Sunday, September 01, 2013

வைட்டமின் மாத்திரை சாப்பிடலாமா?

வைட்டமின் மாத்திரை சாப்பிடலாமா, யார் சாப்பிடவேண்டும், என்ன மாத்திரை சாப்பிடவேண்டும்?

வைட்டமின்கள் சிந்தடிக்காக லேபில் தயாரிக்கபட்டு மாத்திரை வடிவில் விற்பனைக்கு வருகின்றன. அவற்றால் கெடுதல் இல்லை எனினும் மாத்திரை சாப்பிடவேண்டுமா எனும் தயக்கம் பலருக்கும் உண்டு.

உங்களுக்கு ஒரு குட்நியூஸ். இயற்கை உணவு உண்டால் வைட்டமின் மாத்திரை வேண்டியது இல்லை. இயற்கை உணவு எனில் காய்கறி, மாமிசம், மீன், பழம்..தினம் உணவில் மாமிசம் ஒரு சர்விங், காய்கறி ஒரு சர்விங், முட்டை இரு சர்விங், வாரம் இரு முறை மீன், அவ்வபோது பழம் உண்டால் வைட்டமின் மாத்திரை எதுவும் தேவை இல்லை. ஆனால் நம்மில் பலரும் இப்படி உண்பது இல்லை. சைவம், அசைவம் என யாராக இருப்பினும் இதில் வேறுபாடு இல்லை. விற்கும் விலைவாசியில் தினம் மாமிசமும், காய்கறியும் சாப்பிட முடிகிறவர்கள் மிக குறைவு என்பது மறுக்க முடியாத விஷயம். இன்று பார்த்த டாக்குமென்டரி ஒன்றில் "உணவுப்பாலைவனங்கள்" என்ற கான்செப்ட்டை காட்டினார்கள்.

அதில் அமெரிக்காவில் துரித உணவகத்தில் உண்ணும் பலரும் "எங்களுக்கு காய்கறி, சாலட் எல்லாம் சாப்பிட ஆசைதான். ஆனால் சாலட் ஐந்து டால்ர். பர்கர் 1 டாலர். நாங்கள் எப்படி ஆரோக்கியமா உண்ணமுடியும்? பர்கர் தான் உண்ணமுடியும்" என்கிறார்கள்.

நம் ஊரில் ஏழைகளும், கம்பனி கேண்டினில் இரு வேளை சாப்பிடுகிறவர்களும், பணிகாரணமாக ஓட்டலில் மட்டுமே சாப்பிடுபவர்களும் போதுமான வைட்டமின், மினரல்களை உணவின் மூலம் அடைய முடியாது. அவர்கள் வைட்டமின் மாத்திரை சாப்பிடுவதில் தவறு இல்லை.

அடுத்து சைவர்கள்:

சைவர்களுக்கு ஸிங், இரும்பு மாதிரி மினரல் குறைபாடு வரும் வாய்ப்பு ஏராளம். நம் ஊரில், குறிப்பா பெண்களுக்கு இரும்பு சத்துகுறைபாடு, அனிமியா ஏராளம். காரணம் சைவர்கள் உண்ணும் தானியம், பீன்ஸ், பருப்பு, கொட்டைகள் ஆகியவை.

கீரையில் இரும்பு உண்டு. ஆனால் சோற்றுடன் கீரை பொறியல் உண்கையில் அரிசியில் உள்ள பிட்டிக் அமிலம் நம் சிறுகுடலில் பரவிவிடுகிறது. நம் சிறுகுடல் கீரையில் உள்ள இரும்பை பிரித்து எடுக்கையில் பிட்டிக் அமிலம் அதன்மேல் பரவி அந்த இரும்புசத்தை நம் உடல் ஜீரணிக்க இயலாமல் செய்துவிடுகிறது. அதன்பின் அந்த இரும்புசத்து நம் மலத்தில் வெளியே வந்துவிடும். டெக்னிக்கலா கீரையில் இரும்பு, கால்ஷியம் முதலிய மினரல்கள் அதிகம் இருந்தாலும் சோறு, பருப்பில் உள்ள பிட்டிக் அமிலம் அந்த சத்துக்கள் நம் உடலில் சேராமல் தடுத்துவிடும்.

"நான் தினமும் 3 வேளை தயிர் சாப்பிடுகிறேன்.எனக்கு ஏன் கால்ஷியம் பற்றாகுறை வருகிறது?" என்றால் அதற்கு காரணம் இதுதான்.

இதற்கு எளிதான தீர்வு என்பது இல்லை...தினம் ஒரு முறை தானியம், பருப்பு, பீன்ஸ், கொட்டைகள் இல்லாத உணவை உண்பது..உதாரனமா மிகபெரிய சாலட், அத்துடன் ஒரு டம்ளர் பால் அருந்துவது நல்ல வழி.

தானியம், பீன்ஸ் எல்லாம் சைவர்கள் சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஆனால் அவற்றின் தீமையை குறைக்க தானிய உணவு உண்ணும் வேளையில் பால், தயிர் மாதிரியானவ்ற்றை உண்ணாதீர்கள். காலையில் இட்லி சபபிட்டு 2.5 மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் பால், சாலட் சாப்பிடுங்கள். அதன்பின் 2.5 மணிநேரம் கழித்து மதிய உணவு உண்டு 4- 5 மணிக்கு ஒரு கப் பால், காய்கறி/கீரை உண்ணுங்கள். காய்கறி ஜீரணம் ஆகையில் பிட்டிக் அமிலம் அதில் பரவாமல் இது தடுக்கும்.

பிட்டிக் அமிலம் உள்ள பீன்ஸ், நட்ஸ், அரிசி எல்லாம் ஒன்றாகவே உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள புரதம், கார்ப், வைட்டமின் மாதிரியானவை உடலில் ஜீரணம் ஆவதை பிட்டிக் அமிலம் தடுக்காது. மினரல்கள் ஜீரணம் ஆவதை மட்டுமே தடுக்கும்.

பிட்டிக் அமில பிரச்சனையால் சைவர்களுக்கு ஸிங் ஆர்டிஏ 50% அதிகமா நிர்ணயம் ஆகியுள்ளது. சைவர்கள் என்று இல்லை, சிக்கன் பிரியாணி தின்றாலும் சிக்கனில் உள்ள இரும்பு, ஸிங் ஜீரணம் ஆகாமல் அரிசியில் உள்ள பிட்டிக் அமிலம் தடுத்துவிடும்

ஆக சைவர்கள் வைட்டமின்,மினரல் மாத்திரை உண்டால் இரவில் தானிய உணவு உண்ணாமல் ஒரு கோப்பை பாலுடன் உட்கொள்வது நல்லது.

சைவர்களுக்கு உணவின் மூலம் அனைத்து சத்துக்களும் கிடைக்க மிக சிரமபடணும். முடியாது என இல்லை. முடியும். ஆனால் மிக திட்டமிட்டு உண்ணவேண்டும். உதாரணமா மேலே சொன்ன மாதிரி உணவை பிரித்து தானியம் தனியா, காய்கறி தனியா உண்ணவேண்டும். தானியத்துடன் காய்கறி உண்ணகுடாது என பொருள் இல்லை. உண்ணலாம். ஆனால் அவற்றில் உள்ள மினரல்கள் உடலில் சேராது என்பதால் அதை கணக்கில் வைத்துகொள்ளாமல் மினரல்களுக்கு தனியா காய்கறி உண்ணவேன்டும். அவ்ளோதான்


No comments: