Thursday, July 25, 2013

ஆதிமனித சமூகத்தின் பைனான்சியல் பிட்னஸ்


ஆரோக்கியம் மட்டும் அல்ல, நல்வாழ்வும் முக்கியம். அந்த விதத்தில் ஆரோக்கியம் பற்றீ ஆதிமனித சமூகத்திடம் நிறைய கற்றுகொண்டோம். நல்வாழ்வை பற்றி நமக்கு கற்பிக்க அந்த காட்டுமிரான்டி சமூகத்துக்கு ஏதேனும் தகுதி உள்ளதா?

நிறைய உண்டு. இன்றைய நாகரிக மனிதர்களுக்கு "வாழ்க்கை லட்சியம்" என ஒன்று உண்டு. அலெக்சாந்தருக்கு உலகை வெல்வது தான் வாழ்க்கை லட்சியம். அம்பானிக்கு பணம் சேர்ப்பது வாழ்க்கை லட்சியம். சராசரி மனிதனுக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமனம், வேலை, வீடு இவை தான் லட்சியம்.

நாடுகளும் ராணுவமும் அரசுகளும் ஏன் வீடுகளே இல்லாத உலகில் அலெக்சாந்தரின் லட்சியம் என்னவாகும்? அம்பானிக்கு அங்கே வேலை என்ன? அந்த சமூகத்தில் படிப்பு என்பது கல்கோடரியை எப்படி செதுக்குவது, நெருப்பை எப்படி உருவாக்குவது என்பதுமாதிரி தான். கல்யாணம் வலுவை பொறுத்த விஷயம்.

சுருங்க சொன்னால்..ஆதிமனிதனுக்கு "வாழ்க்கை லட்சியம், வாழ்நாள் கடமை" என எதுவும் இருக்கவில்லை. நாம் எதை வாழ்நாள் குறிக்கோள் என நினைக்கிறோமோ அது அவனுக்கு எளிதில் கிடைத்தது. தேவைகள் என்பதை தாண்டி விருப்பம் என எதுவும் இல்லாத சமூகம் அது. ஆனால் நமக்கு தேவைக்கும், விருப்புக்கும் உள்ள வித்தியாசம் தெரிவது இல்லை.

ஆதிமனிதனை விட நாம் வசதியாக உள்ளோமா?

சில நாட்களுக்கு முன்பு ஆபிரிக்க சான் இன மக்களின் உணவை எழுதி இருந்தேன்.

அவர்கல் உணவு. தினம் கால் கிலோ மாமிசம், கால் கிலோ காய்கறிகள்!!!

நாலு பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் தினம் 1 கிலோ மாமிசமும், 1 கிலோ காய்கறியும் உண்கிறார்கள்.

இதை சம்பாதிக்க குடும்பதலைவன் வாரம் ஒன்றுக்கு 32.5 மணிநேரம் உழைக்கிறான்.இல்லத்தலைவி குடும்பத்தை பார்த்து கொள்கிறாள். குழந்தைகளை டே கேரில் விடுவது இல்லை.

ஆனால் நாகரிக உலகில் என்னதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போய் வாரம் 60 மணிநேரம் உழைத்தாலும் பல குடும்பங்களால் இன்றும் தினம் 1 கிலோ மாமிசம், 1 கிலோ காய்கறி என வாங்க முடியாது. இன்று இரண்டும் யானை விலை, குதிரை விலை.

சோற்றை விடுங்கள். ஆதிமனிதன் தினம் 6 மணிநேரம் பிள்லைகள், குடும்பம், நண்பர்களுடன் சோஷியலைஸ் செய்வதில் செலவிட்டான். இன்று அம்பானியாக இருந்தாலும் அத்தனை நேரத்தை பிள்ளகளுக்கும், குடும்பத்துக்கும் ஒதுக்க முடிகிறதா? முடியாது...அந்த நேரத்தை சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு கொடுத்துவிட்டோம். தினமும் பிள்ளைகளுடன் தந்தை நேரத்தை கழிக்காததால் "டேக் டைம் டு பி ஏ டாட் டுடே" என ஜனாதிபதி ஒபாமா டிவியில் தோன்றி சொல்ல வேண்டிய நிலை.

இப்போது நிலை என்னவெனில் தாயும் பிள்ளைகலுடன் நேரத்தை செலவு செய்வது குறைந்து வருகிறது. நகரிக உலகு பாருங்கள்...அம்மாவும் வேலைக்கு போகவேண்டிய நிலை. அப்பாவும், அம்மாவும் வேலைக்கு ஓடி பிள்லைகளை டே கேரில் போட்டு, மாலையில் தாய், தந்தையருடன் கழிக்கவேன்டிய நேரத்தை அவர்கள் டிவியிலும், பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கழிக்கிறார்கள். "ரவுடித்தனம் செய்யாதே, நல்லவனா இரு" என நம் பெற்றோர் நமக்கு சொல்லிகொடுத்தார்கள். ஊடகங்கள் ரவுடிகளை நாயகனாக்கி ரவுடித்தனம் செய்வதும், வீட்டை விட்டு ஓடுவதும், சின்ன வயதில் காதலிப்பதும் தான் ஹீரோயிசம்" என பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்கின்றன.

