Monday, July 08, 2013

அமெரிக்க டயாப்டிஸ் அசோசியேஷனின் அதிகாரபூர்வ டயட் தோல்வி அடைந்தது

அமெரிக்க டயாப்டிஸ் அசோசியேஷனின் அதிகாரபூர்வ டயட் தோல்வி அடைந்தது: ஏடிஏ ஒப்புதல்

டைப் 2 டயபடிஸ் பேஷண்டுகளுக்கு உலகெங்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குறைந்த கொழுப்பு, உடல்பயிற்சி- இந்த இரண்டும் பாதகமான விளைவுகளை அளிப்பதாக ஏடிஏ ஆய்வு கூறுகிறது.

சிகாகோ பிரவுன் பல்கலைகழக பேராசியர்கள் லுக் அஹெட் எனும் பெயரில் இந்த டயட் சோதனையை நடத்தினார்கள். பரிசோதனை முடிவுகள் உலகின் நம்பர் ஒன் மெடிக்கல் ஜர்னலான நியூ இங்கிலாந்து மெடிக்கல் ஜர்னலிலும், ஏடிஏ நடத்திய கருத்தரங்கிலும் வெளியிடப்பட்டன.

5145 டைப் 2 டயபடிஸ் பேஷண்டுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இவர்கள் இரு பிரிவாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவினருக்கு கண்ட்ரோல் க்ரூப் என பெயர். இவர்களுக்கு எந்த டயட் மாறுதலும், உடல்பயிற்சியும் பரிந்துரைக்கபடவில்லை.

இன்னொரு பிரிவினருக்கு ஏடிஏ பரிந்துரைக்கும் குறைந்த கலோரி டயட் (1200 முதல் 1800 காலரி டயட், 30%க்கு குறைவான கலோரிகள் மட்டுமே கொழுப்பு, 15% புரதம்..ஆக 55% கார்போஹைட்ரேட்) என இந்த டயட் அமைந்தது. அதுபோக உடல்பயிர்சியும் பரிந்துரைக்கபட்டது.

ஒன்றல்ல, இரன்டல்ல சுமார் 10 வருடம் நடந்த இந்த சோதனையில் இப்படி ஏடிஏ டயட் மற்றும் உடல்பயிர்சியை பின்பற்றிய டயபடிஸ் பேஷண்டுகளை விட எதுவும் செய்யாமல் சும்மா இருந்த கன்ட்ரோல் குழுவினர் அதிக எடையை இழந்தனர். பிளட் குளுகோஸ் அளவுகளில் இரன்டு குழுக்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை. பிளட் பிரஷர் அளவிலும் இரு குழுக்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் ஏடிஏ டயட்டை பின்பற்றிய டயபடிஸ் பேஷண்டுகள் சும்மா இருந்த கண்ட்ரோல் குழுவினரை விட அதிக எண்ணிக்கையில் எலும்பு முறிவுகளை பெற்றார்கள். இதய அடைப்பு, மரணம் முதலியவற்றில் இரு குழுக்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை.

சோதனை ரில்சல்ட்டுகள் இப்படி தலைகீழாக அமைந்ததால் திகைப்படைந்த ஆய்வாளர்கள் ஏடிஏ டயட்டை பின்பற்றியவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சோதனையை பாதியில் நிறுத்தி ஏடிஏ டயட் தோல்வி என அறிவித்தனர்.

ஆக ஏடிஏ டயட்டை பின்பற்றாமல் சும்மா இருந்தால்:

எடை குறையும்

பிளட் குளுகோஸ், பிளட் பிரஷரில் எந்த மாற்றமும் வராது.

இதய அடைப்பு, மரணத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது

குறைவான எலும்பு முறிவுகள் ஏற்படும்:-)

ஏடிஏ டயட்டை பின்பற்றினால் அதிக எலும்புகளை முறித்துகொள்வது தான் மிச்சம்.

இந்த டயட்டை தான் நம் ஊர் மருத்துவர்கள் டயபடிஸ் பேஷண்டுகளுக்கு விழுந்து, விழுந்து பரிந்துரைப்பது குறிப்பிடதக்கது

இந்த டயட்டை பின்பற்றி, கம்மியா சாப்பிட்டு, மைல்கணக்கில் ஓடி 10 வருடம் ஆனாலும் எந்த பலனும் இல்லை!!!!!

எப்படி இருக்கும்?

55% கார்ப் உள்ள டயட் என்பது தினம் 247 கிராம் சர்க்கரை உண்பதுக்கு சமம். டயபடிஸ் பேஷன்டுகளுக்கு தினம் கால் கிலோ சர்க்கரையை கொடுத்துவிட்டு டயபடிஸ் குணமாகுமா என சோதனை செய்தால் எப்படி குணமாகும்?

10 வருடம் இந்த டயட்டை பின்பற்றியும் டயாப்டிஸ் குணமாகவில்லை என்றதும் டயபடிஸ் ஜெனட்டிக்கல், கண்ட்ரோல் தான் செய்யமுடியும் குணப்படுத்த முடியாது என அடித்துவிடுவார்கள்.

தலை....சுவர். டமால்..டமால்..டமால்!!!!


No comments: