Wednesday, June 26, 2013

மூளை சக்தி, மெமெரியை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

மூளை சக்தி, மெமெரியை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

1. உண்ணாவிரதம். சிகாகோ பல்கலைகழகத்தில் நடந்த ஆய்வில் வாரம் இரு நாள் 24 மணிநேர உண்னாவிரதம் இருக்கும் எலிகளின் மூளையில் புதிதான செல்கள் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கபட்டது. செயற்கையாக இந்த எலிகளுக்கும் மெமரி லாஸ் வரவழைத்தும் பட்டினி போடப்பட்ட எலிகள் அதைதாண்டி ஞாகசக்தியை அதிகம் வளர்த்தன. பட்டினி போடபடாத எலிகளுக்கு ஞாபக சக்தியில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கான அறிவியல் விளக்கம் என்னவெனில் பட்டினி இருந்தால் உணவை தேட மூளையில் அதிகம் செல்கள், அதிகம் சிந்தனை திட்டமிடல் தேவை. அதனால் மூளை பசியுடன் இருக்கையில் தன்னை ரிபெர்ஷ் செய்து கொள்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்:

ஃப்ளேவனாய்ட்ஸ் :

நன்மைகள்: நினைவாற்றலை அதிகபப்டுத்தும். க்ரீன் டீ, டார்க் சாக்லெட், திராட்சை முதலியவற்றில் ஃப்ளேவனாய்ட்ஸ் உண்டு. தினம் ஒரு சர்விங் ஆவது சாப்பிடணும்

3. ஆண்டி ஆக்சிடெண்டுகள்: பெர்ரிகள் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெபெர்ரி, பிளாக் பெர்ரி,, கூஸ்பெர்ரி (நெல்லிக்கனி) ஆகியவற்றை தினமும் உட்கொள்ள வேண்டும்

4. போலிக் ஆசிட்: இது மூளையின் சிந்திக்கும் திறனை வளர்க்கும். மிக முக்கியமான இந்த மூலப்பொருள் பச்சை நிற கீரைகள், காய்கறிகள் அனைத்திலும் ஏராளம் உண்டு.

5.கர்கமின்: மூளை சிதைவையே தடுக்கும் ஆற்றல் படைத்த இந்த மூலப்பொருள் மஞ்சளில் ஏராளம் உண்டு. மஞ்சளை அதிக நேரம் சமைக்காமல் பொறியல் சமைத்து முடித்தவுடன் மஞ்சளை மேலே தூவி கலந்து டக் என இறக்கி அதிகம் சமைக்காமல் கொடுத்தால் நல்லது. காரணம் உயர்வெப்பத்தில் கர்கமின் அழையாமல் தடுக்கும்.

6. வைட்டமின் டி: தினம் மதிய வெயிலில் (10 - 2) அரைமணிநேரம் நிற்க வைத்தால் போதும். முகம் கருக்க கூடாது எனில் கை,காலில் வெயில் படுமாறு செய்யலாம்.நேரடியாக சூரிய வெளிச்சம் படுவது அவசியம்.

7. கன்சோனிக் அமிலம்.

ரோஸ்மரி இலையில் கிடைக்கும். இதுவும் மஞ்சளுக்கு ஒப்பான சக்தி வாய்ந்தது.


-

No comments: