Monday, August 19, 2013

ஆரோக்கியம் & நல்வாழ்வு

பேராசிரியர் ஸ்டெபான் லின்ட்பர்க், லண்ட் பல்கலைகழகம், ஸ்வீடனில் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பேராசிரியாரக பணிபுரிபவர்.

90களில் பாப்பா நியுகினி தீவுகளில் உள்ள கிடாவா எனும் தொல்குடியினர் மத்தியில் இவர் நடத்திய கிடாவா ஸ்டடி எனும் ஆய்வு மிகுந்த புகழ்பெற்றது. கிடாவா ஆதிவாசிகள் மாரடைப்பு, ஸ்ட்ரோக் , பிரஷர், டயபடிஸ், ஒபிசிட்டி போன்ற வியாதிகள் இருப்பதையே அறியாதவர்கள். பல கிடாவா ஆதிவாசிகள் சாகும் சில நாள் முன்பு வரை ஆக்டிவாக வேலை செய்துகொண்டிருந்து விட்டு, உடல்நலம் குன்றி வயதாகி படுக்கையில் கூட பல நாள் இருக்காமல் உடனடியாக இறந்துவிடுவார்கள். நவீன மருத்துவம் ஏதுமின்றியும் இவர்கள் சராசரி வயது ஸ்வீடனின் சராசரி வயதுக்கு சமம்.

இவர்கள் உணவு:

மீன்
தேங்காய்
காய்கறிகள்
கிழங்குகள்
பழங்கள்

பால், ரொட்டி, தானியம் போன்ற மேற்கத்திய உணவுகள் இவர்கள் உணவில் வெறும் 0.2% மட்டுமே. ஸ்வீடனில் இவை தான் உணவில் 75%

இன்றைய ஹெல்த் புட்டாக டயட்டிசியன்கள் பலரும் பரிந்துரைக்கும் ஓட்ஸ் கஞ்சி (உண்மையில் ஓட்ஸ் பாயாசம்), ப்ரொபயாடிக் யோகர்ட் (உண்மையில் பிளேவர்ட் ஐஸ்க்ரீம்) குப்பைகளை எல்லாம் இவர்கள் கண்ணால் கூட பார்த்தது கிடையாது. 

இதை எல்லாம் விட்டுவிட்டு டயட்டிசியன்கள் பயந்து அலறும் உறைகொழுப்பு நிரம்பிய
 தேங்காயை இவர்கள் உண்டு வருவதால்இவர்களுக்கு ஒபிசிட்டி நிறைய இருக்குமோ என பயப்பட வேண்டியது இல்லை. ஆண்களுக்கு ஜிம் போகாத சிக்ஸ்-பேக் உடல் உண்டு. வயதானவர்களுக்கு கூடத்தான்.பெண்களை தற்கால அமெரிக்க சினிமா பாஷையில் வர்ணிப்பதனால் "ஹாட்டி" எனலாம். ஆனால் நான் அப்படி எல்லாம் வர்ணனை செய்யமாட்டேன்:-)














No comments: