70களில் புவி குளிர்மயம் வரும் என விஞ்ஞானிகள் துண்டை போட்டுத்தான்டி சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். அப்ப பலரும் உலகம் குளிர்ச்சி அடைந்தால் என்ன செய்வது என பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தார்கள். புகழ்பெற்ர டைம் பத்திரிக்கை 1977ல் "புவி குளிர்ச்சிக்கு தயார் செய்வது எப்படி" என ஒரு அட்டைப்பட கட்டுரையே போட்டது.
புவி குளிர்மயத்தை சமாளிக்க அன்று (1970களில்) விஞ்ஞானிகள் கொடுத்த ஆலோசனைகள்
துருவபகுதி பனி முழுவதையும் கரியால் மூடி அதை உருக்கிவிடவேண்டும்
ஆர்ட்டிக் பகுதிக்கு செல்லும் ஆறுகள் அனைத்தையும் வழிமறித்து வேறுபகுதிக்கு திருப்பிவிட வேண்டும்.
க்ரீன்லாந்து முழுவதிலும் இருந்து மக்களை வெளியேர்றி போர்வையால் மூடி பனியை காப்பாற்றவேண்டும்
விண்வெளிக்கு மிகப்பெரும் குடையை அனுப்பி சூரிய வெளிச்சம் பூமியில் படாமல் குடைபிடிக்க வேண்டும்
No comments:
Post a Comment