பிட்டிக் அமிலம் (phytic acid) பற்றி படித்து கொண்டிருக்கிறேன். சுவாரசியமா உள்ளது.
தானியம், கொட்டைகள், பீன்ஸ் முதலானவை விதைகள். விதைகளை பிற உயிரினங்கள் உண்ண அனுமதித்தால் அந்த இனத்தின் சுவடே இல்லாமல் போய்விடும். அதனால் தானியங்கள், கொட்டைகள், பீன்ஸ் முதாலனவற்றை நாம் உண்ண கூடாது என்பதற்காக இயற்கை அளித்துள்ள டிபென்ஸ் மெக்கானிசம் பிட்டிக் அமிலம்.
தானியங்களை நாம் உண்டால் அவற்றில் உள்ள பிட்டிக் அமிலம் நம் உணவில் உள்ள மினரல்கள் எதையும் உடல் ஜீரணிக்க இயலாமல் செய்துவிடும். உதாரணமா சப்பாத்தி, கீரை குழம்பு, மோர் ஆகியவற்றை உண்கிறீர்கள் என வைத்துகொள்வோம். உங்கள் ஜீரண உறுப்புகள் மோரில் இருந்து கால்ஷியத்தை பிரித்து எடுக்கும். கீரையில் இருந்து இரும்பு சத்தை பிரித்து எடுக்கும். ஆனால் கோதுமையில் உள்ள பிட்டிக் அமிலம் அந்த கால்ஷியம், இரும்பின் மேல் படர்ந்து உங்கள் உடல் அவற்றை ஜீரணிக்காமல் செய்துவிடும். விளைவு: போனமச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்ற கதையா வயிற்றின் உள்ளே போன திருப்தியோடு கால்ஷியமும், இரும்பும் நம் கழிவுகளுடன் உடம்பில் இருந்து வெளியேற்றபடும்.
விளைவு: நீங்கள் தினம் 10 டம்ளர் பால் குடித்தாலும் கடைசியில் கால்ஷியம் பற்றாகுறை ஏற்பட்டு எலும்புகள் வீக் ஆகும். அதுபோக பிட்டிக் அமிலம் உங்கள் பல்லை பதம் பார்த்துவிடும்.
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?
முழு தானியங்களை தவிர்க்கவேண்டும். அரிசியை தீட்டுவதால் அதில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதுடன் அதில் உள்ல பிட்டிக் அமிலமும் சரிபாதியாக குறைந்துவிடும்.. ஆக வெள்ளை அரிசி கைகுத்தல் அரிசியை விட மேல்
ஆனால் வெள்ளை அரிசி சாப்பிட்டால் டயாபடிஸ் வருமே?
ஆமாம்....அந்த விதத்தில் வெள்ளை அரிசியை விட கைகுத்தல் அரிசி மேல்...
தானியங்களை உண்பதின் இடியாப்ப சிக்கல் இதுதான். அவை எந்த ரூபத்தில் வந்தாலும் அதில் ஒரு சிக்கல் வரதான் செய்கிறது.
அரிசி மற்றும் பிற தானியங்களை soak செய்வதன் மூலம் அவற்றில் உள்ல பிட்டிக் அமிலத்தை பெருமளவில் குறைக்கலாம். இதை செய்ய
தானியத்தை ஒரு பாத்திரத்தில் இடுங்கள்
சரியளவு விகிதத்தில் கொதிநீரை பாத்திரத்தில் இடுங்கள்
தூய்மையான துணியால் பாத்திரத்தின் வாயை மூடுங்கள்
2 முதல் 12 மணிநேரம் ஊற விடுங்கள்
அதன்பின் அந்த தானியத்தை சமைக்க பயன்படுத்துங்கள்.
ஆனால் இதுகூட பிட்டிக் அமிலத்தை முழுமையாக அகற்றுவது இல்லை. அதை முழுமையா எப்படி அகற்றுவது என்பது விஞ்ஞானிகளுக்கே இன்னும் புரியவில்லை. அதனால் முடிந்தவரை கீரை, காய்கறி, பால், தயிர் போன்றவற்றை தானியங்களுடன் உண்னாமல் தனியாக இரன்டு, மூன்று மணிநேரம் கழித்து சூப் மாதிரி செய்து குடியுங்கள்.
பீனஸ், பருப்புகளில் இருக்கும் பிட்டிக் அமிலத்தை குறைக்க அவற்றை முளைகட்ட வைத்து சமைத்து பயன்படுத்துங்கள். பச்சையாக உண்பதை விட கொதிக்க வைத்து சமைப்பதால் பிட்டிக் அமிலம் குறைகிறது.
கொட்டைகளில் இருக்கும் பிட்டிக் அமிலத்தை அகற்றுவது எப்படி?
பாதாம் பருப்பை நீரில் 12 மணிநேரம் ஊற வைத்து தோலை அகற்றி வாணலியில் வறுத்து உண்டால் பிட்டிக் அமிலம் பெருமளவில் குறைந்துவிடும். வால்நட் முதலானவற்றை வானலியில் வறுத்து உணவுடன் உண்ணாமல் தனியாக ஸ்னாக் மாதிரி உண்ணுங்கள்.
சோயா, டோபு, எடமாமி முதலானவை பிட்டிக் அமிலத்தின் வற்றாத ஜீவநதிகள். இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நன்று.

No comments:
Post a Comment