Friday, July 19, 2013

பிரசர்வேடிவ்களை அறிந்துகொள்வோம்


நம் அன்றாடம் வாங்கும் சில புராசஸ் செய்யபட்ட உனவுகளில் உள்ல பிரசர்வேடிவ்களை அறிந்துகொள்வோம்

சோடியம் பென்சோட்: கோக், பெப்சி குடித்தபின் தொண்டை ஜில் என இருக்கா? அதுக்கு காரணம் சோடியம் பென்சோட். ஆய்வு ஒன்றில் சோடியம் பென்சைட்டும் சில உணவுகளில் பயன்படுத்தும் கலர்களும் ஒன்று சேர்ந்தால் குழந்தைகளை ரவுடித்தனம் செய்ய அவர்கள் மூளையை தூண்டுகிறது என கண்டுபிடிக்கபட்டது. ஆனால் இதுக்கு காரணம் டை தான், சோடியம் பென்சைட் "மட்டும்" அல்ல என சொல்லி கொக்,பெப்சி கம்பனிகள் தப்பிவிட்டன. அதனால் புராசஸ்டு உணவை உண்கையில் கூட சோடா குடிப்பது நம் பிள்ளைகளை ரவுடித்தனம் செய்ய தூண்டலாம்.கோக், பெப்சி தவிர்த்து ஜாம், ஊறூகாய், சாலட் டிரஸ்ஸிங்குகளில் சோடியம் பென்சைட் கிடைக்கும்

நேச்சுரல் ஃப்ளேவரிங்: கேஸ்டோரியம் எனும் இதை பர்பியூம்களில் பார்க்கலாம். இது பீவர் எனும் மிருகத்தின் பின்புறத்தில் சுரக்கும் ஒரு என்சைம். (நேச்சுரல் பிளேவரிங் என கரெக்டா தானே பெயர் வைத்துள்ளார்கள்?:-). ஆனால் இது விலை மிக அதிகம் என்பதால் விலை உயர்ந்த சென்டுகளில் மட்டுமே இது காணகிடைக்கும்

சிலிக்கன் டை ஆக்சைடு: இதன் தமிழ் பெயர் மணல். இதை ஆற்று, கடல் ஓரங்களில் காணலாம். உங்கள் வீடு கட்டவும் இது பயனப்டும். இதை சூப்புகளிலும், க்ரீமர்களிலும் பயன்படுத்துவார்கள். திரவம் ஒட்டிகொள்லாமல் மணல் தடுக்கும் என்பதால்

கார்மைன்: இது வேக வைத்த பூச்சி. இதை ஐஸ்க்ரீம்களிலும், சாக்லெட்டுகளிலும் காணலாம். இதை அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் லேபிளில் குறிப்பிடவேன்டிய அவசியம் இல்லை. நேச்சுரல் கலர் என குறிப்பிட்டால் போதும். உணவுக்கு கலர் சேர்க்க இது பயனப்டுகிறது

அம்மோனியா: புராசஸ் செய்யபட்ட மாமிசத்தில் இருக்கும் பாக்டிரியாக்களை கொல்ல அம்மோனியா விஷம் செலுத்தபடுகிறது.

வைரஸ்: புராசஸ் செய்த மாமிசத்தில் இ காலி முதலிய பாக்டிரியாக்கள் இருப்பதால் அவற்றை கொல்ல வைரஸ்கள் செலுத்தபடுகின்றன. பாக்டிரியாவை கொல்லும் வைரஸ் மனிதனை கொல்லாது என கம்பேனிகாரர்கள் துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் என்ன பொய்யா சொல்ல போகிறார்கள்?:-)