Friday, August 30, 2013

Fwd: உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்




சில வருடங்களுக்கு முன்பு வரை தாய்லாந்து ஜாஸ்மின் அரிசி மலிவாக கடைகளில் கிடைத்து வந்தது. அப்புறம் திடீர் என அந்த அரிசி ஷெல்புகளில் இருந்து மறைந்துவிட்டது. ஜாஸ்மின் அரிசி சமைக்க எளிது என்பதால் அது இல்லாமல் மறுபடி பொன்னி வகையறா அரிசிகளுக்கே திரும்பிவிட்டோம்.

ஜாஸ்மின் அரிசி ஏன் கடைகளில் இருந்து காணாமல் போனது என்ற மர்மம் இப்போதுதான் விலகி உள்ளது

உலகின் நம்பர் ஒன் அரிசி ஏற்றுமதியாளர் தாய்லாந்து. சில வருடங்களுக்கு முன்பு தாய்லாந்து அரசு ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி விவசாயிகளிடம் இருந்து அரிசியை அதிக விலை கொடுத்து அரசே வாங்கி வைத்துக்கொண்டு அரிசியை கோடவுனில் பதுக்கிவிடுவது. அரிசி கிடைக்காமல் உலக சந்தையில் அரிசி விலை உயரும். அப்ப ஸ்டாக்கில் இருக்கும் அரிசியை விற்று பணம் சம்பாதிப்பது..இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும், அரசுக்கு லாபம் கிடைக்கும். சர்வதேச சந்தையில் அரிசி விலை உயரும். ஆனால் சர்வதேச சந்தை வாடிக்கையாளர்களா தாய்லாந்து தேர்தலில் ஓட்டுபோட போகிறார்கள்?

இப்படி ஒரு எளீமையான திட்டம் தீட்டி நாட்டு பட்ஜெட்டில் 8% அளவு தொகையை இதற்கு ஒதுக்கி அரிசியை அதிக விலை கொடுத்து வனக்கி சுமார் 17 லட்சம் டன் அரிசியை வாங்கி கோடவுன்களில் பதுக்கியது தாய்லாந்து. விளைவு?

அடுத்த நாளே சர்வதேச சந்தை மொத்த அரிசி வியாபாரிகள் அரிசி ஆர்டர்களை இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் மாற்றினார்கள். எங்க ஊர் வால்மார்ட்டில் ஜாஸ்மின் அரிசிக்கு பதில் பாஸ்மதி அரிசி விற்றார்கள். விலை அதே விலைதான்.

ஆக அரிசி விலை ஏறவில்லை. ஆனால் இப்ப தாய்லாந்து விவசாயிகள் அரிசியை அரசுக்கே விற்று பழகிவிட்டார்கள். அவர்களிடம் அரிசி வாங்கவில்லையென்றால் ஓட்டு விழாது. அதிகவிலைக்கு அரிசி வாங்கி அதை சர்வதேச சந்தையில் விற்றால் நஷ்டம் தான் வரும். அதுபோக குடோன்களில் தேங்கி கிடக்கும் அரிசியை என்ன செய்வது என யாருக்கும் புரியவில்லை.

இப்படி ஜிடிபியில் 8% அரிசியாக தேங்கி கிடப்பதை கண்டுபிடித்த கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் "இந்த திட்டம் தொடர்ந்தால் தாய்லாந்தின் கிரெடிட் ரேட்டிங்கை இறக்கிவிடுவோம்" என சொல்லி வருகிறது.

என்ன செய்வது என புரியாமல் தாய்லாந்து அரசியல்வாதிகளும், விவசாயிகளும் "உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்" என ஒருவர் மேல் ஒருவர் புகார் சொல்லி வருகிறார்கள். பிரச்சனை வந்தால் அதன் தலையில் கல்லை போடணும், இல்லை கமிட்டியை போடணும். அரசும் அதுபோல் அரிசி திட் டத்தை தேச ரகசியமாக்கி அதை பற்றி எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறது.

அமைதியா இருந்தால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என பெரியவர்கள் கரெக்டா தானே சொல்லி இருக்காங்க?


No comments: