர்" எனும் கிளப் மெம்பெர்ஷிப்பையும் துவக்கி குறிப்பீட அளவு ஸைலெரா எனும் அலர்ஜி மருந்தை பிரிஸ்க்ரைப் செய்தால் அந்த பரிந்துரைக்கு ஏற்ப ஐபோன், எல்சிடி டிவி, வெளிநாட்டு சுற்றுபயணம் எல்லாம் பரிசாக கொடுக்கபடுகிறது

இதனால் மிக தீவிரமான, மிக சென்சிடிவான, மிக அரிதான நோய்களுக்கு கொடுக்கவேண்டிய விலை உயர்ந்த மருந்துகளை கூட சின்ன, சின்ன விஷயங்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகவும் இது நோய் இல்லாதவர்களை நோயாளியாக்கி, அவர்களை திவாலாக்கும் முயற்சி எனவும் இந்திய நாடாளுமன்ற குழு கவலை தெரிவித்து உள்ளது.

இதுபோக மருந்து கடைகாரர்கள், பணியாட்களுக்கும் இதுபோல் பரிசுகள் உண்டு. பலரும் பிரிஸ்க்ரிப்ஷன் இன்றி மருந்து கடைக்கு போய் "தலைவலி மருந்து கொடுங்க" என கேட்கிறார்கள். அந்த பிசினசை ஏன் விடணும் என மருந்து கடைகாரர்களுக்கும் டார்கெட் நிர்ணயித்து விலையுயர்ந்த பரிசுகளை மருந்து கம்பனிகள் அளித்து வருகின்றன.

இன்னும் இதை தடுக்க, நெறிமுறைப்படுத்த எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை.


http://www.dnaindia.com/mumbai/1782073/report-pharma-firms-ply-doctors-with-gifts

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடக் கொடுமையே...!

சேலம் தேவா said...

மிகவும் கவலையளிக்க கூடிய விஷயம். :(