சின்ன சைச் வீடுகள் யாருக்கும் பிடிப்பது இல்லை. பெரிய வீடாக வாங்கி, காம்பவுண்டு சுவர் கட்டி, உள்லே நீச்சல் குளம் வைத்து, மெஷின் கன் ஏந்திய செக்யூரிட்டியை போட்டு வீட்டில் 65 இஞ்சு டிவியில் டிச்கவரி சானலில் டிவி பார்க்கிறோம்.

நம்மை பொறுத்தவரை வீடு என்பது கட்டிடம், அந்தஸ்தின் சின்னம், நாம் தினமும் நாளின் பெரும்பக்ய்தியை கழிக்க விரும்பும் இடம். அதனால் தான் ஹோம் ஆபிஸ், ஒர்க்கிங் ப்ரம் ஹோம் எல்லாம் விரும்புகிறோம்.

ஆனால் ஆதிமனிதனை பொறுத்தவரை வீடு என்பது குகை. அதை படுத்து தூங்க, மழைக்கு ஒதுங்க மட்டும் தான் அவன் பயன்படுத்தினான். நாளின் பெரும்பகுதியை வெளியுலகில் தான் கழித்தான். விளையாட, சமூகமாக கூடி மகிழ வீட்டுக்கு வெளியே இருந்த வெட்டவெளி தான் பயன்பட்டது.

நம் வீடுகளின் சைஸ் குறைந்து சின்ன சைஸ் வீடுகள் ஆகி வீட்டில் இருக்கும் தோட்டத்தின் பரப்பளவு அதிகரித்து, நிறைய மரங்களும், செடிகளும், தோட்டமும் வைத்து நாளின் பெரும்பகுதியை கழித்தால் எப்படி இருக்கும்?

"பணம் சேர்க்கணும் சார்"

"எதுக்கு?"

"பெரிய கார் வாங்கணும், ஸ்விட்சர்லாந்து போகணும், நல்லா டிரஸ் பண்னணும், நகை வாங்கணும், பெரிய வீடா வாங்கணும்.."

வாங்கி??

சின்ன சைச் வீடுகள் யாருக்கும் பிடிப்பது இல்லை. பெரிய வீடாக வாங்கி, காம்பவுண்டு சுவர் கட்டி, உள்லே நீச்சல் குளம் வைத்து, மெஷின் கன் ஏந்திய செக்யூரிட்டியை போட்டு வீட்டில் 65 இஞ்சு டிவியில் டிச்கவரி சானலில் டிவி பார்க்கிறோம்.

நம்மை பொறுத்தவரை வீடு என்பது கட்டிடம், அந்தஸ்தின் சின்னம், நாம் தினமும் நாளின் பெரும்பக்ய்தியை கழிக்க விரும்பும் இடம். அதனால் தான் ஹோம் ஆபிஸ், ஒர்க்கிங் ப்ரம் ஹோம் எல்லாம் விரும்புகிறோம்.

ஆனால் ஆதிமனிதனை பொறுத்தவரை வீடு என்பது குகை. அதை படுத்து தூங்க, மழைக்கு ஒதுங்க மட்டும் தான் அவன் பயன்படுத்தினான். நாளின் பெரும்பகுதியை வெளியுலகில் தான் கழித்தான். விளையாட, சமூகமாக கூடி மகிழ வீட்டுக்கு வெளியே இருந்த வெட்டவெளி தான் பயன்பட்டது.

நம் வீடுகளின் சைஸ் குறைந்து சின்ன சைஸ் வீடுகள் ஆகி வீட்டில் இருக்கும் தோட்டத்தின் பரப்பளவு அதிகரித்து, நிறைய மரங்களும், செடிகளும், தோட்டமும் வைத்து நாளின் பெரும்பகுதியை கழித்தால் எப்படி இருக்கும்? எத்தனை பணம் மிச்சமாகும்? வீடு டெகரேஷனுக்கு லோன் வாங்கி, 55 இஞ்சு டிவியில் மகிழ்ச்சி அடையாமல் 65 இஞ்சு டிவியை இண்ஸ்டால்மெண்ட்டில் வாங்க துடிப்பது நின்றால் எப்படி இருக்கும்?

இது நடக்க வீடு என்பது அந்தஸ்தின் சின்னம், வாழ்நாள் லட்சியம், நாளின் பெரும்பகுதியை கழிக்கவேண்டிய இடம் என்பது மாதிரியான மனோபாவங்களில் இருந்து நாம் விடுதலை அடையணும்.

உலகில் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் மனிதனின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை!!!



No comments: